நந்தா சிரித்து முகமாக மைக் முன்பு நின்றான்.
நந்தா சார் நந்தா சார் என்று கத்தினார்கள். ப்ளீஸ் சைலன்ட் ப்ளீஸ் கூப்பிட்டிங்க ஸ்டேஜ் வந்துட்டேன் .
“மைக்கும் புடிச்சிட்டேன் சாங் சொன்னீங்கன்னா பாடிடலாம்” என்ற உடன் சார் உங்களோட எங்களோட ஃபேவரிட் சாங் என்று பழைய ஸ்டூடண்ட்ஸ் கத்தினார்கள்.
சுற்றியுள்ள புது ஸ்டுடென்ட்ஸ் அப்படி சாருக்கு பிடித்த சாங் என்ன என்று கேட்டவுடன் அவருக்கு பிடித்த சாங் தானே என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது நந்தா தனது மெல்லிய குரலில் அவனுக்கு பிடித்தமான பாடலை பாட ஆரம்பித்தான்..
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே..
உன்ன விட்டா யார் துணையே..
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்..
உன் நினைவுகள் போகலயே..
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart’u..
உன் பேர் சொல்லுதடி..
என்ன விட்டு போக நீ நெனச்சா..
உசுறே போகுதடி..
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே..
உன்ன விட்டா யார் துணையே..
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்..
உன் நினைவுகள் போகலயே..
அடி மானே தேனே பொன்மானே..
என் காதலி என்றும் நீதானே..
என்ன பாத்து ஏன்டி சிரிக்குற..
உள்ள ஏதோ வெச்சு மறைக்கர..
உன் மேல காதல் குறையவில்ல..
இது ஏன்டி உனக்கு புரியவில்ல..
காதல் என்றால் சாபமா?
உன்ன காதலிச்ச நா பாவமா?
நான் தனிமையில் பேசுறன்.
தனிமையில் சிரிக்கரன்.
தனிமையில் அழுகரன்.
காரணம் என்ன தெரியவில்ல..
உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல..
ஓர கண்ணால என்ன பாக்கயில..
உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள..
உண்ண மறக்க என்னால முடியவில்ல…
நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல..
என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்.
அவ பேசுன குழந்தய போல் இருக்கும்.
என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்.
கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும்.
உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல..
என்ன மறந்துட்டு sorry சொல்லி போறியே புள்ள..
சிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட..
என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன்டி பிரிஞ்சுட்ட..
தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறுடி..
அதுக்காக பேசாம போகாதடி..
நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான்.
எங்க பாத்தாலும் உன் முகம் தான்
உன்ன மட்டும் தான் நான் நெனச்சிருப்பன்
நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன்
நீ என்ன மறந்தா நான்
உயிரோடவா இருப்பன்
என் ice கட்டியே நீ உரிகிட்டயே
நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே
உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே
என் காதலியே தேவதையே
பகளுல உண்ண பாக்கலனா
இரவு கண் தூங்காது (இரவு கண் தூங்காது)
இரவுல கனவுல நீயே இல்லனா
பொழுதே விடியாது (என் பொழுது)
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே)
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே
Hey பாரு என்ன என்ன பாரு
எனக்கு புடிச்சது super star’u
ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு
எங்க schoolஓட வாத்தியாரு
நான் late’a போனா என்ன திட்டுவாறு
ஏன்டா late’a வந்தனு
அவர் கேட்டா நான் சொல்லுவன், sir I’m sorry
So, this is my character எப்போதுமே
இப்படி தான் இருப்பன் துரு துருனு
King of the school’u நான் ஒரு வாலு
எவன் வந்தாலும் no ball’u
தெரியாத்தனமா life’ல வந்துட்ட
தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட
மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல
கண் முன்னே நீ வந்து நிக்குற
காதலால கண்ண கட்டி போட்டவ
வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல
தனிமை ரொம்ப வலிக்குதுடி
Please தனியா விட்டுட்டு போயிடாதடி
எனக்கு தெரியும்டி உன்ன பத்தி
உன் parents நம்பள ஏன்னா
அவங்களுக்கு என்ன புடிக்கலடி
ஏத்துக்களடி கொஞ்சம் கூட யோசிக்கலடி
ஜாதி மதம் எல்லாம் பாக்காத
அது கொஞ்ச நாள் கூட தாங்காது
எல்லா காதலும் நல்ல காதல் தான்
கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா
கொஞ்சம் wait பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும்
அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும்
பயப்பட வேணாம்டி
உன் புருஷன் நான்தான்டி
பல தடைகளையும் தாண்டி
உன்ன நான் வாழ வெப்பன்டி
சாவே வந்தாலும் (சாவே வந்தாலும்)
நான் சாக மாட்டேன்டி (சாக மாட்டேன்டி)
செத்தே போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன்டி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே)
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart’u
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ நெனச்சா
உசுறே போகுதடி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உண்ண விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart’u
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ நெனச்சா
உசுறே உசுறே உசுறே போகுதடி…
என்று நந்தா தனது மெல்லிய குரலில் தனக்கு பிடித்தமான பாடலை பாடி முடிக்கவும்.
சுற்றியுள்ள மாணவர்களும் ,ஆசிரியர்களும் கைத்தட்டவும் சரியாகி இருந்தது.
Ok வா என்று சிரித்து முகமாக கேட்க செய்தான். சார் சூப்பர் ஃபர்ஸ்ட் டைம் கேட்கும் போது இருந்த அதே வாய்ஸ், அதே உங்க முகத்தில் இருக்கும் சிரிப்பு ,இப்போ வரைக்கும் இருக்கு சார் என்று கீழே இருந்து ஸ்டூடண்ட்ஸ் கூச்சலிட்டார்கள்.
மேலே உள்ள ஆசிரியர்களும் சூப்பர் நந்தா உன்னோட வாய்ஸ் அண்ட் சாங்ஸ் என்று அவனுக்கு கை குலுக்கினார்கள் .
அப்போது தியா தான் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல் தன் அருகில் உள்ள ஒரு மாணவியிடம் தன்னுடைய புது தோழியிடம் பாட்டுக்கு சொந்தக்காரி யார்? என்று கேட்டாள் .
என்ன கேட்கிறாய் புரியவில்லை என்றவுடன் இல்லை சார் பாட்டு பாடினார்களே அந்த பாட்டுக்கு சொந்தக்காரி என்றவுடன் என்ன லூசா நீ?
“அவர் பாட்டு பாடியதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் “என்றவுடன் “அவர் மனதில் யாரும் இல்லை என்று சொல்கிறாயா? “
அதெல்லாம் எனக்கு தெரியாது .இதுவரை தெரிந்து கொண்டவரை நந்தா சார் ஜாலி டைப் என்று சொல்லி இருக்கிறார்கள் .
அனைவரிடமும் நன்றாக பேசுவார் என்று சொல்லி இருக்கிறார்கள். மற்றபடி அவர் யாருக்காகவும் பாடவில்லை.
ஒரு வேளை அவர் மனைவியை நினைத்து கூட இருக்கலாம் இல்லையா?
தியாவின் தோழி தனா அவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை .அப்பறம் எங்கு இருந்து மனைவி ?
என்ன இன்னும் திருமணம் ஆகவில்லையா? ஆமாம்.திருமண வயது ஆகி விட்டது.ஆனால் திருமணம் ஆகவில்லை என்று சிரித்தாள் .
ஓ என்று மனதிற்குள் எண்ணி விட்டு தீயா அந்த பாடல் வரிகளை தன் மனதிற்குள் சொல்லிப் பார்த்தாள்
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உண்ண விட்டா யார் துணையே..
இந்தப் பாடலுக்கு சொந்தக்காரி யார் ?என்று தன் மனதிற்குள் எண்ணி நந்தாவையே பார்த்துக்கொண்டு இருந்தாள்