Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 34

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 34

காலை 4:00 மணி போல் மகா வேகமாக எழுந்து மகிழையும் எழுப்பினாள் மகிழ் எழுந்து நேரத்தை பார்த்துவிட்டு என்னடி அதுக்குள்ள எழுப்புகிறாய் என்று கேட்டான் நீதான் அனைத்தையும் எடுத்து கட்டி செய்ய வேண்டும் எழுந்திரு மாமா நேரமாகுது விளையாடதா உன் தங்கச்சிக்கு தான் வளைகாப்பு அதை மறந்துடாத நீ தான் எல்லாத்தையும் எடுத்து கட்டி செய்யணும் என்றாள்

மகிழ் சிரித்துக் கொண்டே உட்கார்ந்து அது எனக்கும் தெரியும் டி அதுக்கு இவ்ளோ சீக்கிரமா வா பத்தரை 12 தானே வளைகாப்பு என்றான் பத்தரை பனிரெண்டு தான் வளைகாப்பு யார் இல்லை என்று சொன்னா நீ குளிச்சிட்டு தேவையான பொருள் எல்லாம்  எடுத்து வைக்கிறது இல்லையா சமையல்காரங்களுக்கு என்னென்ன வேணும்னு பார்த்து எடுத்துக் கொடுக்கிறது இல்லையா என்றால்

சரிடி நீ போய் குளிச்சிட்டு வா என்றான் சரி என்று அவளும் குளித்துவிட்டு ஈர துண்டை தலையில் கட்டிக்கொண்டு வந்தால் மகிழ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவள் வந்து நின்று இரண்டுக்கு  மூன்றும் முறை மகிழை கூப்பிட்டால் மாமா குளித்துவிட்டு வா நேரமாகிறது என்று ஆனால் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது அதன் பிறகு தான் பார்த்தால் பிறகு அவனது தோளில் தட்டில் என்ன பண்றீங்க நேரம் ஆகுது போய் குளிச்சிட்டு வா என்றால்

மகிழ் எழுந்து நின்று மகாவின் அருகே வந்தான் மகா அவன் ஏதோ சொல்வதற்கு வருகிறான் என்று எண்ணி அமைதியாக இருந்தால் அவன் கிட்ட வந்தவுடன் என்ன மாமா என்று கேட்டாள் அவன் வேகமாக மகாவின் தாடையில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அழகாக இருக்கிறாய் ரொம்ப நாள் ஆகுது என்று விட்டு வேறு எதுவும் சொல்லாமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்

மகாவிற்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது தனது மகிழ் மாமா கிட்டத்தட்ட எத்தனை மாதங்களுக்கு பிறகு தன்னிடம் எப்போதும் போல் பேசுகிறார் என்று எண்ணி சந்தோஷம் அடைந்தால் பிறகு நேரம் ஆவதை உணர்ந்து தலையை ஆட்டி விட்டு  புடவையை நேர்த்தியாக கட்டிக்கொண்டு இருந்தால் அப்பொழுதுதான் மகிழ் குளித்துவிட்டு வெளியில் வந்தான் பிறகு ரெடியா என்றான்

வளைகாப்புக்கு தேவையான பொருள் எல்லாம் போயிட்டு மனையில் எடுத்து  வைக்கணும் இல்லையா சரி என்று விட்டு மகா வெளியில் சென்று விட்டால் மகிழும் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு வெளியில் வந்தான் மகா வெளியில் போகும் போது தான்  பெரியவர்கள் அப்பொழுது  ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள்

மகா அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தால் அனைவரும் எழுத்து கொண்டார்கள் அப்பொழுது இனியும் எழுந்து வந்தால் இனிக்கு மட்டும் பால் கொடுத்தால் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் மகா எனக்கு டீ தா என்றால் தரேன் ஆனா இப்ப பால் குடி இன்னைக்கு ஃபுல்லா நீ ஒரு இடத்தில உட்கார்ந்திருக்கனும் கஷ்டமா இருக்கும் அதனால இப்ப பால் குடி நான் உனக்கு ஒரு ஏழு மணி போல டீ தரேன் என்றால்

இனியும் சிரித்துக் கொண்டே சரி என்றாள் மகா உதிரனிடம் நீ இனி கூடவே இரு அண்ணா  உனக்கு இருக்க ஒரே வேலை இனியை பாத்துக்குறது தான் நீ இனி கூடவே இரு  நாங்க பார்த்துக்கிறோம் என்று விட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி ஊத்தலாம் என்று சமையல் அறைக்கு சென்றால் அப்போது சுந்தரி தான் மகா என்ன செய்யப் போற என்றார்

அத்த எல்லோருக்கும் இட்லி ஊத்துறதுக்கு என்றால் வேண்டாம் சமையல்காரன் கிட்டயே காலை சாப்பாட்டுக்கும் சொல்லிட்டேன் அதனால எதுவும் செய்ய வேண்டாம் நம்ம வளைகாப்புக்கு தேவையான பொருள்லாம் மட்டும் எடுத்து வச்சா போதும் என்றார் சரி என்று விட்டு மனையில் வைப்பதற்கு தாம்பூலம் தட்டு மற்றும் பூஜை பொருட்கள் குத்துவிளக்கு மஞ்சள் குங்குமம் ஒவ்வொன்றாக எடுத்துக்  வைத்துக் கொண்டிருந்தாள்

அனைவரும் காலை உணவு சாப்பிட்டு விட்டார்கள் கலை 9 மணி போல் மகிழ் மகாவை அழைத்தான் வரேன் மாமா என்று விட்டு அவனது அறைக்கு சென்றால் வீட்டில் உள்ள அனைவரும் மகாவை பார்த்தார்கள் பிறகு அவள் சென்று விடுவாள் என்று விட்டு அமைதியாக அவர்களது வேலையை பார்த்தார்கள்  அப்போது நிலா தான் ஓடு மகா மாமா உனக்கு ஏதோ வச்சிருக்கார் போல என்றாள்

அப்போது எழில் தான் குட்டி சாத்தான் அவங்க ரெண்டு பேரும் ஏதோ பண்றாங்க உனக்கு என்ன வந்துச்சு உன்னோட வேலைய பாரு என்றான் அதன் பிறகு அமைதியாக அவளுடைய வேலை பார்த்துக் கொண்டிருந்தால் என்ன மாமா என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்ற மகாவிடம் ஒரு கவரை கொடுத்தான் என்ன என்றால் பிரித்துப் பார் என்றவுடன் பிரித்துப் பார்த்தால் அதில் ஒரு புடவை இருந்தது

அதை பார்த்துவிட்டு யாருக்கு என்றால் யாருக்கு என்றால் இது என்ன டி அர்த்தம் உனக்கு தான் என்றான் எனக்குனா எனக்கு மட்டுமா எப்பையுமே எல்லாருக்கும் சேர்த்து தானே வாங்கிட்டு வருவ நிலா இனி  கயல் எனக்கு இல்லையா என்று மகிழ் மகாவை முறைத்துவிட்டு உனக்கு மட்டும்தான் நான் அவங்களுக்கெல்லாம் வாங்கிட்டு வரல என்றான்

மாமா உனக்கு இது என்ன புது பழக்கம் எப்பவுமே எங்க நாலு பேருக்கும்தான் வாங்கிட்டு வருவ இப்ப என்ன எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும்தான் வாங்கி கொண்டு வந்தேன் என்றான் மகா எதுவும் பேசாமல் மகிழை பார்த்து முறைத்து விட்டு இது ஒன்றும் எனக்கு வேண்டாம் இந்த மாதிரி பழக்கம் எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள் எனக்கு மட்டும் தனிப்பட்ட  முறையில் வாங்க வேண்டாம்

இனி அண்ணிக்கு  தான் இன்று வளைகாப்பு அவள் புது புடவை கட்டிக் கொள்வாள் ஆனால் நிலா என்று விட்டு அந்த கவரை மகிழ் கையில் கொடுத்துவிட்டு வெளியில் சென்று விட்டாள் போகும் போது இருந்த மகாவிற்கும் வரும்பொழுது இருந்த மகாவிற்கும் இருக்கும் வித்தியாசம் உதிரனும் எழிலும்  உணர்ந்தார்கள் ஆனால் இப்போது வீட்டில் அனைவரும் இருப்பதால் அமைதியாக இருந்தார்கள்

யாரும் இல்லாத வேலையில் மகாவிடம் இருவரும் என்ன என்று கேட்டார்கள் மகா விஷயத்தை சொன்னவுடன் இருவருமே மகாவை அடிக்க கை ஓங்கி விட்டார்கள் மகா இருவரையும் பார்த்தால் இருவருமே ஒரே போல் என்ன மகா நினைச்சிட்டு இருக்க இதுக்கு முன்னாடி இருந்தது வேற இனிமே வேற இப்ப நீ அவனோட பொண்டாட்டி தனிப்பட்ட முறையில் உனக்கு மட்டும் வாங்கி தருவது தப்பு இல்ல இதை வந்து யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க

அண்ணா நிலாவுக்கு தெரிந்தால் வருத்தப்பட மாட்டாளா என்றாள் லூசு மாதிரி பேசாத இரண்டு பேரும் சின்ன புள்ளைங்க கிடையாது இதுக்கு முன்னாடி மகிழ் இந்த வீட்டு புள்ளையா வாங்கி கொடுத்ததுக்கும் இப்போ உன்னோட புருஷனா உனக்கு மட்டும் வாங்கி தர்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இருவரும் சொல்லிய பிறகு மகா அழுது கொண்டே இருந்தால் தவிர வேறு எதுவும் பேசவில்லை மகா அமைதியாக இருந்தால்

எழில் தான் அவளது தலையில் கொட்டி போடி மாமா நான் அவ்வளவு தூரம் சொல்றார் இல்ல போயிட்டு அந்த புடவை கட்டிக் கொண்டு வா என்றான் சரி என்று விட்டு அவள் அவளது அறைக்குச் சென்றால் அவள் செல்வதற்கும் அவர்கள் அறையில் இருந்து மகிழ் வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது மாமா என்றால் மகிழ் அவளை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் வெளியில் சென்று விட்டான்

சரி மாமா தன் மேல் கோபமாக இருக்கிறது என்று எண்ணி விட்டு மகா அறையில் சென்று கட்டிலில்  பார்த்தால் அங்கும் அந்த புடவை இல்லை சரி என்று விட்டு கப்போர்ட்டில் பார்த்தால் அங்கும் இல்லை பிறகு பீரோவை திறந்து பார்த்தால் அங்குமில்லை எங்கு வைத்திருப்பார் என்று தெரியவில்லையே என்று எண்ணிக் கொண்டு அவனிடம் கேட்கலாம் என்று வெளியில் வந்தால்

ஆனால் மகிழ் இவள் செல்லும் இடமெல்லாம் இவளை விட்டு விலகி சென்றான் மகாவிற்கு வருத்தமாக இருந்தது உதிரன் எழில்  இருவரும் மகாவை  முறைத்தார்கள் மகா தன்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று நேரமாவதை உணர்ந்து வருபவர்களை வரவேற்க வெளியே சென்று அனைவரையும் வரவேற்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்

பிறகு நேரமாவது உணர்ந்து இனியையும் மனையில் வந்து உட்கார வைத்தார்கள் உதிரனையும் அருகில் உட்கார சொன்னார்கள் மகா நிலா இருவரும் சென்று இனியை அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்தார்கள் எழிலும் மகிழும் தான் உதிரனை அழைத்து கொண்டு வந்து உட்கார வைத்தார்கள் பிறகு நல்ல நேரம் பார்த்து ஊரில் உள்ள பெரிய வயதில் உள்ள மூத்த பெண்மணி இருவருக்கும் முதலில் நலங்கு வைத்து வேப்பிலை காப்பு அணிவித்து வளையல் போட்டு வளைகாப்பை சிறப்பாக ஆரம்பித்து வைத்தார்

அதன் பிறகு உறவுகளில் உள்ளவர்களும் சொந்த பந்தங்களும் ஊரில் உள்ளவர்களுக்கும் இனிக்கு வளையல் போட்டுக் கொண்டிருந்தார்கள் இனியின் வளைகாப்பும் நல்ல முறையில் முடிந்தது சுந்தரி வேலு இருவரும் இனிக்கு வைர வளையல் போட்டு விட்டார்கள் ஒவ்வொருவரும் அவரவர்களால் முடிந்த சிறு சிறு பரிசுகளை இனி உதிரன் இருவருக்கும் கொடுத்து சென்றார்கள்

அப்பொழுது இனி தான் மகிழை அழைத்தாள் மகிழ் என்னை இனி என்று கேட்டுக் கொண்டே வந்தான் அண்ணா நீ எனக்கு நலங்கு வைத்து விடு என்றால் மகிழ் சிரித்துக் கொண்டே உனக்கு வைக்காமல் என்று விட்டு அவளுக்கு நலுங்க வைத்து வளையல் போட்டு விட்டான் அப்பொழுது இனி தனது அண்ணனை பார்த்து அண்ணா எனக்கு நீ எதுவும் வாங்கிட்டு வரலையா என்று கேட்டால்

உதிரன் இனி இது என்ன பேச்சு என்று கேட்டான் நீ சும்மா இரு மாமா நான் என் அண்ணனிடம் தானே கேட்கிறேன் உனக்கு என்ன வந்தது என்று சொன்னால் வீட்டில் உள்ள அனைவரும் அவன் ஏதாவது செய்வான் என்பதால் அமைதியாக அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் இனி அவ்வாறு கேட்டவுடன் மகிழ் தனது சட்டை பாக்கெட்டை தடவினான் அவன் இனிக்கு என்று  ஒரு பரிசு வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான்

அதை அவனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தான் அவன்  வேஷ்டி சட்டை அணிந்து இருந்ததால் சட்டை பாக்கெட்டில் அதை வைத்து இருந்தான் இப்பொழுது தான் தனியாக தனது தங்கைக்கு எதுவும் செய்ய முடியாது தனக்கு இப்பொழுது திருமணம் ஆகிவிட்டது அதுவும் ஊரார் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய முடியாது ஏற்கனவே புடவை வாங்கி கொடுத்ததுக்கே எனக்கு என்று தனிப்பட்ட முறையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்

இப்பொழுது நாம் ஏதாவது செய்தால் அதற்கும் ஏதாவது சொல்வாள் என்று எண்ணி தனது சட்டை பாக்கெட்டை தடவி விட்டு அமைதியாக நின்றான் பிறகு இனியிடம் இல்லடா நான் எதுவும் வாங்கவில்லை என்றான் என்ன அண்ணா பொய் சொல்றியா என்றால் இனி சிரித்துக் கொண்டே இல்லடா நான் எதுவும் வாங்கவில்லை என்றான் வீட்டில் உள்ள அனைவரும் மகிழையே பார்த்தார்கள்

என்ன சொல்கிறான் இவன் எப்படி தனது தங்கைக்காக எதுவும் செய்யாமல் இருப்பான் என்று எண்ணி அவன் ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்தார்கள் ஏன் ஊரில் உள்ள அனைவருமே அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மகிழுக்கு அழுகையாக இருந்தது ஏன் ஒரு துளி கண்ணீர் கூட கீழே கண்ணை விட்டு இறங்குவது போல் இருந்தது அதனால் தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு அமைதியாக மேடையை விட்டு கீழே இறங்கச் சென்றான்

அப்போது அவனை ஒரு கரம் பிடித்து இழுத்துக் கொண்டு மேடைக்கு அழைத்துச் சென்றது
.
மகிழ் மேடையை விட்டு கீழே இறங்கும்போது மகிழை  மேடைக்கு அழைத்துச் சென்று கரம் யாருடையது …

மகிழ் தனது தங்கைக்காக வாங்கிய பொருளை தனது தங்கைக்கு கொடுப்பானா…

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

சைலன்ட் லீடர்ஸ் ப்ளீஸ் படித்துவிட்டு உங்களின் நேரான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கதை நன்றாக செல்கிறதா இல்லை போர் அடிக்கிறேனா என்று நீங்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக படித்து செல்வது எனக்கு என்னுடைய கதை எப்படி செல்கிறது என்று தெரியவில்லை ..

ப்ளீஸ் எனக்காக உங்களின் கருத்துக்களை ஓரிரு வரிகளில் ஆவது என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ..

மிக்க நன்றி🙏

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 34”

  1. CRVS 2797

    அது அநேகமா மகாவாத்தான் இருக்கணும்.
    இந்த மகா மகிழை புரிஞ்சுக்கவே மாட்டாளா…???

  2. Kalidevi

    Vera yar maha tha kuptu pova magizh ah pathi maha ku theriyatha. Aana intha maha magizh kasta paduthite irupa aasaiya saree vangi kodutha vangikama vena solra🤨

  3. மகா லூசா இவன புருஷன் வாக்கி கூடதா மத்தவங்க என்ன நினைக்க போறாங்க மெட்டல் மகிழை கஷ்ட படுத்தறத்தையே வேலையா வைச்சி இருக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *