Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 12

மீண்டும் மலரும் உறவுகள் 12

“தேவி என்னடா  ஏதாவது பெண் உன் மனதில் இருந்தால் என்று கேட்டவுடன் அக்கா இதுவரை என் மனதில் எந்த பெண்ணும் இல்லை. போதுமா?”

நீயாக எதையாவது  வைத்து யோசித்துக் கொள்ளாதே . அவன் விளையாட்டுக்கு சொன்னதுக்கு நீ எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்றான் .

“உதயாவும் அம்மா நான் சும்மாதான் சொன்னேன் மாமா ஏதாவது ஒரு பெண்ணை விரும்பினால் நம்மிடம் சொல்லாமல் இருக்குமா ?”

அவருக்கு என்று இருப்பது நாம் தான். நமக்கு என்று இருப்பதும் அவர் தானே என்றவுடன் அதனால் தான் நானும் கேட்டு கொண்டிருக்கிறேன்.

உன் மாமா எதையாவது யோசித்துக் கொண்டு நமக்காக என்று அவன் வாழ்க்கையை இழந்து விடப் போகிறான் என்று எண்ணம்.

அச்சம் பயம் என்றார் .அக்கா நீ பயப்படும் அளவிற்கு இங்கு எதுவும் நடந்து விடவில்லை .சரியா?

பயப்படும் அளவிற்கு நடக்கவில்லை என்று நீயாக சொல்லாதே .நீ திருமணம் செய்து கொண்டால் நான் ஏன் பயம் கொள்ள போகிறேன் என்றார்.

சரி திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் அதற்கு முன்பு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் என்றான் .

என்னடா என்று கேட்டார். அதற்கு முன்பு நம் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் ஒன்று விடாமல் உதயாவிற்கு தெரிய வேண்டும் .

அதன் பிறகு நீ எனக்கு பெண்ணை  தேடு என்றான். என்ன என்றார் அதிர்ச்சியாக.

அம்மா எதற்காக இவ்வளவு அதிர்ச்சி என்றான் உதயா. ஒன்றுமில்லை என்று தன் மகனை பார்த்தார்.

அக்கா நான் சொன்னதை நடத்தி விட்டு தான் அடுத்த விஷயம் யோசிப்பேன். என் வாழ்க்கை என்று யோசிப்பேன் போதுமா ?

இவனிடம் நம் வாழ்க்கையில் நடந்த ஒன்று விடாமல் சொன்ன பிறகுதான் எனக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்.

” அதுவரை இதைப் பற்றி பேசாதே இப்பொழுது வேண்டுமானாலும் உதயாவிடம் அனைத்தையும் சொல்ல நான் தயார் .

உன் பக்கம் இருப்பதையும் நீ சொல்ல தயார் என்றால் நாம் இப்பொழுது பெண் பார்ப்பது பற்றி யோசிக்கலாம் என்று விட்டு கல்லூரி கிளம்பி விட்டான் நந்தா  .

  தன் தம்பி போகும் திசையை பார்த்து நின்றார் தேவி .அம்மா என்று உதயா தன் தாயின் தோளில் கை வைத்தான் .

ஒன்றும் இல்லைடா என்றார் .அம்மா உனக்கு மாமாவுக்கு என்று ஒரு துணை தேவை என்று யோசித்தால் அதில் வரும் நன்மை, தீமை அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் .

சரியா ? என்றான் .டேய் நான் சொல்வது உனக்கு புரியவில்லையா  ? அம்மா புரியாமல் இல்லை .

“ஆனால் நீ என்ன பேசுகிறாய் என்றார் .நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லையே மாமாவிற்கு என்று நாம் பெண் பார்க்கும் போது சப்போஸ் மாமாவிற்கு என்று வரும் பெண்ணுக்கு நாம் இருவரும் இங்கு இருப்பது பிடிக்கவில்லை என்றால் அமைதியாக விலகி விட வேண்டும் சரியா?”

மாமாவின் வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்மால் எந்த ஒரு பிரச்சினையும் வரக்கூடாது.

“எனக்கு உண்மையாகவே நம் வாழ்க்கையில் ஏதோ ஒன்று மர்மம் இருக்கிறது என்று தெரியும் .”
ஆனால் ,என்னவென்று தெரியாது .

மாமா எனக்கு நான் புரிந்து கொள்ள வேண்டிய வயது வரவேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

” அந்த வயதை இப்பொழுது வந்துவிட்டது என்றும் எண்ணுகிறார். அவர் என்றாவது ஒருநாள் என்னிடம் அனைத்து உண்மையும் கூற வேண்டி வரும்.”

அதன் பிறகு நான் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கு தெரியாது .ஆனால் ,எந்த முடிவாக இருந்தாலும் அதை நீயும் ஏற்றுக்கொள்ள வேண்டும் மாமாவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான் .

என்ன டா நீயும் இவ்வாறு பேசுகிறாய். வேறு எப்படி பேச வேண்டும். என்னாலும் இதற்கு மேல் எதுவும் பேச முடியாது .

இதற்கான கால நேரம் எது என்று நீ தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று விட்டு தன் கல்லூரி கிளம்பி விட்டான்

தேவியோ தன் தம்பியும் ,தனது மகனும் பேசி சென்றதையே மனதில் போட்டு உழன்று  கொண்டு இருந்தார்.

அப்பொழுது அவரது போன் அடித்தவுடன் சரி நான் இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என்று விட்டு போனை வைத்துவிட்டு நேரத்தை பார்த்துவிட்டு தனது வேலைக்கு நேரமாவது உணர்ந்து தனது தோள் பையை மாட்டிக் கொண்டு வீட்டில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டின் கதையை அடைத்து விட்டு தனது ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு கிளம்பினார் தேவி .

அப்பொழுது ஒரு இடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து விட்டு என்ன ஆச்சு ஏன் கூட்டமாக இருக்கிறது என்று அங்கு இருக்கும் இளநீர் கடையில் கேட்டார்.

தெரியவில்லைம்மா ?காலையிலேயே ஏதோ ஒரு நடுத்தர வயதை உடையவர் அவருடைய பைக்கில் வந்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது ஆப்போசிடில் வந்த கார் காரன் மோதி விட்டுச் சென்று விட்டான். என்னாச்சு ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்களா என்று தேவி கேட்டதற்கு இல்லை .

சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் ,போனில் போட்டோ எடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் இருக்கு போன் செய்திருக்கிறோம். ஆனால் எப்போது ஆம்புலன்ஸ் வரும் என்று தெரியவில்லை என்றவுடன் தேவி வேகமாக இளநீர் கடையில் அருகில் உள்ள வாட்டர் பாட்டில் எடுத்துக்கொண்டு வேகமாக அந்த கூட்டத்தை தள்ளிக்கொண்டு சென்றார்.

அங்கு இருக்கும் நபரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விட்டு ஒரு சில நிமிடம் தேவி அடி பட்டு இருக்கும் நபரின் அருகில் சென்றார் .

தேவி அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் மனுஷ ஜென்மங்களா ?

ஒருவருக்கு அடிபட்டுவிட்டது என்றால் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பீர்களா? மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணலாம் இருக்காதா ?

வந்துட்டாங்க இங்க அடிபட்டு இருப்பவரை காப்பாத்த போய் நாங்க எதுல யாச்சும் சிக்கி போலீஸ் கிட்ட மாட்ட வா என்றார்கள்.

ஒரு சிலர் போட்டோ பிடித்துக் கொண்டிருந்தார்கள் போட்டா பிடிப்பவர்களை பார்த்து உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா ? என்றதற்கு அதெல்லாம் இருக்கு .

எங்களிடம் சொல்வதை விட நீங்கள் காப்பாற்ற வேண்டியதுதானே என்று வக்கணையாக பேசியுடன் அனைவரையும் முறைத்துவிட்டு கொஞ்சம் காத்தோட்டமாக  இருக்க விடுறீங்களா  என்று விட்டு தன் கையில் இருக்கும் தண்ணீர் பாட்டில் எடுத்து கீழே அடி பட்டு படுத்திருக்கும் நபர் மீது தண்ணீர் தெளித்தார்.

கீழே இருக்கும் நபர் தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்காததால் பயம் கொண்ட தேவி சுற்றி உள்ள மக்களை பார்த்து ஆம்புலன்ஸ் இருக்காது போன் செய்தீர்களா இல்லையா என்றவுடன்  இளநீர் கடைக்காரர் போன் செய்திருக்கிறோம் மா வந்துவிடும் என்று சொல்லும்போதே ஆம்புலன்ஸும் வந்தவுடன் வேகமாக மருத்துவமனைக்கு அடிபட்ட நபரை தூக்கிக்கொண்டு தேவி கண்ணீர் மல்க ஆம்புலன்ஸிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டார்.

ஆம்புலன்ஸில் ஏறியவுடன் தன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தார் தேவி.

அடி பட்டிருக்கும் நபர் யார்? தேவி எதற்காக பதறுகிறார். தேவி இப்பொழுது யாருக்கு ஃபோன் செய்தார். என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “மீண்டும் மலரும் உறவுகள் 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *