நந்தா சிரித்த முகத்துடன் அக்கா நீ என்ன லூசா? நான் இதைப்பற்றி எல்லாம் இந்த நிமிடம் வரை யோசிக்கவே இல்லை .
சரியா ?என்னை பொறுத்தளவு நான் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் உன்னையும் உதயாவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
அது எனக்கு வர போகிற மனைவியாக இருந்தாலும் சரி, நீ அதை எதையாவது யோசிக்காதே.
உதயாவிற்கு வெளி உலகம் தெரிய வேண்டும் என்று மட்டும் தான் அமைதி காத்தேனே தவிர.
நீ யோசிப்பது போல் நான் இதுவரை யோசித்ததில்லை. அப்படி ஒரு பெண்ணை நீ எனக்கு பார்க்க மாட்டாய் என்றுநம்பிக்கை இருக்கிறது.
அப்படி நீ நினைப்பது போல் உதயா நினைப்பது போல் நானே ஒரு பெண்ணை தேடினாலும் உன்னையும் உதயாவையும் வேண்டாம் என்று ஒதுக்கும் ஒரு பெண்ணை என் வாழ்க்கை துணையாக இன்று அல்ல என்றும் நான் யோசிக்க மாட்டேன் .
என்று விட்டு இதையே யோசித்துக் கொண்டு உன் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதே என்று தன் அக்காவிடமும் உதயாவின் தலையில் தட்டி டேய் உன் அம்மா மாதிரி லூசுத்தனமாக யோசித்து உன் படிப்பையும் உன்னுடைய மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.
இது நீ சந்தோஷமாக ஜாலியாக என்ஜாய் பண்ண வேண்டிய நேரம் .உன் வாழ்க்கையே சந்தோஷமாக ஜாலியாக என்ஜாய் பண்ணு.
அக்கா மாதிரியே எதையாவது தேவையில்லாத விஷயங்களை மண்டைக்குள் போட்டு ஒட்டிக்கொண்டு இருக்காதே .
சரியா ?என்று விட்டு நேரமாகிறது போய் தூங்குங்கள் என்று விட்டு தன்னுடைய அறைக்கு சென்று தன் நெஞ்சில் கை வைத்து தன் நெஞ்சை தடவிக் கொண்டான் .
இதுவரை அக்கா சொல்லும் வரை இப்படி ஒரு விஷயத்தை நாம் யோசிக்கவில்லையே என்று யோசித்து விட்டு தன் தாய் தந்தையின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவர்களது அருகில் போய் நின்றான்.
அம்மா அப்பா எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் உதயாவையும் ,அக்காவையும் நான் விட்டுக் கொடுக்கக் கூடாது.
அது யாருக்காகவாக இருந்தாலும் சரி .உதயாவும் ,அக்காவும் இல்லாத வாழ்க்கை எனக்கு எப்போதும் இல்லை எனக்கென்று வரும் வாழ்க்கை துணை இருவரையும் ஏற்று கொள்பவளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வேண்டினான்
பிறகு அவர்களை சொல்லிவிட்டு தான் விதியை யோசித்தான் அக்கா சொல்வது போல் என்று எண்ணி விட்டு தன் தலையை உலுக்கி விட்டு படுக்கையில் சரிந்தான் .
நாட்கள் உருண்டோடியது .உதயாவும் கல்லூரி செல்ல ஆரம்பித்து இருந்தான் .
இங்கு கண்ணன் ,மலர் ,தியா வாழ்க்கையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் கிடையாது. சரியவும் கிடையாது .
கண்ணன் எப்பொழுதும் போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மலர் எப்போதுமே வீட்டில் இருக்கும் வேலைகளை பார்ப்பதோடு சரி .
தியா பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தால் 11ஆம் வகுப்பில் தனக்கு முழுவதாக பயாலஜி குரூப் தான் வேண்டும் என்று கேட்டு எடுத்திருந்தாள்.
நல்ல பதிப்பை எடுத்திருக்கிறாயே ?என்று கண்ணன் கேட்டதற்கு அப்பா எனக்கு இதுதான் படிக்க விருப்பம் என்ற உடன் சரிடா கண்ணம்மா உனக்கு எதை படிக்க விருப்பமோ அதையே படி ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அமைதியாகிவிட்டார்.
முதல் இரண்டு நாட்கள் மலர் தான் முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தார்.
தன் கணவனிடம் ,மகளிடமும் ஏன் மேடம் வேற எந்த படிப்பும் படிக்க முடியாதோ என்று அப்போது கண்ணன் தான் என் மகளுக்கு என்ன விருப்பமோ அதைத்தான் படிக்க வேண்டும் .
நாமாக ஒன்றை திணிக்க கூடாது என்றார். மாமா அதற்காக சொல்லவில்லை நாமாக எதையும் திணிக்க வேண்டாம் .
ஆனால், அவளுக்கு இந்த இந்த படிப்பு படித்தால் எது எது கிடைக்கும் என்பதை எடுத்துக் கூறுவது நம் கடமை தானே.
அதை செய்யலாமே என்ற உடன் அது எதையுமே யோசிக்காமல் என் மகள் இந்த முடிவு எடுத்திருக்க மாட்டாள்.
மாமா அவள் குழந்தை அவளுக்கு அனைத்தும் தெரிந்து விடாதே நாம் என்ன படித்தால் என்னென்ன நன்மைகள் என்று எடுத்துரைத்தால் தானே ..
அவளால் தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்க முடியும் என்றார் .
அவர் இருக்கட்டும் மலர் அவளாக யோசிக்கட்டும். அவள் சிறிய பெண் இல்லை நீ சொன்னது போல் வளர்ந்து வரும் பெண் .
அவளாக யோசிக்க வேண்டிய கால கட்டாயம். யோசிக்கட்டும் என்று விட்டு நகர்ந்தார் .
அப்போது கண்ணன் யோசிக்கவில்லை தன்மகள் தானாக யோசித்து ஒரு முடிவு எடுக்கும் நேரம் தான் தன் மகளை இப்பொழுது போல் அப்பொழுதும் சப்போர்ட் செய்வோமா? என்று அப்படி எண்ணி இருந்தால் இப்பொழுது இந்த வார்த்தையை விட்டிருக்க மாட்டாரோ என்னவோ ?
பிறகு தியாவும் பதினோராம் வகுப்பில் அடி எடுத்து வைத்து நல்ல முறையில் படித்துக் கொண்டிருந்தாள் .
உதயாவும் எப்பொழுது போல் கல்லூரி சென்று கொண்டிருந்தான். அனைவரது வாழ்க்கையும் தெளிந்த நீரோடியாக அவர்களது பாதையில் நன்றாக சென்று கொண்டிருந்தது.
தேவி அதன் பிறகு பெரிதாக தியாவை பற்றி யோசிக்கவில்லை .அன்றே வந்து நந்தாவிடம் அனைத்தையும் சொல்லலாம் என்று யோசித்தார்.
ஆனால் சொல்லி தன் தம்பியின் மனதில் வலியை உண்டாக்க வேண்டாம் என்று எண்ணி அமைதியாகிவிட்டார்.
ஒரு வாரம் கண்ணன், மலர் தேவி பற்றி யோசித்தார்கள்.
தேவி அதன் பிறகு அவர்களது வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் இல்லை அதை பற்றி யோசிக்க கூடாது என்று தன் மனதை தேற்றிக் கொண்டார்.
இப்படியே வருடங்கள் உருண்டோடி தியா 12 ஆம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிக் கொண்டிருந்தாள் .
உதயாவும் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.
இந்த இரண்டு வருடங்களில் தேவி அடிக்கடி கேட்டுவிட்டார்.
அவர் இப்பொழுதெல்லாம் கேட்கும் பொழுது தன் அக்கா அன்று கேட்டது போல் தனக்காக என்று வரும் துணையால் தன் அக்காவின் உறவும் தன் மச்சானின் உறவும் தன்னை விட்டு சென்று விடுமோ என்று அச்சம் கொண்டு அமைதி காத்தான் .
அக்கா கொஞ்சம் பொறு என்றான் .இன்னும் எத்தனை வருடம் தான் பொருப்பது விளையாடி கொண்டிருக்கிறாய் என்று கத்தினார் .
எதற்காக இப்பொழுது கத்துகிறாய் என்றான் .இதற்கு மேல் எனக்கு பொறுமை இல்லை நந்தா. அவ்வளவுதான் சொல்வேன்.
ஒன்று நீ யாரையாவது விரும்புவதாக இருந்தால் சொல்லிவிடு என்றார். அக்கா என்று அதிர்ச்சியாக பார்த்தான். நந்தாவின் மனதில் அப்படி ஏதேனும் பெண் இருக்குமா?
அந்த பெண்ணை பற்றி சொல்வதற்கு தன் அக்காவிடம் தயக்கம் காட்டுகிறானா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
அன்புடன்
தனிமையின் காதலி