நிலா சென்றவுடன் மகிழ் எழில் தோளில் தட்டி அவள் இப்போது உன்னை தானே அழைத்தால் என்று கேட்டான் எழில் தனது அண்ணனை அமைதியாக பார்த்தான் மகிழ் சிரித்துக் கொண்டே எனக்கு தெரிகிறது அவள் உன்னை தான் அழைத்தல் என்று நான் ஏதோ ஒரு வேகத்தில் சொல் என்று கேட்டு விட்டேன் ஆனால் அதன் பிறகு உணர்ந்து கொண்டேன் அவள் உன்னை தான் கூப்பிட்டால் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சென்று விட்டான் அவனுக்கு வேலை இருப்பதால் எழிலும் கல்லூரிக்கு நேரமாவதால் சென்றுவிட்டான் மகாவும் அதேபோல் கிளம்பி விட்டால் அனைவரும் அவர்களது வேலையை பார்க்கச் சென்று விட்டார்கள் எழில் நிலா இருவரும் ஒரு நாள் தான் கல்லூரிக்கு விடுமுறை அளித்துவிட்டு வந்தார்கள் அப்பொழுது நிலா உடைய தோழிகள் தான் நிலாவிடம் அது என்னடி நீ எப்போ லீவ் போட்டாலும் எழில் சாரும் அப்போதே லீவ் போடுகிறார் என்னடி அர்த்தம் உங்கள் இருவருக்கும் என்ன என்று கேட்டார்கள் அதை என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் அவர் கிட்ட கேட்டா தான் தெரியும் அவ்வளவு அக்கறையா இருந்தா வாங்க போயிட்டு கேட்டு விட்டு வரலாம் ஏன் நேற்று கல்லூரிக்கு வரவில்லை என்று என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்அப்பொழுது நிலா கிளாசுக்கு எழிலுடைய வகுப்புதான் அவன்தான் கிளாஸ் டீச்சர் என்பதால் முதல் வகுப்பு தினமும் அவனுடையதாக தான் இருக்கும் எழிலும் அவர்களது கிளாஸ் ரூமுக்கு வந்தான் நிலா அப்போது தனது நண்பர்களை பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டு விடலாமா என்றால் அப்போதே அவளுடைய நண்பர்கள் அம்மா தாயே கொஞ்ச நேரம் அமைதியா இருடி உன் வாலு தனத்தை காமிச்சு எங்களையும் சேர்த்து வெளியே நிற்க வைத்து விடாதே என்றார்கள் நிலா சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தால் எழில் வகுப்புக்குள் வரும்போது நிலாவை கவனித்தான். அவள் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்துடன் அமைதியாக விட்டு விட்டான் பிறகு அவனும் பாடம் நடத்திவிட்டு இறுதியில் நிலாவிடம் நீங்கள் ஏன் அடிக்கடி அகல் நிலா லீவு எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான் ஏன் நீ அடிக்கடி லீவ் எடுக்க வில்லையா என்று மனதில் எண்ணிக் கொண்டே அமைதியாக நின்றால் அப்பொழுது எழில் தான் நீங்கள் ஏன் நேற்று லீவ் எடுத்தீர்கள் என்று கேட்டான் சாரி சார் நான் உங்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டு தான் லீவு எடுத்தேன் என்றால் உங்கள் வீட்டில் அடிக்கடி பங்க்ஷன் என்று அடிக்கடி லீவு எடுப்பதால் உங்களுடைய படிப்பு வீணாகும் என்று தெரியாத. அது மட்டும் இல்லாமல் அதிகமாக இனிமேல் அடிக்கடி அதிகமாக லீவ் எடுக்க கூடாது என்றான்நிலாவும் சாரி சார் இனிமேல் அதிகமாக லீவு எடுக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டால் எழில் சரி என்று விட்டு அவனுடைய வகுப்பு முடிந்தவுடன் அனைவரிடமும் நாளை டெஸ்ட் என்று மட்டும் சொல்லிவிட்டு அவனது வகுப்பை முடித்துவிட்டு வெளியில் சென்று விட்டான் பிறகு நிலாவுடைய நண்பர்கள் தான் என்ன டீ இவ சாருக்கு ரொம்ப மரியாதை குடுகுற என்றார்கள் என்ன டி அவர் கிட்ட கேட்டுடாலாமா நீங்க மட்டும் அடிக்கடி லீவ் எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று என்றால் அடியே அப்படி கேட்டு ஏதாச்சும் வம்பு சண்டை இழுத்து விட்டுடாதா தாயு என்று சிரித்துக் கொண்டே இருந்தார்கள் அனைவரும் சிரித்தார்கள் ஆனால் நிலாவின் தோழி இளவேனில் மட்டும் அமைதியாக இருந்தால் அப்பொழுதுதான் நிலா இளவேனில் தன்னிடம் காலையிலிருந்து பேசவும் இல்லை அமைதியாகவும் இருக்கிறாள் என்று உணர்ந்தால் அடுத்த ஆசிரியர் வருகிறார்களா என்று பார்த்தால் அவர்கள் வரவில்லை என்று உடன் என்ன வேணி ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று கேட்டால் அப்பொழுதுதான் அவளுடைய மற்ற நண்பர்களும் சாரி நிலா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டோம் என்றார்கள்என்னடி என்னாச்சு வேணிக்கு யாராச்சும் திட்டி விட்டார்களா என்று கேட்டால் இல்ல அப்புறம் என்ன என்று கேட்டால் நிலா அவளுடைய அம்மா அப்பா இவளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்களாம் என்றார்கள் என்ன என்று கேட்டால் திருமணம் செய்து வைப்பது கூட பிரச்சினை இல்லை ஆனால் யாரை திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று தெரியுமா இவள் அம்மாவுடைய தம்பி தாய் மாமாவை என்ன அந்த பொறுக்கியை யா என்று வேகமாக கேட்டால் அப்பொழுது அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வந்தவுடன் நிலா அந்த பேச்சை அதோடு நிறுத்திவிட்டு அமைதியாக கிளாஸ் கவனித்தாள் இப்படியே காலை பொழுதும் முடிந்தது லஞ்ச் பிரேக்கில் தான் நிலா என்ன நடந்தது என்று கேட்டால் வேணியும் முந்தா நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் அவர்கள் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தால் நான் முந்தா நேற்று வீட்டிற்கு சென்றவுடன் எனது அம்மாவின் தம்பி தாய் மாமா வந்திருந்தார் நான் அவரிடம் எப்போது போல் வாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக சென்று விட்டேன் அப்பொழுது என்னுடைய அம்மா தான் என்ன டி மாமா வந்திருக்கான் ஒழுங்கா முகம் கொடுத்து கூட பேசாம நீ மட்டும் வாங்கன்னு சொல்லிட்டு ரூம்குள்ள போற என்று கேட்டார் எப்பொழுதும் தன்னை தான் மாமா வந்தால் ரூமுக்குள் துரத்தும் அம்மா இப்பொழுது புதிதாக என்னை அவரிடம் பேச சொல்லியவுடன் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது நான் என் தாயைப் பார்த்துவிட்டு வேறு ஏதாவது பேசாமல் உள்ளே சென்று விட்டேன் அதன் பிறகு எனது தாய் என்னிடம் ரூமில் வந்து பேசினார் அப்பொழுது நான் என்ன மா இதற்கு முன்பு நீங்கள் மாமா வந்தால் அவனிடம் அதிகமாக பேசாதே என்று தானே சொல்லி இருக்கிறீர்கள் இப்பொழுது என்ன என்று கேட்டேன் இப்பொழுது தானே நாங்கள் உன்னை அவனுக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்து இருக்கிறோம் என்றார் என்ன என்று கேட்டேன் ஆமாம் அவனுக்கும் வயது ஏறிக் கொண்டே இருக்கிறது அவன் செத்து விடுவேன் என்று எல்லாம் சொல்கிறான் என்னுடைய அம்மாவும் அவனுக்கென்று ஒரு வாழ்வு அமையவில்லை என்று பயந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் அதற்காக என்னை பகடை காயாக ஆக்குகிறீர்களா என்று கேட்டேன் அதற்கு என்னுடைய அம்மா என்னை அடித்துவிட்டு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ உன் மாமாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசுவதாக இல்லை உனக்கும் அவனுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அவ்வளவு தான் என்று முடித்து விட்டார்கள் நான் எவ்வளவு கெஞ்சியும் என்னிடம் அதற்கு மேல் எதுவும் பேச மாட்டேன் என்று விட்டார்கள்இப்பொழுது நான் வீட்டில் இருந்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதால் தான் கல்லூரிக்கு வந்திருக்கிறேன் நான் எவ்வளவு சொல்லி பார்த்தேன் என்ன அம்மா ஒத்துவரவில்லை நான் அப்பாவிடம் சென்று பேசினேன் அவர் உன் அம்மாவின் விருப்பம் தான் என் விருப்பம் என்று ஒரே பதிலாக சொல்லிவிட்டார் அதற்கு மேல் என்னிடம் யாரும் பேசுவதாக இல்லை ஏன் தனது அம்மா அப்பாவும் இப்படி மாறினார்கள் என்று எனக்கே புரியவில்லை என்று சொன்னால் நிலாவிற்கு இப்பொழுது இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை அப்பொழுதுதான் எழில் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸ் கழுவிக்கொண்டு வருணுடன் பேசிக்கொண்டே அவனது அறைக்கு சென்று கொண்டிருந்தான் அப்பொழுது நிலா வேகமாக எழில் சார் என்று அழைத்தாள் எழில் வருண் இருவரும் நின்று திரும்பி பார்த்தார்கள் நிலா அவளுடைய நண்பர்களிடம் நீங்கள் வகுப்புக்கு போங்கள் நான் பேசி விட்டு வருகிறேன் என்று இளவேனிலையும் அழைத்து கொண்டு எழில் இருக்கும் இடம் சென்றாள் என்ன அகல் நிலா என்று கேட்டான் நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றால் அப்போது இளவேனில் நிலாவின் கையைப் பிடித்து அமைதியாய் இருடி என்றால்நீ அமைதியாக இரு என்று விட்டு எழிலை பார்த்தால் நிலா கூப்பிட்டவுடன் நிலாவை பார்த்தான் இளவேனில் அவளது கையை பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு அவளது முகம் சரியில்லை என்று உடன் வேணி இடமே என்ன வேணி என்று கேட்டான் அவள் ஒன்றும் இல்லை சார் என்று சொன்னால் பிறகு எழில் நிலா நீ வேணியை அழைத்துக் கொண்டு என்னுடைய அறைக்கு வா இங்கு வைத்துக்கொண்டு எதுவும் பேச வேண்டாம் என்று விட்டு வருணை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றுவிட்டான் பிறகு நிலாவும் தனது நண்பர்களிடம் நீங்கள் எல்லாம் கிளாஸ் ஆரம்பித்துவிட்டால் கிளாசுக்கு செல்லுங்கள் நான் எழில் சாரை பார்த்து விட்டு வருகிறேன் என்றால் அவர்களும் சரி என்றவுடன் இளவேனிலை அழைத்துக் கொண்டு எழில் இருக்கும் அறைக்கு சென்றால் வருணும் அங்கு தான் நின்று கொண்டிருந்தான் நிலா ஒரு நிமிடம் எழில் வருண் இருவரது முகத்தையும் பார்த்துவிட்டு சார் நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு தானே இங்கு வரச் சொல்லி இருக்கிறேன் என்ன ஆச்சு என்று கேட்டேன் சார் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் இது அவளது தனிப்பட்ட விஷயம் தான் அதை கல்லூரியில் உங்களிடம் சொல்கிறேன் என்றால் இதில் என்னமா இருக்கிறது அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை சொல்வதால் ஒன்றும் தவறில்லை என்ன என்று கேட்டான் ஒன்றும் இல்லை சார் இவள் வீட்டில் இவளுக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்து இருக்கிறார்கள் என்று சொன்னாள் எழில் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டு நிலாவை பார்த்தான் பிறகு தனது அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து அதற்கு என்ன நிலா என்று கேட்டான் இல்லை சார் இந்த திருமணத்தில் இவளுக்கு விருப்பமில்லை என்றால் சரிமா அதை வேணி அவர்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி இருக்கலாமே என்றான் அதை சொன்னேன் சார் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இப்போது வேனியே பேசி செய்தால் சரி வேணி இப்போது என்ன செய்யலாம் என்று சொல் என்று கேட்டான் சார் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று சொல்கிறார்கள் மேற்கொண்டு படுக்க வைப்பேன் என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்னுடைய சொந்த தாய் மாமாவை தான் எனக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் அவருக்கு என்னை விட 15 வயது அதிகம் அது மட்டும் இல்லாமல் அவர் நல்லவரும் அல்ல அவருக்கு நிறைய பெண்களிடம் சகவாசம் இருக்கிறது என்று கூட எனது அம்மாவே சொல்லி இருக்கிறார்கள் ஆனால் இப்பொழுது எதற்காக என்னை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை இந்த திருமணத்தை எப்படியாவது நிருத்த வேண்டும் அதற்கு உங்களால் உதவி செய்ய முடியும் என்றால் எனக்கு கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று கேட்டால் எழில் நிலாவை பார்த்தான் நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் பிறகு நிலாவிடம் உனக்கு வகுப்பு இருக்கிறது அல்லவா நீ உன்னுடைய கிளாஸ்க்கு செல் என்றான் சார் என்று இழுத்தாள் அதான் சொல்லிவிட்டீர்கள் அல்லவா இதை எப்படி சரி செய்வது என்று நான் பார்க்கிறேன் அதற்காக நீங்கள் சொன்னவுடனே இதற்கான தீர்வு என்னால் சொல்ல முடியாது அல்லவா நீங்கள் செல்லுங்கள் நாளை ஏதாவது இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் அதான் இன்னும் ஒரு மாதங்கள் இருக்கிறதே என்றான் இருவருக்கும் அதுவே சரி என்ற பட்டதால் சரி என்று விட்டு வெளியே வந்து விட்டார்கள்நிலா வேணியை அழைத்து கொண்டு அவளது வகுப்புக்கு சென்று விட்டாள் அவர்கள் இருவரும் சென்றவுடன் வருண் தான் என்னடா மச்சான் என்று ஒரு மாதிரியாக இருக்க சாரி மச்சான் நான் ஒன்று கேட்டால் தவறாக நினைக்க மாட்டாயே என்றான் என்ன வருண் என்றான் இல்ல இளவேனிலுக்கு திருமணம் என்று சொன்னவுடன் நீ ஏன் அதிர்ச்சியாகி பார்த்தாய் எனக்கு புரியவில்லை என்றான் அதில் ஒரு விஷயம் இருக்கிறது சொல்கிறேன் என்றான் என்னடா என்று வருண் கேட்டான் எழில் சிரித்துக் கொண்டே இதற்கான பதிலை என்னால் சொல்ல முடியாது சொல்ல வேண்டியவர்கள் சொல்வார்கள் என்றான் டேய் யாருடா நான் உன்னிடம் கேள்வி கேட்டால் எனக்கு பதில் சொல்வார்கள் என்றான் அதான் சொன்னேனே என்று சிரித்துக் கொண்டே எனக்கு வகுப்பு இருக்கிறது என்று விட்டு கிளம்பினான் வருணுக்கு மண்டையை வெடித்து விடுவது போல் இருந்தது இளவேனிலுக்கு திருமணம் என்று சொன்னவுடன் எழில் ஏன் அதிர்ச்சியாகிப் பார்த்தான் என்று புரியாமல் அவனும் வகுப்பிற்குச் சென்றான்இளவேனிலுக்கு திருமணம் என்று சொன்னவுடன் எழில் ஏன் அதிர்ச்சியாக பார்த்தான் எழில் இளவேனில் திருமணத்தை நிறுத்த ஏதாவது உதவி செய்வானா.என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்அன்புடன்❣️ தனிமையின் காதலி ❣️
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Ama ezhil Yen athirchi aguran ena solla poran