ராமு கருப்பையாவிடம் எனக்கு இருப்பது ஒரே ஒரு பெண் தான் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் அவளுக்கு நாளை திருமணம் என்ற உடன் நிலா தான் வேகமாக அதிர்ச்சியாகி என்ன இளவேனிலுக்கு நாளை திருமணமா என்று கேட்டால் வீட்டில் உள்ள அனைவரும் நிலாவை பார்த்தார்கள் அப்பொழுது வேலு தான் ஏன் நிலா இவ்வளவு அதிர்ச்சியாகி கேட்கிறாய் என்று கேட்டார் இல்ல மாமா இந்த ராமு மாமாவின் பெண் இளவேனில் என்னுடைய தோழி தான் அவளுக்கு நாளை திருமணம் என்று உடன் அதிர்ச்சியாக கேட்டேன் என்று விட்டு தனது மகிழ் மாமாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதி ஆகிவிட்டால் அவன் கண் மூடி திறந்தவுடன் நிலா வேறு எதுவும் பேசவில்லை சரிப்பா என்ன அவசரம் நாளைக்கு திருமண என்று இப்ப வந்து சொல்ற என்று கேட்டார் வேலுஅண்ணா என்ன தப்பா எடுத்துக்காதீங்க பாப்பாவுக்கு இன்னும் ஒரு மாசம் கழிச்சு தான் கல்யாணம் வைக்கலாம்னு இருந்தேன் மாப்பிள்ளை வேற யாரும் இல்லை என் பொண்டாட்டி ஓட தம்பி தான் என் அத்தைக்கு மேலுக்கு கொஞ்சம் முடியல அவங்க பயப்படுறாங்க அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும் என்று அதான் சீக்கிரம் முடிச்சிடலாம் என்று என்றார் சரிப்பா அதுக்கு ஏன் இவ்ளோ அவசரம் என்று கேட்டார் வேலு அதான்யா அவனுக்கும் வயசு கூடிட்டே போகுது என்றவுடன் இது அவர்கள் வீட்டு விஷயம் என்பதால் அதன் பிறகு அனைவரும் வேறு ஏதும் பேசவில்லை பெரியவர்கள் சரிப்பா எங்க கல்யாணம் என்று கேட்டார் கருப்பையா தாத்தா நம்ம பக்கத்து ஊரு சிவன் கோவிலில் தான் ஐயா என்றவுடன் சரிப்பா நாங்க வரும் என்றார் குடும்பத்தோட வந்துருங்க ஐயா என்று பத்திரிக்கை இல்லாமல் வெற்றிலை பாக்கு பூ பழம் மட்டும் வைத்து முறைக்கு சொல்லிவிட்டு சென்றார் அவர்கள் சென்று ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு மகிழ் அவர்கள் சென்று விட்டார்களா என்று ஒரு முறை வீட்டிற்கு வெளியே சென்று எட்டி பார்த்துவிட்டு வீட்டுக்குள் வந்தான் வேலு தான் என்ன மகிழ் வெளியே சென்று பார்த்துவிட்டு வருகிறாய் என்று கேட்டார் மகிழ் தனது அப்பாவை பார்த்துவிட்டு தனது தாத்தா பாட்டியிடம் வந்து நின்றவன் பிறகு சுற்றிப் பார்த்தான் வீட்டில் அனைவரும் இருக்கிறார்களா என்று அனைவரும் இருக்கிறார்கள் என்று உடன் நான் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றான் அவன் வெளியே எட்டி பார்த்துவிட்டு வீட்டுக்குள் வந்தவுடன் அவன் ஏதோ பெரிய விஷயம் சொல்ல போகிறான் என்று வீட்டில் உள்ள அனைவரும் உணர்ந்தார்கள் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் என்னடா பேராண்டி அவ்ளோ முக்கியமான விஷயம் என்றார் பாட்டி முதலில் அனைவரும் உட்காருங்கள் நான் முக்கியான விஷயம் பேச வேண்டும் என்பதால் என்றவுடன் அனைவரும் அமைதியாக உட்கார்ந்தார்கள் இளவட்டங்கள் அனைவரும் நின்று கொண்டு தான் இருந்தார்கள் அதுவும் நிலா அருகில் இருக்கும் எழிலின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டுதான் நின்றாள் இரண்டு நாட்களில் தனது மகிழ் மாமா எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்தி விடுவார் என்ற எண்ணத்தில் இருந்தால் ஆனால் இப்பொழுது நாளை திருமணம் என்ற உடன் அவளுக்கு பயம் வந்துவிட்டது என்பதை விட அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் அப்பொழுது பாண்டியம்மா பாட்டி தான் என்னடா என்று திரும்பவும் கேட்டார் இப்போது ராமு சித்தப்பா சொல்லிவிட்டு செல்கிறார் அல்லவா அவருடைய பெண்ணுக்கு திருமணம் என்று ஆமாம் டா அதற்கு என்ன என்றார்அவருடைய விருப்பம் அவர் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார் இதில் நாம் என்ன சொல்வது என்றார் அந்தப் பெண் நம் நிலாவுடைய தோழி என்று அதான் இப்பொழுது நிலாவே சொன்னாலே என்றார் ஆமாம் பாட்டி அது மட்டுமில்ல என்று விட்டு தனது வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு இறுதியாக தனது காவேரியத்தையை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணை நமது முகில் இரண்டு வருடங்களாக விரும்பி கொண்டிருக்கிறான் என்றான்மகிழ் அந்த பெண்ணை விரும்புகிறான் என்றவுடன் காவேரி எழுந்து நின்று என் ராமு மகளை முகில் விரும்புகிறானா என்றார் ஆமாம் அத்தை நான் உண்மையாகத்தான் சொல்கிறேன் முகில் அந்த பெண்ணை இரண்டு வருடமாக ஆக விரும்பி கொண்டிருக்கிறான் ஆனால் என்றான் டேய் என்னடா என்று கேட்டார் காவேரி அத்தை நான் சொல்லும் வரை அமைதியாக கேளுங்கள் குறுக்கே யாரும் பேச வேண்டாம் நான் இறுதியில் சொல்லி முடித்த பிறகு உங்களது விருப்பத்தை சொல்லுங்கள் என்றான் அதன் பிறகு வீட்டில் உள்ள யாரும் எதுவும் பேசவில்லை அவன் என்னதான் சொல்ல வருகிறான் என்று கேட்கலாம் என்று அமைதியாக இருந்தார்கள் அவன் எந்த விஷயத்தையும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து விடமாட்டான் இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையும் ஒரு குடும்பத்தின் கனவுகளையும் அழிக்க முற்பட மாட்டான் அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறு பேசுகிறான் என்றால் ஏதாவது காரணம் இருக்கும் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் எண்ணினார்கள் அதனால் அமைதி காத்தார்கள் பிறகு மகிழே பேச ஆரம்பித்தான். அந்தப் பெண்ணை முகில் விரும்பி கொண்டிருக்கிறான் ஆனால் அந்தப் பெண் முகிலை விரும்பவில்லை அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணுக்கு இந்த திருமணத்திலும் விருப்பமில்லை அந்த பெண்ணுடைய தாய் மாமாவை தான் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் அவனுக்கும் இந்த பெண்ணுக்கும் 15 வருட வித்தியாசம் அது மட்டுமில்லை அவனுடைய கேரக்டரும் சரியில்லை பெண்கள் விஷயத்தில் அது மட்டும் இல்லாமல் அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது அது இந்த ராமு சித்தப்பாவிற்கோ அவருடைய மனைவிக்கோ தெரியாது ஆனால் ராமு சித்தப்பாவின் மாமியாருக்கு தெரியும் அதை மறைத்து ராமு சித்தப்பாவிடம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்திற்காகவும் அவர்கள் வீட்டிற்காகவும் அவர்கள் வைத்திருக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு இவ்வாறு செய்கிறார்ராமு சித்தப்பாவின் மச்சானுக்கு இளவேனில் மேல் ஒரு விருப்பம் இருந்திருக்கிறது அது ஆசை என்று தான் சொல்ல வேண்டும் அதனால் எப்படியாவது அவளை அடைந்தே தீர வேண்டும் என்று பல நாள் யோசித்திருக்கிறான் இப்பொழுது தனது அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை என்று பொய் சொல்லி அவர்கள் கிட்ட இரண்டு மாதங்கள் நல்லவன் போல் நடித்து தனது அக்கா மாமா இருவரையும் ஏமாற்றி இப்பொழுது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான் என்று விட்டு அமைதியாக இருந்தான்அப்பொழுது அனைவரும் அவன் அமைதியாக இருந்தவுடன் தங்களது பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்று வீட்டில் உள்ள அனைவரும் இப்பொழுது இதை எப்படி சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது காவேரி தான் வேகமாக தனது மகன் முகிலிடம் வந்தார் மகிழ் சொல்வது போல் நீ அந்த பெண்ணை உண்மையாக விரும்புகிறாயா என்று கேட்டார்முகில் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் எங்கே தன் காதல் தனக்கு கிடைக்காதோ என்பதை விட தனது காதலியின் வாழ்வு சீர் அழிந்து விடுமோ அவளுடைய தாய் மாமாவின் கையால் என்று எண்ணி ஆமாம் அம்மா அந்த பெண்ணை நான் இரண்டு வருடங்களாக விரும்புகிறேன் அவளுக்கு நிலா வயது தான் என்பதால் அவள் படித்து முடித்த பிறகு வீட்டில் பேசலாம் என்று இருந்தேன் ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் உங்களிடம் என்னுடைய காதலை சொல்வேன் என்று நான் எண்ணவில்லை என்றான் அப்பொழுது காவேரி மகிழை பார்த்துவிட்டு மகிழ் முகில் விரும்பும் அந்த பெண் தாண்டா எனக்கு இரண்டாவது மருமகள் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு எனது மகனுக்கு இந்த திருமணத்தை செய்தவை ஏற்கனவே ஒருத்தி மனதில் ஒருத்தனை நினைத்துக் கொண்டு நமக்காக என்று எண்ணி பிறகு அவளது விருப்பம் தான் வேண்டும் என்று சென்றுவிட்டாள் இப்பொழுது எனது மகனது மனதையும் நான் சாகடிக்க விரும்பவில்லை அவன் விரும்பும் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அவன் கெட்டவன் என்று நீயே சொல்கிறாயே அதற்கான ஆதாரமும் வைத்திருக்கிறாய் தானே என்று கேட்யார் அதற்கான ஆதாரம் இல்லாமலா அத்தை உங்களிடம் வந்து பேசுவேன் என்றான் அப்படி என்றால் நாம் ராமு வீட்டில் சென்று பேசலாமே என்றார் அத்தை கொஞ்சம் பொறுங்கள் நாம் ராமு சித்தாப்பாவிடம் பேசலாம் ஆனால் அதற்கான நேரம் நம்மிடம் இல்லை அதையும் கொஞ்சம் யோசிங்கள் என்றான் பிறகு காவேரியே ஒரு ஐடியா கொடுத்தார் மகிழ் அப்பொழுது நான் ஒன்று சொல்கிறேன் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் சம்பந்தமா என்று சொல்லுங்கள் என்று விட்டு தனது அப்பா அம்மாவை பார்த்தார் பாண்டியம்மா தான் அப்படி என்னடி முடிவு செய்து இருக்கிறாய் என்று கேட்டார் அம்மா என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் எனக்கு என்னுடைய மகனின் வாழ்வு முக்கியமாகப்படுகிறது அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொன்னார்நீ என்ன என்று சொன்னால் தானே நாங்கள் ஏதாவது முடிவு செய்யலாம் என்றார் அம்மா ராமு சொன்னது போல் அவர் பெண்ணுக்கு நாளை பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் திருமண ஏற்பாடு செய்யட்டும் என்றார் வீட்டில் அனைவரும் அவரையே பார்த்தார்கள் மகிழ் அமைதியாக தனது அத்தையை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவர் மகிழை பார்த்துவிட்டு தனது தாயிடம் அவர் செய்யும் திருமண ஏற்பாட்டில் நாம் முகிலுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்றார் என்ன என்று பாண்டியம்மா பாட்டி அதிர்ச்சியாகி கேட்டார் ஆமாம் அம்மா என்றார் என்னடி பேசுகிறாய் அவனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் ஒன்றும் வீட்டில் உள்ள யாருக்கும் பிரச்சினை இல்லை ஆனால் இப்படியா யாரிடமும் சொல்லாமல் என்றார் தயவு செய்து நான் சொல்வதை கேளுங்கள் அனைவரிடம் சொல்லி விமர்சையாக எனது மகனின் திருமணத்தை நடத்துவதை விட அவன் விருப்பப்பட்ட பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைப்பது தான் எனக்கு இப்பொழுது பெரிதாக தெரிகிறது என்றார் மகிழ் சிரித்துக் கொண்டே அமைதியாக தனது அத்தையை பார்த்துக் கொண்டிருந்தான் அவனுமே இந்த முடிவில் தான் இருந்தான் இப்போது தனது அத்தையே தனக்கு பதிலாக பேசுவதால் அமைதியாக அவர் கூறும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் காவேரி சொல்வது போல் ராமு இளவேனிலுக்கு என்று தனது மச்சானுடன் திருமண ஏற்பாடு செய்யும் கோயிலில் முகில் இளவேனில் திருமணத்தை காவேரி நடத்தி வைப்பாரா ….அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதம் தெரிவிப்பார்களா …அப்படி மகிழ் வீட்டில் உள்ள அனைவரும் ஒத்துக் கொண்டாலும் இந்த திருமணத்திற்கு ராமு வசந்தி இளவேனில் மூவரும் சம்மதம் தெரிவிப்பார்களா …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
அதானே..! முதலில் இளவேனில் திருமணத்திற்கு சம்மதிக்கனுமே.
Kalyanam pani vachidunga kaveri mugil aasaiya niravethidunga
Interesting