நிலா தனது இரு அண்ணன்களிடமும் நான் சின்ன குழந்தை என்று நீங்களும் நினைக்கின்றீர்களா எனக்கு பக்குவம் இல்லை விளையாட்டு தனமாக இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்று கண்ணீர் சிந்தினால் முகில் அவளை வேகமாக தனது தோளில் சாய்த்தான் உதிரன் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்
நிலா குட்டி என்றார்கள் இருவரும் ஒரே போல் இருவரையும் பார்த்து சிரித்து விட்டு முகிலின் தோளில் இருந்து எழுந்து தனது கண்ணீரை துடைத்து விட்டு எனக்கும் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும் அண்ணா என்றால் இருவரும் என்னவென்று அவளை பார்த்தார்கள் நான் வேண்டும் என்று அவர்கள் அறையில் தூங்கவில்லை
அவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது அவர்களுடன் சென்று ஒரே அறையில் நான் தூங்கக் கூடாது என்று எனக்கும் தெரியும் என்றால் இருவரும் அப்புறம் ஏன் என்பது போல் அப்புறம் ஏன் அவர்கள் அறையில் சென்று தூங்கினாய் என்பது போல் பார்த்தார்கள் நிலாஇருவரையும் பார்த்து சிரித்துவிட்டு ஒரு காரணத்திற்காக தான் நான் அவர்கள் அறையில் சென்று தூங்கினேன் என்றால்
இருவரும் என்ன என்றார்கள் ஆமாம் அண்ணா நான் இரண்டு நாட்களுக்கு முன்பு இனி அண்ணி வளைகாப்பு பற்றி மகாவிடம் பேசுவதற்காக அவர்கள் அறைக்குச் சென்றேன் அப்போது மகா கீழே தரையில் பெட்ஷீட் போட்டு படுத்து இருந்தால் மகிழ் மாமா அவரது பெட்டில் படுத்து இருந்தார் இருவரும் ஒரே அறையில் இருந்தும் தனித்தனியாக படுத்திருப்பது எனக்கு உறுத்தலாக இருந்தது
அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழவில்லை என்று எனக்கு தெரியும் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே இருந்த உறவு கூட இல்லாமல் இருவரும் இப்படி தனித்தனியாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை நான் சென்று அவர்கள் அறையில் தூங்கினால் இருவரும் பெட்டில் ஒன்றாக தூங்குவார்கள் என்ற எண்ணத்தில் மட்டும்தான் நான் அவர்கள் அறைக்கு சென்றேன்
அவர்கள் இப்படியே இருப்பது எனக்கு பிடிக்கவில்லை இது வீட்டில் இருப்பவர்கள் பார்த்திருந்தாலும் பிரச்சினை தானே அவர்களுக்கும் மன கஷ்டம் தானே அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்வது அவர்களது விருப்பம் அதில் நான் தலையிட மாட்டேன் ஆனால் அவர்கள் எப்பொழுதும் போல் கூட இல்லாமல் இப்படி இருப்பதே எனக்கு கஷ்டமாக இருக்கிறது
அவர்கள் எப்பொழுதும் போல் பேசிக்கொள்ள வேண்டும் இப்பொழுது இனி அண்ணி வளைகாப்பிற்காக தான் இப்படி இருவரும் எப்பொழுதும் போல் பேசிக் கொள்கிறார்கள் மற்றபடி அவர்கள் இருவரும் எப்பொழுதும் போல் இல்லை என்றால் என்னடா மா அதுக்கு எங்களிடம் சொல்லி இருக்கலாம் இல்ல என்றார்கள் சொல்லி என்ன அண்ணா செய்வது
நான் உங்களிடம் சொல்லிவிட்டால் மட்டும் அனைத்தும் சரி ஆகிவிடுமா எதுவும் மாறாது அவர்களாக மாற வேண்டும் என்று தான் இப்படி செய்தேன் சரி நீ நினைத்தது போல் நடந்ததா என்றார்கள் ஒரு எதிர்பார்ப்போடு இருவரும் அவள் சிரித்துக் கொண்டே அதெல்லாம் நன்றாகவே நடந்தது அது மட்டுமில்லாமல் என்று விட்டு அமைதி ஆகி விட்டாள்
என்ன நிலா குட்டி என்றார்கள் இருவரும் இல்லை அண்ணா ஒன்றும் இல்லை என்று விட்டாள் இருவரும் சரி சரி என்று விட்டு அமைதியாகி விட்டார்கள் எழில் வேற உன்னை தப்பா நினைச்சு திட்டிட்டு போறான் என்றார்கள் நிலா சிரித்துக் கொண்டே என்னது எழில் மாமா என்னை தப்பா நினைச்சு தான் திட்டுச்சா எழில் மாமா எப்பயும் என்னை தப்பா நினைக்காது
என் மேல தப்பு இருந்தா கூட அது எனக்கு எடுத்து தான் சொல்லுமே தவிர என்றுமே என்னை தப்பா நினைக்காது எழில் மாமா என்ன நல்லாவே புரிஞ்சுக்கும் எனக்கு பக்குவம் இருக்கா இல்லையான்னு கூட அதற்கு தெரியும்
இப்போது கோபம் என் மேல அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிஞ்சும் இப்படி போய் படுத்து இருக்க கூடாது என்று மட்டும் தான் மத்தபடி எனக்கு பக்குவம் இல்லைன்னு நான் செஞ்சது தப்புன்னு எழில் மாமா எப்பயும் சொல்லாதே என்றால் இருவரும் என்ன என்று கேட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது எழில் வேகமாக அவனது அறையில் இருந்து வந்தான்
குட்டி சாத்தான் இன்னும் இங்கே நின்று பேசிட்டு இருக்க காலேஜ்க்கு வர ஐடியா இல்லையா டேரா பொட்டராலம் என்று தான் நினைச்சுட்டு இருக்கியா நாளைக்கு தான் லீவு போடணும் இன்னைக்கு லீவ் போட்டுடலாம் என்று இருக்கியா இன்னைக்கு தான் நீ செமினார் எடுக்கணும் மறந்துடாது நீ போ சீக்கிரம் போய் கெளம்பு டி என்று சொன்னான்
முகில் உதிரன் இருவரும் எழிலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரையும் நிலா திரும்பி பார்த்து எப்படி என்று கேட்டால் அது எப்படி நிலா குட்டி என்றார்கள் அது அப்படி தான் என்று விட்டு சரி பாய் என்று விட்டு அவளும் நேரமாவதை உணர்ந்து அவளது அறைக்கு சென்று கல்லூரிக்கு கிளம்பினாள்
அனைவரும் அவர்களது அறைக்கு சென்று கிளம்பி விட்டு வந்து உட்கார்ந்தார்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தவுடன் எழில் தான் நிலா விடம் நிலா உன்கிட்ட பேசணும் என்றான் நிலாவும் என்ன என்று கேட்டால் அப்பொழுது சுந்தரியும் அருகில் இருந்தார் என்ன டா கல்லூரிக்கு போற நேரத்தில் என்றார்
எழில் இரு மா என்று விட்டு தாத்தா பாட்டி என்று ஒவ்வொரு வராக கூப்பிட்டான் அனைவரும் என்னடா வேலைக்கு கிளம்பவில்லை எங்களை கூப்பிட்டு இருக்க என்று கேட்டார்கள் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான் இனி வளைகாப்பு பற்றி ஏதாவது பேசணுமா என்றார் பாட்டி இல்ல இது அதைவிட முக்கியமான விஷயம் என்றான்
அனைவரும் அப்படி என்னடா முக்கியமான விஷயம் அதுவும் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் என்றார்கள் இருங்கள் சொல்றேன் அதற்கு தானே குப்பிட்டு இருக்கேன் என்று விட்டு அவனது காலேஜ்க்கு எடுத்துச் செல்லும் பையில் இருந்து ஒரு கவரை எடுத்து நிலா கையில் கொடுத்தான் நிலா தான் என்ன மாமா லவ் லட்டரா என்றால் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை முறைத்தார்கள்
எழில் கூட நிலாவை முறைத்து பார்த்தான் மகா தான் சிரிக்கச் செய்தால் முதலில் லேசாக சிரிக்க செய்தவள் எழில் முகத்தை பார்த்து விட்டு வேகமாக சிரித்தால் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை முறைத்துவிட்டு அது என்ன என்று பார் என்றார்கள் பிறகு முகில்தான் நிலா குட்டி என்ன விளையாட்டு என்றான்
இதுவாது ஒரு பொண்ண லவ் பண்றது ஆச்சு இதெல்லாம் சாமியாராக போக வேண்டியது தெரியா தனமாக என் அத்தை வயிற்றில் பிறந்துடுச்சு என்றால் நான் எந்த பெண்ணையும் லவ் பண்ண மாட்டேனா இல்லை என்ன எந்த பெண்ணும் லவ் பண்ணாத என்றான் உன்ன பொண்ணுங்க லவ் பண்ணும் ஆனால் நீ தான் யாரையும் பாக்கறது இல்லையே ஒரு வேல அவனா நீ என்றாள்
இப்போது வீட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சிரித்தார்கள் அடிவங்க குட்டி சாத்தான் என்று நிலா தலையில் கொட்டினான் நிலா சும்மா மாமா என்று விட்டு என்ன மாமா இது கவர் என்றால் பிரித்துப் பாரு அப்புறம் தெரியும் என்றான் அந்த கவரில் இருக்கும் லெட்டர் படித்தவுடன் அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது
வீட்டில் அனைவரும் என்னடி என்ன ஆச்சு என்று கேட்டார்கள் அவளுக்கு லவ் லெட்டர் தான் கொடுத்து விட்டானோ என்று முகில் எண்ணினான் பிறகு நிலா என்று அவளது தோளில் கை வைத்தான் நில மகாவை பார்த்துவிட்டு முகில் கையில் அந்த லெட்டரை கொடுத்தால் முகிலும் அந்த லெட்டர் படித்துப் பார்த்தான் அவனுக்கு அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்தான்
அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் டேய் என்ன விஷயம் என்று சொல்லுங்கடா நீங்க உங்களுக்குள்ளே பார்த்துட்டு அமைதியா இருந்தா என்னடா அர்த்தம் என்றார் நிலா சிரித்துக் கொண்டே நம் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்த ஒன்று சந்தோசமான விஷயம் மகா அக்காவுக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைச்சிருச்சு அதுவும் எழில் மாமா வேலை செய்ற எங்க காலேஜ்ல கிடைச்சிருக்கு
இனிமேல் அக்காவும் என் கூட காலேஜ் வருவா என்று கூறி சுந்தரியை வேகமாக சுற்றினால் பிறகு சுந்தரி தான் ஏய் விடுடி எனக்கு வயசு ஆகுது என்றார் அக்காவிற்கு வேலை கிடைச்சுச்சுன்னா உனக்கு 10 வயதுக்கு குறைஞ்ச மாதிரி தான் அத்தை என்று கூறி அவரை நிற்க வைத்து அவரது தாடையில் முத்தம் ஒன்றை வைத்தாள் அவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது வீட்டில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது
அனைவரும் மகாவை பார்த்தார்கள் பிறகு மகா எனக்கு இந்த வேலைக்கு செல்ல விருப்பமில்லை என்றாள் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாக மகாவை பார்த்தார்கள் ஏன் என்பது போல் அப்பொழுது பாட்டி தான் நான் அன்னைக்கு கல்யாணம் முடிஞ்ச உடனே வேலைக்கு போக வேணாம்னு சொல்றதுக்கு சொன்னேன் டி உன்னை வேலைக்கு போக வேணாம்னு சொல்ல லா இது உன்னோட கனவு டி வீட்ல இருக்க எல்லாருக்கும் புடிச்ச ஒன்னு தானே என்றார்
இல்ல பாட்டி எனக்கு விருப்பம் இல்லை என்றால் வீட்டில் உள்ள அனைவரும் என்ன ஏன் விருப்பமில்லை என்றார்கள் இந்த லெட்டர் எப்படா வந்துச்சு என்று கேட்டார் பாட்டி எழிலிடம் இது மகா அண்ணன் கல்யாணம் அன்னைக்கே வந்துடுச்சு அந்த நேரத்துல இது வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்லவில்லை இப்பொழுது சொல்லக்கூடிய நேரம் அது மட்டும் இல்லாமல் வேலைக்கு சேர்ந்த ஸ்டார்டிங்லே லீவ் போட வேண்டாம் என்பதால் தான் அமைதியாக இருந்தேன்
இப்பொழுது இனி வளைகாப்பு முடிந்து ஒரு வாரம் கழித்து கல்லூரிக்கு செல்லட்டும் என்றுதான் சொன்னேன் என்றான் மகா எழிலை முறைத்து விட்டு நான்தான் எனக்கு விருப்பமில்லை என்று சொல்கிறேனே என்றால் எழில் மகாவை முறைத்து விட்டு நான் மகா கல்லூரி சேர்ந்து ஸ்டார்டிங்கில் லீவு எடுக்க வேண்டாம் என்பதால் வரும் திங்கள் கிழமையிலிருந்து இனி வளைகாப்பு முடிந்த பிறகு வருவாள் என்று கல்லூரிக்கு லெட்டர் போட்டு விட்டேன் என்றான்
மகா எழிலை முறைத்து கொண்டே நீ சொன்னாள் நான் போக வேண்டுமா நான்தான் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்கிறேனே என்றாள் உனக்கு விருப்பமில்லை என்றால் என்ன அதற்காக உன்னை அப்படியே விட்டுவிடுவேனா நான் லெட்டர் போட்டு விட்டேன் என்று எழில் மகாவை முறைத்தான்
மகா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து விட்டு எனக்கு விருப்பம் இல்லைன்னா விருப்பம் இல்லை என்று விட்டு எழில் மகிழ் இருவரையும் முறைத்து பார்த்துவிட்டு சரி எனக்கு நேரம் ஆகிறது நான் கல்லூரிக்கு கிளம்புகிறேன் என்று விட்டு வீட்டில் இருந்து அவளது கல்லூரி நோக்கி சென்றுவிட்டால் வீட்டில் அனைவரும் இவள் ஏன் இப்படி சொல்கிறாள் என்று பார்த்தார்கள்
எழில் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு மகிழை பார்த்தான் பிறகு சரி எனக்கு நேரம் ஆகிறது நான் கிளம்புகிறேன் சரி என்று விட்டு கிளம்பி விட்டான் இளையவர்கள் அனைவரும் அவர்கள் வேலைக்கு சென்று விட்டார்கள் நிலா முகிலுடன் கல்லூரிக்கு சென்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் இப்பொழுது மகிழை பார்த்தார்கள்
மகிழ் அனைவரையும் பார்த்து சிரித்து விட்டு அவள் இந்த வேலைக்கு போவாள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றான் எப்படிடா ஏண்டா அவள் தான் வேலைக்கு போக மாட்டேன்னு சொல்றாளே என்று வருத்தபட்டார் பாட்டி அவளை வேலைக்கு எப்படி போக வைக்கணும்னு என்று எனக்கு தெரியும் அவ வேலைக்கு போவா அதுக்கு நான் உறுதி தரேன்
யாரும் இதையே நெனச்சிட்டு இருக்காதீங்க கிளம்புங்க உங்க வேலைய பாருங்க என்றவுடன் அனைவரும் அவர்களது வேலையை பார்க்க சென்று விட்டார்கள் மகிழ் எப்படியும் மகாவை சம்மதிக்க வைத்து விடுவான் என்று அனைவரும் எண்ணி விட்டு இனி வளைகாப்பு வேலையை பார்க்க சென்று விட்டார்கள்
அவர்கள் அனைவரும் சென்ற பின் மகிழ் மகா சென்ற பாதையை பார்த்துவிட்டு உன்னை எப்படி வேலைக்கு போக வைக்கணும் என்று எனக்கு தெரியும் டி நீ வேணான்னு சொல்லி விட்டாள் நான் அப்படியே விட்டு விடுவேனா உன்னோட கனவே அது தானே அதை நான் நிறை வேற்றாமல் விட்டு விடுவேனா என்று மனதிற்குள் எண்ணி வெளியில் சிரித்தான்
மகிழ் மனதில் நினைப்பது போலும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொன்னது போலும் மகாவை சம்மதிக்க வைத்து இந்த கவர்மெண்ட் வேலைக்கு அனுப்பி விடுவானா …
எழில் நிலா இருவரும் இருக்கும் கல்லூரிக்கு மகாவை அவளே விருப்பட்டு வேலைக்கு செல்லும் படியாக செய்வானா…
Interesting
Maha antha velaiku kandipa pova magizh poga vaipan . Nila etho plan la tha poi paduthu iruka athuku etha mari magizh maha kitta oru chinna change
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.