Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 44

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 44

காவேரி வீட்டில் உள்ள அனைவரிடமும் ராமு இளவேனிலுக்கு திருமண ஏற்பாடு எப்போதும் போல் செய்வது போல் பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் திருமணத்திற்கு ஆன எல்லா ஏற்படும் செய்யட்டும் நாம் அந்த இடத்தில் முகிலுக்கு முகில் விரும்பும் பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்றார் அப்பொழுது பாண்டியம்மாள் பாட்டி தான் என்னடி சொல்கிறாய் என்று கேட்டார் ஆமாம்மா எனக்கு என்னுடைய மகனின் வாழ்வு தான் பெரிது ஊரைக் கூட்டி திருமணம் செய்து வைப்பதை விட அவனுக்கு மனதிற்கு பிடித்த பெண்ணுடன் திருமணம் செய்வது வைப்பது நல்லது என்று தோன்றுகிறது எப்படி செய்வது என்று காவேரி மகிழை பார்த்தார் மகிழ் சிரித்துக் கொண்டே தனது அத்தையை பார்த்து தலையை மட்டும் ஆட்டினான் அவர் அம்மா அதான் ராமு உடைய மச்சான் கெட்டவன் என்று மகிழ் சொல்கிறார்கள் பா அந்த விவரத்தையும் அதற்கான ஆதாரம் மகிழிடம் இருக்கிறது என்று சொல்கிறான் அல்லவா மகிழ் அவனுக்கு திருமணம் ஆகி விட்டது என்றானே அந்த பெண்ணைப் பற்றி என்றார் அவர் என்னிடம் தான் அத்தை இருக்கிறார் நான் அவரை பார்த்து பேசி விட்டேன் என்றான்  சரி என்று அந்த பெண்ணை நாளை நாம் கோவிலுக்கு அழைத்து செல்லலாம் அங்கு சென்று அந்த பெண்ணை நிற்க வைத்து ராமு வசந்தி இருவருக்கும் உண்மையை எடுத்துச் சொல்லலாம் அதன் பிறகு அந்த அயோக்கியன் வேண்டாம் என்று முடிவு செய்வார்கள் அந்த வேலையில் அவர்கள் பெண்ணின் திருமணம் நிற்க வேண்டாம் என்றும் முகிலுக்கு அந்த பெண்ணின் மீது விருப்பம் இருக்கிறது என்ற உண்மையையும் சொல்லி திருமணத்தை நடத்தலாம் என்றார் மகிழ்  நினைத்ததை தான் இப்போது காவேரி சொல்லிவிட்டார் என்று அமைதியாக நின்றான் பிறகு வீட்டில் உள்ளவர்களும் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு இதுவே சரி காவேரி தான்  இறுதியாக முகில் விருப்பத்தையும் சொல்லிவிடலாம் என்று சொல்லிவிட்டாள் என்பதால் அப்படியே திருமணத்தை நடத்தி விடலாம் என்று எண்ணினார்கள் சரி அனைவரும் போய் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள் காலையில் அப்படி என்றால் முகிலுக்கு திருமணம் இருக்கிறது அல்லவா சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும் என்றார் பாண்டியம்மா பாட்டி முகிலிடம் யாரும் எதுவும் பேசவில்லை அனைவருக்கும் அவன் மேல் வருத்தம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது இது ஒரு சூழ்நிலையால் தான் அமைகிறது என்பதால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள் சாப்பிட்டுவிட்டு அவரவர் அவர்களது அறைக்கு சென்று விட்டார்கள் அனைவரும் காலை நேரமாக எழுந்து கொள்ள வேண்டும் என்பதால் அவர்கள் அறைக்குச் சென்று படுத்ததும் உறங்கி விட்டார்கள் காலைப்பொழுதும் விடிந்தது காலை மூணு மணி போல்  அனைவரும் எழுந்து குளித்துவிட்டு திருமணத்திற்கு செல்வது போல் தான் உடை அணிந்து கொண்டு சென்றார்கள் தங்கள் வீட்டு மகனின் திருமணம் என்பதை காட்டிக் கொள்ளாமல் அனைவரும் கிளம்பியுடன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார்கள் அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டுதான் வந்தான் மகிழ் ஆனால் கோவிலில் தனியாக ஒரு இடத்தில் பாண்டியிடம் ஒப்படைத்துவிட்டு வந்தான் பிறகு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றார்கள் காலை நாலரை ஆறு திருமணம் ஆக இருந்தது ராமு வசந்தி கூட தங்கள் மகள் திருமணத்திற்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி சந்தோஷம் அடைந்தார்கள் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்து மணமகனையும் மணமேடையில் உட்கார வைத்தார்கள் அப்போதுதான் மகிழ் ராமு வசந்தி இருவரிடம் நான் உங்கள் இருவரிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் சித்தப்பா  என்று கேட்டார் இந்த நேரத்திலா என்று கேட்டார் இது இந்த நேரத்தில் பேச வேண்டிய விஷயம் தான் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றான் சரி சொல்லுப்பா அதன் பிறகு பாண்டி என்றான் மகிழ்  பாண்டி அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான் பாண்டி உடன் வரும் பெண்ணை பார்த்தவுடன் வேணியின் தாய் மாமா ஒரு நிமிடம் எழுந்து நின்றான் அதை ராமு வசந்தி இருவருமே பார்த்தார்கள் இவன் ஏன் அந்த பெண்ணை பார்த்து எழுந்து நிற்கிறான் என்றும் எண்ணினார்கள் அப்பொழுது மகிழ் தான் அந்த பெண்ணை பார்த்து அக்கா நீங்கள் சொல்ல வேண்டியதை சொல்லலாம் என்றான் அந்த பெண்ணை பார்த்து சொன்னான் அவரும் ராமு வசந்தி இருவரிடம் வந்து நின்று அப்பா அம்மா என்னை மன்னித்து விடுங்கள் நான் இங்கு மணமேடையில் மணமகனாக உட்கார்ந்து இருக்கும் இந்த அயோகியனின் மனைவி இவனை நம்பி ஏமாந்து இரண்டு வயதில் எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது நான் சொல்வதெல்லாம் உண்மைதான் என்றால் அப்பொழுது வசந்தி தான் என்னடி சொல்கிறாய் யார் நீ என்று கேட்டார் அந்த பெண்ணும் அவருடைய விவரத்தையும் சொல்லிவிட்டு இவனுடன் இருக்கும் ஒரு சில போட்டோக்களையும் காண்பித்தால்அது மட்டும் இல்லாமல் இவன் காதலிக்கிறான் என்று பொய் சொல்லிய போது பேசிய அனைத்தையும் போட்டும் காண்பித்தாள் இப்பொழுது நேற்று கூட அவனிடம் பேசிய ஆடியோ ஒன்றை போட்டு காண்பித்தாள் அதில் அவன் அமைதியாக என்னை விட்டு போடி உன்னைவிட ஆயிரம் மடங்கு அழகாக  இருக்க என்னோட அக்கா பொண்ணு தான் எனக்கு வேணும் அவ மட்டும் வரல அவ கூட சேர்ந்து எனக்கு கொஞ்சம் சொத்தும் வருது அவளை கட்டிக்கிறேன் உன்னை வச்சிக்கிறேன் அதான் உனக்குன்னு என் மூலமா ஒரு குழந்தை இருக்குல்ல அதை வைத்து கொண்டு நீ என்னை உண்மையா தானே காதலிச்சே அந்த புள்ளைய வச்சுட்டு வாழு டி அப்பப்ப வந்து உன்னை பார்த்துட்டு போறேன் என்று கூறியிருந்தான் அதை இப்பொழுது அந்த பெண் போட்டு காட்டியவுடன் வசந்தி வேகமாக தனது தம்பியை அடிக்க வந்தார் அப்பொழுது வசந்தியுடைய தாய் என்ன டி எவளோ ஏதோ சொல்கிறாள் என்பதற்காக உன் தம்பியை அடிக்க வருகிறாய் என்றார் சீ நீ லாம் ஒரு அம்மாவா வாய மூடு மகனோட வாழ்க்கை என்று பார்த்து மகள் எப்படி கேட்டாலும் பரவாயில்லை மகளிடம் இருக்க சொத்து வேண்டும் என்று எண்ணுகிறீர்களே நீங்கள் எல்லாம் ஒரு அம்மா என் பெண்ணின் வாழ்க்கையை அழிக்க பார்க்கிறீர்களே அம்மாவும் மகனும் இவளும் உன்னுடைய மகள் வயிற்று பேத்தி தானே இவளுடைய வாழ்க்கை வீணாகிறது என்றெல்லாம் பார்க்க மாட்டாயா உனக்கு உன்னுடைய மகன் சந்தோஷம்தான் முக்கியம் இல்ல உனக்கும் தெரிந்து இருக்கிறது தானே எனக்கு தெரியும் உன்னுடைய மகன் கெட்டவன் நிறைய பெண்களிடம் பேசுகிறான் என்று ஆனால் இப்படி திருமணம் செய்து ஒரு குழந்தை இருக்கும் என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை என் பொண்ணு வாழ்க்கையை இருவரும் சேர்ந்து அழிக்க பார்த்தீர்களே என்று தம்பியை போட்டு அடித்து  கொண்டு இருந்தார் அப்பொழுது இரண்டு போலீஸ் வந்தார்கள் மகிழ் தான் வர வைத்திருந்தான் முதலில் இவர்கள் இருவரையும் போலீசில் பிடித்துக் கொடு என்றார் வசந்தி ஏய் உன்னுடைய அம்மா டி என்றார் என்னுடைய அம்மாவா நான் பெத்த மகளின் வாழ்க்கை கொடுக்க பார்த்த நீ என்னுடைய அம்மாவை நீ என்னை மகளாக நினைக்கவில்லை நான் உன்னை மட்டும் அம்மாவாக நினைப்பேன் என்று நினைத்தாயா என்றார் பிறகு போலீஸ் வந்து இருவரையும் அழைத்துச் சென்றது அந்த பெண் வசந்தி இடம் வந்து நின்றது என்னை மன்னித்து விடுங்கள் என்று அந்த பெண் ராமு வசந்தி இருவரிமும் கேட்டது நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லமா நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இப்படிப்பட்ட தாய்க்கு மகளாகவும் எப்படிப்பட்ட தம்பி அக்காகவும் பிறந்ததற்கு என்னை மன்னித்து விடு  உன்னையும் உன் குழந்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்னுடைய மகளாக பேரகுழந்தையாக பார்த்துக் கொள்கிறோம் என்றார் இல்லை வேண்டாம் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் இனிமேல் இந்த அயோகியனின் மனைவியாக வாழ எனக்கு விருப்பமில்லை என்னுடைய குழந்தையை நான் தனியாளாக வளர்க்க முடியும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது நான் இப்பொழுது உங்களுடைய பெண்ணின் வாழ்க்கை கேட்டு விடகூடாது என்பதற்காக மட்டும் தான் இங்கே வந்தேன் மற்றபடி அவனுடன் வாழ வரவில்லை என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு சென்றுவிட்டார். ராமு வசந்தி இருவரும் தடுக்க விரும்பவில்லை அந்த பெண் சொல்வது சரிதான் அவள் தங்களை விட்டு சென்றல் கூட அவலுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடிக் கொள்ளலாம் என்று எண்ணினார்கள் அதனால் அமைதியாக இருந்தார்கள் அப்பொழுது ராமுவும்  வசந்தியும் ஊரார் முன்னிலையிலும் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையிலும் தன்னுடைய மகளின் திருமணம் மணமேடை வரை நின்று விட்டதே என்று வருந்தி கொண்டிருந்தார்கள் அப்போது நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலர் என்ன வசந்தி இப்படி உன் தம்பி கேடுகெட்டவன்  என்று தெரியாமல் அவனுக்கு போய் உன் பெண்ணை கொடுக்க பார்த்திருக்கிறாய் வெளி மாப்பிள்ளையாக இருந்தாலும் பரவாயில்லை இப்பொழுது உன் பெண்ணின் வாழ்க்கை என்னாவது திருமணம் மணமேடை வரை  வந்து நின்று விட்டது என்றார்அப்பொழுது மகிழ் தான் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்கிறீர்களா நீங்கள் எல்லாம் சொந்தங்கள் தானே இப்படி பேசலாமா என்ன பா இப்ப நாங்க என்னப்பா தப்பா கேட்டுட்டோம் ஒரு பொண்ணோட வாழ்க்கை போகின்ற பயதினால்   தான் சொல்றேன் நான் ஒன்னும் கெட்ட விதத்தில் சொல்லலையே என்றார்கள் அப்பொழுது மகிழ் தான் வசந்தி இராமு இருவரிடம்  நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றான்என்னையா சொல்ல போற நீ இப்போ சொன்னதை  இதுக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்கலாமே நேத்து நைட்டு உங்க வீட்டுக்கு வந்தோமே அப்பையே கூட சொல்லி இருக்கலாமே என்றார் சித்தப்பா நான் சொல்லும் விஷயத்தை கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள் என்றான் அப்போது ராமு வசந்தி இருவரும் மகிழ் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் உங்களுக்கு காவேரி அத்தை மகன் முகிலனை தெரியும் தானே என்று கேட்டேன் ஏன் தெரியாமல் நாங்கள் எங்கள் வயலுக்கு அனைத்து பொருட்களும் முகில் தம்பி கடையில்  தானே வாங்குகிறோம் அதற்கு என்ன பா என்று கேட்டார் நான் சொல்லப் போகும் விஷயத்தை கேட்டு என்னையோ என் குடும்பத்தை விட்டு தவறாக எண்ணாதீர்கள் சித்தப்பா முகிலுக்கு உங்கள் பெண் இளவேனிலை பிடித்து இருக்கிறது ஏன் அவன் அவனுடைய விருப்பத்தை இளவேனியிடமும் சொல்லி இருக்கிறான் ஆனால் இளவேனில்  தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை நீங்கள் பெரிய இடம் என்று வசதியை பற்றி பேசி வேண்டாம் என்று சொல்லி இருக்கிறது மற்றபடி இளவேனிலுக்கு விருப்பமில்லை என்றெல்லாம் கூட சொல்லவில்லை முகில்  இரண்டு வருடங்களாக இளவேனிலை  விரும்பிக் கொண்டுதான் இருக்கிறான் ஆனால் இளவேனிலுக்கு இதுவரை முகில் மேல் எந்த விருப்பமும் இல்லை நீங்கள் சம்மதித்தால் இப்பொழுது இந்த மேடையில் முகிலுக்கும் இளவேனிலுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றான் நான் இந்த காரணத்துக்காக மட்டும் கேக்கவில்லை இளவேனில் வாழ்க்கைக்காகவும் தான் கேட்கிறோம் நாங்க எல்லாம் பணம் காசு பார்க்கிற ஆட்களா என்றான்எங்க குணத்தை மட்டும் பாருங்கள் உங்களுக்கு தெரியும் நீங்கள் யோசித்து உங்க முடிவை சொல்லுங்க என்றான் ராமு வசந்தி இருவரும் ஒரு பத்து நிமிடம்  யோசித்து விட்டு தனது மகளை திரும்பிப் பார்த்துவிட்டு சரி பா எங்கள் இருவருக்கும் திருமணத்தில் விருப்பம் இந்த முகூர்த்தத்திலே முகிலன் தம்பிக்கும் இளவேனிலுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார் அப்போது மகா தான் குறுக்கே வந்து மாமா அத்தை நான் சொல்றேன் என்று தவறா எடுத்துக்காதீங்க கல்யாணம் பண்ணிக்கொள்ள போவது இளவேனில் தான் அவளுடைய சம்மதத்தை கேட்காமல் நீங்கள் இருவரும் மட்டும் சொல்கிறீர்கள் என்று விட்டு மகா இளவேனில் அருகில் போய் நின்றால் அவள் அமைதியாக நின்று கொண்டு இருந்தாலே தவிர இதுவரை எதுவும் பேசவில்லைமகா அவள் அருகில் நின்று  உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா என்னுடைய முகில் அண்ணனை திருமணம் செய்து கொள்ள என்று கேட்டால் மகா அவ்வாறு கேட்டவுடன் விலுகென நிமிர்ந்து இளவேனில் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் இளவேனில் முகிலை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாளா இல்லை அவளது விருப்பம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெறுமா …முகில் இளவேனில் திருமணம் நடைபெறுமா..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன்❣️ தனிமையின்  காதலி❣️

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 44”

  1. CRVS2797

    ஏன்..? அவனை வேண்டாம்ன்னு சொல்ல என்ன காரணம் இருக்கப் போகுது…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *