Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமியே 48

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 48

நிலா மகா மகிழ் இருவரிடம் நீங்கள் இருவரும் மனதில் யோசித்ததை செயல்படுத்த நினைத்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது இந்த குடும்பத்திற்காக என்று உங்களது காதலை நீங்கள் இருவரும் தியாகம் செய்த வரைக்கும் போதும் இதற்கு மேலும் எதையாவது விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால் அவ்வளவு தான் என்றால்அப்பொழுது எழில் தான் வேகமாக நிலா உனக்கு இவர்கள்  காதல் தெரியுமா என்று கேட்டான் தெரியும் என்றால் எப்போதிலிருந்து என்றான் நிலா எழிலை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு நாம் அன்று மலைக்கோவில் சென்று வந்த பொழுது சாமியார் சொன்னார் அல்லவா அன்று எனக்கு சிறிது டவுட் இருந்தது அதன் பிறகு இவர்கள் இருவரையும் உற்று கவனிக்க ஆரம்பித்தேன் அப்போதே தெரிந்து கொண்டேன் என்றால் நிலா குட்டி என்று நிலாவை முகிலன் வேகமாக கட்டி அணைத்தான் முகில் உனக்கு என்றான் வாயை மூடுங்கடா நிலா சொன்னது போல் எனக்கும் அதிலிருந்து தான் தெரியும் ஆனால் உங்கள் மூவருக்கும் தெரிந்தும் நீங்கள் மறைத்திருக்கிறீர்கள் அல்லவா மறைக்க வேண்டும் என்று யாரும் இதை செய்யவில்லை என்றான் அப்பொழுது நிலா மகாவையே பார்த்துக் கொண்டிருந்த உடன் எழில் தான் நிலா இப்பொழுது இவர்கள் இருவரும் என்ன இந்த குடும்பத்திற்காக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறாய் எனக்கு புரியவில்லை என்றான்நிலா தனது அக்கா மாமா இருவரையும் முறைத்துக் கொண்டே மாமா இவர்கள் காதலை இந்த குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்தது மட்டுமில்லாமல் இப்பொழுது இந்த குடும்பத்திற்காக குழந்தை கூட பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணத்திற்கு வந்து விட்டார்கள் என்று அவள் வாயைக் கூட மூடவில்லை எழில் வேகமாக மகாவை அறைந்து இருந்தான் அடுத்தபடியாக மகிழையும் அறைய வந்தான் அப்பொழுது மக தான் வேந்தா என்று வேகமாக கத்தினால் அவள் கத்தியுடன் கையை கீழே உதிரி சீ என்று சொல்லிவிட்டு கையை கீழே இறக்கியும் விட்டான் அப்பொழுது வீட்டில் உள்ள சிறியவர்கள் மகா மகிழ் இருவரையும் பார்த்தார்கள் நிலா தான் நீங்கள் நினைத்தது போல் செய்ய வேண்டும் என்று எண்ணினால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது அப்படி ஒன்று நடந்தால் நீங்கள் என் பிணத்தை தான் பார்ப்பீர்கள் என்றால் இருவருமே நிலா என்று வேகமாக கத்தினார்கள் வாயை மூடுங்கள் நீங்கள் யோசிப்பது தவறு இல்லை அதுவே நான் சொன்னால் தவறா என்று விட்டு அமைதியாக இருந்தால் எழில் தான் இரண்டு பேருமே செத்துருங்க என்றான் வேகமாக இந்த குடும்பம் இந்த குடும்பம் என்று யோசிச்சு உங்க வாழ்க்கையை அழிகிறதிற்கு நீங்கள் இருவரும் உயிரோடு இருக்க வேண்டாம் அப்போது வேணி தான் பேச ஆரம்பித்தாள் அண்ணா கொஞ்சம் அனைவரும் அமைதியாக இருங்கள் அண்ணி நான் ஒன்று சொல்கிறேன் என்று என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் எனக்கு உங்களுடைய காதல் இப்பொழுது தான் தெரியும் ஆனால் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று நிலா சொல்லி தெரியும் ஒரு வேலை கயல் அண்ணிக்கு உங்கள் விருப்பம் தெரியாமல் இருந்து மகிழ் அண்ணனுடன் கயல் அண்ணி திருமணம் நடந்திருந்தால் அவள் அவ்வாறு சொன்னவுடன் மகிழ் வேகமாக மகாவின் கையெலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அழுத்தி பிடித்தான் அப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்து இருக்கிரீகளா அதுவே இந்த குடும்பத்திற்கு உங்களது நேசம் தெரியும் போது மொத்த குடும்பத்திற்கும் பெரிய வலியை உண்டாக்கும் ஆனால் நீங்கள் இருவரும் இப்பொழுது செய்ய நினைத்திருக்கும் வேலையை யோசித்து பார்த்தீர்களாஅது உங்கள் இருவரையும் வாழ்நாள் முழுவதும் உயிரோடு கொன்று கொண்டே இருக்கும் இந்த மொத்த குடும்பத்தையும் தான் நீங்கள் இந்த குடும்பத்திற்காக என்று யோசித்து இருக்கலாம் ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் நீங்கள் அப்படி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணி குழந்தையும் பிறந்து இருந்தால் இந்த குடும்பம் ஒற்றுமையாக இருந்திருக்கலாம் ஆனால் அனைவரது மனதிலும் வலி இருக்கத்தான் செய்யும் இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் அந்த குழந்தையை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் உங்களது மனதில் என்ன தோன்றும் என்று யோசித்துப் பாருங்கள் அது உங்களது அன்பாலும் காதலாலும் வந்த குழந்தை அல்ல என்பதை மறந்து விடாதீர்கள் அதுவே நீங்கள் இந்த குழந்தையை எந்த காரணத்திற்காக பெற்றுக் கொண்டீர்கள் என்று அந்த குழந்தைக்கு வளர்ந்து வரும் வேளையில் தெரிய வந்தால் குழந்தையின் நிலை அப்பொழுது உங்களது நிலை இவை அனைத்தையும் யோசித்தீர்களா என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் இனியை அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள் ஏனென்றால் நிலா இவர்கள் இருவரும் இந்த குடும்பத்திற்காக குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்றவுடன் இனி வேகமாக அதிர்ச்சியாகி தனது அடி வயிற்றில் கை வைத்தால் அதை வேணி பார்க்க நேர்ந்தது அதனால் அப்பொழுது இருந்து வேணி இனியின் கையை பிடித்துக் கொண்டுதான் இவளை மகா மகிழ் இருவரிடம் பேசிவிட்டு இனியின் கையை பிடித்து அவளை அழைத்துக் கொண்டும் கீழே சென்றால் வேணி இனி சென்றவுடன் நிலாவும் வேகமாக தனது அக்கா மாமா இருவரையும் முறைத்துவிட்டு கீழே சென்று விட்டால் அதன் பிறகு உதிரனும் எதுவுமே பேசாமல் கீழே இறங்கினான் முகிலும் அவனோடு கீழே இறங்கினான் எழில் இருவரையும் அமைதியாக பார்த்துவிட்டு இறுதியாக மகிழை பார்த்து அப்போ இவ்ளோ நாளா இதுக்கு மட்டும் தான் ஆசைப்பட்டு இருக்க இல்ல என்றான் மகா வேகமாக எழில் என்று கத்தினால் இனிமேல் என் பெயர் சொல்ல கூட உனக்கு தகுதி இல்லை எப்பொழுது நீ இந்த முடிவுக்கு வந்து விட்டாயோ இதன் பிறகு என்னடி இருக்கிறதுஉன் காதலை மறைத்தாய் என்னால் இன்னும் அதில் இருந்து வெளியில் வர முடியவில்லை. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டீர்கள் அப்படித்தானே அப்போ உங்கள் இருவருக்கும் அதுதான் தேவை அல்லவா என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் கீழே சென்றான் எழில் வேறு எதுவும் பேசாமல் அவனது அறைக்குச் சென்று விட்டான் நிலா கூட அவளது அறைக்கு சென்று விட்டாள் முகிலும் உதிரனும் உதிரன் அறைக்கு வந்தார்கள் அங்கு இனி வேணி மடியில் படுத்து அழுது கொண்டு இருந்தால் அக்கா ஒன்றுமில்லை அக்கா அவர்கள் இருவரும் அப்படி ஒரு காரியத்தை செய்ய மாட்டார்கள் நம்புங்கள் என்றால் எப்படி நம்ப சொல்ற  அவங்க ரெண்டு பேரும் இந்த குடும்பத்துக்காக என்று யோசித்து அவங்க காதலையே தியாகம் செய்ய துணிந்தவர்கள் என்றால்அக்கா இந்த மாதிரி நேரத்தில் அழக்கூடாது ப்ளீஸ் அப்படி ஒரு தப்பை இருவருமே செய்ய மாட்டார்கள் அது நிலாவே சொல்லாமல் இருந்திருந்தாலும் நாம் இப்பொழுது கேட்காமல் இருந்திருந்தாலும் அப்படி ஒரு தப்பை அவர்கள் இருவராலும் செய்ய முடியாது அதை நான் சொல்லி உங்கள் யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை என்றால் அப்பொழுது இனி வேகமாக எழுந்து உட்கார்ந்து அப்புறம் எப்படி அவர்கள் இருவரும் யோசித்தார்கள் நீ இப்படி சொல்கிறாயே ஆனால் இந்த குடும்பத்திற்காக அவர்கள் காதலையே தியாகம் செய்தவர்கள்  நீ சொன்னது போல் கயலை திருமணம் செய்து கொள்ள எனது அண்ணனும் முடிவெடுத்து விட்டான் அவளது காதலை விட்டுக் கொடுக்க மகாவும் முடிவெடுத்து விட்டாலே என்றால் அக்கா அவங்க இருவரை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் மகிழ் அண்ணன் கயல் அண்ணி கழுத்தில் தாலி கட்டியிருப்பார் என்று நினைக்கிறீர்களா அவர் உயிரை வேண்டுமானாலும் விட்டு இருப்பாரே தவிர கயல் அண்ணி கழுத்தில் தாலி கட்டி இருக்க மாட்டார் இருவரது காதலும் அவ்வளவு உண்மையானது அவர்கள் இந்த குடும்பத்திற்காக என்று அவர்கள் காதலை வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாம் என்று எண்ணி இருக்கலாம் என்றவுடன் இனி வேகமாக எழுந்து உதிரினின் தாடையில் அறைந்து கொண்டே அழுதாள் உனக்கு அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டே மறைத்து விட்டாய் அல்லவா அவர்கள் இந்த குடும்பத்திற்காக அவர்கள் காதலையே தியாகம் செய்ய துணிந்து விட்டார்கள் இல்லை இதில் கயல் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவனை அடித்துக் கொண்டே அழுதால் உதிரனும் தடுக்கவில்லை ஏன் முகில் கூட அமைதியாக பார்த்துக் கொண்டுதான் நின்றான் தனது அண்ணனுக்கு இது தேவை என்பது போல் அவனுக்கு இவர்கள் இருவது காதல் தெரிந்தும் அமைதியாக இருந்திருக்கிறானே என்ற வருத்தம் வேணி தான் அக்கா ப்ளீஸ் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க குழந்தைக்கு இது நல்லது இல்ல என்னடி குழந்தைக்கு நல்லது இல்லை இந்த குழந்தை என்று விட்டு அமைதியாகி விட்டால் அக்கா நான் சொல்வதைக் கேளுங்கள் இந்த குழந்தையை நீங்கள் நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று தானே மகா அண்ணியின் ஆசை என்றாள் இனி நிமிர்ந்து வேணியை பார்த்தால் எனக்கு இந்த குடும்பத்தில் நடக்கும் மொத்த விஷயங்கள் வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் இந்த குழந்தை மேல் உங்கள் இருவரையும் விட மகா அண்ணி உயிரையே வைத்திருக்கிறார் என்று நிலா எத்தனையோ நாட்களில் சொல்லி இருக்கிறாள் அப்படி இருக்கும்பொழுது என்றால் அது தான டி இங்கு ஆபத்தாக நிற்கிறது என்றாள் வேணி அக்கா  நடக்க வேண்டியது நடக்கத்தான் போகிறது நாம் நினைப்பதால் எதுவும் நடக்காமல் போய்விடுமா அனைத்தும் நல்ல முறையில் நடக்கும் அவர்கள் இருவரும் அப்படி ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள் அதை நான் சொல்லி உங்கள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன் அவர்கள் யோசித்து வேண்டும் ஆனால் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்த மாட்டார்கள் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் உதிரனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு முகில் கையை பிடித்தால் முகிலை அழைத்துக்கொண்டு அவர்களது அறைக்குச் சென்றால் வேணியும் முகிலும் வெளியே சென்றவுடன் இனி உதிரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதால் மாமா எனக்கு பயமா இருக்குடா என்று சொல்லிக்கொண்டே உதிரன் வேறு எதுவும் பேசவில்லை அவளை கட்டி அணைத்துக் கொண்டு அவனும் அழுது கொண்டுதான் இருந்தான் வேணி அவர்கள் அறைக்கு வந்து கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அமைதியாக வந்து உட்கார்ந்தால் முகிலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை வேணியையே பார்த்துக்கொண்டு இருந்தான் அப்போது வேணி தான் முகிலிடம் அவர்கள் இருவரும் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் அப்படி ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் நம்புங்கள் அவர்கள் இருவரும் மீதும் வீட்டில் உள்ள யாருக்குமே நம்பிக்கை இல்லையா என்று கேட்டால் உனக்கு என்ன தெரியும் அவர்கள் காதலையே இந்த குடும்பத்திற்காக தூக்கி எறிந்தவர்கள் என்று என்றான் அதை திரும்ப திரும்ப அவர்களின் முன்பு சொல்லி காண்பிக்காதீர்கள் உங்களுக்காக தான் செய்தார்கள் ஆனால் தவறுதான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் அதில் அவர்கள் இருவருக்கும் எந்த அளவுக்கு வலி இருந்திருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் உங்கள் அனைவரையும் விட அதிக வலியை சுமந்து கொண்டு நிற்பது அவர்கள் இருவராக தான் இருக்கும் என்றால் முகில் வேணியை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு அவளது மடியில் படுத்துக்கொண்டான் வேணி எதுவுமே சொல்லவில்லை அவன் தன் மீது இருக்கும் காதலாலோ பாசத்தாலோ தாபத்தலோ தன்னுடைய மடியில் வந்து படுக்கவில்லை அவனுக்கு இப்பொழுது ஆறுதலாக ஒரு மாடி தேவை அதற்காக மட்டும் தான் வந்து தான் தனது மடியில் படுத்து இருக்கிறான் என்று எண்ணி அவனது தலையை கோதிக் கொண்டே இருந்தால் முகில் அப்படியே தூங்கியும் விட்டான் வேணி முகிலை முழு மனதுடன் கணவனாக ஏற்றுக் கொள்வாளா…அவனுடன் சேர்ந்து வாழ்வாள..மகா மகிழ் இருவரும் மனதில் நினைத்ததை போன்று இந்த குடும்பத்திற்காக என்று குழந்தையை பெற்றுக் கொள்வார்களா இல்லை இவர்கள் அனைவரும் பேசியவுடன் மனம் மாறி விடுவார்களா ..என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️சைலன்ட் லீடர்ஸ்  கதையை படித்துவிட்டு உங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் தரும் விமர்சனங்களே என்னை அடுத்தடுத்த பாகங்களை எழுத தூண்டுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்…மிக்க நன்றி🙏

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமியே 48”

  1. CRVS 2797

    என்னத்தை எழுதறது. குடும்பத்துக்காக, குடும்பத்துக்காகன்னு சொல்லி சொல்லியே, ஊரு உலகத்துல இல்லாத வேலையெல்லாம் செய்துட்டு இருக்காங்க.

    இதுல நீங்க வேற, கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களையும்
    இவங்க ரெண்டு பேரும் சேருவாங்களா..? இணைவாங்களா ?ன்னு
    எக்குத்தப்பா கேள்வியை கேட்தகறேன்னு நீங்களே இல்லாத பூதத்தை கிளப்பி விடறிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *