மகா இளவேனில் அருகில் சென்று உனக்கு எனது அண்ணன் முகிலனை திருமணம் செய்து கொள்ள சம்மதமா உனக்கு இந்த திருமணத்தில் சம்மதமா என்று கேட்டவுடன் இளவேனில் விலுக்கென நிமிர்ந்து மகாவை பார்த்தாள் இளவேனில் ஒரு நிமிடம் சிரித்துவிட்டு பரவாயில்லை அக்கா உங்களுக்காவது எனது விருப்பத்தை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றாள்என்னுடைய பெற்றோர்கள் கூட அவர்களது விருப்பம் தான் என்று இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் என்னுடைய விருப்பத்தையும் கேட்கிறீர்களே என்று சொன்னால் உன்னுடைய விருப்பம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெறாது வேணி உனக்கு விருப்பமா என்று மட்டும் சொல் இல்லை என்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றவுடன் அவள் வீட்டில் உள்ள அனைவரும் மகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது இளவேனில் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு இறுதியாக முகிலை பார்த்துக் கொண்டே எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் என்றால் மகா இளவேனில் இடம் சென்று உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா என்று கேட்கும் பொழுது கயல் அவளது கணவன் அன்பு உடன் திருமணம் நடக்கும் கோவிலுக்கு வந்து விட்டாள் அப்பொழுது மகா தான் கயலை பார்த்துவிட்டு வா கயல் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டால் அதன் பிறகு தான் வீட்டில் உள்ள அனைவரும் கயலை அங்கு பார்த்தார்கள் சிறியவர்கள் யாருக்குமே கயலிடம் முகில் திருமணத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை அவனது திருமணம் எப்படியாவது நடக்க வேண்டும் என்று தான் எண்ணினார்கள் ஆனால் கயலுக்கு எப்படி தெரிந்தது என்று எண்ணினார்கள் இவளை யார் இங்கு வர சொன்னார்கள், நீ எதற்காக இங்கு வந்தாய் முதலில் வெளியே போடி என்றார் அப்பொழுது மகா தான் பெரியம்மா கொஞ்சம் பொறுங்கள் இது நம் வீடு அல்ல கோவில் இங்கு யார் வரவேண்டும் வரக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது நான் தான் கயலை வரச் சொன்னேன் என்றால் மகிழ் கூட தான் கயலிடம் இந்த திருமணத்தைப் பற்றி சொல்லவில்லையே என்று எண்ணினான்அப்போது காவேரி தான் எதற்காக மகா வர சொன்னாய் என்று கேட்டார் என்ன பெரியம்மா இது கேள்வி நான் இனி வளைகாப்பு நம் வீட்டில் நடந்ததால் நான் கயலை அப்போது வர சொல்லவில்லை ஆனால் இப்பொழுது இது கோவிலில் நடக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த திருமணம் அவளுடைய அண்ணனின் திருமணம் அதற்கு அவள் வரமாள நாத்தி விளக்கு அவள் தானே பிடிக்க வேண்டும் என்றால் மகா அமைதியாக போய்விடு முகில் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் ஏன் முகிலுக்கு தங்கை என்று நீயும் நிலாவும் இல்லையா நீங்கள் இருவரில் யார் பிடித்தாலும் எனது மகனின் திருமணம் நல் முறையில் நடைபெறும் என்றார் கயலை பார்த்து அமைதியா போயிடு ஏற்கனவே எங்க குடும்பத்தை கெடுத்தது பத்தாதா இன்னும் கெடுக்க வந்து இருக்கியா என்று கேட்டுக்கொண்டே கயலின் அருகில் வந்தார்நான் சென்று விடுகிறேன் மகா நீங்கள் பாருங்கள் என்றால் இல்ல கயல் நீ கொஞ்சம் நேரம் அமைதியாக இரு நான் பெரியம்மா விடம் பேசுகிறேன் என்று மகா சொல்லிக் கொண்டிருந்தாள் அப்பொழுது கயல் மயக்கம் போட்டு விழுந்தால் வீட்டில் அனைவருமே அதிர்ச்சியாகி என்ன ஆயிற்று இவளுக்கு என்று எண்ணினார்கள் மகா வேகமாக அருகில் உள்ள தண்ணீர் எடுத்து கயலின் முகத்தில் தலித்தாள் என் கயல் ஒரு மாதிரி இருக்கிறாய் என்ன ஆயிற்று என்றால் அப்பொழுது என்ன மாமா ஆயிற்று என்று அன்புவை பார்த்து மகா கேட்டால் உன்னிடம் ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டேன். கிட்டத்தட்ட ஒரு மூன்று நாட்களாகவே இப்படித்தான் இருக்கிறாள் அந்த நேரத்தில் தான் நீ முகில் திருமணத்தை பற்றியும் பேசியதால் அவனது விஷயத்தில் பயந்து கொண்டு இருப்பதால் நான் உன்னிடம் இவளை பற்றி நான் சொல்லவில்லை இன்று காலையில் கூட நான் எழுப்பியவுடன் வாந்தி எடுத்து விட்டாள் நான் கூட வேண்டாம் என்று சொன்னேன் இல்லை நான் போயே ஆவேன் மகாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று வந்திருக்கிறாள் என்றான் அதன் பிறகு மகா சிரித்துக்கொண்டே கயலை பார்த்து எத்தனை நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது என்று கேட்டால் அதன் பிறகு தான் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒருவேளை கயல் மாசமாக இருக்கிறார்களோ என்று எண்ணினார்கள்கயல் சிரித்துக் கொண்டே 18 நாட்கள் தள்ளிப் போய் இருக்கிறது மகா இன்று காலையில் தான் செக் செய்தேன் கிட் வாங்கிக் கொண்டு வந்து இரண்டு கோடு காண்பித்தது இன்னும் நான் அன்பு விடம் கூட சொல்லவில்லை உன்னிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று தான் இந்த திருமணத்திற்கு வந்தேன் என்றவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவ்வளவு சந்தோஷமடைந்தார்கள் காவேரிக்கு உள்ளுக்குள் வேண்டுமென்றால் சந்தோஷமாக இருந்திருக்களாம் ஆனால் வெளியே அவளை முறைத்துக் கொண்டுதான் நின்றார் அவள் மாசமாக இருக்கிறாள் என்றவுடன் அவளை இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எதுவும் சத்த போடாமல் அமைதியாக நின்றுவிட்டார் பிறகு முகில் இளவேனில் திருமணம் நல் முறையில் நடைபெற்றது கயல் திருமணத்தை பார்த்துவிட்டு முகில் திருமணம் முடிந்தவுடன் கயலை மகா அன்புவிடம் சொல்லி அழைத்துக் கொண்டு செல்லுங்கள் மாமா சிறிது நேரம் வீட்டில் சென்று ஓய்வெடுத்து விட்டு பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லுங்கள் நான் நாளை இல்லையென்றால் இரண்டு நாட்களுக்கு பிறகு வந்து பார்க்கிறேன் என்றாள்அப்பொழுது காவேரி தான் நீ எங்கும் செல்ல வேண்டாம் மகா என்றார் பெரியம்மா ப்ளீஸ் என்று உடன் அவர் அமைதியாக இருந்து விட்டார் பிறகு கயல் வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு அவர்கள் வீடு நோக்கி சென்று விட்டாள் பிறகு திருமணமான இரு ஜோடிகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றவுடன் மகிழ் தான் ஆரத்தி கரைத்து எடுத்துக் கொண்டு வந்தால் இருவருக்கும் மகா தான் ஆரத்தி சுற்றினால் அவள் ஆரத்தி சுற்றியவுடன் முகில் தனது பாக்கெட்டில் கைவைத்தான் அவன் காலையில் செல்லும் அவசரத்தில் எந்த பணமும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை அவன் தனது பாக்கெட்டை தடவிக் கொண்டிருக்கும் பொழுது அவனது பாக்கெட்டில் ஒன்றும் இல்லை என்று உணர்ந்த உடன் அண்ணா விடு இதில் என்ன இருக்கிறது என்றால் மகா அப்பொழுது மகா ஆரத்தி சுற்றிய தட்டில் முகில் அருகில் நின்று கொண்டிருந்த இளவேனில் தனது கையில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அந்த தட்டில் போட்டால் வீட்டில் அனைவருக்கும் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது முகில் காதலித்து விட்டான் என்றாலும் சிறிய பெண் வேறு எப்படி நடந்து கொள்வாளோ என்று ஒரு விதத்தில் பயந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அப்படி இருக்கும் வேளையில் முகிலிடம் பணம் இல்லை என்றவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் தனது கையில் இருக்கும் மோதிரத்தை கழட்டி போட்டு விட்டாள் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தார்கள் மகா சிரித்துக்கொண்டே அந்த மோதிரத்தை கையில் எடுத்துக் கொண்டு நிலா என்று வேகமாக அழைத்தாள் என்ன அக்கா என்று கேட்டுக் கொண்டு வந்து நின்றாள் பிறகு மகா வேணி கையில் அந்த மோதிரத்தை கொடுத்தால்வேணி ஏன் அக்கா என்று கேட்டால் அக்கா இல்லை அண்ணி என்று கூப்பிடு என்று விட்டு இதை நீயே நிலா கையில் போட்டு விடு என்றால் வேணி சிரித்துக் கொண்டே நிலா கையில் போட்டு விட்டாள் என்னடி இந்த மோதிரம் எனக்கு லூசாக இருக்கிறது என்றால் அப்பொழுது சொல்லிவிட்டு மகா ஆரத்தி கீழே ஊற்ற சென்று விட்டால் நிலா என்னடி இந்த மோதிரம் சிறிதாக இருக்கிறது என்றவுடன் எழில் தான் சிரித்துக் கொண்டே அப்புறம் ஒட்டின குச்சி மாதிரி இருந்தா பத்தாம் மாதம் இருக்கும் என்றான் எது நான் ஒட்டின குச்சி மாறி இருக்கேனா இவ குண்டா இருந்தா அதுக்கு நான் என்ன பண்ணுவேன் என்றால் எது அவ குண்டா இருக்காளா என்னோட தங்கச்சி எல்லாம் ஒல்லியாக கரெக்டாக தான் இருக்காள் நீ தான் ஒட்டன குச்சி கணக்கா இருக்க அவளை எதும் சொல்லாத என்றான் அப்பொழுது சுந்தரி தான் ரெண்டு பேரும் எந்த நேரம் பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே போங்கடா ரெண்டு பேரும் அந்த பக்கம் என்று தனது மகனை பார்த்து சொல்லிவிட்டு முகில் இளவேனில் இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் மகாவும் ஆரத்தி வெளியே ஊற்றி விட்டு வீட்டிற்குள் வந்தால் பிறகு இளவேனிலை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தார்கள் இளவேனிலும் விளக்கேற்றி விட்டு வந்தால் பிறகு பெரியவர்கள் அனைவருக்கும் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அப்போது மகா தான் பால் பழம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால் பிறகு இருவரும் சாப்பிட்டவுடன் அனைவரும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள் அப்பொழுது நிலாவை மகா அழைத்தால் என்ன மகா கேட்டால் நீ வேணியை உன்னுடைய அறைக்கு அழைத்துச் செல் என்றாள் சரி என்று விட்டு நிலா வேணியை அழைத்துக்கொண்டு நிலா அவளுடைய அறைக்கு சென்றால் அப்போது நிலா வீட்டில் உள்ள பெரியவர்களை பார்த்து நான் ஒன்று சொன்னால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கொஞ்ச நாட்களுக்கு வேணி நிலாவுடைய அறையில் இருக்கட்டும் அவளாக எப்பொழுது அண்ணன் அறைக்கு செல்கிறலோ அதுவரை கொஞ்சம் பொறுங்கள் அவளுக்கான நேரத்தை கொஞ்சம் தாருங்கள் இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பம் இருக்கிறது இல்லை என்பது அடுத்த விஷயம் ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவளுக்கு கொஞ்ச நேரம் கொடுங்கள் என்றால் அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேணி நிலா இருவரும் வந்தார்கள் மகா என்ன என்று கேட்டால் வேணி தான் இல்லை அக்கா நான் உங்களுடன் உட்கார்ந்து இருக்கிறேன் எனக்கு தனியாக இருக்க விருப்பமில்லை என்றால் அப்போது ஏன் அண்ணி நிலா அறையில் என்னை தாங்கிக் கொள்ள சொல்கிறீர்கள் என்று கேட்டால் இல்லடா உனக்கு அண்ணன் அறையில் தங்க என்று விட்டு அமைதியாகிவிட்டாள் இல்லை அண்ணி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் நிலாவுடைய அண்ணன் அறையில் தாங்கிக் கொள்கிறேன் என்றால் வீட்டில் உள்ள அனைவருக்கும் இவளுக்கு நிறைய பக்குவம் இருக்கிறது என்று எண்ணினார்கள் இந்த வயசிலேயே இவளுக்கு நிறைய பக்குவம் இருக்கிறது எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிந்து இருக்கிறது என்று எண்ணினார்கள் சரி என்று விட்டு அனைவரும் பேசிக்கொண்டு இருந்தவுடன் பெரியவர்கள் அனைவரும் மதியம் சமைப்பதற்கு சமையலறைக்குச் சென்றார்கள் அப்போது வேணி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் வேணியும் சமையலறைக்குச் சென்றால் அப்பொழுது காவேரி வேணியை பார்த்து நீ இங்கு எதற்காக வந்தாய் வெளியே போ என்றார் அப்பொழுது வீட்டில் அனைவரும் காவேரியை பார்த்தார்கள் வேணிக்கு ஒரு மாதிரியாக இருந்தது எங்கே இவர் தன்னை அவருடைய மருமகளாக ஏற்றுக் கொள்ளவில்லையோ என்று பயந்தால்வேணி பயந்தது போல் காவேரி அவளை இந்த வீட்டு மருமகளாக ஏற்றுக் கொண்டாரா இல்லையா ..வேணியால் இந்த கூட்டு குடும்பம் பிரிந்து விடுமா….வேணியால் இந்த வீட்டில் ஏதாவது பிரச்சனை வருமா…என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
Interesting
Nalla padiya mrg over Yen puthu ponnu velai seiya kudathunu solrangla pidikama kalayanam pani iruka matanga papom
அது சரி, புள்ளையோட கல்யாணத்துக்கு இந்த அம்மாவே சம்மதிச்சிட்டு இப்ப போன்னா என்ன அர்த்தம்..?