மகாவிடம் பேசிவிட்டு மொட்டை மாடிக்கு வந்தான் மகிழ் தனது தம்பி எழில் அங்கு தான் இருப்பான் என்று எண்ணி கொண்டு வந்தான் அதேபோல் எழில் அங்கு தான் நின்று கொண்டு மனதில் ஏதோ ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான் அவன் தன் வீட்டின் பின்பக்கமாக இருக்கும் தோட்டத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் யாரோ வருகிறார்கள் என்று அவன் அரவம் கேட்டு உணர்ந்தான் இந்த நேரத்தில் யாரும் வரமாட்டார்கள் என்றும் எண்ணினான் தனது அண்ணனாக தான் இருக்கும் என்று நினைத்தான் ஆனால் திரும்பி பார்க்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் மகிழும் வந்து எழிலுக்கு சிறிது இடைவெளி விட்டு நின்று கொண்டு எழிலையே முழுவதாக ஐந்து நிமிடங்கள் பார்த்தான் பார்த்துக்கொண்டே இருந்தான் பிறகு எழில் திரும்பி தனது அண்ணனை பார்த்தான் எழில் மகிழைப் பார்த்தவுடன் மகிழ் எழிலிடம் எதற்காகடா அவர்களிடம் அவ்வாறு சொன்னாய் நிலாவிற்கு திருமணம் என்று வரும்பொழுது என்று கேட்கும் பொழுது கூட நீ ஏன் அப்படி ஒரு சூழ்நிலை வராது என்று சொன்னாய் என்று கேட்டான் ஏன் நான் எதற்காக அவ்வாறு சொன்னேன் என்று உனக்கு தெரியாதா என்றான் எழில் நான் உன்னிடம் அதை கேட்கவில்லை என்றான் இப்பொழுது நீ கேட்டதற்கு தான் நானும் உன்னிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றான் எழில் சரி நீ உன்னுடைய விருப்பத்தை அவளிடம் சொல்லிவிடலாம் அல்லவா என்றான் மகிழ் அதற்கான நேரம் இதுவல்ல என்றான் எழில் ஏன் அதற்கான நேரம் இதுவல்ல என்றான் நான் இப்பொழுது சொன்னால் சரிவராது அவளுடைய படிப்பு கெட்டுவிடும் என்றான் டேய் நீ என்ன லூசா? ஏன் இந்த ஊர் உலகத்தில் விரும்புபவர்கள் யாரும் அவர்களது காதலை படிக்கும் பெண்ணிடம் சொல்லியது இல்லையா ஏன் இப்போதெல்லாம் படிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது அவளுடைய படிப்பு எப்படி கெடும் என்றான் உனக்கு ஒன்று புரியவில்லை என் மனதில் நிலா எப்படி வந்தால் என்று எனக்கே தெரியவில்லை அப்படி இருக்கும் பொழுது என்றான் டேய் இது என்ன சொல்லிவிட்டா வரும் என்றான் எழில் சிரித்துக்கொண்டே அண்ணா காதல் சொல்லிவிட்டு வருமென்று நான் சொல்லவில்லை ஆனால் எனக்கு நிலா மேல் வந்த காதல் எதனால் எப்படி எப்போது என்று இதற்கான விடை என்னிடம் இல்லை ஆனால் நான் இப்பொழுது என்னுடைய காதலை அவளிடம் சொல்ல முடியாது அப்படி நான் இப்போது சொன்னாள் என்னால் அவளுடைய படிப்பு கெட்டுவிடும் இதுதான் உண்மை என்றான் லூசு மாதிரி பேசாதே அவளிடம் உன் காதலை சொன்னால் அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்று நினைக்கிறாயா என்றான் நான் அப்படி நினைக்கவில்லை அவளுடைய படிப்பு கெடும் என்று மட்டும் தான் நினைக்கிறேன் என்றான்நீ என்ன லூசா திரும்பவும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய் நீ உன் காதலை சொல்வதால் அவளுடைய படிப்பு எப்படி கெடும் என்றான் உனக்கு நிலாவைப் பற்றி முழுமையாக தெரியவில்லை என்றான் மகிழ் எழிலை பார்த்து சிரித்துக் கொண்டே ஆமாம் எனக்கு தெரியவில்லை உனக்கு தான் தெரியுமே அப்பர் ஏன் என்றான் அண்ணா நிலா இப்பொழுது வரை என்னை உன்னை எப்படி பார்க்கிறாளோ உதிரன் மாமாவை எப்படி பார்க்கிறாளோ அப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்எனக்கு தான் அவள் மேல் விருப்பம் இருக்கிறதே தவிர அவளுக்கு என் மேல் இதுவரை விருப்பமில்லை என்றான் அதுதான் எனக்கு தெரியுமே என்று மகிழ் கேட்டான் அதுவரை தான் உனக்கு தெரிந்திருக்கிறது ஆனால் அதற்கு மேல் என்றான் அதற்கு மேல் என்னடா அவளுக்கு என் மேல் என்றோ இல்லை என்னிடம் தனிப்பட்ட முறையிலோ எந்த விஷயத்தையும் அவள் பேசியது இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் நான் என்னுடைய காதலை சொன்னால் அவள் மனதளவில் உடைந்து விடுவாள் அது மட்டும் இல்லாமல் நான் அனைவரிடமும் பழகியது போலே தானே எழில் மாமா விடமும் பழகினேன் அவர் மனதில் நான் எப்படி வந்தேன் அதற்கு நான் என்ன செய்தேன் என்று குழம்பி விடுவாள் இது எல்லா பெண்களும் இருக்கும் ஒரு விஷயம் தானே என்றான் மகிழ்நாம் சிறுவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு கொஞ்சம் அதிகமான பாதிப்பு ஏற்படும் அதற்காக அவளது படிப்பை விட்டு விடுவாள் என்று எப்படி எண்ணுகிறாய் அவள் எவ்வளவு ஜாலியான பெண்ணாக இருந்தாலும் குறும்புத்தனமாக இருந்தாலும் படிப்பில் படிக்கெட்டி தானே அது நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லையே என்றான் அதேதான் அண்ணா நானும் சொல்கிறேன் அவள் எப்படி தான் சுட்டியாக இருந்தாலும் அடாவடியாக இருந்தாலும் படிப்பு விஷயத்தில் அவள் கெட்டி தான் ஆனால் நான் என்னுடைய விருப்பத்தை அவளிடம் சொன்னால் அவளோட கவனம் படிப்பில் இருக்காது அதுதான் உண்மை இதை நான் சொல்லி நீ தெரிந்து கொள்வதை விட நீயாக புரிந்து கொள்வாய் என்றான் டேய் நீ என்ன லூசா என்றான்இதைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் நேரமாகிறது மகா வேறு உனக்காக காத்துக் கொண்டிருப்பாள் வந்து தூங்கு வா என்று அவனை அழைத்துக் கொண்டே கீழே இறங்கினான் மகிழுக்குமே இதை திரும்பத் திரும்ப பேச விருப்பமில்லை அதனால் சரி என்று விட்டு கீழே இறங்கினான் எழில் அவனது அறைக்குச் சென்றவுடன் மகிழ் அவனுடைய அறைக்குச் சென்றான் அப்போது மகா ஏதோ யோசித்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்து இருந்தால் மகிழ் வந்தவுடன் எழுந்து நின்று கீழே பாய் விரித்து படுக்கச் சென்றால் மகிழ் அவளை முறைத்துப் பார்த்தான் அப்பொழுது மகா அமைதியாக அவளுக்கு தேவையான தலகாணி பெட்ஷீட் அனைத்தும் எடுத்துக் கொண்டிருந்தால் நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ என்ன டி பண்ணிட்டு இருக்க மேல வந்து அமைதியா படு என்றான்நான் இங்கே படுத்துக் கொள்கிறேன் என்றால் சொல்ல சொல்ல மகா கீழே படுத்து விட்டாள் இரண்டு முறை சொல்லி பார்த்துவிட்டு அவளை தூக்கி விட்டான் அகா என்ன பண்ற இல்லையென்று விட்டு அவளை கட்டிலில் படுக்க வைத்து அசதியா இருக்கு அமைதியா படுடி என்று அவளை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்துக்கொண்டு படுத்தவுடன் டேய் அகா என்ன பண்ற எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்றால்என்னடி ஒரு மாதிரி இருக்கு அமைதியா படு என்று விட்டு அவளது தோளில் தனது தலையை சாய்த்துக் கொண்டு ஒரு பத்து நிமிடங்களில் அசதியில் தூங்கி விட்டான் மகிழ் என்னவோ தூங்கிவிட்டான் மகாவிற்கு தான் தூக்கம் எட்டா கனியாக இருந்தது மகிழ் தன்னை பின்பக்கம் இருந்து இப்படி கட்டி அணைத்துக் கொண்டே இருப்பது அவளுக்கு இன்ப அவஸ்தையாக இருந்தது அவனிடம் இருந்து பிரியவும் விரும்பவில்லை ஆனால் இப்படி படுத்திருக்கவும் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது இரவு 12 மணி போல் தான் மகா தூங்கினால் காலை 3 மணி போல் எழுந்தால் மகிழ் கூட மணி மூன்று தானே ஆகிறது எதற்காக இப்பொழுதே எழுந்து கொள்கிறாய் என்று கேட்டான் மாமா எழில் வேறு நோட்ஸ் எடுத்து தர சொல்லி கொடுத்துட்டு போயிருக்கான் இல்ல அதனால நோட்ஸ் எடுக்கணும் என்றால் அவனிடம் அவ்வளவு பேசினாய் என்றான் சிரித்து கொண்டே நான் அவனிடம் பேசியது அவனது கவன சிதறல் ஏற்படக்கூடாது என்பதற்காக அதற்காக நான் அவனுக்கு நோட்ஸ் எடுத்து தர மாட்டேன் என்று சொல்லவில்லையே என்று சொல்லிவிட்டு நீங்கள் தூங்குங்கள் நான் வேண்டுமென்றால் என்னுடைய ரூமிற்குச் சென்று நோட்ஸ் எடுத்துக் கொள்ளட்டுமாநான் லைட் போட்டுக் கொண்டு இருந்தால் உங்களுக்கு தூக்கம் வருமா என்று கேட்டால் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல நீ இங்கே உட்கார்ந்து நோட்ஸ் எடு என்றால் மகாவும் சரி என்று விட்டால் மகிழ் பெட்ஷீட் எடுத்து போர்த்தி கொண்டு தூங்கினான் பிறகு காலை 5:00 மணி போல் மகிழை எழுப்பினால் எழுப்பி விட்டு மகா நோட்ஸ் எடுத்தவுடன் குளித்துவிட்டு வெளியில் வந்தால் பிறகு மகிழ் குளிக்க சென்றும்மகா அவளது அறையில் இருந்து வெளியே சென்றாள் அப்பொழுது சுந்தரி கோதை இருவரும் டீ போட்டு கொண்டு இருந்தார்கள் காவேரி அசதியாக இருந்ததால் தூங்கிக் கொண்டிருந்தார் மகா வெளியே சென்று வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு வந்தால் அவள் தனது புடவையை ஏற்றி சொருகி இருந்தால் அவள் கோலம் போட்டுவிட்டு தனது முகத்தில் இருக்கும் ஒரு சில வேர்வை துளிகளை துடைத்து கொண்டே வரும் பொழுது தான் மகிழ் அவனது அறையில் இருந்து வெளியில் வந்தான்மகிழுக்கு மகாவை அப்படி பார்த்தவுடன் சேலையை மேலே இழுத்து சொருகியும் அவள் தனது வேர்வை துளிகளை துடைத்துக் கொண்டு வருவதையும் பார்த்தவுடன் வேறு மாதிரியாக இருந்தது அவளை பார்த்துக் கொண்டே வந்து தனது தந்தையின் மீது மோதி விட்டான் வேலு தனது மகனை பார்த்து முறைத்துவிட்டு அவன் பார்வை செல்லும் இடத்தை பார்த்தார் அங்கு மகாவை பார்த்தவுடன் தனது மகனை பார்த்து சிரித்துவிட்டு வேலு வேறு எதுவும் சொல்லாமல் சுந்தரி என்று தனது மனைவியை அழைத்தார் சுந்தரியும் என்னங்க என்று கேட்டுக் கொண்டே வந்தார் அவ தான் வேலைக்கு போயிட்டு வர இல்ல நீ வாசல் தெளித்து கோலம் போட்டா என்ன நேற்று வேலை பார்த்த வசதி வேறு இருக்கும் இல்லை என்று கேட்டார் மகா தனது புடவையை கீழே இறக்கிவிட்டு தனது மாமாவிடம் வந்து மாமா என்ன எங்க அத்தையை கொடுமை படுத்துற மாதிரி பேசுறீங்க என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் வேலு மகா மா நான் அப்படி சொல்லவே இல்லடா என்று சொன்னார் சும்மா மாமா என்று விட்டு இதில் என்ன மாமா இருக்கு அவ்வளவு அசதி எல்லாம் ஒன்னும் இல்ல எல்லாருமே தானே வேலை செஞ்சாங்க நான் மட்டும் தான செஞ்சேன் இது நான் தினமும் எழுந்திருக்கிற டைம் தானே என்றால் வேலு தனது மகன் மகிழை பார்த்து விட்டு இது நீ தினமும் எழுந்து கொள்ளும் நேரம் தான் டா நான் இல்லை என்று சொல்லவில்லையே ஆனால் நீ ஆறு மணி போல் உன் அறையில் இருந்து வெளியில் இருந்தால் போதும் என்றார் சுந்தரி தனது கணவனை ஏன் இவ்வாறு சொல்கிறார் என்று புரியாமல் அமைதியாக இருந்தார் பிறகு மகா வேலு விடம் வேறு எதுவும் பேசாமல் டீ எடுத்துக்கொண்டு வந்து மகிழ் வேலு இருவருக்கும் கொடுத்தால் இருவரும் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது வேலு சரி எனக்கு நேரம் ஆகிறது என்று விட்டு வயல்வெளிக்கு சென்று விட்டார் சுந்தரியும் சமையல் அறைக்குச் சென்று இருக்கும் வேலைகளை பார்க்க சென்று விட்டார் வேலுவும் மகிழும் குடித்த டீ கிளாசை எடுத்துக்கொண்டு மகாவும் சமையல் அறைக்கு சென்று காய்கறிகள் நறுக்கி கொடுத்து விட்டு பிறகு சாமான் விலக்கி கொண்டு இருந்தால் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து வந்து கொண்டிருந்தார்கள் மகா அனைவருக்கும் டீ எடுத்து கொண்டு வந்து கொடுத்தால் இனி இன்று எனக்கு டீ தான் வேண்டும் எனக்கு தலை வலிக்கிறது என்றவுடன் சரி என்று விட்டு இனிக்கும் டீ தான் கொடுத்தாள் அனைவரும் டீ குடித்து கொண்டு இருந்தார்கள் அப்போது மகிழ் மகா என்று கூப்பிட்டான் மகா அப்போது என்ன யோசனையில் இருந்தாலோ என்ன மகிழ் என்று வேகமாகவே கேட்டாள் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் மகாவையே பார்த்தார்கள் அதன் பிறகு தான் மகா ஒன்றை உணர்ந்தால் வீட்டில் உள்ள அனைவரும் முன்பும் தனது மாமாவை மகிழ் என்று பெயர் சொல்லி அழைத்து விட்டோம் என்று கண்மூடி ஒற்றை கண்ணை திறந்து நாக்கை கடித்துக் கொண்டே மகிழை பார்த்தால் மகிழ் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு இறுதியாக மகாவை பார்த்து சிரித்துவிட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் அனைவரும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்த உடன் மகாவிற்கு ஒரு போல் இருந்தது மகிழ் அவனது அறைக்கு சென்றவுடன் இதோ வரேன் மாமா என்று அவன் கூப்பிடாமலே வேகமாக அனைவரிடமிருந்து தப்பிப்பதற்காக அவளது அறைக்குள் சென்று விட்டாள்மகா மகிழை பேர் சொல்லி அழைத்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள் மகாவிடம் இப்படி கணவனை பேர் சொல்லி அழைக்க கூடாது என்று திட்டி விடுவார்களா இல்லை மகாவின் மனம் புண்படும்படியாக ஏதாவது பேசி விடுவார்களா ..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Athu eppadi thituvanga athuvum maha va husband pera solla kudatha ena ellar munnadium sollita theriyam avlo thana
சூப்பர்