மகிழனிடம் காவேரி ரொம்ப நேரமாக கேட்டுக் கொண்டிருந்ததார் மகிழும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் திரும்பி பார்த்தான் உங்களது விருப்பம் என்று மட்டும் சொல்லிவிட்டு மகாவை ஒரு நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் அவனது அறைக்கு சென்று விட்டான் மகிழன் அவ்வாறு சொல்வான் என்று வீட்டில் உள்ள யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவும் உதிரனும் தாத்தா பாட்டியும் ஏன் இவன் இவ்வாறு சொல்கிறான் என்று எண்ணினார்கள் பிறகு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருந்தது அப்பொழுது கல்யாண தேதி சீக்கிரம் குறிக்கலாம் எப்பொழுது திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று வீட்டில் உள்ள அனைத்து இளவட்டங்களுக்கும் திருமண வயது ஆகிறது அதனால் உடனடியாக அடிக்கடி உடனே உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணி இருந்தார்கள் அதனால் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது இனி தனது அண்ணனை நினைத்து கவலை கொண்டு இருந்தாள் அப்பொழுது அவள் மயங்கி விழுந்து விட்டால் அவளது அருகில் தான் நிலா நின்று கொண்டிருந்ததால் அண்ணி என்று சொல்லிக் கொண்டே அவளை தாங்கி பிடித்தால் வீட்டில் உள்ள அனைவரும் இவளுக்கு என்ன ஆயிற்று என்று எண்ணினார்கள் உதிரனும் என்னவோ ஏதோ என்று பயந்தான் மகா தான் வேகமாக ஓடிச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவளது முகத்தில் அடித்தால் அவள் எழுந்தவுடன் மகாவையே பார்த்துக்கொண்டு இருந்தால் வேறு எதுவும் பேசவில்லை பிறகு இவளுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் சாப்பிட்டியா இல்லையா காலைல என்று கயல் கேட்டாள் இனி கயல் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை எதுவும் பேசவில்லை அதன் பிறகு பாட்டி பாண்டியம்மா தான் தனது பேத்தியின் முகத்தை உற்றுப் பார்த்தார் பிறகு நீ தலை குளிச்சியா நீ தலைக்கு குளிச்சு எத்தன மாசம் ஆகுது டி என்று கேட்டார் இனியும் அப்பொழுதுதான் ஒன்றை உணர்ந்தால் தனக்கு இரண்டு மாதங்களாக மாதாந்திர பிரச்சினை வரவில்லை என்பதை பாட்டி அவ்வாறு கேட்டவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்மகா தான் சிரித்துக் கொண்டே அவள் இரண்டு மாதங்களாக தலை குளிக்கவில்லை பாட்டி என்றால் வீட்டில் உள்ள அனைவரும் இவள் அனைவரும் தலைக்கு குளிக்கும் தேதியை கூட சரியாக பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணினார்கள் பாண்டியம்மா சிரித்துக்கொண்டு இந்த வீட்டிற்கு ஒரு பேரனோ பேத்தியோ வந்தால் நன்றாக இருக்கும் என்று விட்டு தனது மகனைப் பார்த்து டாக்டர் வர சொல்லுடா வேலு என்று விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார்முழுவதாக டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு சொன்ன பிறகு எதுவாக இருந்தாலும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் நாமே இப்பொழுது இதுவாக தான் இருக்கும் என்று எண்ணிவிட்டு அப்படி இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் வருத்தமாகி விடும் என்பதால் அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லைஅது மட்டும் காரணம் அல்ல பாண்டியம்மா பாட்டிக்கு வருத்தமாக இருந்தது தனது பேரன் மகிழனுக்கும் மகாவிற்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணி இருந்தவர் இப்பொழுது காவேரி அவருடைய விருப்பத்தை சொன்னதால் தனது மூத்த பேத்தி கயல்விழிக்கு திருமணம் செய்ய வைக்க இருப்பதை எண்ணி வருந்தினார் பிறகு மருத்துவரும் வந்து பார்த்து பரிசோதித்து விட்டு அவள் இப்பொழுது இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் கூறிச் சென்றார் கொஞ்சம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சத்தான உணவுகள் கொடுங்கள் என்றும் சொல்லி சென்றார் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம் ஆனால் சந்தோஷப்பட வேண்டிய உதிரனும் இனியும் அமைதியாக தான் இருந்தார்கள் அவர்கள் இருவருக்கும் உள்ளுக்குள் வேதனையாக இருந்தது வெளியில் வீட்டில் உள்ள அனைவருக்காகவும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டி கொண்டிருந்தார்கள் தனது தங்கை கீழே விழுந்ததோ மயக்கம் போட்டு கீழே விழுந்ததோ மருத்துவர் வந்து பரிசோதித்தோ எதுவுமே மகிழனுக்கு தெரியாது மகிழன் அவனது அறைக்குச் சென்று பால்கனியில் நின்று கொண்டு இருந்தான் அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை அதனால் மகா எப்படி அமைதியாக இருந்தால் என்பதை தெரிந்துக் கொள்ள முடியவில்லை அதை நினைத்துக் கொண்டிருந்தான் அவனது தலையை வெடித்து விடும் போல் இருந்தது இப்பொழுது மகா அருகில் இருந்தால் அவளை கொன்று போடும் அளவிற்கு கூட அவனுக்கு அவள் மேல் கோபம் இருக்கிறது ஆனால் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு காரணம் இந்த குடும்பம் தான் நானும் இந்த குடும்பத்தை தான் எண்ணிக்கொண்டு இருக்கிறேன் அதேபோல் அவளும் இந்த குடும்பத்தை பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் நான் இந்த குடும்பத்துகாக அவளை கை விட வேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லையே ஆனால் இவள் இவர்களுக்காக என்னை தூக்கிப் போடும் அளவிற்கும் என்னுடைய காதலையும் தூக்கிப்போடும் அளவிற்கு இத்தனை நாட்கள் என்னுடைய காதல் இருந்ததா என்று என்னை கூனி குறுகினான் அப்போது அவனது அறைக்கதவை திறக்கும் சத்தம் கேட்டது வீட்டில் உள்ளவர்கள் தான் வருகிறார்கள் என்று எண்ணி திரும்பி பார்த்தான் அங்கு உதிரன் தான் வந்து நின்றான் அவனைப் பார்த்தவுடன் அமைதியாக நின்று கொண்டு இருந்தான் மகிழன் உதிரன் அருகில் வந்து நின்று கொண்டு மச்சான் என்று அவனது தோளில் கை போட்டான் மகிழன் அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் வீட்டில் சொல்லிரலாம் என்றான் உதிரன் வேண்டாம் இதற்கு மேல் இதைப்பற்றி பேச வேண்டியதில்லை எப்பொழுது அவள் என்னை வேண்டாம் என்று தூக்கிப் போட்டு விட்டாலோ அதன் பிறகு இதைப் பற்றி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்றான் இல்லைடா மகா இந்த குடும்பத்திற்காக தான் யோசித்து இருப்பாள் இல்லையென்றால் அம்மாவிற்காக தான் யோசித்து இருப்பாள் என்றான் அவள் யாருக்காக வேண்டுமானாலும் யோசித்து இருக்கட்டும் ஆனால் அவள் என்னைப் பற்றி யோசிக்கவில்லை அவள் என்னை தூக்கி எறியும் அளவிற்கு தான் நானும் என்னுடைய காதலும் இருந்திருக்கிறோம் அப்போது இதுவரை எங்களுக்குள் இருந்த உறவுக்கு பெயர் என்ன நான் அவளிடம் உண்மையாக பழகவில்லையா என்றான் உதிரனுக்கு ஒரு நிமிடம் உயிரே போய்விட்டது மச்சான் என்னடா பேச்சு மகாவைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லையே அவளைப் பற்றி நீயே இப்படி நினைத்தால் என்றான் அப்போது இதுவரை உன் தங்கை செய்த அனைத்தும் சரி என்று சொல்கிறாயா அவள் செய்ததை சரி என்று நான் சொல்லவில்லை ஆனால் என்றான்வேண்டாம் அவளும் சொல்லவில்லை சொல்ல வந்த உன்னையும் சொல்ல வேண்டாம் என்று தடுத்தால் அதை நானும் பார்த்தேன் அவளே சொல்ல விரும்பாத ஒன்றை நீ எதற்காக சொல்ல வேண்டும் என்னுடைய காதல் அழிந்துவிட்டது அவ்வளவுதான் இதற்கு மேல் அதற்கு உயிர் பெற இயலாது யாராலும் அதற்கு உயிர் கொடுக்கவும் முடியாது இனி அதைப் பற்றி பேச வேண்டியது இல்லை வீட்டில் உள்ள அனைவரும் எனக்கும் கயலுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள் இதை அதோடு விட்டுவிடு இதற்கு மேலும் நான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க விரும்பவில்லை என்றான் என்ன சொல்ற அப்போ நீ கயலை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து விட்டாயா என்றான்ஏன் வீட்டில் உள்ள அனைவரும் இப்போது பேசிக்கொண்டு இருந்ததை நீயும் தானே கேட்டாய் அப்படித்தானே சொல்லிக்கொண்டு இருந்தார்கள் என்று கேட்டான் அவனை அறைந்து இருந்தான் உதிரன் என்னடா பேச்சு பேசுற வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்களா இல்லையா என்றெல்லாம் கேட்கவில்லை உன் மனதில் இப்பொழுது வரை இந்த நொடி வரை இருப்பது மகா அப்படி இருக்கும் போது நீ எப்படி கயல் கழுத்தில் தாலி கட்டுவாய் என்றான் ஏன் என்றான் உன் தங்கை மனதில் நான் இருக்கும் பொழுது அவள் வேறொருவருக்காக என்னை விட்டுக் கொடுக்கும் போது என்னால் வீட்டில் உள்ளவர்களுக்காக கயலை திருமணம் செய்து கொள்ள முடியாதா என்றான் விளையாடாதே என்றான் அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் அறை கதவை திறந்து கொண்டு நிலா கையில் ஸ்வீட் ஓடு மகிழ் அறைக்கை வந்தால் மாமா என்று கத்திக் கொண்டே அதன் பிறகு இருவரும் தங்களது கண்ணை துடைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள் என்ன அண்ணா மாமா என்ன சொல்றாங்க என்று கேட்டால் மகிழ் இவள் திருமணத்தைப் பற்றி பேசுகிறாள் என்று எண்ணி விட்டு நான் தான் அங்கு அவர்களது விருப்பம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேனே நிலா குட்டி அப்புறம் என்ன என்றான் நிலா சிரித்துக் கொண்டே அப்போ உனக்கு விஷயமே தெரியாத மாமா அண்ணன் இன்னும் உன்கிட்ட சொல்லலையா என்றால் மகிழ் உதிரனை நிமிர்ந்து பார்த்தான் உதிரனும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் என்ன நிலா குட்டி என்றான் மகிழ் நிலா விடம் அவளது கையில் இருந்த ஸ்வீட்டை மகிழனின் வாயில் திணித்துக் கொண்டே நீ இப்போ தாய் மாமா ஆகிட்ட நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வரபோது இனி அண்ணி மாசமா இருக்கு டாக்டர் இப்பதான் வந்து செக் பண்ணிட்டு போனாங்க என்றால் நிலா அவ்வாறு கூறிய உடன் மகிழுக்கு கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது திரும்பி உதிரனைப் பார்த்தான் உதிரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் இப்போது அவன் சந்தோஷப்பட வேண்டிய வேலையில் கூட தங்களால் தான் வருந்தி நிற்கிறான் அவனுடைய சந்தோஷத்தை கூட முழுமையாக அவனால் அனுபவிக்க முடியவில்லை இதற்கு முக்கிய முழுமுதற் காரணம் மகா என்று எண்ணி அவளை வெறுக்கவே செய்தான் பிறகு எதுவும் பேசாமல் உதிரனை கட்டி அணைத்தான் உதிரனின் கண்ணில் இருந்து நீர்வடைந்தது அப்போது நிலா தான் சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் எதற்கு இரண்டு பேருமே அழுதுட்டு இருக்கீங்க என்றால் இருவருமே அவர்களது கண்ணை துடைத்தார்கள் பிறகு எனக்கு சந்தோஷம் தான் நிலா குட்டி என்றான் வா மாமா வெளியே போலாம் என்றால் மகிழும் சரி என்று கூறி நிலா உடனே வெளியில் வந்தான் தனது தங்கையிடம் இனி தனது அண்ணனை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் அவளது கண்ணிலும் நீர் வடிந்தது தனது அண்ணனிடம் தனது அண்ணன் தாய் மாமாவாக ஆகிவிட்டான் என்று நற்செய்தியை எவ்வளவு சந்தோஷத்துடன் நானும் உதிரனும் சொல்ல வேண்டும் ஆனால் இப்பொழுது எப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது அண்ணனுக்கு சொல்ல வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்று எண்ணி வருந்தினாள்அப்படியே அருகில் நிற்கும் மகாவையும் திரும்பி பார்த்தாள் வீட்டில் உள்ள அனைவரும் இருந்ததால் அவளால் வேறு எதுவும் பேச முடியவில்லை மகிழன் தனது தங்கையே பார்த்துக் கொண்டிருந்தான் இனிமா ஆமா வா என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான் இனியால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தால் அப்பொழுது மகா தான் ஆமாம் மாமா டாக்டர் வந்து செக் பண்ணி பாத்துட்டு போய் கன்ஃபார்ம் பண்ணியாச்சு நீங்க உங்களுடைய அறைக்குச் சென்றவுடன் இனி மயக்கம் போட்டு விட்டாள் என்றால் மகிழன் மகாவை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தான் நாம் இவளிடமா கேட்டோம் நான் என் தங்கையிடம் தானே கேட்டேன் இனியும் இவள் இருக்கும் பக்கம் திரும்ப கூட செய்யக்கூடாது இவளை தன் மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும் தன்னையும் தன் காதலையும் இந்த குடும்பத்திற்காக தூக்கி ஏறிந்தவள் எனக்கு வேண்டாம் என்று எண்ணினான் மகாவுக்கும் உள்ளுக்குள் வருத்தமாக இருந்தது உயிர் பிரியும் வலியை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் ஆனால் இப்படி கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக இருக்கும் இந்த வீட்டில் தன்னுடைய காதலை சொன்னால் எங்கு இந்த குடும்பம் பிரிந்து விடுமோ உடைந்து விடுமோ என்று அஞ்சினால் அதனால் தான் தனது காதலை வீட்டில் உள்ளவர்களிடம் அவள் சொல்லவில்லை…மகிழன் மகா இருவருடைய காதலும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லாமலே தெரிய வருமா இல்லை வீட்டில் உள்ளவர்கள் யாராவது மற்றவர்களிடம் மகா மகிழ் காதலை சொல்வார்களா …இல்லை மகிழனுக்கும் கயலுக்கும் தான் திருமணம் நடக்குமா ..இல்லை இந்த குடும்பத்தை எதிர்த்துக்கொண்டு மகிழன் மகா கழுத்தில் தாலி கட்டுவானா …என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன்
Interesting
மிக்க நன்றி சகி
இது நல்லா இருக்கே… இவங்க ரெண்டு பேரும் காதலிப்பாங்களாம்… ஆனா, அதை வேற யாராவது சொல்லணுமாம். சொல்லாத காதல் சொர்கத்துக்கே போனாலும் சபையேறாது.
தவிர, இந்த திருமணத்துல கயலுக்கு இஷ்டமா, இல்லையான்னு கூட யாரும் கேட்கலையே. முதல்ல அதை தானே கேட்கணும்.
ஆமாம் கேட்கணும் ..
Interesting