இனிக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று சொன்னவுடன் மகிழ் வேகமாக உதிரனைப் பார்த்தான் உதிரனும் மகிழை தான் பார்த்தான் இருவரும் தங்களுக்குள்ளே பார்த்து சிரித்துக் கொண்டே இனிக்கு வளைகாப்பா வச்சிடலாமே என்றார்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருவரின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தவுடன் அனைவரும் ஒன்றாக சிரித்தார்கள் பிறகு மகிழ் தான் மகா விடம் என்னைக்கு நல்ல நாள் இருக்கு என்று பார்த்து விட்டாயா என்று கேட்டான் எங்க வைத்துக் கொள்ளலாம் வீட்டிலா இல்லை மண்டபத்திலா என்றான் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் அவ்வளவு சந்தோஷமாக இருவரையும் பார்த்தார்கள் ஒரு கணவனாக மகிழ் தனது மனைவியிடமும் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை பகிர்ந்து கொண்டு கேட்பது வீட்டில் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது மகா தான் உடனே மண்டபத்தில் வேண்டாம் மாமா நிறைய ஆட்கள் கூப்பிட வேண்டும் இடம் பத்துமா என்று தெரியாது நாம் வீட்டிலேயே வெளியே வைத்துக் கொள்ளலாம் பெரிதாக செய்யலாம் அனைவரையும் கூப்பிடலாம் என்றாள் அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டதால் சரி என்று விட்டார்கள் இனி எதுவும் பேசாமல் அமைதியாக மகாவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போது எழில் தான் உங்கள் பிரண்ட்ஸ் சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க எல்லாத்தையுமே கூப்பிடலாம் என்ற உடனே நிலா என்னோட பிரண்ட்ஸ் என்றால் நீயும் தான் உன்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிடு உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வரட்டும்உன்னோட ஃப்ரெண்ட்ஸ் அண்ணனோட பிரண்ட்ஸ் உதிரன் மாமா இனி முகில் மாமா எல்லாத்துக்கும் என்றான் என்னோட பிரண்ட்ஸ் வந்தா ஒன்னும் பிரச்சினை இல்லையா என்றாள் எல்லாரோட பிரண்ட்ஸ் வரும் போது உன்னோடு பிரண்ட்ஸ் வரதுக்கு என்ன என்றான் நிலா சிரித்துக் கொண்டே என்னோட பிரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் உன்னை தெரியும் ஓகேவா நீயும் நானும் மாமா மகன் அத்தை பொண்ணு தெரிஞ்சிடும் இருந்தாலும் ஓகேவா என்றால் சேர்த்துக் கொண்டே எழில் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான் பிறகு நிலாவின் தலையில் கொட்டி குட்டி சாத்தான் எப்ப தெரிந்தாலும் தெரியதான போது நீ சொல்லிட்டு போ இப்பையே தெரியட்டும் அதுக்கு என்ன இப்ப என்றான்நிலாவும் சிரித்துக் கொண்டே நான் சும்மாதான் கேட்டேன் நான் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் குப்பிட்டுக்கிறேன் என்றால் இணிக்கு வளைகாப்பு வீட்டில் ஒரு நல்லது நடக்க போகிறது என்று வீட்டில் உள்ள அனைவரும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள் இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கு என்று எண்ணி விட்டு என்னென்ன தேவை என்று பெரியவர்களை கேட்டு ஒவ்வொன்றாக அனைத்தையும் எழுதி வைத்துக் கொண்டார்கள் மகா எழில் இருவரும்பிறகு அவர்களது வேலைகளுக்கு நேரம் ஆகுதல் அனைவரும் இன்னும் அதற்கு ஐந்து நாட்கள் இருப்பதால் அவர்களது வேலையை பார்க்கச் சென்றார்கள் ஞாயிற்றுக்கிழமை இதிலிருந்து ஒவ்வொன்றாக பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார்கள் அப்பொழுது மணி தான் நாங்களாம் என்ன செய்யறது என்று கேட்டார்மகாவிடம் வந்து மகா சிரித்துக்கொண்டே நீங்கள் அனைவரும் அங்கு வந்து நின்றாலே போதும் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றால் அப்பொழுது எழில் மகாவின் தோளில் கை போட்டு அவளது தோளில் தனது தாடையைப் பதித்து கொண்டு அவளது தலையோடு தலைமுட்டி நாங்க பார்த்துக்கிறோம் மாமா ஒன்னும் பிரச்சனை இல்ல என்றான் வீட்டில் அனைவருக்கும் எழிலை பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அனைவருக்கும் ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்தது இவன் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் மகாவை கைவிட மாட்டான் என்று எண்ணினார்கள் மகிழே அவளை வெறுத்தாலும் இவன் வெறுக்க மாட்டான் என்று எண்ணினார்கள் ஒரு வேலை எழில் மகாவை வெறுக்கக்கூடிய நாளும் வருமோ யார் கண்டா பிறகு அனைவரும் அவர்களது வேலைக்கு சென்று விட்டார்கள் அன்று வேலு தான் நிலாவை கல்லூரிக்கு அழைத்துச் சென்றார் இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது மகா மகிழிடம் எப்போதும் போல் பேசினால் மகிழும் எப்பொதுழும் போல் தான் பேசினான் மற்றபடி அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் கணவன் மனைவி என்ற உறவு காதலர்கள் என்ற உறவு இல்லை இனி வளைகாப்பிற்காக வீட்டிற்காக அனைத்தையும் எடுத்துக்கட்டி செய்வதற்காக பேசிக்கொண்டார்கள் எழில் மகா முகில் அனைவரையுமே ஒவ்வொரு வேலையாக செய்தார்கள் யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று மகாவும் எழிலும் பிரித்து கொடுத்தார்கள் நிலாவும் அவளால் முடிந்த ஒரு சில உதவிகளை செய்தால் உதிரனையும் இனியையும் இதில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் நீங்கள் இருவரும் வரப்போகும் குழந்தையை நினைத்து சந்தோஷமாக இருங்கள் என்று விட்டாள் அவர்களும் சிரித்துக் கொண்டே சரி என்று விட்டுவிட்டார்கள் அதன் பிறகு அதைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை இரண்டு நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் நிலா கயலுக்கு அழைத்தால்கயல் திருமணமாகி சென்றதிலிருந்து இப்பொழுதுதான் முதல் முறை நிலாவாக கயலுக்கு அழைக்கிறாள் அன்று கயல் வீட்டிற்கு வந்த போது கயல் அழைத்தது அதன் பிறகு கயல் நிலாவுக்கோ இல்லை நிலா கயலுக்கோ அழைக்கவில்லை ஞாயிற்றுக்கிழமை இரவு தான் நிலா கயலுக்கு போன் அடித்தால் கயல் நிலா என்றவுடன் வேகமாக எடுத்து என்ன நிலா குட்டி நல்லா இருக்கியா என்றாள் ஹம் என்றால் நிலா அதன் பிறகு இருவருமே வேறெதுவும் பேசவில்லை இருவரிடமும் ஒரு சில நேரம் இடைவெளி மௌனமாக கழிந்தது பிறகு நிலாவே தான் இனி அண்ணிக்கு வளைகாப்பு புதன்கிழமை என்றாள் கயல் அந்த பக்கம் சிரித்துக் கொண்டே எனக்கு தெரியும் என்றால் என்ன என்றால் மகா சொல்லிவிட்டாள் நிலா என்றாள்அக்கா சொல்லிடுச்சா நான் வளைகாப்புக்கு உன்னை கூப்பிடலாம் என்று சொன்னதற்கு வேண்டாம் என்று சொன்னது என்றாள் எனக்கு அதில் ஒரு துளி கூட வருத்தம் இல்லை அவள் சொல்வது அனைத்தும் சரிதான் அவள் வீட்டில் உள்ள அனைவரிடமும் இனி வளைகாப்பு பற்றி பேசிவிட்டு உடனே எனக்கு போன் செய்து சொல்லிவிட்டாள் இப்பொழுது நிலாவிற்கு சந்தோஷமாக இருந்தது தான் கேட்கும் பொழுது தன்னுடைய அக்கா கயலை கூப்பிட வேண்டும் என்று சொன்னவுடன் அவளுக்கு மகா மேல் சிறிது கோபம் இருந்தது அதை இப்போது விலகி விட்டது பிறகு நிலா எதுவும் கேட்கவில்லை கயல் தான் நிலா சாப்பிட்டியா என்றால் ஹம் என்றால்அதன் பிறகு நிலா எதுவும் பேசாமல் லைனில் இருப்பதால் சரி நீ தூங்கு நேரம் ஆகுது பாரு என்று கயல் சொன்னவுடன் நிலா உடனே கயலை திட்ட ஆரம்பித்து விட்டால் அப்போ உனக்கு என்னிடம் பேச வேண்டும் என்று எண்ணமில்லை எனக்கு தான் உன்னிடம் பேச வேண்டும் என்று தோன்றுகிறதா என்று ஏதோ சொல்லி உரிமையில் திட்ட ஆரம்பித்தால் கயல் அந்த பக்கம் அழுது கொண்டே சிரித்தால் எத்தனை நாட்களுக்குப் பிறகு நிலா தன்னிடம் எப்போதும் போல் பேசுகிறாள் என்று அப்பொழுது அன்புதான் கயலின் தோளில் கை வைத்து கயலிடம் போன் வாங்கி பேசினான் நிலா திட்டி முடிச்சிட்டியா என்றான் நிலா ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி விட்டு பிறகு கயல் உடைய கணவன் என்றவுடன் அவளும் விசாரித்து இருந்தால் கயலுடைய கணவன் வீட்டை பற்றி அதனால் அன்பு அண்ணா நீங்களா என்றாள்ஆமாம் டா நான் தான் போதும்டா என் பொண்டாட்டியாலா எல்லாம் இதுக்கு மேல தாங்க முடியாது என்றான் அன்பு என் பொண்டாட்டி நீங்க திட்ட திட்ட இங்க அழுதுகிட்டே சிரிச்சிட்டு இருக்கா அவள் இவ்ளோ நாள் கழிச்சு இப்பதான் மனசு வந்து சிரிக்கிறாள் என்றான் டேய் உனக்கு என்ன டா வந்தது என்றாள் கயல் அன்புவிடம் நிலா கிட்டத்தட்ட 10 15 நாளைக்கு மேல என் கிட்ட பேசிட்டு இருந்தா சந்தோஷம் உனக்கு என்ன என்றால்நிலாவிற்கு இந்த பக்கம் அழுகையாக வந்தது அப்போது அன்பு தான் நிலா என்றான் அவளிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை என்றவுடன் இல்ல நான் என்று சொல்லிக் கொண்டே கண்ணீரை துடைத்தால் நிலா அப்பொழுது கயல் போனை வாங்கி நிலா என்றால் சரி நீங்க தூங்குங்க லேட் ஆகுது என்றவுடன் அவள் இப்பொழுது தனிமையில் இருக்க விரும்புகிறாள் என்று கயல் எண்ணி விட்டு சரி நிலா நீ எதையும் யோசிச்சிட்டு இருக்காத மகாவை எந்த இடத்திலும் தப்பா நினைக்காத என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டாள் நிலாவும் எதை எதையோ நினைத்து விட்டு அப்படியே தூங்கிவிட்டாள் அன்று இரவு மகிழ் மகா இருவருக்கும் வாக்குவாதம் அவர்கள் அறையில் நடந்து கொண்டு இருந்தது மகிழ் இந்த வளைகாப்பிற்கு கயலை கூப்பிட வேண்டும் என்றான் மகா அவளை கூப்பிட வேண்டாம் கயிலை கூப்பிட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணினால்இப்பொழுது கூட உனக்கு இந்த குடும்பம் தான் கண்ணுக்கு தெரிகிறதா இந்த குடும்பத்திற்காக கயலை உதறி தள்ளி விடலாம் அப்படியே விட்டுவிடலாம் என்று நினைக்கிறாயா என்றான் அப்பொழுது தான் எழில் அவர்கள் அறைக்கு வந்தான் மகிழ் பேசுவதையும் கேட்க நேர்ந்தது தனது அண்ணனை எதுவும் பேசாமல் மகாவை முறைத்துக் கொண்டு நின்றான் எழில் வந்தவுடன் மகிழ் பேசுவதை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டான் பிறகு எழில் இடமே கம்ப்ளைன்ட் செய்தான் நான் கயலை இனி வளைகாப்பிற்கு கூப்பிடலாம் என்று சொல்கிறேன் இவள் வேண்டாம் என்கிறால் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றான் எழில் எதுவோ பேசுவதற்கு வாய் திறந்தான் மகா வேகமாக வந்து எழிலின் கையை பிடித்தாள் எழில் கையை மகிழ் பிடித்த உடன் ஆமாம் இவளுக்கு இவள் நினைத்தது மட்டும் தான் நடக்க வேண்டும் இவளுக்கு வேண்டும் என்றால் வேண்டும் இவளுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் அப்படித்தானே வீட்டில் உள்ள அனைவரும் இவள் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் என்றான் மகிழ் அவ்வாறு சொன்னவுடன் எழில் மகாவை பார்த்தான் உடனே எழில் அவன் கையை உதறினான்எழில் ஒன்றுமில்லை மாமா ஒன்றை உணரவில்லை கயல் இந்த வளைகாப்பிற்கு வரவேண்டும் என்று மட்டும் தான் மாமா எண்ணுகிறார் என்று அவள் அழுகையுடன் சொன்னவுடன் அவள் குரல் மாற்றத்தை வைத்து மகிழ் அதுவரை மகாவை பார்க்கவில்லை அப்பொழுது தான் பார்த்தான் அவள் அழுகிறாள் என்றவுடன் அவளது கண்ணீரை பார்க்க முடியாமல் எல்லாம் நீ நினைச்சது தான் நடக்கணும் இல்ல உனக்கு வேனாம்னா தூக்கி எறிவை உனக்கு வேணும்னா எது வேணாலும் செய்வ என்று விட்டு வேகமாக மொட்டை மாடிக்கு சென்று விட்டான்மகிழ் சென்றவுடன் மகா அங்கையே முட்டி போட்டு உட்கார்ந்து அழுதால் எழில் அவளை வேகமாக எழுந்து நிற்க வைத்து அவளது தாடையிலே ஒன்று போட்டான் இதெல்லாம் உனக்குத் தேவையா என்று மகா எழிலை பார்த்துக் கொண்டிருந்தால் பிறகு எழில் மகாவை தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதான் தனது அண்ணன் இவளை எப்போதுமே புரிந்து கொள்ள மாட்டானா இவளது மனதையும் புரிந்து கொள்ள மாட்டானா இந்த குடும்பத்திற்காக இல்லை மொத்த குடும்பத்திற்காகவும் தானே யோசிக்கிறாள் இவனையும் எண்ணி தானே யோசிக்கிறாள் இவனும் இந்த குடும்பம் முக்கியம் என்று தானே யோசிக்கிறான் ஆனால் இவன் யோசித்தால் தவறு இல்லை அதுவே இவள் யோசித்தால் தவறா எப்பொழுது இவன் என்னுடைய லட்சுவை புரிந்து கொள்வான் என்று மனதுக்குள் வருந்தினான் வெளியே சொல்லவில்லை அப்போது மகா தான் எழிலின் முகத்தை நிமிர்ந்து பார்த்து நீ பொய் தூங்கு நேரம் ஆகுது பார் என்றாள் எழில் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அவள் மகிழிடம் பேச விரும்புகிறாள் அதனால் தான் தன்னை செல்ல சொல்கிறாள் என்று எண்ணி விட்டு அமைதியாக அவனது அறைக்கு சென்றுவிட்டான்எழில் சென்றவுடன் மகா வேகமாக மொட்டை மாடிக்கு சென்றாள் மகிழ் அங்குதான் வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டு கையை கட்டிக்கொண்டு நின்றான் மகா மொட்டை மாடிக்கு சென்றவுடன் அவளது கொலுசு ஒலியை வைத்து மகா தான் தன்னை தேடி வருகிறாள் என்பதை உணர்ந்தான்மகா வருவதை உணர்ந்தும் மகிழ் திரும்பியும் பார்க்காமல் எதுவும் செய்யாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான் மாகாவும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தால் அவனது அருகில் வந்து நின்று அவளும் அந்த நில ஒளியை வெறித்துப் பார்த்தால் பிறகு அவள் வந்து நின்றவுடன் மகிழ் தனது கையை கீழே விட்டான் அப்பொழுது மகா தனது கையோடு மகிழ் கையை கோர்த்துக் கொண்டாள் மகிழ் வேகமாக திரும்பி மகாவை பார்த்தான் மகா அழுது கொண்டே மகிழை பார்த்துக் கொண்டு இருந்தால் மகிழ் வேகமாக அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதான் அவனது மனதில் ஆயிரம் வலிகள் இருக்கிறது அதற்கு தீர்வும் இவளே நிறைய வலிகளை கொடுப்பவளும் இவளே என்று எண்ணி அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு அழுதான் ..இனியுடைய வளைகாப்பிற்கு கயல் வருவாளா ..இனியுடைய வளைகாப்பிற்கு கயல் வர வேண்டாம் என்று மகா செல்வதால் மகா மகிழ் இருவது வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Super ah poitu iruku story maha yarukaga etha inga magizh kitta maraikira kayal kupta prachanai varum therium aana kayal ah kupda solran Yen nu kekama manasula irukuratha vegama pesidran magizh
மகா ஏதோ காரணமாக தான் சொல்லறா