Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52

மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52

முகில் மகிழ் நிலா வேணி நால்வரும் கல்லூரிக்கு வந்து இருந்தார்கள் அவர்கள் நால்வரும் வண்டியை விட்டு இறங்கி வரும் பொழுது எழில் வருனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான்…

நிலா வேனியிடம் இந்தா பீட்டர் இங்கே நிற்கின்றார் பாரு என்று சொல்லிக் கொண்டே வந்தால் மகிழ் நிலாவைப் பார்த்து சிரித்தான் இப்படித்தான் நீ அவனை கல்லூரியில் அழைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று கேட்டுக் கொண்டே அண்ணா இதுக்கு மேல பேசுவாள் என்று சொல்லிக் கொண்டே வேனியும் வந்தால்

அப்பொழுது நிலா வேண்டுமென்றே அவனை கடந்து செல்லும் வேளையில் குட் மார்னிங் சார் என்றால் வேணியும் குட்மார்னிங் சார் என்றால் இருவருக்கும் குட் மார்னிங் என்றான் அப்பொழுது அருகில் உள்ள வருண் நிலாவைப் பார்த்து குட்மார்னிங் நிலா என்றான்…

சாரி சார் என்று விட்டு குட் மார்னிங் சார் என்று பிறகு நால்வரும் பிரின்ஸ்பலை பார்க்கச் சென்றார்கள் அப்பொழுது வருன் தான் அதிர்ச்சியாகி டேய் மாப்ள என்னடா வேணி கழுத்தில் தாலி இருக்கிறது..

அது மட்டும் இல்லாமல் முகில் உன்னுடைய அண்ணன் இருவரும் கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள் வேணிக்கு அவரது தாய் மாமாவுடன் கல்யாணம் ஆகிவிட்டதா ஏதாவது பிரச்சனையாகி விட்டதா என்று கேட்டான்…

எழில் சிரித்துக் கொண்டே வேனியுடைய புருஷன் முகில்தான் என்னடா மச்சான் சொல்ற என்னடா கல்யாணத்துக்கு கூப்பிட்டு சோறு எல்லாம் போடுவிங்க என்று நினைத்தேன் இப்படி சிம்பிளா முடிச்சிட்டீங்களா என்றான்..

அப்பொழுது எழில் சிரித்துக் கொண்டே வாய மூடு உனக்கு சோறு தானே வேணும் எப்படியும் வீட்ல ரிசப்ஷன் வைக்க ஏற்பாடு செய்வாங்க அப்ப வந்து கொட்டிக்கோ என்றான்…

சரிடா மச்சான் எப்படி கல்யாணம் ஆகியது என்றான் இப்ப நேரம் இல்லை  அப்புறமா சொல்றேன் வா என்றான்..

சரி டா  மச்சான் மகா இன்னைக்கு தானே முதல் நாள் கல்லூரிக்கு வந்திருக்கிறாள் நீ அவளை போய் பார்க்கவில்லையா அவள் பிரின்ஸ்பால் ரூமுக்கு சென்றிருக்கிறார்கள் என்றான் எழில்…

அப்பொழுது மகாவும் பிரின்ஸ்பல் ரூமுக்கு சென்று இருக்கிறார்களா நீ கூட செல்லவில்லையா என்றான்  அப்போது எழில் டேய் அவள் என்ன சின்ன குழந்தையா இப்பதான் முத்து முத்து எஸ் கே ஜி சேர வந்திருக்கிறாளா என்றான்…

நானும் அவளுடன் செல்வதற்கு அவளை அவளுக்கே பார்த்துக் கொள்ளத் தெரியும் அவள் பிரின்ஸ்பலை பார்த்து விட்டு வருவாள் என்றான் அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மகா அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருந்தால்..

வா மகா எப்படி இருக்க என்றான் வருண்  அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தால் ஹாய் வருண் என்றால் ஹாய் மகா பிரின்சிபலை பார்த்து விட்டாச்சா என்ன சொன்னாரு என்று கேட்டான் பார்த்து விட்டேன் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாள்..

முகிலுக்கு  திருமணமாகி விட்டதாம் அதுவும் வேனியுடன் என்றான் ஆமாம் நீ அவர்களை பார்த்தாயா என்றால் ஆமாம் இப்பொழுது தான் பிரின்ஸ்பல் சாரை பார்க்க சென்று இருக்கின்றார்கள் ஏன் நீ அவர்களை கவனிக்கவில்லையா என்றான் இல்லை வருண் நான் அவர்களை பார்க்கவில்லை என்றால்

பிரின்ஸ்பல் ஏதாவது சொல்வாரோ என்று விட்டு தெரியவில்லையே என்றான் மாமா தான் சென்றிருக்கிறார்கள் அல்லவா ஒன்றும்  பிரச்சினை இருக்காது பார்த்துக் கொள்வார் என்றால் ஆமாம் ஆமாம் இவங்க மாமா சென்று விட்டால் எந்த பிரச்சினையும் சரியாகிவிடும் என்றான்…

வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் எழில் பிறகு வாடா கிளாஸ்க்கு டைம் ஆகுது என்று முதல் நாளே நேரம் கழித்து தா செல்வது என்று இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் ஸ்டாப் ரூமுக்கு சென்றான்

நான் மட்டும் எங்கே செல்ல போகிறேன் அங்கே தானே  வரப் போகிறேன் என்று அவனுடன் நடந்தால் எழில் வருண்  மகா மூவரும் ஒரே சப்ஜெக்ட் தான் மூவரும் கெமிஸ்ட்ரி வகுப்பை சேர்ந்தவர்கள் ..

அவர்கள் மூவரும் அவர்களது ஸ்டாப் ரூமுக்கு வந்தார்கள் அப்பொழுது அவர்களது துரை ஹச் டி இருந்தார் மகா  அவரிடம் சென்று தான் வேலைக்கு சேர்ந்ததற்கான ஆர்டரை கொடுத்தால்…

என்ன மகா எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் நான்  நல்லா இருக்கேன் சார் நீங்க எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க என்றாள் மகாவிற்கு ஏற்கனவே அவர்கள் துறை ஹெச் ஓ டி யை தெரியும் அவளும் இந்த கல்லூரியில் தான் படித்தால்…

அவள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் இருந்து அவர்கள் துறை ஹெச் ஓ டி  பரமேஸ்வரன் இங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் …

அதனால் சாதாரணமாக பேசினால் என்ன மஹா திருமணம் எல்லாம் ஆகிவிட்டது போல சொல்லவே இல்லை என்றார் சாரி சார் சடனா மேரேஜ் முடிச்சு போச்சு அதான் யாரிடமும் சொல்லவில்லை என்றால்…

ஒண்ணும் பிரச்சினை இல்லை மகா எழில் எல்லாம் சொன்னான் என்று சொன்னார் மகா எழிலை பார்த்தாள் எழில் அவளை பார்த்துவிட்டு அதன் பிறகு முகத்தை திருப்பிக் கொண்டான்..

அப்பொழுது  கெமிஸ்ட்ரி துறை ஹச் டி இடம் மகா பேசிக்கொண்டிருக்கும் பொழுது மே இன் கமின் சார் என்று கேட்டுக் கொண்டு அவர்களது ஸ்டாப் ரூம் வாயிலில் மகிழ் வேணி  நிலா முகில்  மூவருடனும் நின்று கொண்டிருந்தான்…

எஸ் காமின் என்று விட்டு  வாங்க அக மகிழன் என்ன இந்த பக்கம் இவ்வளவு தூரம் என்று கேட்டார் குட் மார்னிங் சார் உங்க எம்எஸ்சி பைனல் ஸ்டூடண்ட் இளவேனில் இருக்காங்க இல்ல  அவங்களோட பிரதர் நான் அவங்களுக்கு நேற்று திருமணம் ஆகி விட்டது..

அதான் உங்களை பார்த்து சொல்லி விட்டு போலாம் என்று வந்து இருக்கிறேன் என்றான்..ஆமாம் என்று எழுந்து நின்று கேட்டார் கார்முகிலன் என்னுடைய கசின் பிரதர் இவனோட தான் திருமணமாகியது என்றான்….

நீங்கள் முதலில் பிரின்ஸ்பாலை பார்த்துவிட்டு வந்தீர்களா என்று கேட்டார் நாங்கள் முதலில் அவரை பார்த்துவிட்டு தான் வருகிறோம் சார் என்றான்  அவர் என்ன சொன்னார் என்று கேட்டார் …

மகிழும் அங்கு நடந்ததை கூற செய்தான்  மகிழ் பிரின்ஸ்பாலை பார்க்க அவரது அறைக்குச் சென்று மே இன்கமிங் சார் என்று கேட்டுக் கொண்டு பிரின்சிபல் அறைக்குள் சென்றான்..

அப்போது பிரின்ஸ்பல் வாங்க மிஸ்டர் அகமகிழன் என்ன இவ்வளவு தூரம் என்று கேட்டார் அவன் சுத்து வட்டாரத்தில் உள்ள மூன்று நான்கு ஊர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் என்பதால் அவர்கள் ஊருக்கு பக்கத்து ஊரு தான் கல்லூரி இருக்கிறது என்பதாலும்  பிரின்ஸ்பலுக்கு அவனை தெரிந்திருந்தது…

குட் மார்னிங் சார் நான் வேலை விஷயமாக வரவில்லை நான் பர்சனல் விஷயமாக பேச வந்திருக்கிறேன் என்றான் மகிழ் சரி மகிழன் வந்து உட்காருங்கள் என்றார்…

பிறகு என்ன என்று கேட்ட சார் உங்கள் கல்லூரியில் முதுகலை கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இளவேனிலை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டான் யார் என்று அவ்வளவாக தெரியவில்லை சரி என்ன அதற்கு என்று கேட்டார் …

முதலில் மன்னித்து விடுங்கள் அந்தப் பெண்ணை என்னுடைய கசின் பிரதர் கார்முகிலன் சூழ்நிலையின் காரணமாக நேற்று திருமணம் செய்ய நேர்ந்தது அதனால் தான் இன்று கல்லூரியில் வந்து சொல்லிவிட்டு செல்லலாம் என்று வந்திருக்கிறேன்…

உங்களுடன் வந்திருக்கிறார்களா இருவரும் என்று கேட்டார் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு இருவரும் வந்து இருந்தால் இருவரையும் உள்ளே வர சொல்லுங்கள் என்றார் மகிழ் இங்கிருந்து முகில் என்று அழைத்த உடன் முகில் வேணியை அழைத்துக் கொண்டு வந்தான் …

நிலாவும் கூடவே ஒட்டுண்ணி போல் ஒட்டிக் கொண்டே வந்தால் நிலாவை பிரிஸ்பலுக்கு தெரிந்திருந்தது அகல்நிலா நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்றார் அவள் திருதிருவென முழித்தாள் இப்பொழுது என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை…

அவள் அவளுடைய வகுப்பில் முதல் மாணவி அது மட்டுமில்லாமல்  யு ஜி படிக்கும் பொது  காலேஜ் ஃபர்ஸ்ட் மார்க் அவள் அதேபோல் இப்பொழுது வரை முதுகலைலும் அவள் தான் முதலில் வருகிறாள் என்பதாலும் விளையாட்டுகளில் இருப்பதாலும் அவளை பிரின்ஸ்பாலுக்கு தெரிந்திருந்தது..

அவள் திரு திருவென முழித்தவுடன் மகிழ் மனதிற்குள் சிரித்து விட்டு வெளியே இவள் என்னுடைய அத்தைப் பெண் தான் சார் என்றான் என்ன இவ்வளவு நாள் தெரியவில்லையே என்றார்..

சாரி சார் அப்படி எங்களது உறவுகளை கல்லூரியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே ஏதாவது காரணமாக இருந்தால் சொல்லலாம்..

நான் அதிகமாக இவளை கல்லூரியில் விட வரமாட்டேன் என்னுடைய அப்பா இல்லை மாமாக்கள் இல்லையென்றால் இவன் அழைத்துக்கொண்டு வருவான் என்று முகிலை கை காண்பித்தான்…

நான் வந்தால் இங்கு பலருக்கு தெரியும் என்பதால் வருவதில்லை என்றான்  சரிப்பா என்ன விஷயமாக வந்தீர்கள் என்று சொல்லலாம் இப்படி பெரிய மனிதராக இருந்து கொண்டு நீங்களே இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்யலாமா என்று கேட்டார்…

தவறாக எண்ணாதீர்கள் சார் சடனாக இந்த திருமண ஏற்பாடு நடந்து விட்டது சூழ்நிலை காரணமாக தான் நடந்தது வேண்டும் என்று எதையும் நாங்கள் செய்யவில்லை என்றான்…

அப்படி என்னப்பா சூழ்நிலை என்று கேட்டார் சார் நான் குறுக்கே பேசுகிறேன் என்று என்னை தவறாக எண்ணி விடாதீர்கள் இதை மகிழ் அண்ணா சொல்வதை விட நான் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்றால்…

சரிமா இளவேனில் நீயே சொல் என்றார் அவளும் தனக்கு தனது தாய் மாமாவுடன் தனது அப்பா அம்மா இருவரும் தனக்கு விருப்பம் இல்லாமல் திருமண ஏற்பாடு செய்ததையும் அதை தடுத்துதான் இவர் தன்னை திருமணம் செய்து கொண்டார் என்றும் சொன்னால்…

இதை நான் எப்படி நம்புவது ஒருவேளை நீ இந்த தம்பியை விரும்பி கூட திருமணம் செய்து இருக்கலாம் அல்லவா இதை நாங்கள் எப்படி நம்புவது நீ சொல்வது உண்மையாகவே இருந்தாலும் நான் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது அல்லவா …

நாளை உன்னுடைய பெற்றோர்களே வந்து கேட்டால் கூட நான் பதில் சொல்ல வேண்டும் அல்லவா  என்றார் தனது பெற்றவர்கள் வந்து கேட்பார்கள் என்று சொன்னவுடன் வேணி சிரித்தால் அவர்கள் ஏன் சார் வந்து கேட்க போகிறார்கள் என்றால்..

அப்போது மகிழ் தான் வேணி என்றான் அதன் பிறகு வேணி அமைதியாகிவிட்டால் சரி சார் அவர்கள் பெற்றவர்களே இந்த திருமணத்தை முன் நிறுத்தி கூட நடத்தி இருக்கட்டும் ஆனால் நாங்கள் இதை எப்படி ஒத்துக் கொள்வது …

அவர்கள் வந்து சொன்னால் நானும் ஒத்துக் கொள்வேன் என்றார் என்ன என்னுடைய பெற்றோர்கள் வந்து சொல்ல வேண்டுமா என்று வாய்விட்டு சொல்லிவிட்டு மகிழையே பார்த்துக் கொண்டிருந்தால் வேணி…

அவர்கள் எப்படி இங்கு வருவார்கள் என்று தெரியாது ஆகையால்  மூவரும் மகிழையே பார்த்தார்கள் மகிழ் மூவரையும் பார்த்து கண் மூடி கண் திறந்தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்பது போல் அதன் பிறகு மூவரும் அமைதியாக இருந்தார்கள் ….

பிறகு வேணியின் அப்பா அம்மா ராமு வசந்தி இருவரும் உள்ளே வந்தார்கள் அவர்கள் இருவரும் வணக்கம் வைத்தார்கள் அப்போது வசந்தி தான்  ஐயா என்னை மன்னித்து விடுங்கள்…

நான்தான் எனது தம்பிக்கு எனது மகளைக் கட்டி வைக்கலாம் என்று எண்ணினேன்…

அவன் கெட்டவன் என்று தெரிந்தும் எனது அம்மாவிற்காகவும் எனது தம்பிக்காகவும் எனது மகளை எனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினேன்…

ஆனால் அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் என்று எல்லாம் நான் எண்ணவில்லை ஆகையால் அவனை விட்டுவிட்டு நான் தான் எங்களது மாப்பிள்ளை கார்முகிலனை எனது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தோம்…

நாங்களாக தான் திருமணம் செய்து வைத்தோம் அந்த மணமேடையில் எனது பெண்ணை அப்படியே விட விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டோம் …

எங்களை மன்னித்து விடுங்கள் அதனால் தான் எனது பெண் இங்கு வந்து நிற்கும் நிலைமை என்னால் தான் வந்தது என் மகளை கல்லூரியில் ஏற்றுக் கொள்ளுங்கள்..

என்னையும் மன்னித்து விடுங்கள் என்று சுருக்கமாக திருமணம் நடந்த கதையை சொல்லி முடித்தார் வசந்தி பிரின்ஸ்பால் வேணியின் பெற்றவர்கள் இருவரையும் பார்த்தார் பிறகு இளவேனில் முகில் மகிழ் நிலா நாள் வரையும் பார்த்தார்..

6 பேரும் பிரின்ஸ்பல் என்ன சொல்வார் என்று அவரது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் …

பிரின்ஸ்பால் வேணியை கல்லூரியில் சேர்த்துக் கொள்வாரா என்ன என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்

❣️தனிமையின் காதலி❣️

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்சுமி யே 52”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *