இனி வளைகாப்பிற்காக அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் அப்படியே இரவு பொழுதும் ஆகிவிட்டது இரவு 7 ஏழு மணி ஆகியும் மகிழ் மட்டும் வீட்டிற்கு வராமல் இருந்தான் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது மகாவிடம் இனி தான் மகா அண்ணன் எங்கே இன்னும் வரவில்லை என்றால்
அப்பொழுது தான் வீட்டில் உள்ள அனைவரும் மகாவை திரும்பிப் பார்த்தார்கள் அனைவரும் மகிழ் வளைகாப்பு விஷயமாக ஏதாவது வேலையாக சென்று இருக்கிறானோ என்று எண்ணினார்கள் மகா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு இல்லை இனி மாமா ஒரு முக்கியமான வேலை விஷயமாக போயிருக்காரு வர கொஞ்சம் லேட் ஆகும் என்றால்
அப்படி என்ன முக்கியமான விஷயம் என்னோட வளைகாப்பை விட என்றால் ப்ளீஸ் இனி இப்படி எல்லாம் பேசாதே உன் வளைகாப்புக்கு இருப்பாரு இப்ப ஒரு முக்கியமான விஷயமாக போய் இருக்காரு அப்போது கருப்பையா தாத்தா தான் மகாவிடம் என்னடா மா பஞ்சாயத்து வேலையா வெளிய எங்கயாச்சு போய் இருக்கானா என்றார்
இல்ல தாத்தா பஞ்சாயத்து விஷயமாக ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு அதை பகலில் முடிச்சிட்டு இப்போ அவரு கம்பெனி விஷயமா போயிருக்காரு ரொம்ப நாளாவது கம்பெனிக்கு போயும் ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருந்துச்சு அதனால போய் இருக்காரு வந்துருவாரு இன்னும் கொஞ்ச நேரத்துல என்றால் இனி தான் தனது அண்ணன் இல்லை என்றவுடன் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்
அப்பொழுது சுந்தரி தான் இனியிடம் உன் அண்ணன் இல்லனா என்ன அதான் உன் அண்ணன் பொண்டாட்டி இருக்கா இல்ல அப்புறம் என்ன என்றார் என்ன இருந்தாலும் என் அண்ணன் இருக்குற மாதிரி ஆகுமா என்றால் மகாவை பார்த்துக் கொண்டே மகா இனியை பார்த்து சிரித்தாள் அவள் வேண்டுமென்றே தன்னை வம்பு இழுக்கிறாள் என்று மகாவிற்கு தெரியும் அப்பொழுது காவேரி தான் என்ன இனி இப்படி சொல்லிட்ட உன் மகா உன் அண்ணனில் பாதித்தானே என்றார்
ஆமா என் அண்ணனில் பாதி தான் என்று இனி முகத்தை பார்த்து விட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள் பெரியவர்களும் வரவேற்பு அறையில் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருந்தார்கள் மகிழ் இரவு ஏழரை மணி போல் வீட்டிற்கு வந்தான்
இனி தான் தனது அண்ணனை பார்த்துவிட்டு அண்ணா இவ்வளவு நேரம் எங்கனா போயிட்டு வர எவ்வளவு நேரம் என்றாள் ஒரு முக்கியமான விஷயம் வேலை விஷயமா வெளியே சென்று வந்தேன் டா அதான் லேட் ஆயிடுச்சு என்றான் அப்பொழுது மகா தான் இனி நான் உன்னிடம் சொல்லிருந்தேன் இல்ல அப்புறம் என்ன என்று கேட்டுக்கொண்டே மகிழ்க்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால்
அவன் குடித்துவிட்டு என்ன இனிமா இரு வரேன் என்று விட்டு மகாவிடம் சோம்பு கொடுத்துவிட்டு அவனது அறைக்கு சென்றான் மகாவும் கிச்சனுக்கு சென்று மகிழ்க்கு டீ போட்டுக் கொண்டு இருந்தால் மகிழ் அவனது அறைப்புச் சென்று பிரஷ் ஆகிவிட்டு முகம் கைகள் கழுவிக்கொண்டு வேறொரு உடை அணிந்து கொண்டு வெளியில் வந்தான்
மகாவும் மகிழுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தால் வந்தவுடன் மகிழிடம் கொடுத்தால் அவனும் இனியிடம் பேசிக்கொண்டே வரவேற்பு அறையில் உட்கார்ந்தான் சாரிடா இனி மா நான் வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை முக்கியமான மீட்டிங் அதை தவிர்க்க முடியவில்லை அதான் இத்தனை பேர் இருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் மகா பார்த்துக்கொள்ள மாட்டாளா உனக்கு தேவையானதை என்றான்
வீட்டில் உள்ள அனைவரும் மகிழை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதி ஆகிவிட்டார்கள் இனி சிரித்துக் கொண்டே சரி அண்ணா என்று விட்டு அமைதியாகிவிட்டாள் இரவு ஒரு 8:30 மணி போல் சுந்தரி தான் மகிழிடம் வந்து வாடா சாப்பிடலாம் என்றார் எண்ண மா இப்பயே சாப்பாடு என்றான் இல்லடா வெளியே போய்விட்டு வந்தாய் இல்லை அதான் பசிக்கும் அல்லவா என்றார்
அதெல்லாம் இல்ல மா பசி இல்லை நீங்கள் வேண்டுமானாலும் சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றான் இப்பொழுது தானே டீ குடித்தேன் என்றான் இல்லடா உனக்காக தான் சாப்பிட கூப்பிட்டேன் எங்களுக்கெல்லாம் பசி இல்லை என்றார் சரி இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டுக் கொள்ளலாம் இருக்கும் வேலைகளை பார்க்கலாம் என்றான் மகிழ்
அப்பொழுது எழில் தான் அதெல்லாம் முடிஞ்சிருச்சு ஒன்னும் பெருசா இல்ல நீ அமைதியா உட்காரு என்று சொல்லிவிட்டு மகாவிடம் சென்று அவளது தோளில் கை போட்டுக்கொண்டு நாளை என்ன வேலை பார்க்கிறது என்று பேசிக் கொண்டிருந்தான் அப்பொழுது இனி தான் என்னுடைய வளைகாப்புக்கு நீதான் மகா சாப்பாடு செய்ய வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்
சாமிக்கு படைக்கும் போதும் எனக்கு தருவதற்கு நீ தான் செய்ய வேண்டும் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு சமையல்காரங்க செஞ்சுக்குவாங்க என்றால் மகா சிரித்துக்கொண்டே அதுக்கு என்ன செஞ்சுட்டா போச்சு உனக்கு என்ன என்ன சாப்பாடு வேணும் என்று சொல்லு அந்த சாப்பாட்டையே செஞ்சிடலாம் என்றாள்
இனி அவளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை சொன்னால் சரி இனி செய்துவிடலாம் என்று சிறிது நேரம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது பாட்டி பாண்டியம்மா தான் சரி சரி நீங்க பேசிட்டு இருந்த வரைக்கும் போதும் நேரம் ஆகுது என்றார் அனைவருக்கும் அதுவே சரி என்று பட்டதால் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்
அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறையை நோக்கி சென்று விட்டார்கள் மகிழும் சாப்பிட்டுவிட்டு அவனது அறைக்குச் சென்று இன்று மீட்டிங்க்கு சென்று வந்த அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று லேப்டாப்பில் சரி பார்த்துக் கொண்டிருந்தான் அப்பொழுது மகா அவர்கள் அறைக்கு வந்தால் மகிழிடம் பால் கிளாஸ் கொடுத்துவிட்டு கீழே பாய் விரித்து படுத்தால்
மகிழ் அவள் பாய் விரித்து படுக்கும் வரை பார்க்கவில்லை பிறகுதான் மகா எங்கே என்று மகிழ் பார்த்தான் மகா ஏன் கீழே படுத்து இருகாய் மேலே வந்து படு என்றான் ஏன் நான் தினமும் கீழே தானே படுத்து இருக்கிறேன் இன்று மட்டும் என்ன என்றால் நேற்று மேலே தானே படுத்தாய் அமைதியா வந்து மேலே படு மகா என்றான் எனக்கு விரும்பவில்லை என்றால்
மகிழ் அவளை முறைத்துவிட்டு அமைதியா வந்து படுடி என்றான் என்னால எல்லாம் முடியாது நான் இங்கையே படுத்து கொள்கிறேன் மாமா நான் எப்பவும் போல கீழே படுத்து கொள்கிறேன் என்றாள் மகிழ் வேகமாக கீழே இறங்கி வந்து மகாவை அலக்காக தூக்கினான் அகா என்ன பண்ற என்று நெஞ்சிலே அடித்தால் அமைதியாக வந்து படுடி என்று சொல்லிவிட்டு அவளை பெட்டில் படுக்க வைத்தான்
அவள் வேகமாக துள்ளி குதித்து எழுந்து உட்கார்ந்து மாமா என்ன பண்ணிட்டு இருக்க ஒரு பேச்சில் சொன்னால் கேட்க மாட்டியா என்ன பண்ணிட்டு இருக்க நான் எப்பயும் போல கீழே படுத்து கொள்கிறேன் என்றால் அமைதியாக இருடி ஒரே பேச்சில் சொன்னால் கேட்க மாட்டியா வந்து படு என்று அவளை படுக்க வைத்து அவளை பின்பக்கம் இருந்து இருக்கி அணைத்தான் மாமா என்ன பண்ற என்றாள்
அவன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு ஒன்றும் பண்ண வில்லை என்று கூறினான் அவன் பேச பேச அவனது உதடுகள் அவளது காது மாடலை உரசியது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அகா என்ன பண்ற என்று கேட்டால் மகிழ் அவளது அவஸ்தையை உணர்ந்து சிரிக்க செய்தான் என்னடி பண்றேன் என்றான் புரியாத மாதிரி பேசாத டா
நீ பேச பேச உன்னோட உதடு என் காது மடலில் உரசுகிறது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்றால் மகிழ் அவளைப் பார்த்து சிரித்தான் பிறகு மகாவும் மகிழை திரும்பிப் பார்த்தபடி அவனை பார்த்து படுத்தாள் அவள் படுத்தவுடன் அவளது தாடையில் ஒரு கடி கடித்து விட்டு மதியம் என்னடி சொன்ன என்றான் மகா ஒரு நிமிடம் மகிழை பார்த்துவிட்டு என்ன சொன்னேன் என்றால்
என்ன சொன்ன என்று நீயே நினைத்து பாரு என்றான் இருவரது நினைவுகளும் மதியம் நடந்ததற்குச் சென்றது மதியம் மகா உணவு இடைவேளை நேரத்தில் தான் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தால் அப்பொழுது மகிழுக்கு மெசேஜ் செய்திருந்தால் அண்ணனும் தம்பியும் என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க நான் தான் எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லைன்னு சொல்றேன் இல்ல அப்புறம் எதுக்கு வீட்ல இருக்கவங்க முன்னாடி சொல்றீங்க
அவங்க முன்னாடி சொன்ன நான் வேலைக்கு போயிடு வேன் என்று நினைக்கிறியா என்று இன்னும் நிறைய மெசேஜ் அனுப்பி இருந்தால் அனைத்திலும் மகிழை வாடா போடா என்று சொல்லி அனுப்பி இருந்தால் மகிழ் அதை பார்த்து சிரித்தான் அப்பொழுது அவன் பஞ்சாயத்து ஆபீஸில் இருந்தான் உடன் இருந்த பாண்டி கூட என்ன அண்ணா போன பார்த்து சிரிக்கிறீங்க
நீங்க சிரிச்சு ரொம்ப நாள் ஆகுது என்று கேட்டான் மகிழ் சிரித்து கொண்டே உன் அண்ணி அனுப்பி இருக்க மெசேஜ் பார்த்து தான் டா சிரிக்கிறேன் அவள் ரொம்ப நாட்களுக்குப் பிறகு என்னை வாடா போடா என்று கூப்பிடுகிறாள் என்று சொன்னான் பாண்டி சிரித்துக் கொண்டே உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆகுது அண்ணா என்றவுடன் மகிழின் சிரிப்பு நின்றது
பாண்டி மகிழிடம் அதுவே நினைச்சுட்டு இருக்காதீங்க அண்ணியை பத்தி உங்களுக்கு நான் சொல்லணும் என்று அவசியம் இல்லை என்றான் டேய் சந்தோஷமா இருக்கேன் வேற எத பத்தியும் பேசாத என்றான் பாண்டி மகிழிடம் பிறகு அதைப் பற்றி பேசவில்லை இப்போது இருவரும் அதை தான் நினைத்தார்கள் ரொம்ப நாள் கழித்து மகா மகிழை வாடா போடா என்று கூப்பிடுகிறாள்,
மகிழ் அவளை தனது அருகே இழுத்து அவளை இருக்க அணைத்துக் கொண்டான் அகா என்ன பண்ற என்றாள் காலையில் சீக்கிரம் எந்திரிக்கணும் வேலை இருக்கிறது என்றால் அமைதியாக படு நானும் அதை தான் சொல்கிறேன் காலையில் அதிக வேலை இருக்கிறது சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும்
அதனால் எதுவும் பேசாமல் சமத்தாக தூங்கு டி என்று அவளை பின்பக்கம் இருந்து இறுக்கி அணைத்துக் கொண்டு அவளது இடுப்பை சுற்றி கை போட்டு இருந்தான் மகா அவஸ்தையாக உணர்ந்தால் அவனது அணைப்பை பிறகு நேரமாகுவதால் அவனை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு வேறு எதுவும் யோசிக்கமால் தனது மாமானின். இறுகிய அணைப்பில் இருக்கிறோம் என்று நிம்மதியாக படுத்து விட்டாள்
மகா மகிழ் இருவரும் காதலிக்கும் காலங்களில் கூட தோளில் சாய்ந்திருக்கிறார்கள் மடியில் பார்த்திருக்கிறார்கள் ஆனால் இதே போல் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு இருந்ததில்லை இன்றுதான் இருவரும் இப்படி கட்டியணைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதை எண்ணிக் கொண்டே இது தங்களுக்கு எப்போதும் நீடிக்க வேண்டும் என்று இருவரும் மனதுக்குள் எண்ணிக் கொண்டே அசதியில் இருவருமே உறங்கி விட்டார்கள்
நாளை இனி வளைகாப்பு அனைவரும் வந்து விடுங்கள் விமர்சியாக தான் செய்யப்படுகிறது …
என்னென்ன உணவு வகைகள் வேண்டும் என்று சொன்னால் நாளை அதை இனி வளைகாப்பில் செய்து விடலாம் …
ஒன்பது வகையான சாதமா ஏழு வகையான சாதமா உங்களுக்கு என்னென்ன வகை சாதங்கள் பிடிக்கும் என்று நீங்கள் கூறினால் அதையே நாளை இனி வளைகாப்புக்கு செய்யப்படும் ….
அனைவரும் இனி வளைகாப்பிற்கு வந்து வாழ்த்தி விட்டு செல்லுமாறு கேட்டு கொள்கிறேன்…
அன்புடன்
❣️ தனிமையின் காதலி❣️
கதையின் நகர்வு எப்படி உள்ளது என்று படித்துவிட்டு உங்களின் மேலான விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்…
சைலண்ட் லீடர்ஸ் ஒரு வரியில் ஆவது உங்களின் விமர்சனங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
மிக்க நன்றி 🙏
Super pa epi ini valaikappu waiting nalla padiya nadathunga. Ipo tha rendu perum pesikueanga ithuku tha nila annaiku vanthu iruka
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
நைஸ் … இப்பையாவது இரண்டும் சேர்ந்த இருக்கறது சூப்பர். . இப்படியே இரண்டு பேரும் இருக்கனும் சண்டையில்லாம