வேலு தன் வீட்டு சிறியவர்கள் அனைவரும் வெளியே இருப்பதை பார்த்துவிட்டு இங்கு அனைவரும் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார் அவர் கேட்டவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவரை அங்கு பார்த்தவுடன் சிறிது பயந்துவிட்டு அவரை திரும்பி பார்த்தார்கள் அனைவரும் திரும்பியவுடன் தான் அங்கு கயல் நிற்பதை வேலு பார்த்தார்
வேலு கயலை அங்கு பார்த்தவுடன் கயல் மாமா என்றால் ஆனால் வேறெதுவும் சொல்லவில்லை தனது மாமா எங்கே தன்னை திட்டி விடுவாரோ என்று பயந்து அஞ்சினாள் வேகமாக மகிழ் கையை பிடித்துக் கொண்டு நின்றாள் வேலு வேகமாக அனைவரும் இருக்கும் இடம் வந்தார் கயல் எப்படிடா இருக்க என்று அவளது தாடையை பற்றி கேட்டு கொண்டே அவளை மேலும் கீழுமாக பார்த்தார்
தனது மாமா தன்னிடம் பேசிவிட்டார் என்றவுடன் கயல் தனது தாய் மாமாவை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள் கயல் என்னடா மா இப்படி அழுவுற அழுவாதம்மா என்றார் நீ அழுதாள் மாமாவுக்கும் அழுகை வரும் என்றார் நான் வளர்த்த பிள்ளை எப்பயும் தப்பு பண்ணி இருக்காது என்று நான் நம்புறேன்டா என்றார் மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா தங்கம் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா விடு கண்ணை தொடச்சிகோ என்றார்
சரிடா கயல் இந்த நேரத்துல இங்க என்ன மா வீட்டுக்கு கிளம்புடா எப்பா அன்பு கயல நல்லா பாத்துக்க என்ன இந்த நேரத்துல என்றார் அப்பா நானு என்றான் தெரியும்பா பக்கத்து ஊரு தானே நான் விசாரிச்சிட்டேன்பா உன்ன பத்தி எல்லாம் நீ கயல நல்லா பார்த்துப்ப என்ற நம்பிக்கை இருக்கு உங்க அப்பா அம்மா பத்தி எனக்கு தெரியும் ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா இந்த நேரத்துல வேணாம்
கூட்டிட்டு போ அது மட்டும் இல்லாம அக்கா பார்த்த பிரச்சனையாயிடும் அக்கா இப்படி கஷ்டத்துல இருக்கு என்றவுடன் மகிழும் சரி கூப்பிட்டு போ அன்பு என்றவுடன் அவனும் கயலை அழைத்துக் கொண்டு அவனது வீடு நோக்கி சென்றான் கயல் அனைவரிடமும் சொல்லிவிட்டு அன்புடன் சென்று விட்டாள்
வேலு தான் வீட்டில் உள்ள அனைவரும் பார்த்து சரி அதற்காக இந்த நேரத்தில் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்களா அக்கா பார்த்தால் என்ன ஆகுவது என்றார் பிறகு சரி என்று அனைவரும் அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் வேலு அனைவரும் வீட்டுக்குள் சென்றவுடன் முன் கதவை சாற்றிவிட்டு அவரது அறைக்குச் சென்றார் அப்பொழுது சுந்தரி எழுந்து உட்கார்ந்து இருந்தார்
என்ன சுந்தரி தூக்கம் வரவில்லையா இன்னும் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா என்று கேட்டார் தனது கணவன் வந்தவுடன் தனது கணவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதார் சுந்தரி என்ன ஆச்சு என்றார் கயல் நல்லா இருக்கலாமா என்றார் சுந்தரி என்றார் நான் கயலைப் பார்த்தேன் என்றார் அப்பொழுது ஏன் அவளிடம் வந்து நீ பேசி இருக்கலாம் என்றார்
அவளிடம் என்னால் எப்படி பேச முடியும் உன்னால் பேச வேண்டும் என்று தான் இருந்தது நம்ம வீட்ல இருக்க பசங்க எல்லாம் கயல் கிட்ட பேசுறாங்கன்னு அண்ணிக்கு ஒரு சந்தேகம் இருக்கு நம்மளும் அவங்கள மதிக்காம பேசினா அவங்க வருத்தப்படுவாங்க அதான் பசங்க எல்லாம் பேசுறாங்க இல்ல ஒன்னும் பிரச்சனை இல்ல என்றார் நீ எப்படிடா பார்த்த என்றார் இல்லைங்க நீங்க போய் ரொம்ப நேரம் ஆகுதுன்றதால இன்னும் உங்களை காணும் என்று வெளியே வந்த அப்பதாங்க பார்த்தேன் என்றார்
சரி என்று விட்டு அவர் சுந்தரியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் தூங்கி விட்டார்கள் சிறியவர்கள் அனைவரும் அவர்கள் அறைக்கு சென்றவுடன் தூங்கி விட்டார்கள் மகிழ் மகா இருவரும் அவர்கள் அறைக்குச் சென்றவுடன் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை அமைதியாக படுத்து உடன் இன்று இருவருமே தூங்கிவிட்டார்கள் அசதி சோர்வு அனைத்திலும் தூங்கிவிட்டார்கள்
காலையில் மகா தான் எழுந்து குளித்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் பெண்கள் மூவரும் சமையல் கட்டில் இருந்தார்கள் மகா அவர்கள் மூவருக்கும் சிறிது உதவி செய்துவிட்டு காலேஜுக்கு கிளம்பி சென்றால் பெரியவர்கள் அனைவரும் இதை நினைத்து கொண்டு இருந்தால் தங்கள் பிள்ளைகளும் தங்களை நினைத்து வருந்துவார்கள் என்று எண்ணி தங்களது வருத்தத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எப்பொழுதும் போல் இருந்தார்கள்
சிறியவர்களும் அதே போல் தான் எண்ணினார்கள் தாங்கள் வருத்தப்பட்டால் வீட்டில் உள்ள பெரியவர்களும் தங்களை எண்ணி வருந்துவார்கள் என்று எண்ணி அவர்கள் வருத்தத்தை உள்ளுக்குள்ளே வைத்துக் கொண்டார்கள் இப்படியே யாரும் யாருடனும் பெரிதாக முகம் கொடுத்து பேசாமல் இரண்டு நாட்கள் சென்றது மகா தான் இரண்டு நாட்களுக்குப் பிறகு இப்படியே இவர்கள் அனைவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தால்
நன்றாக இருக்காது இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எண்ணினால் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்துவிட்டு சமையல் அறைக்கு சென்றால் காவேரி கோதை சுந்தரி மூவரும் சமைத்துக் கொண்டு இருந்தார்கள் சுந்தரியிடம் சென்று அத்தை நான் உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றால் என்ன மகா என்றார்
காவேரியும் கோதையும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அத்த இது இனிக்கு ஏழாவது மாசம் ஸ்டார்ட் ஆயிடுச்சு இனிக்கு எப்ப வளைகாப்பு வைக்கலாம்னு இருக்கீங்க என்று கேட்டால் என்ன எதுக்கு கேக்குற என்றார் என்ன அத்தை இப்படி சொல்றீங்க இனிக்கு நீங்க தானே அம்மா என்றால் நான் தான் அம்மா நான் இல்லைன்னு சொன்னேன்னா இனிமே இந்த குடும்பத்தை பாத்துக்குற பொறுப்பும் இனியா பாத்துக்குற பொறுப்பும் என்னோடது இல்லை என்றார்
மகா தனது அத்தையை பார்த்தால் அவர் சிரித்துக் கொண்டே இனிக்கு அண்ணன் பொண்டாட்டி அண்ணி நீ தானே வளைகாப்பு எப்ப வைக்கணுமா வேணாமா எப்ப வைக்கணும் என்றெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு அதுக்கும் சம்பந்தமில்லை இந்த வீட்டோட மொத்த பொறுப்பும் உன் கையில தான் அதான் என் மகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல இனிமே நான் எதுலையும் தலையிட மாட்டேன்
இனி எதுவாக இருந்தாலும் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த குடும்ப பொறுப்பாக இருந்தாலும் சரி மகிழைப் பற்றியாக இருந்தாலும் சரி இல்லை வீட்டில் உள்ளவர்களை பற்றியதாக இருந்தாலும் சரி நீ தான் இனிமே யோசித்துக் கொள்ள வேண்டும் என்றார் காவேரி கோதை இருவரும் சுந்தரியை பார்த்து சிரித்தார்கள் மகா சுந்தரியை முறைத்து பார்த்தால்
பிறகு அவளும் தனது அத்தையை பார்த்து சிரித்து விட்டாள் அவர் அவளை கட்டிக்கொண்டு அவளது தலையில் முட்டி நீ தான் எப்ப பண்ணனும்னு முடிவு செய்ய வேண்டும் சரியா என்று கேட்டார் அப்பொழுது என்ன முடிவு பண்ணனும் என்று கேட்டுக்கொண்டே எழில் சமையல் அறைக்கு வந்தான் வாடா என்று விட்டு காவேரி தான் மகா சொன்ன அனைத்தையும் சொன்னார்
காவேரி எழிலிடம் சொன்னவுடன் எழில் மகாவை பார்த்துவிட்டு என்ன மகா பண்ணிரலாமா வர புதன் கிழமை நாள் நல்லா இருக்கு என்று கேட்டான் என்ன செய்து விடலாமா என்று தான் கேட்டான் அப்போது சுந்தரி தனது இரு நாத்தனார் களையும் பார்த்தார் அவர்களும் இவன் உனக்கு மேல இருக்கிறான் என்று மனதுக்குள் எண்ணினார்கள்
அவள் சிரித்துக் கொண்டே நல்ல நாள் இருந்தா பண்ணிடலாம் என்று விட்டு தனது அத்தை பெரியம்மா அம்மாவை பார்த்தால் அவர்களும் சரி என்றார்கள் பிறகு மகா எழிலை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தாத்தா பாட்டி இருவரும் வரவேற்பு அறையில் உட்கார்ந்து இருந்தவுடன் அவர்களிடம் சென்றால் என்ன மகா காலையிலேயே இரண்டு பேரும் பேசிட்டு வரீங்க என்று கேட்டார் பாண்டியம்மா பாட்டி
உங்களிடம் தான் முக்கியமான விஷயம் பேசுவதற்காக வந்தோம் என்றார்கள் என்னடா காலையிலேயே முக்கியமான விஷயம் என்றார் கருப்பையா தாத்தா எழிலிடம் எழில் மகாவை பார்த்தான் மகா தான் இல்ல பாட்டி இனிக்கு இப்போ ஏழாவது மாசம் தொடங்கிச்சு இல்ல அதான் வளைகாப்பு வைக்கலாம் என்று என்றால்
பாண்டியம்மா பாட்டி அப்போ வச்சுக்கலாம் மகா என்றார் மகா மகிழ் கிட்ட பேசிட்டியா என்றார் இல்ல பாட்டி உதிரன் கிட்ட இல்லை பாட்டி இன்னும் நான் யாரிடமும் பேசவில்லை பெரியவர்கள் உங்களிடம் பேசிவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசலாம் என்று இருக்கிறேன் என்றால்
உதிரன் இனி கிட்ட பேசணும் இல்ல அவங்களுக்கு தான எல்லாம் என்றார் பிறகு பாட்டியே உதிரா என்று வேகமாக கூப்பிட்டார் உதிரனை பாண்டியம்மா பாட்டி வேகமாக கூப்பிட்டவுடன் நிலா முகிலன் அனைவருமே வந்தார்கள் வேலு கந்தன் மணி மூவரும் வந்தார்கள் அப்போது வேலு தான் என்னம்மா என்று கேட்டார் அப்பொழுது பாண்டியம்மா இனிக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று மகா சொல்கிறாள் அதை பற்றி பேசுவதற்கு என்றார்
அவரும் சிரித்துக் கொண்டே சரிதான் என்று கூறி சிரித்தார் அப்பொழுது உதிரன் அவனது அறையில் இருந்து வந்தான் என்னடா இப்படி வேற்க விருவிருக்க வர என்று கேட்டார் பாண்டியம்மா பாட்டி அப்பொழுது நிலா சிரித்துக் கொண்டே அண்ணனுக்கு உள்ள முக்கியமான வேலை இருந்திருக்கும் நீங்க கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டீங்க அதான் என்றவுடன் எழில் முகில் இருவரும் சிரித்து விட்டார்கள்
என்னடி இது பேச்சு என்று பாண்டியம்மா பாட்டி திட்டினார் உதிரன் மூவரையும் முறைத்துவிட்டு என்ன பாட்டி என்றான் இனி எங்க டா அவளை கூப்பிடு என்றார் வருவா பாட்டி என்றவுடன் இனி ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தனது புடவையை சரி செய்து கொண்டு வந்தால் அப்போது எழில் தான் சிரித்து கொண்டே நீ சொன்னது என்னமோ உண்மைதான் போல உதிரன் மாமா உள்ள முக்கியமான வேலை தான் இருந்திருப்பாங்க போல என்றவுடன் என்ன என்று இனி கேட்டால்
இல்ல நீ இப்ப தானே புடவையை சரி செஞ்சுட்டு வர கொஞ்சம் நேரத்திற்கு முன்பு உதிரன் மாமாவை பாட்டி கூப்பிட்ட உடன் வீட்டில் உள்ள அனைவரும் வந்து ரொம்ப நேரம் கழித்து தான் மாமா வந்தார் அதான் உள்ளே என்று விட்டு இழுத்து விட்டு அமைதியாகி விட்டான் ஆமாண்டா என்ன இப்போ என்னால இதுக்கு மேல சாரி கட்ட முடியாது சொன்னதால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சரி காட்டுறேன்னு சொன்னதுனால கீழே உங்க மாமா மடிப்பு சரி பண்ணிக்கிட்டு இருந்தாங்க என்றவுடன் வீட்டில் எழில் நிலா முகில் மூவரும் சிரித்து விட்டார்கள்
அப்போ இது முக்கியமான வேலை தானே பாட்டி என்று நிலா சொன்னவுடன் அப்போது வீட்டில் உள்ள அனைவரும் சிரித்து விட்டார்கள் அப்போது உதிரன் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து முறைத்தான் பிறகுவீட்டில் உள்ள அனைவரையும் உதிரன் பார்த்து சிரித்து விட்டு பிறகு அவனும் சிரித்தான் அப்பொழுதுதான் மகிழ் அவனது அறையில் இருந்து வந்தான்
என்ன பாட்டி எல்லோரும் சிரிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்டான் எல்லாம் இந்த கடைக்குட்டியால இந்த வீட்டு வாலுங்க சும்மாவா இருக்குங்க என்றார் சரி பாட்டி என்ன எல்லாரும் வேலைக்கு கிளம்பலையா என்றான் எல்லோரும் இங்கே நின்று கொண்டு இருக்கீங்க என்று கேட்டான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு கூப்பிட்டு இருக்கோம் என்றார்
அப்படி என்ன முக்கியமான விஷயம் பாட்டி காலையிலேயே என்றான் இனிக்கு ஏழாவது மாசம் தொடங்கிடுச்சு வளைகாப்பு வைக்கலாம்னுட்டு என்றார் என்ன இனிக்கு வளைகாப்பா என்றான் மகிழ் வேகமாக உதிரனை பார்த்தான் உதிரனும் மகிழை தான் பார்த்தான் இருவரும் தங்களுக்குள்ளே பார்த்துக்கொண்டிருந்த உடன் வீட்டில் அனைவரும் இவர்கள் இருவரும் என்ன சொல்வார்கள் என்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்
உதிரன் மகிழ் இருவரும் இனி உடைய வளைகாப்புக்கு என்ன சொல்வார்கள் இப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்களா இல்லை இப்போது வேண்டாம் என்று சொல்வார்களா…
Going nice . Konjam repeated ah iruku sis story la athu konjam pathukonga
சூப்பர்… அன்ட் வெரி நான் கோயிங்.
சூப்பர்… அன்ட் வெரி நான் கோயிங்.
Nice…