Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மாமா இங்க பாரு இது என்ன பழக்கம் இப்படி அழுவுற நல்லாவா இருக்கு என்றால் அவன் நிமிர்ந்து மகாவை பார்த்தான் என்னடி பண்ண சொல்றன்னு கேட்டான் மாமா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளேன் அதையே நினைச்சுட்டு இருக்காத என்றாள் எப்படி டி அதையே நினைக்காதன்னு சொல்ற அன்னைக்கு ஒரு நிமிஷம் என்றான் அப்பொழுது அவனது வாயில் தன் கையை வைத்து தடுத்தால்

போதும் இதையே எத்தனை நாளைக்கு பேசிட்டு இருப்பா அது நடந்து ஆறு மாசம் ஆகுது மாமா வீட்ல இருக்க எல்லாத்தோட சந்தோஷத்தையும் கெடுக்க சொல்றியா வீட்ல இருக்க எல்லோருக்குமே அவ்வளவு சந்தோஷமா இப்ப சாப்பிட்டு போனாங்க எல்லாருடைய முகத்திலும் எவ்வளவு சந்தோஷம் இருந்துச்சு நீயே பார்த்து தானே எல்லாருமே ஆசைப்பட்டாங்க மாமா நீ ஏதாச்சும் சொல்லுவனு என்ற ஒரே காரணத்துக்காக உன்கிட்ட கேட்காம இருக்காங்க ப்ளீஸ் புரிஞ்சுக்கோ

என்னோட ஒருத்திக்காக எத்தனை பேர் சந்தோஷத்தையும் அழிக்கணும் மா அவங்க எல்லாம் சந்தோஷமா இருந்தா தான மாமா நமக்கும் சந்தோசம் என்றால் நான் இப்ப அவங்க சந்தோஷமா இல்லமா இருகணுமுனு சொல்லலையே அவங்க வருத்தமா இருந்தா தான் நான் எனக்கு சந்தோஷம் என்று சொல்லலையேடி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ அன்னைக்கு நடந்ததே நினைச்சுட்டு இருக்காது அது மறக்க முடியாத ஒன்றுதான் ஆனால் அதில் இருந்து வெளியே வரவேண்டும் தானே

அதையே யோசித்து கொண்டு இருந்தால் நம்ம அடுத்த கட்டத்தை தாண்டி எப்படி போக முடியும் இப்படி நான் உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் கூட இல்ல மாமா உனக்கே புரியும் தெரியும் என்னையே யோசித்து கொண்டு இருக்காது அதுல இருந்து கொஞ்சம் வெளியே வா என்ற மகாவையே பார்த்து இருந்துவிட்டு சரி டி நீ கீழே போ இந்த நேரத்துல என்ன உனக்கு இங்க வேலை என்றான்

மகா மகிழனை முறைத்துவிட்டு ஆமாம் நீ இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இரு வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எப்படி சந்தோஷமா இருப்பாங்க என்றால் சரிடி நான் அதை பத்தி யோசிக்கல நீ கீழ போ மணி என்ன ஆகுது பாரு சீக்கிரம் தூங்கினால் தானே காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும் கல்யாண வேலை நிறைய இருக்கு அதுவும் நாளை ல இருந்து நிறைய வேலை வேற இருக்கும்

அதுதான் மாமா நானும் சொல்றேன் நாளைலிருந்து உனக்கு நிறைய வேலை இருக்கும் போய்ட்டு தூங்கு எதையாவது யோசிச்சு மனசு போட்டு குழப்பிக்கொண்டு இருக்காதே இத பத்தி இனிமே நினைக்காத உன் தங்கச்சிக்கு கல்யாணம் நம்ம வீட்டோட மொத கல்யாணம் நல்லபடியா நடத்தணும் அதை முன்னிறுத்தி செய்வது நீ தான் நீயே இப்படி வேற சிந்தனைல இருந்தனா அது எப்படி காண்சிரேட் பண்ணுவ கல்யாணத்துல மட்டும் காண்சிரேட் பண்ணி அனைத்து வேலையும் நல்ல முறையில செய்யணுமா இல்லையா

அதுக்கு நீ ஃபர்ஸ்ட் நல்லா இருக்கணும் ஃபர்ஸ்ட் போயிட்டு தூங்கு என்றால் அவன் மகாவின் நெற்றியில் முட்டி விட்டு சரிடி என்று கூறினான் சரி மாமா என்று சொல்லிவிட்டு தூங்க கீழே இறங்கிவிட்டாள் மகியும் அவனது அறைக்குச் சென்று இதுவரை மகா தன் வாழ்வில் வந்ததிலிருந்து என்னென்ன நடந்தது என்று அனைத்தையும் எண்ணிவிட்டு அப்படியே தூங்கி விட்டான் மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்து அனைத்து வேலைகளையும் ஓடியாடி செய்து கொண்டிருந்தான்

அதேபோல் வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வேலைகளாக பிரித்துக் கொண்டு செய்து கொண்டிருந்தார்கள் இரண்டாவது நாள் நழுங்கு வைப்பதற்கு நல்ல நேரம் பார்த்து  இருவரையும் அழைத்துக் கொண்டு வந்து உட்கார வைத்து பெரியோர்கள் பிறகு வீட்டில் உள்ள சிறியவர்களும் நாங்களும் நலுங்கு வைக்கிறோம் என்று கூறி ஒவ்வொருவராக கலாட்டா செய்தார்கள்

அவர்களும் வைத்து நிறைய கலாட்டா அவர்களாலும் நிறைய மக்களின் சந்தோஷங்களும் அவர்களின் இரண்டாவது நாளும் பூர்த்தி அடைந்தது இப்படியே அன்று மாலையும் சென்றது அதன் பிறகு பொண்ணு மாப்பிள்ளை இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் தனியாக பெண்ணை அழைக்க வேண்டிய எதுவும் இல்லை என்றவுடன்  வீட்டில் உள்ள பெரியவர்களே இருவரையும் தனித்தனி காரில் அழைத்துக்கொண்டு  அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமியே தரிசனம் செய்துவிட்டு மணமக்கள் இருவரையும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள்

சிறுவர்களும் வீட்டில் உள்ள அனைத்தையும் ஒதுங்கி வைத்துவிட்டு மண்டபத்திற்குச் சென்றார்கள் இவர்கள் செல்லும் பொழுது மகிழன் எழில் வேந்தன் கார் முகிலன் மூவரும் மண்டபத்தில் ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டே இருந்தார்கள் பிறகு பெண் அழைப்பிற்கு மாலை நிச்சயதார்த்தத்திற்கு நேரமாகியவுடன் மணமகன் ரெடி ஆகிவிட்டான என்று பார்ப்பதற்கு மூவரும் சென்றார்கள் அங்கு அவன் ரெடி ஆகி அவன் இருந்த உடன் என்ன மாப்ள ஹேப்பியா என்றான் மகிழ்

உதிரன் மகிழனை கட்டி அணைத்துக் கொண்டு ஹாப்பியா இல்லாமலா இந்த சந்தோஷத்துக்கும் முழு காரணமே நீ தானே மாப்பிள்ளை இதையே பேசிட்டு இருக்காத எத்தனை நாளைக்கு இதே பேசிட்டு இருப்பே என்றான் நான் என்னோட வயசுக்கு சொன்னாலும் அது தானடா உண்மை என்றான் சரி சரி எப்ப பார்த்தாலும் மாத்தி மாத்தி மாப்பிள மச்சான் பேசிகிட்டு மாப்பிள்ளைய கூட்டிட்டு வர சொன்னாங்க வாங்க என்று கார்முகிலனும் வேந்தனும் சொன்னார்கள்

உதிரனும் மகிழனும் இருவர்களையும் பார்த்து முறைத்துவிட்டு பிறகு சிரித்துக் கொண்டே சரி வாங்கடா என்று எழிலின் தோளில் ஒரு கையும் மகிழின் தோளில் ஒரு கையும் போட்டுக் கொண்டு உதிரன் நடந்து வந்தான் எதில் வேந்தனின் கையைப் பிடித்துக் கொண்டு கார்முகிலன் வந்தான் அப்போது ஒரு சில பெண்கள் நேற்றைக்கு என்றால் மாப்பிள்ளை பாட்டிய அழைத்துக் கொண்டு வந்தான் இன்று மணமகனை அழைக்க சென்ற மச்சான்களின் தோளிலில் கை போட்டு அழைத்துக் கொண்டு வருகிறான் என்று பேசினார்கள்

அப்போது பாண்டியம்மாதான் உங்க கொல்லி கண்ண சுத்தி போடணும் டி கொள்ளிக்கண்ணை வச்சிக்கிட்டு கம்முனு இருக்கீங்களா எப்ப பார்த்தாலும் என் பேரனை கண்ணு வச்சுட்டே இருக்கீங்க என்றார் ஆமாம்மா ஆமாம் பாட்டி உங்க பேரனை  கண்ணு வைக்கிறாங்க உங்க பேரன் பண்றது எல்லாம் உங்களுக்கு தெரியலையா என்றார்கள் எனக்கு எதுவும் தெரியலடி அவனுங்க எப்பயும் போல தான் இருக்கானுங்க என்றார்

ஆமாம் உங்க பேரனுங்க எப்பையும் போல தான் இருக்கானுங்க ஆன இது மண்டம் இல்லையா மாப்பிள்ளை மாறி உங்க பெரிய பேரனை இருக்க சொல்லுங்க என்று கூறி அனைத்து பெண்களும் சிரித்தார்கள் அப்பொழுது அங்கு அந்த மூன்று வானரங்களும் வந்தது அண்ணா என்ன இவ்வளவு நேரம் பண்ற நீ வந்தா தான் நாங்க அங்க பொண்ணு அழைசிட்டு வர முடியும்

அப்போது அங்கு இருந்த பெண்மணிகள் உங்க மாமானுங்க உங்க அண்ணாவை அழைச்சிட்டு வராங்களா  இல்ல உங்க அண்ணா உங்க மாமன்களை அழைச்சிட்டு வரனானு என்றார்கள் அப்போது அந்த மூன்று வானரங்களும் உங்களுக்கு மாப்பிள்ளையை வந்து உட்கார வைத்து நிச்சயதார்த்தம் பண்ணியவுடன் சோறு போடுவது தானே முக்கியம் பிறகு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்றார்கள்

அப்பொழுது மகிழ் மூவரின் தலையிலும் கொட்டி என்ன பேச்சு இது சாப்பாடை பற்றி பேசுகிறீர்கள் என்றான் மூவரும் மகிழை பார்த்து முறைத்துவிட்டு நாங்கள் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார்கள் அதற்கு அந்த பெண்கள் அனைவரும் மகிழிடன்  என்ன மகிழ் இப்படி செய்ற  அவங்க மூணு பேரும் ஜாலிகாக தானே எங்ககிட்ட பேசினாலுங்க நாங்களுமே ஜாலிக்காக தான் இப்படி பேசணும் அவங்க ஒன்னும் வேணும்னு சொல்லலா தப்பாவும் சொல்லலையே என்றார்கள்

மகிழ்  வேறு எதுவும் பேசாமல் மூவரையும் பார்த்து முறைத்துவிட்டு உதிரனை மணமேடைக்கு அழைத்துச் சென்றான் அவனை மணமேடையில் உட்கார வைத்துப் பிறகு மணப்பெண்ணை அழைத்து வர அந்த மூன்று வானர்களும் சென்றார்கள் மேக்கப் எல்லாம் முடிந்து அமைதியாக அமர்ந்து இருந்தால்  இனியை மூன்று வானரங்களும் அழைத்துக் கொண்டு  வந்தார்கள்

அதன் பிறகு அந்த மொத்த பெரிய குடும்பத்தோடும் அந்த ஊரோடும்  சொந்த பந்தங்களோடும் நல்ல முறையில் உதிரன் இதழினி நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடந்து முடிந்தது அவர்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்து நல்ல முறையில் பந்தியும் பரிமாறப்பட்டது அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தான் மகிழன் அவனுடன் அவன் வீட்டில் உள்ள இளவட்டங்களும் செய்தது

பிறகு நேரம் ஆவதை உணர்ந்து அனைவரும் சென்ற பின் அனைவரும் தூங்கச் சென்றார்கள் மகிழன் அப்பொழுதும் ஓடி ஓடி செய்து கொண்டிருந்தான் அப்பொழுது பாண்டியம்மா தான் பேராண்டி இப்படியே ஓடி ஆடிட்டு செஞ்சிட்டு இருக்காத ஒரு ரெண்டு மணி நேரமாவது போய் தூங்கு என்றார்  நம்ம வீட்டு கல்யாணம் பாட்டி நாளை ஒரு பொழுது அதுக்கப்புறம் தூங்கலாம் என்று விட்டு பாட்டியின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு ஓடிவிட்டான்

இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டான் என்று அவரும் தன் போக்கில் புலம்பிக்கொண்டே அவருக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்று விட்டார் காலையில் அந்த கல்யாண மண்டபமே அவ்வளவு அழகாக இருந்தது வெளியே தெர்மாகோலால் உதிரன் இதழனி என்று எழுதி இருந்தது மணமக்களை வாழ்த்த வரும் மக்களும் வெளியில் இருக்கும் கட்டவுட்டையும் மொத்த குடும்பத்தின் போட்டோக்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே வந்தார்கள்

திருமணமும் நல்ல முறையில் நடைபெற்றது உதிரன் மஞ்சள் கயிற்றால் ஆன பொன் தாலியை இதழை பார்த்துக் கொண்டே அவளது சம்மதத்துடன் அவளது கழுத்தில் அணிந்தான் பிறகு அவளது நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்தான் வீட்டில் உள்ள இளவட்டங்கள் ஓய் என்று கத்தினார்கள் அப்பொழுது மகிழ் அனைவரையும் பார்த்து முறைத்தவுடன் அனைவரும் மகிழனை திரும்பி முறைத்து விட்டு இவனுக்கு எல்லாம் சின்ன வயசுன்னு சொல்லவே கூடாது

எப்போது பார்த்தாலும் முறைச்சி கிட்டே இருக்கிறான் இவனுக்கு மகிழென்று பெயர் வைத்திருக்கிறார்கள் மகிழ் என்று வச்சிருக்க கூடாது காவல் காக்கும் அய்யனார்ன்னு பேரு வச்சிருக்கணும் எப்ப பார்த்தாலும் முறைச்சிகிட்டே நிக்கிறான் அறுவால் ஒன்று தான் கையில் இல்லை என்று எழில் சொன்னான் அவன் அவ்வாறு சொன்னவுடன் முகிலன் கயல் நிலா மகா அனைவரும் ஒன்றாக சிரித்தார்கள்

பிறகு  மணமக்களை அழைத்துக் கொண்டு சென்று சாப்பிட வைத்தார்கள் பிறகு அனைத்தும் நல்ல முறையில் முடிந்த பிறகு வீட்டில் உள்ளவர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் பிறகு மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் அங்கு சென்றவுடன் நான்தான் எடுப்பேன் நான்தான் ஆரத்தி எடுப்பேன் என்று அந்த மூன்று வானரங்களும் அடித்துக் கொண்டது

அப்பொழுதும் மகிழன் மூன்று பேரையும் பார்த்து முறைத்துக் கொண்டுதான் நின்றான் அவன் யார் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை அவர்கள் மூவருக்குள் பேசி முடிவு செய்யட்டும் என்று எண்ணினான் பிறகு கத்தாம ஒழுங்கா யாராச்சும் ஒருத்தங்க எடுங்க ப்ளீஸ் கத்திட்டு இருந்தீங்கன்னா என்ன செய்வனே தெரியாது என்றான்

ஆமாம் அய்யனார் பேச வந்துட்டாரு என்று தங்களுக்குள் முனகினார்கள் அப்பொழுது முகிலும்  எழிலும் சிரித்தார்கள் இனிதான் அனைவரையும் பார்த்து சிரித்துவிட்டு என் அண்ணனை ஓட்டுன வரைக்கும் போதும் அமைதியை யாராச்சும் ஒருத்தவங்க ஆரத்தி எடுங்கடி இல்லன்னா அத்தைகளை எடுக்க சொல்லுங்க என்றால் அப்பொழுது அந்த மூன்று வானரங்களும் எது எது அத்தையா இனிமே நாத்தனார்கள் எல்லாம் உன்னை எப்படி வச்சு செய்ரோமுனு மட்டும் பாரு நாங்க ஆரத்தி  எடுத்த தான் நீ வீட்டுக்குள்ள போக முடியும் என்றார்கள்

இனி மூவரையும் பார்த்து சிரித்துவிட்டு தனது காதல் கணவனான உதிரனை  பார்த்து முறைத்தாள் அவள் முறைப்பின் அர்த்தம் புரிந்ததால் தனது தங்கைகளை பாவமாக பார்த்தான் மூவரும் சிரித்துக்கொண்டே மூவரும் சேர்ந்து ஆர்த்தி சுற்றினார்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவ்வளவு சந்தோஷமாக அந்த மூன்று பெண்களையும் பார்த்தார்கள் மூவரில் யாருமே நான் தான் ஆரத்தி எடுப்பேன் என்று தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் மூவருமே சேர்ந்து எடுத்தவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது

மகிழனும் மூவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் பிறகு ஆரத்தி சுற்றிவிட்டு டேய் அண்ணா பணம் போடு என்றார்கள் அப்பொழுது மகிழன் தான் தனது பாக்கெட்டில் இருந்து ஆளுக்கு 2000 என்று 6000 ரூபாய் அவர்களது கையில் வைத்தான் முவரும் மகிழை பார்த்து முறைத்துவிட்டு அந்த பணத்தை அவனது கையிலே வைத்தார்கள் ஏன் என்று பார்த்தான் நாங்கள் எங்கள் அண்ணனிடம் தான் கேட்டோம் உங்களிடம் கேட்கவில்லை என்றார்கள்


உடனே மகிழும் முறைத்து பார்த்தான் உதிரன் சிரித்துக் கொண்டே தனது பாக்கெட்டை தடவினான் அவனது பாக்கெட்டில் பணம் எதுவும் வைத்து இல்லை அவன் திரும்பி சுற்றிமுற்றி பார்த்தான் அவனுக்கு இப்பொழுது யாரிடம் கேட்டாலும்  தவறாக ஆகிவிடும் என்று எண்ணினான் பிறகு தனது மூன்று தங்கைகளையும் பார்த்துக் கொண்டே தனது கழுத்தில் இருக்கும் செயினை கழட்டி நடுவில் நிற்கும் மகாவின் கையில் வைத்தான்

மகா எதுவும் பேசாமல் மூவரை அழைத்துக் கொண்டு ஆரத்தியை வெளியே கொட்டி விட்டு வந்தால் அந்த செயினை அவனது கழுத்தில் போட்டதே மகா தான் அவளுடைய முதல் மாத சம்பளத்தில் தன்னுடைய அண்ணனுக்கு வாங்கி கொடுத்த செயின் அது அந்த செயின் என்னவோ ஒரு முக்கால் பவுன் தான் வரும் இருந்தாலும் அவள் பாசமாக வாங்கி கொடுத்தது

அதை இன்று மற்றவர்களுக்காக கொடுத்தது அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது இருந்தாலும் தனது தங்கை தன்னை தவறாக எண்ண மாட்டாள் என்று அவனுக்கு தெரியும் அதனால் தான் அவ்வாறு செய்தான் ஆனால் உதிரன் நினைப்பது போல் மகாவும் என்னுவாளா …

இல்லை மகா உதிரனை தவறாக நினைப்பாளா இனிமேல் அவனிடம் எப்படி பேசுவாள் நல்ல முறையில் நடந்து கொள்வாளா இல்லை எப்படி ..

அதேபோல் மகிழன் கொடுத்த பணத்தை ஏன் அந்த மூன்று பெண்களும் வேண்டாம் என்றார்கள் அதை மகிழன் எப்படி எடுத்துக் கொண்டான்…

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️தனிமையின் காதலி ❣️

கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களது மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க நன்றி🙏

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5”

  1. CRVS2797

    ஆரத்தி எடுத்தா யாராவது பணம் போட்டுத்தானே ஆகணும் .. யார் போட்டா என்ன…? இதுல என்ன இருக்குன்னு தெரியலையே…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *