Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 14

மீண்டும் மலரும் உறவுகள் 14

தேவி மருந்தகத்தை தேடிச் சென்று மருத்துவர் கொடுத்த அனைத்து மருந்து மாத்திரையும் வாங்கிக் கொண்டு கண்ணனின் பிளட் குரூப் சொல்லி இங்கு கிடைக்குமா? இல்லை வெளியே அரேஞ்ச் பண்ண வேண்டுமா என்று கேட்டார் .

இந்த பிளட் குரூப் ஸ்டாக் இப்பொழுது இல்லை. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நாங்களும் எங்களுக்கு தெரிந்து மருத்துவமனையில் சொல்லி பார்க்கிறோம்.

நீங்களும் வெளியில் தேடி பாருங்களேன் என்றுடன் சரி என்று விட்டு உடனடியாக தனது தம்பி நந்தாவிற்கு அழைத்தார் தேவி.

அக்கா என்ன என்ன ஆச்சு அடி பட்டவருக்கு இப்பொழுது எப்படி இருக்கிறார் என்றவுடன் இப்பொழுது பரவாயில்லை.

நந்தா  உன்னுடைய கல்லூரியில் எந்த மாணவர்கள்காவது இந்த பிளட் குரூப் இருக்கிறதா என்று கேட்டார் அவனும் நான் கேட்டுப் பார்க்கிறேன்.

நான் கேட்டு பார்த்துவிட்டு மாணவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று உடன் தன் தம்பி இங்கு வந்தால் அனைத்தும் கெட்டுவிடும் என்பதை உணர்ந்த தேவி .

நீ யாருக்காவது இருக்கிறதா ?என்று மட்டும் கேட்டு சொல்லு டா அந்த மாணவர்களை இந்த வீட்டில் இருப்பவர்களை கூட வந்து அழைத்துக் கொள்வார்கள்.

இல்லை என்றாலும் என்றவுடன் சரி நான் வேலையை பார்க்கிறேன். அங்கிருந்து யாரும் இங்கே வர வேண்டாம்.அலைச்சல் தேவையில்லை.

நானே அவர்களை அனுப்பி வைக்கிறேன் என்று விட்டு நந்தாவிற்கு அடுத்த வகுப்பு இருந்ததால் சரி என்று விட்டு வைத்து விட்டார் தேவி.

அனைத்து மருந்தையும் வாங்கிக் கொண்டு வந்து கதவைத் தட்டி மருத்துவரிடம் கொடுத்துவிட்டு பிளட்டுக்கு சொல்லி இருக்கு சார் இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடும்.

அது வரை ஒன்று பிரச்சனை இல்லையே என்றுடன் சரி இங்கு நம் பிளட் பேங்கில் இல்லையா ?இல்லை சாரி நானும் கேட்டுவிட்டேன் சார் என்ற உடன் சரி என்று விட்டு மருத்துவர் உள்ளே சென்றுவிட்டார்.

மலர் கையெடுத்து கும்பிட்டார். ஒன்றுமில்லை மலர் என்று விட்டு தேவி அமைதியாக ஒரு மூலையில் நின்றார்.

மலர் தான் நொடிக்கு நொடி உள்ளே இருக்கும் கண்ணனையும் வெளியே நிற்கும் தேவியையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. நந்தா ஒரு அரை மணி நேரத்தில் போன் செய்தான் .

அக்கா நான் இரண்டு பசங்களை அனுப்பி வைத்திருக்கிறேன். நீ சொன்ன மருத்துவமனைக்கும் வந்து விடுவார்கள்.

உன்னுடைய போன் நம்பர் கொடுத்திருக்கிறேன். போன் பண்ணுவார்கள் மருத்துவமனை வந்த பிறகு பார்த்துக் கொள் என்ற உடன் சரி என்றார்.

எனக்கு வகுப்பு இருக்கிறது என்று விட்டு வைத்து விட்டான். சரி என்று விட்டு வைத்தவுடன் அடுத்த 10 நிமிடங்களில் இரண்டு வாலிப வயதை சேர்ந்த இரண்டு பசங்கள் வந்து சேர்ந்தார்கள் .

பிறகு மேம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்ட உடன் தேவியும் இருவரையும் ஐ ஸ் யூ விற்கு அழைத்து சென்ற பிறகு இருவர் இடமும் அவர்களது உடல் நிலைக்கு தேவைக்கேற்ப ரத்தம் எடுக்கப்பட்டது.

அர்த்தம் கொடுத்துவிட்டு வெளியில் வந்த இரண்டு மாணவர்களுக்கும் தேவி ஜூஸ் வாங்கி கொடுத்தார் .

சிறிது நேரம் உட்கார வைத்துவிட்டு எதில் வந்தீர்கள் என்று கேட்டவுடன் பைக்கில் என்றவுடன் கொஞ்ச நேரம் இருங்கப்பா ஒரு அரை மணி நேரம் கழித்து செல்வீர்கள்.

ரத்தம் கொடுத்தால் மயக்கமாக இருக்கும் என்றார் .சாரை போல அவருடைய அக்காவும் ரொம்ப நல்லவராக இருக்கிறார் என்று அந்த இரண்டு மாணவர்களும் மனதில் எண்ணினார்கள்.

இரண்டு மாணவர்களும் அரை மணி நேரத்திற்கு பிறகு இருவரும் தேவியிடம் சொல்லிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று விட்டார்கள்.

கண்ணனுக்கு ரத்தமும் ஏற்றப்பட்டது. அடுத்து ஒரு மணி நேரம் கழித்து லேசாகி கண் திறந்தார். டாக்டர் வெளிவந்து அவர் கண் திறந்து விட்டார்.

அவருடைய மனைவியை கூப்பிடுகிறார் என்றவுடன் தேவி மலரை பார்த்தார் .

மலர் ஒரு நிமிடம் நின்று தேவியை பார்த்தார். நான் இங்கே இருக்கிறேன் என்றவுடன் மலர் உள்ளே சென்று கண்ணனை பார்த்தார் .

மலரு புள்ள என்று லேசாக முனகினார் கண்ணன் .மாமா என்ன மாமா இது என்றார் .

நான் எதுவும் பண்ணல டி  நான் வேலைக்கு போயிட்டு இருக்கும்போது எனக்கு முன்னாடி வந்த கார் காரன் தான் மூட்டிட்டான்.

யாரோ ஒரு மகராசி தான் என்னை மருத்துவமனைக்கு அழைச்சிட்டு வந்ததா  சொன்னாங்க யாரு நீ அவங்களை பார்த்தியா வெளிய இருக்காங்களா என்று கேட்டார்.

மலர் என்ன சொல்வது என்று தெரியாமல்  திணறியபடி நின்றால் அப்பொழுது உள்ளே வந்த நர்ஸ் தான்  இல்ல சார்.

அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாங்க என்றவுடன் தனது மனைவியை பார்த்தார் அவரும்  ஆமாம் என்றவுடன் சரி மலரு  என்று விட்டு  கண்ணம்மா என்றார் .

பாப்பாக்கு சொல்லலங்க நானே அடிச்சு புடிச்சு தான் மாமா வந்தேன். என்றவுடன்  சொல்லிக் கொண்டு இருக்கும்போதே உள்ளே வந்த மருத்துவர் ரொம்ப பேச வேண்டாம்.

இப்பொழுது அவருக்கு மயக்க ஊசி போட்டிருக்கு கொஞ்ச நேரம் வலி குறைவதற்கு வெளியில் இருங்கள் என்றவுடன் கண்ணனும்  எனக்கு ஒண்ணுமில்லை என்றவுடன் சரி என்று விட்டு அழுத தனது கண்களை முந்தானையில் துடைத்துக்கொண்டே வெளியில் வந்தாள் மலர்.

தேவி அங்கு நிற்பதை பார்த்துவிட்டு கையெடுத்து கும்பிட்டார். சரி மலர் பார்த்துக் கொள்.

இதற்கு மேல் நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது. அது  உங்களது வாழ்க்கைக்கு தான் பிரச்சனை என்று விட்டு மலர் கையில் சிறிது பணத்தாள்களை திணித்தார்.

இவ்வளவு நேரம் தனது தம்பி அனுப்பிய பணத்தில் அனைத்து செலவுகளையும் செய்தவர் .தன் கையில் இருக்கும் ரூபாய்களை மலர் கையில் திணித்தார்.

நீ இதற்கு மேல் போய் வீட்டில் எல்லாம் எடுத்துக் கொண்டு வர முடியாது. இப்போது செலவுக்கு வைத்துக் கொள்.

இதற்கு மேல் ஆகாது என்று நினைக்கிறேன் என்று விட்டு கிளம்பினார் .

அக்கா என்று மலர் அழைக்க.ஒன்றுமில்லை உன் வாழ்க்கையை பார். எதைப் பற்றியும் யோசிக்காதே.

உன் மகளையும் ,உன் கணவரையும் பார் என்று விட்டு வேறு எந்த வார்த்தையும் பேசாமல் தேவி ஒரு சில நிமிடம் நின்று அந்த ஐஸ் யூ வையே  திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்றார்.

அக்கா அவர் மயக்க நிலையில் தான் இருக்கிறார் நீங்கள் வேண்டுமானால் பார்த்து விட்டு வாருங்கள் என்றார். இல்லை மலர்  என்று விட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டார் தேவி.

பிறகு ஒரு ஆட்டோ பிடித்து அந்த இளநீர் கடைக்கு சென்று இளநீர் கடைக்காரரிடம் தன் வண்டியை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வந்ததால் அங்கு சென்று தனது வண்டியை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு கிளம்பினார் .

தன்னுடைய வேலைக்கு விடுமுறை வேண்டும் என்று ஆம்புலன்ஸில் செல்லும் பொழுது போன் செய்து தேவி சொல்லிவிட்டார்.

ஆகையால் தனக்கு அசதியாகவும் மன உளைச்சலாகவும் இருப்பதால் தன்னுடைய வீட்டிற்கு சென்று முதலில் முகம் , கை,கால்கள் கழுவிக்கொண்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தனது தாய் தந்தை  இடமும் வேண்டி விட்டு ஓரிடத்தில் உட்கார்ந்தார்

அப்பொழுது மாலையை தொட்டிருந்தது. நந்தன் கல்லூரி முடிந்து வந்தவன். தனது அக்கா வரவேற்பு அறையில் சோர்வாக உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு நிறைய அலைச்சல் போல என்று எண்ணிவிட்டு சமையல் அறைக்குச் சென்று டீ போட்டுக் கொண்டு எடுத்து கொண்டு வந்து அக்கா என்று தொட்டான்.

நந்தா வந்தது கூட தெரியாத அளவிற்கு தேவி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். நீ எப்படா வந்த என்று கேட்டார் .

நான் வந்தது கூட தெரியாத அளவிற்கு அப்படி ஒரு சிந்தனையில் இருக்கிற. யாருக்கு அடிப்பட்டு விட்டது என்று கேட்டான் .

தேவி யாருக்கு அடிபட்டது என்று நந்தாவிடம் சொல்வாரா? அப்படி சொன்னால் நந்தாவின்  மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “மீண்டும் மலரும் உறவுகள் 14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *