வீட்டில் உள்ள அனைவரும் வீட்டுக்குள் செல்லும் எழிலையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அப்போது வேலு தான் அனைவரையும் பார்த்து அவங்க அண்ணன் தம்பிங்க அவங்களுக்குள்ள அடிச்சிக்கிறாங்க கூடிக்கிறாங்க அவங்க எதையோ செஞ்சுருக்காங்க அதுல நம்ம தலையிட வேண்டாம்நம்ம வீட்டுல ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு. நம்ம அதை நினைச்சு சந்தோஷப்படுவோம் என்று விட்டு அவர் அவரது வேலையை பார்க்கச் சென்று விட்டார். அதன் பின்னால் வீட்டில் உள்ள அனைவருமே அவரவர் வேலைகளை பார்க்கச் சென்று விட்டார்கள் பிறகு அனைவரும் அனைத்து ஒதுங்க வைத்து விட்டு நெருங்கி உறவினர்களுக்கு வீட்டில் உள்ளவற்றையும் கொடுத்து அனுப்பினார்கள் அப்படியே மாலை பொழுதும் ஆகியது மாலை கிட்டத்தட்ட ஆறு மணி போல் இருக்கும் மகா மகிழியிடமும் சரி எழில் இடமும் சரி இதைப்பற்றி எதுவும் பேசவில்லை யார் பக்கமும் அவள் இல்லை வீட்டில் உள்ளவர்கள் எப்படி அமைதியாக இருந்தார்களோ மகாவும் அதேபோல் அமைதியாக தான் இருந்தால் அப்போது முகிலன் தான் நிலாவை கூப்பிட்டு நிலா உன்னால் தான் ஒரு பஞ்சாயத்தை ஓடிட்டு இருக்கு உன்னால தான் அண்ணனும் தம்பியும் முட்டிகிட்டு நிக்கிறானுங்க நீ என்ன என்றால் எப்பயும் போல இருக்கு என்றான் நிலா சிரித்துக் கொண்டே அண்ணா உனக்கு என்ன இந்த வீட்டை விட்டு என்னை கல்யாணம் பண்ணி தந்துட்னும்னு ஆசையா என்று கேட்டாள் என்னடா நிலா குட்டி உன்ன எப்பயும் வம்பு இழுக்கிறேன் என்பதற்காக உன்ன கல்யாணம் பண்ணி அனுப்பணும்ன்னு நான் நினைப்பேனா என்றான்நான் மட்டும் இல்லா யாருமே நினைக்க மாட்டாங்க என்றான் நிலா சிரித்துக் கொண்டே அதையேதான் இப்ப மகிழ் மாமாவும் சரி எழில் மாமாவும் சரி எனக்கு கல்யாணம் பண்ணி அனுப்புற ஐடியாவில் இல்லை எனக்கு இந்த மொத்த வீட்டு மேலையும் நம்பிக்கை இருக்கு எனக்கு விருப்பம் இல்லாம என்ன கல்யாணம் பண்ணி தர மாட்டாங்க என்று என்றாள் சரி நிலா குட்டி என்று விட்டு அமைதியாக அவனது வேலையை பார்க்கச் சென்று விட்டான் மகிழ் வெளியில் உள்ள ஒரு சில வேலைகளை செய்து கொண்டிருந்தான் எழிலும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டிருந்தான் இனி அசதியாக இருக்கிறது என்று அவளது அறையில் படுத்திருந்தால் சிறிது நேரம் பிறகு மாலை ஆகிவிட்டது என்பதால் காவேரி தான் அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து வரவேற்பு அறையில் உட்கார வைத்திருந்தார் மகா உதிரனிடம் அண்ணா இனிமேல் இனியை ஆபீஸ் அழைத்து கொண்டு செல்லக்கூடாது அவள் வீட்டிலே இருக்கட்டும் குழந்தை பிறந்து மூன்று மாதத்திற்கு பிறகு தான் அவளை இனிமேல் நாங்கள் ஆஃபீஸ்க்கு அனுப்புவும் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் மகா சொல்வது தான் சரி என்பது போல் அமைதியாக இருந்தார்கள் உதிரன் சிரித்துக் கொண்டே நீயே சொன்னாலும் இனிமேல் நான் அவளை அழைத்துக் கொண்டு செல்வதாக இல்லை மகா அவளுக்கு ஏற்கனவே முதுகு வலி இருக்கிறது இப்பொழுதே அவள் ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்க முடியவில்லை என்று தான் சொல்லி கொண்டு இருக்கிறாள் என்றவுடன் மகா தனது அண்ணனை முறைத்து விட்டு இனியிடம் சென்றால்உனக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது ஏதாவது சோர்வாக இருக்கிறதா என்று கேட்டால் கால் தான் லேசாக வலிகிறது ரொம்ப நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்ததால் என்றாள் மகா அவளது காலுக்கு சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்தாள் பிறகு இரவு 7 மணி போல் அவளை சுடு தண்ணியில் குளிக்கவும் வைத்தால் நானே குளித்துக் கொள்கிறேன் என்றால் இனி அமைதியாக சொல்றத கேளு இனிமேல் சாயங்கால நேரத்தில் இடுப்புக்கு தண்ணி அடிக்கணும்னு கூட தெரியாதா உனக்கு இனிமேல் நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி இதுக்குள்ள தண்ணி அடிச்சிட்டு தான் படுக்குற இல்லன்னா நைட்டு தூக்கம் வராது என்றால் அவளது இடுப்புக்கு வேகமாக தண்ணீர் அடித்து விட்டு அதன் பிறகு நீயே குளித்துவிட்டு வா என்று விட்டு வந்துவிட்டால் பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களே இருக்கும் மாமாவை வைத்து இட்லி தோசை என்று செய்தார்கள் மகான்வந்து சாம்பார் சட்னி வைத்து பிறகு அனைவரையும் சாப்பிட அழைத்தால் மகா மகிழ் எழில் இருவரையும் எப்போதும் போல் சாப்பிட வாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு வந்து விட்டாள் அனைவரும் அதைப் பற்றி பேசவில்லை அனைவரும் சாப்பிட்டுவிட்டு அசதியில் அவரவர் அவர்கள் அறைக்கு படுக்கச் சென்று விட்டார்கள் இனிக்கு மாத்திரை எல்லாம் மகா எடுத்துக் கொடுத்துவிட்டு அவளை தூங்க சொல்லி விட்டு உதிரனிடம் ஏதாவது என்றால் எழுப்பு அண்ணாஅவளுக்கு இனிமேல் அடி வயிறு வலி சூட்டு வலி எல்லாம் வரும் ஏதாவது என்றால் எழுப்பு எந்த நேரமாக இருந்தாலும் இரவு நேரம் என்று எழுப்பாமல் விட்டு விடாதே என்று தனது அண்ணனிடமும் சொல்லிவிட்டு அவர்கள் அறையில் இருந்து வெளியில் வந்தால் பிறகு அனைத்து கதவும் சாற்றி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு விளக்கங்களை அணைத்துவிட்டு மகிழுக்கு பால் எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு வந்துவிட்டாள் மகா அறைக்கு வரும்பொழுது மகிழ் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் பாலை நீட்டிக்கொண்டு மாமா பால் என்றால் மகிழ் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மகா மகிழை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு மாமா பால் என்றால் மகிழ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிறகு சிறிது நேரம் கழித்து என்ன டி நினைத்து கொண்டிருக்கிறான் உன்னுடைய பிரண்டு என்றான்அவளை இப்போ கல்யாணம் பண்ணி தர மாட்டோம் என்று சொன்னதே தப்பு வீட்ல பெரியவங்க இருக்கும்போது அவனை யார் பேச சொல்றாங்க அது மட்டும் இல்லாம அவளுக்கு திருமணம் என்று வரும்பொழுது என்று அந்த பையன் கேட்கிறான் அப்போது கூட அப்படி ஒரு சூழ்நிலை அவளுக்கு வராது என்கிறான் என்ன டி அர்த்தம் என்று கேட்டான் அவன் சொன்னால் எனக்கு என்ன தெரியும் என்றால் மகா அப்பொழுது அவர்களது அரை கதவு தட்டப்பட்டது யார் இந்த நேரத்தில் என்று இருவரும் எண்ணினார்கள் அனைவரும் அசதியில் இருப்பார்கள் தூங்கிருப்பார்களே என்று எண்ணினார்கள் பிறகு மகிழே சென்று கதவை திறந்தான் அங்கு எழில் நின்று கொண்டிருந்தான் எழிலை பார்த்தவுடன் மகிழ் எதுவும் பேசாமல் கதவை திறந்து விட்டு நகர்ந்து நின்று விட்டான் எழில் தனது அண்ணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மகாவிடம் வந்தான் மகா எனக்கு கண்டினியூவா நாளைக்கு கிளாஸ் இருக்கு எனக்கு கிளாஸ் எடுக்க நோட்ஸ் மட்டும் கொஞ்சம் எடுத்து தரியா என்று ஒரு மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் ஏன் உனக்கு அசதியாக இருக்கிறதா? தூக்கம் வருகிறதா என்று கேட்டாள்இல்லை அசதியாக இல்லை தூக்கம் வரவில்லை ஆனால் என்னால் இப்பொழுது நோட்ஸ் எடுக்க முடியும் என்று தோன்றவில்லை அதனால் தான் என்றவுடன் மகா வேகமாக எழிலை அறைந்து இருந்தால் மகிழ் மகா என்று வேகமாக கத்தினான் மகா திரும்பி மகிழை முறைத்து பார்த்தால் நான் உன்னுடைய தம்பியை அடிக்கவில்லை என்னுடைய நண்பனை அடித்தேன் என்பது போல் இருந்தது அவளது முறைப்பு மகிழ் உள்ளுக்குள் சிரித்துவிட்டு வெளியே தனது காதல் மனைவியை முறைத்து பார்த்தான் மகா எழிலிடம் டேய் முழுசா கான்சிடென்ட் பண்ண முடியவில்லை என்றால் எதுக்குடா இந்த வேலைக்கு வர நீ ஒன்னும் படிக்கிற பையன் இல்லை நீ படிக்கவில்லை என்றால் உன்னுடைய படிப்பு மட்டும் கெடுவதற்கு நீ ஒரு கிளாஸ் போனாலும் 30 40 பிள்ளைகளோட படிப்பு கெடுவதற்கு அர்த்தம் அதை மறந்துடாத கிட்டத்தட்ட 1000 பிள்ளைங்களோட படிப்பு உன் கையில இருக்கு அவ்வளவு கவன சிதறல் இருந்தா இந்த வேலைக்கு வரணும்னு நினைச்சே இருக்க கூடாது என்றால் எழிலுக்கு சிறிது குற்ற உணர்ச்சியாக இருந்தது மகா அடித்த உடனே எழில் தனது கையில் இருக்கும் புத்தகங்களை கீழே போட்டு இருந்தான் மகா இவ்வாறு சொன்னவுடன் எழில் மகாவை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் வெளியே சென்று விட்டான் அவன் சென்றவுடன் மகிழ் தான் அந்த புத்தகத்தை எடுத்து அங்குள்ள ஒரு மேசை மீது வைத்து விட்டு நோட்ஸ் எடுத்து தரச் சொல்லி அவன் உன்னிடம் கேட்டால் எடுத்து தரேன்னு சொல்லு இல்ல முடியாதுன்னு சொல்லு அதுக்கு நீ அவன் மேல கை வைப்பியா என்று கேட்டான் மகா மகிழை முறைத்துவிட்டு நான் ஒன்னும் உங்களுடைய தம்பியை அடிக்கவில்லை என்னுடைய நண்பனை அடித்தேன் அதற்கு நான் யாரிடமும் பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை அவனிடம் சொன்னதுதான் இப்பொழுது அவனுக்கு கவன சிதறல் ஏற்பட்டால் எத்தனை பிள்ளைகளோடு படிப்பு கெடும் என்று தெரியுமா இவன் ஒருவனின் படிப்பு கெட இவன் ஒன்றும் படிக்கும் பையன் இல்லை இப்பொழுது இவன் பாடம் சொல்லித் தரும் ஒரு ஆசிரியர் படிப்பில் பாடம் நடத்துவதில் இவனது கவனம் சிதறினால் கிட்டத்தட்ட எத்தனை பிள்ளைகளின் வாழ்க்கை சிதறும் என்று உங்களுக்கு தெரியவில்லையா என்று கேட்டால் அவள் கேட்பது உண்மை என்பதால் மகிழ் அமைதியாக இருந்தான் பிறகு அவன் ஏண்டி அந்த மாதிரி சொன்னான் என்று திரும்பவும் கேட்டான் அவன் ஏன் சொன்னானா என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும் சொன்ன அவனை தானே கேட்கணும் அவனே வந்தான் தானே இப்ப அவனையே கேட்டு இருக்க வேண்டியதுதானே என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் என்றால் அது எப்படி உனக்கு தெரியாம அப்படி ஒரு சூழ்நிலை வராதுனா என்னடி அர்த்தம் ஏன் நிலாவை கல்யாணம் பண்ணி தர ஐடியா இல்லையா என்று கேட்டான்அவன் ஏன் அவ்வாறு சொன்னான் என்று உங்களுக்கு தெரியாதா என்று எதிர் கேள்வி கேட்டல் எனக்கு என்னடி தெரியும் என்றான் உங்களுக்கு உண்மையாகவே உங்க தம்பி மனசுல என்ன இருக்குன்னு தெரியாது அவன் ஏன் அப்படி ஒரு வார்த்தை சொன்னான் என்று தெரியாது அப்படித்தானே என்று கேட்டால் எனக்கு தெரியாது ஏன் உனக்கு தெரிந்திருந்தால் என்னவென்று நீ சொல்ல வேண்டியது தானே நீ தான் உன்னுடைய நண்பனின் உயிர் தோழியாச்சே உன்னிடம் சொல்லாமலா இருப்பான் என்றான் மகா முறைத்துக் கொண்டு நின்று அவன் சொன்னால் என்றால் அவனிடம் போய் கேளுங்க இல்லையா அமைதியா விட்டுடுங்க எனக்கு தெரியாது என்றால் அப்பொழுது நிலா உன் தங்கச்சி தானே ஏன் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியா உனக்கு இல்லையா நிலா திருமணத்தை பற்றி பேச வேண்டியது நான் அல்ல வீட்டில் இருப்பவர்கள் பேசுவார்கள் சரியா அவளுக்கு தாத்தா பாட்டி அப்பா அம்மா அத்தை மாமா பெரியம்மா என இத்தனை உறவுகள் இருக்கிறது அவர்கள் பார்ப்பார்கள் நான் ஏன் செய்வேன் என்று கேட்டாள் மகிழ் மகாவை அடிக்க கை ஓங்கினான் அவங்களாம் தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க என்றால் அவங்க பார்க்கும் மாப்பிள்ளைக்கு தான் உன் தங்கச்சி கல்யாணம் செய்து கொள்வாளா அவள் திருமணத்தில் நீ எதுவும் செய்ய மாட்டாயா ஏன் உன் பிரண்டு மனசுல இருக்கறத சொல்ல வேண்டியது தானே என்றான் அவன் மனசுல இருக்கிறதை அவன் இப்பொழுது சொல்ல மாட்டான் எப்போது சொல்லணும் என்று அவனுக்கு தோன்றுகிறதோ அப்போது சொல்லிக் கொள்வான் என்றால் ஏன் அதை இப்பொழுது சொன்னால் என்றான் அவன் ஏன் இப்பொழுது சொல்லவில்லை என்று எனக்கு தெரியாது அதை என்னிடம் கேட்கக் கூடாது அவனிடம் தான் கேட்க வேண்டும் அவன் எனது நண்பன் தான் அதற்காக அவனுடைய தனிப்பட்ட விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் சரியா என்றால்.மகிழ் வேகமாக அவனுடைய தனிப்பட்ட விஷயத்தில் நீங்கள் தலையிட மாட்டீர்கள் அப்படி தானே என்று சொல்லிவிட்டு மகாவை முறைத்துவிட்டு கதவை சாற்று விட்டு வெளியே சென்று விட்டான் மகா மகிழ் எழில் இருவரையும் எண்ணி இங்கு வருந்தி கொண்டு இருந்தாள் ..அவன் மனதில் இருப்பதை அவன் எப்பொழுது சொல்ல வேண்டும் என்று அவன் தான் முடிவு எடுக்க வேண்டும் ….அதில் நான் என்ன தலையிடுவது என்று மனதில் எண்ணினால்..மகிழ் மனதில் என்ன இருக்கிறது எழில் மனதில் என்ன இருக்கிறது…எழிலால் மகா மகிழ் இருவரின் வாழ்வில் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா பிரிவு ஏற்படுமா …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
Going nice superb
சூப்பர்…. அன்ட் வெரி நைஸ் கோயிங்…!
😃😃😃