Skip to content
Home » மயிலாய் வருடும் மகாலட்மியே 40

மயிலாய் வருடும் மகாலட்மியே 40

எழில் வருணிடம் சொல்லிவிட்டு ஒரு வகுப்பு எடுத்து விட்டு வந்து மகாவிற்கு போன் செய்தான் மகாவுக்கு அது ஃப்ரீ ஹவர் என்பதால் அவளது அறையில் தன்  உட்கார்ந்திருந்தால் எழில் போன் செய்தவுடன் இந்த நேரத்தில் எதற்காக அழகிரான் முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே கூப்பிடுவான் என்று எண்ணி விட்டு போன் அட்டன் செய்து இந்த நேரத்தில் என்ன எழில் அழைத்து இருக்கிறாய் என்று கேட்டால்

மகா என்று மட்டும் தான் அழைத்தான் வேறு எதுவும் சொல்லவில்லை என்னடா என்ன ஆச்சு என்று கேட்டால் அவனது குரலை வைத்தே அவன் சரியில்லை என்று உணர்ந்து நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் இப்பொழுது நீ ஃப்ரீயா என்று கேட்டான் நான் ஃப்ரீ தான் ஆனால் உனக்கு இப்போது கிளாஸ் இல்லையா என்றாள் இல்ல மகா எனக்கு கிளாஸ் இருக்கு என்றான்

சரி நீ இப்போ கிளாஸ் எடு  நான் மாலை வருகிறேன் பேசிக் கொள்ளலாம் என்றால் இது வீட்டில் பேச முடியாது என்றான் சரி டா நான் உன்னுடைய கல்லூரிக்கு வரேன் அங்கு பேசி கொள்ளலாம் இப்போ நீ கிளாஸ் எடு என்றவுடன் சரி என்று விட்டு வகுப்பு எடுக்கச் சென்று விட்டான் இப்படியே  மதிய வேலையும் முடிந்து மாலையும் வந்தது காலேஜும் முடிந்தவுடன் அனைவரும் காலேஜ் விட்டு வெளியில் வந்தார்கள்

நிலா தனது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தால் யார் வருவார்கள் என்று அவளுக்கும் தெரியாது மாலையில் யாருக்கு வேலை இல்லையோ அவர்களே அவளை அழைத்துச் செல்ல வருவார்கள் என்பதற்காக அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் அப்பொழுது எழில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் ஆனால் எதுவும் பேசவில்லை

நிலாவும் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தால் அப்போது அவளுடைய நண்பர்கள் தான் எழில் சார் என்ன சொன்னார்கள் என்று கேட்டார்கள் அவர் அதற்காக ஒரு தீர்வை யோசித்து முடிவு செய்யலாம் என்று சொல்லி இருந்தார் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அங்கு மகா வந்து நின்றால் அப்பொழுது நிலாவுடைய நண்பர்கள் என்ன நிலா இன்று உன்னை அழைத்துச் செல்ல உன்னுடைய அக்கா தான் வந்திருக்கிறார்களா என்று கேட்டார்கள்

இருக்காதே அவள் என்னை அழைத்துச் செல்ல வந்திருக்க மாட்டாளே என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு என்ன மகா இந்த பக்கம் என்று கேட்டாள் மகா சிரித்துக்கொண்டே நான் என்னுடைய நண்பன் எழில் சாரை பார்க்க வந்தேன் கல்லூரி விஷயமாக கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது அதற்காக வந்திருக்கிறேன் நீ அண்ணன் வருவார் அவருடன் சென்று விடு என்றால்

நிலா வேறு எதுவும் பேசாமல் சரி என்று விட்டு அமைதியாக நின்றுவிட்டால் தனது நண்பர்களுடன் போய் அப்போது நிலாவின் நண்பர்களும் என்ன என்று கேட்டவுடன் என்னை பார்க்க வரவில்லை என அழைத்துக் கொண்டு செல்ல வரவில்லை அக்கா எழில் சாரை ஏதோ முக்கியமான விஷயமாக பார்க்க வந்திருக்கிறார்களாம் என்றால் அப்போது முகில்தான் இன்று நிலாவை அழைத்துச் செல்ல வந்தான்

  முகில் நிலாவை அழைக்க வரும்பொழுது நிலாவின் தோழி இளவேனிலை  பார்த்தான் அவள் முகம் வாடி இருப்பதை பார்த்துவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு அமைதியாகச் சென்றான் செல்லும் வழியில் நிலாவிடம் கேட்டான் ஏன் நிலா உன்னுடைய தோழி இளவேனில் முகம் ஒரு மாதிரி வட்டமாக இருக்கிறது என்று கேட்டான் நிலா அதற்கு பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்டாள்

ஏன் அண்ணா என்னுடைய நண்பர்கள் அனைவரும் அங்கு தான் நின்று கொண்டிருந்தார்கள் அனைவரையும் விட்டுவிட்டு குறிப்பாக அவளை மட்டும் கேட்கிறாய் என்று கேட்டால் எனக்கு அந்த பெண்ணை மட்டும் தெரியும் உன்னுடைய மத்த நண்பர்களை தெரியாது இல்ல என்றான் எப்படி உனக்கு இளவேனிலை மட்டும் தெரியும் என்றால்

ஏன் உன்னிடம் உன்னுடைய தோழி இதுவரை எதுவும் சொல்லியது இல்லையா என்றான் எதுவும் சொல்லவில்லை ஏன் அண்ணா என்றால் இளவேனில் நம்முடைய தோப்பில் கணக்கு வழக்கு பார்க்கும் ராமு மாமா இருக்கார் இல்லை அவர்களுடைய பெண்தான் என்றான்  சரி அப்படி என்றால் உனக்கு  இளவேனிலை எப்படி தெரியும் என்று கேட்டால்

அவர்களுக்கும் இரண்டு ஏக்கர் காடு இருக்கிறது அல்லவா அதற்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்கு என்னுடைய கடைக்கு இந்த பெண் தான் வரும் அதனால் எனக்கு இந்த பெண்ணை தெரியும் என்றான் அதற்கு மேல் நிலாவும் எதுவும் கேட்கவில்லை அவள் தன்னிடம் சொல்லிய அனைத்தையும் முகிலிடம்  சொல்லி முடித்தால் அவள் சொல்லி முடிப்பதற்கும் அவர்கள் வீடு வருவதற்கும் சரியாக இருந்தது

இப்பொழுது உன்னுடைய தோழி என்ன முடிவு எடுத்திருக்கிறார் அவர்கள் மாமாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறார்களா என்று கேட்டான் நிலா முகிலை  பார்த்து சிரித்துக் கொண்டே அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் முகில் செல்லும் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்

மகா எழிலிடம் என்னடா எழில் என்ன முக்கியமான விஷயம் என்று கேட்டால் இங்கு வேண்டாம் நாம் அருகில் உள்ள பார்க்குக்கு செல்லலாம் என்றான் சரி என்று விட்டு இருவரும் அவர்களது வண்டியில் அருகில் உள்ள பார்க்குக்குச் சென்றார்கள் அங்கு சென்றவுடன் எழில்  மகாவிடம் நிலாவுடைய தோழி இளவேனில் உனக்கு தெரியும் தானே என்று கேட்டான் அதற்கு என்ன தெரியும் டா என்றால்

நம் தோட்டத்தில் கணக்கு வழக்கு பார்க்கும் ராமு மாமாவின் மகள் தானே தெரியும் நான் பார்த்திருக்கிறேன் என்றால் சரி அதற்கு என்ன இப்பொழுது அந்த பெண்ணுக்கு என்ன என்று கேட்டால் அந்த பெண்ணிற்கு அவர்கள் வீட்டில் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்றான் சரிடா அது அவர்கள் விருப்பம் அவளது படிப்பு முடிவு போகிறது அல்லவா அதனால் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்து இருப்பார்கள்

இதில் என்ன இருக்கு என்றால் இல்லை மகா இந்த திருமணத்தில் அந்த பெண்ணிற்கு விருப்பம் இல்லை என்றான் சரி அந்த பெண் உன்னிடம் வந்து சொன்னாளா இல்லை நிலா சொன்னால் அந்த பெண்ணும்  வந்து தான் சொன்னால் நிலா தான் அழைத்துக் கொண்டு வந்தால் சரி இப்பொழுது அதற்கு என்னவென்றால் அந்த பெண்ணை நம் முகில் விரும்புகிறான் என்றான்

அந்த பொண்ணுக்கு விருப்பமில்லை என்பது சரி டா அதற்கு ஏன் நீ ஒரு மாதிரியாக இருக்கிறாய் உன் முகத்தில் ஒரு பதட்டம் தெரிகிறதே என்றால் அந்த பெண்ணை நம் முகில் விரும்புகிறான் என்றால் மகா என்ன என்று  அதிர்ச்சியாகி கேட்டால் ஆமாம் அந்தப் பெண்ணை நம் முகில் கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக விரும்புகிறான் முகில் அண்ணன் உன்னிடம் சொன்னதா என்றால்

இல்லை இதுவரை அவன் என்னிடம் சொன்னதில்லை ஆனால் எனக்கு தெரியும் என்றான் எப்படி என்று கேட்டால் நிலாவை விடும் பொழுது அழைத்து செல்லும் பொழுது பழக்கமா அந்த பெண்ணும் முகிலை விரும்புகிறதா என்றால் இல்லை அந்த பெண் முகிலை விரும்பவில்லை ஆனால் முகில் அந்த பெண்ணை விரும்புகிறான் நிலாவே விட்டுச் செல்லும் பொழுதோ இல்லை அழைத்துச் செல்லும் பொழுதோ அந்த பெண்ணை முகிலுக்கு பழக்கம் இல்லை

அந்த ராமு சித்தப்பாவிற்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது அல்லவா அதில் உபயோகிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து காட்டிற்கு பொருட்கள் வாங்க அந்த பெண் முகில் கடைக்கு தான் சென்றிருக்கிறது அப்பொது தான் அந்த பெண்ணை தெரியும் முகில் அந்த பெண்ணிடம் அவனுடைய விருப்பத்தையும் சொல்லி இருக்கிறான் ஆனால் அந்தப் பெண் எனக்கு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறது

நீங்கள் பெரிய இடம் நாங்கள் உங்களிடம் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லி இருக்கிறது மற்றபடி எனக்கு விருப்பமில்லை என்று இது போல் கூட சொல்லவில்லை அதன் பிறகு அந்தப் பெண் படிக்கட்டும் என்று முகிலும் விட்டு விட்டான் ஆனால் இப்பொழுது அந்த பெண்ணுக்கு திருமணம் என்று முகிலுக்கு தெரியாது எப்படியும் இப்பொழுது நிலாவிடம் கேட்டிருப்பான் நிலா சொல்லியிருப்பாள் என்றான்

என்னடா சொல்கிறாய் நீ சொல்வதெல்லாம் உண்மையா என்றால் நான் ஏன் பொய் சொல்ல போகிறேன் மகா நான் சொல்வதெல்லாம் உண்மைதான் என்றவுடன் இப்பொழுது எழில் பதட்டம் மகாவிற்கும் கூட தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும் சரி நாம் வீட்டில் போய் எதுவாக இருந்தாலும் முகிலிடம் பேசலாம் என்று எழில் சொன்னான் மகாவிற்கும் அதுவே சரி என்று பட்டதால் சரி நாம் வீட்டுக்கு சென்று அண்ணனிடம் பேசி எதுவாக இருந்தாலும் முடிவு எடுக்கலாம் என்று விட்டு இருவரும் அவர்களது வண்டியில் வீட்டிற்கு சென்றார்கள்

மகா எழிலும் வீட்டிற்கு சென்றவுடன் முகில் வரவேற்பு அறையில் தான் அமைதியாக அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான் மகா வீட்டுக்குள் வந்தவுடன் முகிலை பார்த்தால் அவன் ஏதோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் அண்ணா என்றால் என்ன மகா என்றான் ஒரு நிமிடம் வா என்று அவனிடம் சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்றால்

அவனும் அவனது அறைக்குள் வந்தவுடன் அண்ணா உனக்கு இளவேனிலுக்கு திருமணம் என்று உனக்கு தெரியுமா என்று கேட்டால் தெரியும்  மகா நான் நிலாவை அழைத்துக் கொண்டு வரும்போது நிலா சொன்னால் என்றான் சரி இப்பொழுது நீ என்ன முடிவு எடுத்துக் இருகிறாய் என்று கேட்டால் முகிலுக்கு ஒன்றும் புரியவில்லை எழில் மகா இருவரையும் பார்த்துவிட்டு எழிலை கட்டி அணைத்தான்

இருவருக்கும் எப்படியோ உண்மை தெரிந்து இருக்கிறது என்று மட்டும் அவன் தெரிந்து கொண்டான் எழில் முகிலை தட்டிக் கொடுத்து மாமா என்ன பண்ற  எதுக்காக நீ இப்பொழுது இப்படி அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன் மகா தான் முகில் தோளில் தட்டி அண்ணா எதுவாக இருந்தாலும் சரியாகிவிடும் பார்த்துக் கொள்ளலாம் நீ எதற்காக இப்பொழுது இப்படி அழுது கொண்டிருக்கிறாய்

இன்னும் அந்த பெண்ணுக்கு தான் திருமணமாகவில்லையே இப்பொழுது தானே திருமணத்தை பற்றி பேசுகிறார்கள் நாம் முதலில் நம் வீட்டில் உள்ளவர்களிடம் பேசலாம் பிறகு அந்த பெண் வீட்டிலும் சென்று பேசலாம் என்றால் அது மட்டும் இல்லாமல் நிலா தான் சொல்லி இருக்கிறாளே அந்த பெண்ணுடைய மாமா சரி இல்லை என்று அப்படி இருக்கும் பொழுது என்ன நாம் அவர்கள் வீட்டில் சென்று பேசலாம் என்றால்

அப்பொழுது மகிழ் வேகமாக முகில் அறைக்கு வந்தான் மகா தான் பார்க்கில் இருந்து கிளம்பும்போதே மகிழுக்கு அழைத்து உடனடியாக வீட்டிற்கு வா என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டால் முக்கியமான விஷயமாக இல்லாமல் மகா இப்படி அழைக்க மாட்டாள் அதுவும் உடனடியாக வர சொல்லி சொல்ல மாட்டாள் என்பதால் மகிழும் வேகமாக வீட்டிற்கு வந்தான் அப்பொழுது சுந்தரி தான் வரவேற்பறையில் இருந்தார்

மகா எங்கே என்று கேட்டவுடன் முகிலனை அழைத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றுகிறார்கள் என்னடா என்று கேட்டார் ஒன்றுமில்லை அம்மா சும்மாதான் நான் வந்து சொல்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றான் எதுவாக இருந்தாலும் தங்கள் வீட்டு பிள்ளைகள் தங்களிடம் சொல்வார்கள் என்ற நம்பிக்கையில் சரி என்று விட்டு அமைதியாகிவிட்டார் சுந்தரி

மகிழ் முகிலன் அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றவுடன் முகில் அழுது கொண்டிருப்பதை பார்த்துவிட்டு டேய் முகில் ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என்ன ஆச்சு என்று கேட்டான் எழில் மகா இருவரையும் பார்த்து என்ன ஆச்சு மகா எதற்காக இவன் அழுது கொண்டிருக்கிறான் என்று கேட்டான் எழில் மகாவை பார்த்தான் முகில் அமைதியாக தான் இருந்தான் பிறகு மகாவிடமும் கேட்டான்

உன்னிடம் தான் கேட்கிறேன் எதற்காக முகில் இப்பொழுது அழுது கொண்டிருக்கிறான் என்ன ஆயிற்று? என்ன விஷயம் எதற்காக சீக்கிரம் வரச் சொன்னாய் அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று கேட்டான் மகா முகிலை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு மாமா முகிலன் அண்ணா ஒரு பெண்ணை விரும்புகிறது அந்த பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொன்னால்

மகிழ் வேகமாக என்ன முகில் ஒரு பெண்ணை விரும்புகிறானா என்று அதிர்ச்சியாக கேட்டான்…

மகா முகில் விரும்பும் பெண்ணை முகிலிடம் சேர்த்து வைப்பாளா…

அதற்கு மகிழ் உதவி புரிவானா இல்லை மகிழ் அந்த பெண்ணை திருமணம்  செய்து வைக்க ஒத்துக்கொள்ள மாட்டானா …

முகிலின் காதல் தெரிந்தவுடன் மகிழ் என்ன சொல்வான்…

என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…

அன்புடன்..

❣️தனிமையின் காதலி ❣️

3 thoughts on “மயிலாய் வருடும் மகாலட்மியே 40”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *