மகா வீட்டில் உள்ள அனைவரிடமும் நான் இந்த வேலைக்கு செல்ல மாட்டேன் எனக்கு விருப்பம் இல்லை என்று விட்டு அவள் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கும் கல்லூரிக்கு சென்று விட்டாள் வீட்டில் உள்ள அனைவரும் இவள் ஏன் கவர்மெண்ட் வேலைக்கு செல்ல மாட்டேன் என்று சொல்கிறாள் என்று எண்ணினார்கள்
பிறகு இப்படி சொல்லி செல்கிறாளே என்று வருத்தப்பட்டார்கள் அப்போது மகிழ் தான் யாரும் வருத்தப்பட வேண்டாம் அவள் விருப்பப்பட்ட கவர்மெண்ட் வேலைக்கு அவளை எப்படி போக வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றான் வீட்டில் அனைவரும் மகிழ் எப்படியாவது மகாவை சம்மதிக்க வைத்து விடுவான் என்று எண்ணினார்கள்
அதனால் அனைவரும் இனிக்கு நாளைக்கு வளைகாப்பு என்பதால் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விட்டார்கள் மகிழும் அவனுக்கு வேலை இருப்பதால் அவனுடைய வேலையை பார்க்க சென்று விட்டான் மகா இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கும் கல்லூரிக்கு செல்லும் வழி எங்கும் மகிழ் எழில் இருவரையும் திட்டிக்கொண்டே சென்றால்
அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் எவ்வளவு திமிர் இருந்தால் நான் போக மாட்டேன் என்று சொல்லியும் இப்படி பண்ணிட்டு இருக்காங்க அதும் இந்த எழிலுக்கு எவ்வளவு திமிரு இருக்கு நான் அந்த வேலைக்கு செல்ல மாட்டேன்னு சொல்லியும் வீட்ல இருக்க எல்லாரும் முன்னாடியும் அந்த லெட்டர் காமிக்கிறேன்
இவன் லெட்டர் காமிச்சுட்டா நான் வேலைக்கு போயிடுவானா இந்த மகிழ் மாமா கூட அமைதியாக தான் நின்னுட்டு இருக்கு இரண்டு பேரும் சேர்ந்து தான் ஏதோ பிளான் பண்ணி இருக்காங்க என்று எண்ணிக்கொண்டு சென்றாள் கல்லூரிக்கு சென்று பிறகு அவள் இதைப் பற்றி யோசிக்கவில்லை காலை வேலை முழுதும் அவளுக்கு வேலை இருந்தது
ஒன் ஹவர் கூட ஃப்ரீயாக இல்லாமல் கிளாஸ் அட்டென்ட் செய்து கொண்டே இருந்தால் அதனால் அவளுக்கு வேறு எதிலும் கவனம் இல்லை எழிலும் அவனுடைய கல்லூரிக்கு சென்று விட்டான் அப்பொழுது எழில் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது நிலா உடைய கிளாஸில் தான் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தான் அப்போது நிலா ரொம்ப நேரமாக பேசிக் கொண்டே இருந்தால்
தனது நண்பர்களுடன் எழில் இரண்டு முறை திரும்பி பார்த்து முறைதான் அப்பொழுது அவள் அமைதியாக இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தால் எழில் ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாமல் அகல் நிலா ஸ்டாண்ட் அப் என்றான் அவள் எழுந்து நின்றவுடன் கெட் அவுட் என்றான் அவள் அமைதியாக இருந்தால் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் கிளாஸை விட்டு வெளியே போ
வெளியே போய் நின்று கிளாஸ் கவனி அப்பதான் உங்களுக்கு எல்லாம் தெரியும் பனிஷ்மென்ட் என்றான் நானும் பார்த்திட்டு இருக்கேன் டூ டைம்ஸ் உன்ன பார்த்து முறைச்சேன் அவ்வளவு தான் உனக்கு என்றான் இவரு முறைச்சா நாங்க பேசாம இருப்போமா என்று முனகினாள்
எழில் அவளை பார்த்து முறைத்து விட்டு என்னோட கிளாஸில் மட்டும் இல்லை இன்று முழுதும் நின்று கொண்டே கிளாஸ் கவனி அப்ப தெரியும் என்று விட்டு அவளை வெளியே சொல்ல சொல்லிவிட்டு கிளாஸ் எடுத்து கொண்டு இருந்தான் அப்பொழுது அவர்கள் வகுப்பு வழியாக வருண் வந்தான் கிளாஸ் முடித்துவிட்டு அடுத்த கிளாஸ் எடுப்பதற்காக வருண் நிலா வகுப்பு வழியாக சென்று கொண்டிருந்தான்
எழிலுக்கு நிலாவுடைய கிளாஸில் கன்டினியூவாக இரண்டு மணி நேரம் வகுப்பு இருந்தது அப்பொழுது வருண் தான் நிலா வெளியே நிற்பதை பார்த்து விட்டு அகல் நிலா ஏன் வெளியே நிக்கிற என்று கேட்டான் நிலா அவனுக்கு வணக்கம் வைத்துவிட்டு அவள் நடந்ததை சொன்னால் எழில் பார்த்தும் பார்க்காதது போல கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தான்
நிலா பாவமாக மூஞ்சியை வைத்து கொண்டு சொன்னாள் வருண் எழில் சார் என்றான் எழிலும் சொல்லுங்க சார் என்றான் இல்ல சார் பேசிட்டு இருந்தாங்க என்றதுக்காக வெளியேவே நிக்க வைக்கணுமா உங்க கிளாஸ் கன்டினியூஸா இந்த கிளாஸ்க்கு இரண்டு கிளாஸ் இருக்கு இல்ல என்றான்
என்னுடைய கிளாஸ் கன்டினியூசா இந்த கிளாஸ்க்கு தான் ஆனா எல்லா கிளாஸ் இன்று அனைத்து கிளாசும் நின்று கொண்டே தான் கவனிகணும் என்றான் சார் என்றான் வருண் இல்ல வருண் நான் எப்ப கிளாஸ் எடுத்திட்டு இருந்தாலும் பேசிட்டு இருந்தா என்ன பண்றது இவங்க அந்த மாதிரி பண்ணுவாங்க தப்பு செஞ்சா தண்டனை அனுபவிக்கணும்
இல்லன்னா திரும்பத் திரும்ப தப்பு பண்ண தோன்றி கொண்டு இருக்கும் திருந்துற மாதிரியே இல்லை இவங்க கெட்டது மட்டும் இல்லாம இவங்க கூட இருக்க ஸ்டூடண்ட்ஸையும் சேர்த்துக் கெடுக்குறாங்க என்றான் வருண் அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை வருண் இரண்டு முறை சொல்லி பார்த்தேன் இன்று என்ன ஆனாலும் சரி அகல் நிலவு நின்று கொண்டு தான் கிளாஸ் கவனிக்க வேண்டும்
வகுப்பில் வரும் அனைத்து ஆசிரியர்களும் சொல்லிவிடுங்கள் என்று விட்டு அவன் இரண்டு மணி நேரம் வகுப்பு முடித்துவிட்டு சென்று விட்டான் அது லஞ்ச் பிரேக் என்பதால் அனைவரும் சாப்பிட சென்றார்கள் அப்பொழுது நிலாவுடைய நண்பர்கள் தான் ஏன்டி அந்த சாருக்கும் உனக்கும் எப்ப பார்த்தாலும் முட்டிட்டு இருக்கு நீ எது பண்ணாலும் திட்டாரு தானே
இரண்டு டைம் வான் பண்ணாருல நீ அப்புறமா ஏண்டி பேசினா அவர் மோரச்சா நாங்க பேச்சை நிறுத்தணுமா என்றால் ஆனாலும் உனக்கு இவ்வளவு அடம் வேண்டாம் டி நம்பர் கிளாஸ்க்கு வர எல்லா ப்ரொபஸர் கிட்டயும் சொல்லிவிட போறார் இவர் தான் நம்ம கிளாஸ் டீச்சர் அவர் சொன்னா எல்லாரும் கேட்க தான் செய்யுவாங்க
லஞ்சுக்கு அப்புறம் நிக்க தான் போற பாத்துட்டே இரு என்றார்கள் நான் நாளைக்கு லீவு தானே போட போறேன் என்றாள் இதுக்கு தான் கூட்டு குடும்பமா இருக்கணும் போல டி அடிக்கடி லீவ் போடலாம் போல இருக்கு சரி என்று விட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் எப்பொழுதுமே நிலா இரண்டு லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு வருவாள்
ஒன்று அவளுக்கு மற்றொன்று தனது நண்பர்களுக்கு ஷேர் செய்ய என்பதற்காக அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவளும் சாப்பிட்டு விட்டு எழுந்தால் அவள் வெளியே சென்று பாக்ஸ் கழுவி விட்டு கை கழுவிக்கொண்டு வரும்போது எழிலும் சாப்பிட்டுவிட்டு அவனுடைய பாக்ஸ் எடுத்துக் கொண்டு வந்தான்
எழில் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விட்டான் நிலா அவளுடைய நண்பர்களை பார்த்துவிட்டு போறார் பாரு வால்ட்டர் வெற்றி வேலு என்றாள் அவளுடைய நண்பர்கள் சிரித்தார்கள் எழில் நிலா தோழியில் இளவேனில் என்ற பெண்ணை அழைத்தான் இளவேனில் என்றான் சார் என்று திரும்பினால் நெக்ஸ்ட் உன் கிளாஸ் எடுக்க வரும் எல்லாம் ஸ்டாப் கிட்டையும் சொல்லுங்க
உங்க பிரண்டு இன்னைக்கு ஃபுல் டே நின்று கொண்டு தான் கிளாஸ் கவனிக்க வேண்டும் என்று என்றான் நிலா உடைய நண்பர்களுக்கு சிரிப்பாக வந்தது சரி சார் என்று தலையாட்டினார்கள் நிலா முறைத்து கொண்டே எழிலை பார்த்தால் பிறகு அமைதியாக தனது நண்பர்களுடன் சென்றுவிட்டால் அவர்கள் சென்றவுடன் வருண் தான் டேய் ஏன்டா மச்சான் இப்படி பண்ற என்றான்
எழில் வருணிடம் நீ வாடா என்று விட்டு அமைதியாக அவர்கள் இடத்திற்கு சென்று விட்டார்கள் எழில் அடுத்தடுத்த வகுப்பை பார்க்க சென்று விட்டான் நிலா அன்று முழுவதுமே நின்று கொண்டே தான் கிளாஸ் கவனித்தால் மாலை வேளையில் முகில் தான் நிலாவை அழைக்க வந்திருந்தான்
முகில் வரும் போது நிலா முனகி கொண்டே கால் மேல் கால் வைத்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தால் அப்பொழுது முகில் வந்து நின்று என்ன நிலா குட்டி கால் மேல கால் வச்சுட்டு இருக்க என்றான் டேய் அண்ணா வந்துட்டியா வா வீட்டுக்கு போலாம் நீ வேற என்றாள் கீழே விழுந்து விட்டாயா என்றான்
இல்லை என்றால் அப்போது நிலா உடைய நண்பர்கள் தான் இல்லை என்றால் என்ன டி என்று விட்டு அவள் இன்று முழுவதும் நின்று கொண்டு தான் கிளாஸ் கவனித்தாள் என்றவுடன் நிலா தனது நண்பர்களை திரும்பி முறைத்து பார்த்துவிட்டு இப்படி உண்மையை போட்டு உடைச்சிட்டாலுங்களே என்று எண்ணினால்
முகில் நிலாவை ஏன் என்பது போல் பார்த்தான் அது ஒன்றும் இல்லை பனிஷ்மென்ட் நீ கெளம்பு வீட்டுக்கு போகலாம் என்று தனது நண்பர்களை திரும்பி முறைத்து விட்டு வீட்டுக்கு போகலாம் என்றால் முகில் சுற்றி முற்றி பார்த்தான் நிலா டேய் அண்ணா இது காலேஜ் எதுக்கு சுத்தி பாத்துட்டு இருக்க என்றாள்
அப்பொழுது எழில் வருண் இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள் அப்பொழுது எழில் தான் அகல் நிலா என்று வேகமாக அழைத்தான் நிலா வண்டியில் ஏறச் சென்றவள் அமைதியாக இறங்கி எழிலை பார்த்து விட்டு போச்சு மானத்தை வாங்கப்போறாரென்று எண்ணி விட்டு சொல்லுங்க சார் என்றாள் எழில் முகிலை பார்த்து விட்டு நிலாவிடம் இது யார் என்று கேட்டான்
என்னுடைய அண்ணன் என்றாள் குட் ஈவினிங் சார் என்று எழில் முகிலுக்கு வணக்கம் வைத்தான் என்னுடைய தங்கச்சி தான் சொல்லுங்க சார் என்றான் முகில் எழில் முகிலிடம் சார் கிளாஸ் ஒழுங்கா கவனிக்கவே மாட்ராங்க கிளாஸ் எடுத்துட்டு இருக்கும்போது பேசிட்டு இருக்காங்க டெய்லி வான் பண்ணிட்டு இருக்கேன்
ரொம்ப பேசிட்டு இருக்காங்க அட்டகாசம் பண்றாங்க கம்ப்ளைன்ட் பண்றேன் வளர்ந்த புள்ளைய என்று நினைக்காதீங்க இவங்க மட்டும் பேசறது இல்ல நல்லா இருக்கு அவங்களோட ஃப்ரெண்ட்ஸையும் பேசி கெடுக்குறாங்க அவங்க கேட்டு போறது மட்டும் இல்லாமல் என்றான் அவங்க நல்லா தான் படிக்கிறாங்க அதுக்காக அவங்க பண்றது எல்லாம் சரி என்று கிடையாது
கொஞ்சம் என்னன்னு பாருங்க என்று விட்டு நிலாவுடைய நண்பர்களையும் திரும்பிப் பார்த்தான் அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் நிலா எழிலை முறைத்து விட்டு தேங்க்யூ சார் என்று முகில் வண்டியில் ஏறினால் முகில் நிலா இவர்கள் வீடு வந்து சேருவதற்கும் மகா வீடு வந்து சேர்வதற்கும் கரெக்டா இருந்தது
இவ்ளோ நேரம் என்னாச்சு நிலா இப்பதான் வீட்டுக்கு வர என்று கேட்டால் மகா எல்லாம் உன் ஃப்ரெண்டால தான் என்று விட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றாள் நிலா மகா முகில் இடம் என்ன ஆச்சு என்றாள் முகில் கல்லூரியில் நடந்த அனைத்தையும் சொன்னவுடன் மகா வாய்விட்டு சிரிக்க செய்தால்
பிறகு வேலைகள் அதிகமாக இருப்பதால் வேறு ஏதும் பேசாமல் வீட்டிற்குள் சென்றார்கள் முகிலும் மகாவும் பிறகு அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருக்கும் போது தான் எழில் வந்தான் முகில் எழிலை முறைத்துவிட்டு டேய் நான் வந்தேன் நிலாவைப் பற்றி என்னிடம் கம்ப்ளைன்ட் செய்த அதுவே அப்பாவோ மாமாவோ வந்திருந்தாலும் நீ நிலாவைப் பற்றி கம்பளைண்ட் சேய்த்திருப்பாயா என்றான்
எழில் எதுவும் பேசாமல் முகிலை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அப்பொழுது மகா நிலா இருவரும் ஒரே போல் அதெல்லாம் யார் வந்திருந்தாலும் சொல்றது சொல்லித்தான் இருப்பாங்க என்றார்கள் எழில் இருவரையும் பார்த்து சிரித்து விட்டு போய் வேற வேலை இருந்தா பாரு என்று விட்டு அவனது வேலைகளை பார்க்கச் சென்று விட்டான்
அப்பொழுது சுந்தரி தான் டேய் என்னடா கூட்டமா நின்று பேசிட்டு இருக்கீங்க வேலை இல்லையா என்று கேட்டார் அதெல்லாம் இருக்கு அத்தை உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று காலேஜில் நடந்ததை சுந்தரியிடம் சொன்னான் என்னடா புள்ளைய ஒரு நாள் ஃபுல்லா நிக்க வெச்சி இருக்கியா என்று சுந்தரி எழிலிடம் கேட்டவுடன் அம்மா உங்க புள்ள பெரிய புள்ள பேசாம அமைதியா கிளாஸ் கவனிக்க சொல்லுங்க
இவ கேட்டது மட்டும் இல்லாம சுத்தி இருக்க பசங்களையும் சேர்த்து கெடுக்கிறாள் என்றவுடன் மகா முகில் இருவரும் சிரித்தார்கள் சுந்தரிக்கு கூட சிரிப்பாக இருந்தது நிலாவை பார்த்துவிட்டு அமைதியாக இருந்தார் எழில் வேலையை பார்க்கச் சென்று விட்டான் நிலா சுந்தரியியம் அவங்க தினமும் ஃபுல்லா நின்னுட்டு இருக்காங்களே அவங்களுக்கு கால் வலிக்காத அத்தை என்று எழில் மகா இருவரையும் பார்த்து கேட்டாள்
. சுந்தரி சிரித்துக் கொண்டே அதெல்லாம் அவங்களுக்கு பழகி இருக்கும்டா உனக்கும் போக போக பழகிடும் என்றார் என்ன போக போக பழகிடுமா நான் டெய்லி கிளாஸ் நின்று கொண்டு கவனிக்கணும் என்று நினைக்கிறீங்களா என்றாள் இப்போது மூவருமே சிரித்தார்கள் பிறகு சுந்தரி தான் நான் அப்படி சொல்ல வரலை நிலா நீ படிச்சு முடிச்சு நீயும் ஒரு வேலைக்கு போனதுக்கு அப்புறம் சொன்னேன் டா என்றார்
சரி என்று அனைவரும் இனி வளைகாப்பிற்கு தேவையான வேலைகளை செய்தார்கள் அனைவரும் ஒன்றாக கூடி இருந்து இப்படி அனைவரும் சந்தோஷமாக இனி வளைகாப்புக்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இப்படி சந்தோஷமாக இருக்கும் வீட்டில் நாளை வளைகாப்பில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுமா…
வளைகாப்பு நல்ல முறையில் நடைபெறுமா …
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
❣️தனிமையின் காதலி ❣️
Nalla padiya valaikappu panunga pa ini ku entha prachanai illama
சூப்பர்.. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Interesting