தியா நந்தா விடம் பூக்கடையில் சார் யாருக்கு பூ என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் நின்று அவளை உற்று பார்த்தவன் வீட்டிற்கு என்றான்.
வீட்டிற்கு என்று தெரிகிறது உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொன்னார்களே என்று கேட்டாள்.
அவளின் கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு திருமணமாகவில்லை என்றால் ,வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கி கொண்டு செல்லக்கூடாது என்று இருக்கிறதா?
தியா அமைதியாக இருந்தாள். இங்கு என்ன இன்னும் நின்று கொண்டிருக்கிறாய் ?.
பஸ்ஸுக்கு சார். பஸ் டைம் தெரியவில்லை. அது தான் ரொம்ப நேரமாக நின்று கொண்டிருக்கிறேன்.
அந்த பூக்கடைக்காரர் அக்காவிடம் உன்னுடைய பஸ் எந்த நேரத்திற்கு வரும் என்று கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்ப தினமும் கல்லூரியில் இருந்து இங்கு வந்து நின்று கொள்.
இங்கு தினமும் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருப்பாய் ?என்று விட்டு தனது வண்டியை எடுத்துக் கொண்டு தனது வீடு நோக்கி கிளம்பினான்.
நந்தா கண்ணாடி வழியாக அவளை பார்க்கச் செய்தான். தியா அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் திரும்பி அவளை பார்த்துவிட்டு என்ன பொண்ணுடா சாமி இவ என்று எண்ணி சிரித்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.
நந்தா வீட்டிற்குள் வரும் பொழுதே உதயா ஹாலில் உட்கார்ந்து இருந்தான்.
என்ன மாமா வரும் பொழுதே சிரிச்சிட்டே வர என்று கேட்டான் .உதயா. அதெல்லாம் ஒன்னும் இல்லடா .
நீ என்ன சீக்கிரமாக வந்திருக்க என்று கேட்டான் .சும்மாதான் என்றான்.
அக்கா எங்கடா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே தேவியும் சமையலறையில் இருந்து இருவருக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து இருவரது கையிலும் கொடுத்தார் .
நந்தா கையில் இருக்கும் பூவை வாங்கிக் கொண்டு சென்று பிரிட்ஜில் வைத்தார்.
என்ன மாமா நிறைய பூ என்றான். டேய் வாரம் வாரம் இவ்வளவு பூ தான் வாங்கிட்டு வரேன்.
” நீ வீட்ல இருந்தா தானே தெரியும் “என்று விட்டு சிரித்தான். “அதுக்கு ஏன் மாமா சிரிக்கிற “
” நீ கேட்ட மாதிரி தான்டா பூ வாங்கிட்டு இருக்கும்போது காலேஜ் க்கு புதுசா சேர்ந்த பொண்ணு ஒன்னு கேட்டுச்சு “
என்ன கேட்ச்சு . “பூ வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது யாருக்கு ?என்று கேட்டது ,”வீட்டிற்கு என்ற உடன் “உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே யாருக்கு என்று கேட்டுச்சு” என்றான்.
“மாமா பொண்ணு எப்படி இருந்துச்சு” என்று கேட்டான். டேய் படவா கொன்றுவேன் “அது நியூ ஸ்டுடென்ட்ஸ்”.
அந்த பொண்ணே உனக்கு ஒரு ரூட் விடுது போல என்று சிரித்தான் உதயா.
அமைதியா போடா என்றான் நந்தா. தேவி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.
“உதயா நந்தாவை குறுகுறுவென பார்த்துவிட்டு மாமா உண்மையாவே அந்த பொண்ணு யாருன்னு உனக்கு தெரியாதா ?”.
டேய் என்ன பேச்சு இது .இல்ல சரி சரி ஒத்துக்கிறேன் .புதுசா வந்த பொண்ணு எப்படி வந்து இந்த அளவுக்கு பேசுது.
“ஒரு சில பேர் பார்த்த நிமிசத்தில் இருந்து நல்ல ஒட்டிக்கிட்டு நல்லா சகஜமாக எல்லோர்கிட்டயும் பேசுவாங்க”
” ஒரு சிலர் வருஷக் கணக்கான கூட ஜாலியா பிரண்ட்லியா பேச மாட்டாங்க”. இந்த பொண்ணு ஃபர்ஸ்ட் ராகம் போல என்று சிரித்து விட்டு தனது அறைக்கு சென்றான்.
போகும் நந்தாவை உதயா குறுகுறுவென பார்த்தான். அம்மா மாமா சொல்றது நம்பும்படியாக வா இருக்கு என்றான்.
ஏண்டா உன் மாமா நம்மகிட்ட ஏன் டா பொய் சொல்ல போறோன் என்று தேவி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே .
முகம், கை ,கால் கழுவி கொண்டு வந்த நந்தா என்னடா எங்க அக்கா கிட்ட குசு குசுக்கிற என்று அவனது கழுத்தை நெரிப்பது போல் கை போட்டான்.
ஒன்னும் இல்ல மாமா என்று சிரித்து விட்டு மூவரும் ஹாலில் வந்து உட்கார்ந்தார்கள். அன்றைய நிகழ்வுகளை தங்களுக்குள் பரிமாறி கொண்டார்கள்.
தினமும் அன்றைய பொழுது என்ன நடந்தது என்பதை பரிமாறிக் கொள்ளும் பழக்கம் உள்ளதால் அவ்வாறு செய்தார்கள் .
இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டார்கள். தினமும் நந்தா கல்லூரிக்கும் ,உதயா அவன் பயிலும் கல்லூரிக்கும் ,தேவி வேலைக்கும் சென்று கொண்டு வந்தார்கள்.
இங்கு ரொம்ப நேரம் பஸ்க்கு நின்று விட்டு வீட்டிற்கு சென்ற தியா ரொம்ப நேரமாக நின்றதின் விலைவாக கால் வலிக்க ஆரம்பித்ததால் வீட்டிற்கு சென்றவுடன் காலை நீட்டி போட்டு உட்கார்ந்து விட்டாள் .
என்னடி இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு என்று மலர் கேட்டவுடன் மலரை முறைத்து விட்டு காலேஜ் எல்லாம் நல்லா தான் போச்சு கால் தான் வலிக்கிறது .
முதல் நாள் காலேஜ் சென்று வந்ததற்கே கால் வலிக்கிறதா என்றார் .
காலேஜ் சென்று வந்ததால் கால் வலிக்கல பஸ்ஸுக்கு ரொம்ப நேரமாக நின்றதால் கால் வலிக்குது.
அப்பாட்ட சொல்லி வண்டி வாங்கி தர சொல்றேன் டி.
அப்பாக்கு நிறைய செலவு இருக்கு எனக்கு வண்டி ஒன்னு தான் குறைச்சலா பஸ் டைம் தெரியாம ரொம்ப நேரம் நின்னுட்டேன் மா.
பஸ் டைம் இப்போ தெரிஞ்சி கிட்டேன் இனிமேல் அதுக்கு ஏத்த மாதிரி காலேஜ்ல இருந்து வெளியே வந்துக்குவேன் .
சரி டி என்னமோ பண்ணு அப்பா கிட்டயும் பிள்ளை கிட்டயும் மாட்டிட்டு நான் தான் முழிக்கணும் என்று விட்டு மலர் தன் மகளுக்கு டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளுக்கு கால் அமுக்கி விட்டார்.
அப்பொழுதுதான் வேலைக்கு சென்று வந்த கண்ணன் அதை பார்த்துவிட்டு என்ன கண்ணம்மா காலேஜ் எப்படி போச்சு என்று கேட்டார்.
அவளும் கல்லூரியில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள் .
சரிடா கண்ணம்மா பஸ்சுக்கு இனிமே இவ்ளோ நேரம் நிக்க வேணாம் அப்பா ஸ்கூட்டி வாங்கி தரேன் என்றார்.
வேண்டாம் ப்பா. நான் பஸ் டைம் தெரிந்து கொண்டேன் ஒன்றும் பிரச்சனை இல்லை.
நான் பஸ்க்கு நின்று கொண்டு இருக்கும் போது என்னுடைய வகுப்பு ஆசிரியர் அருகில் உள்ள பூக்கடையில் பூ வாங்கினார் .
அப்போது பூக்கடைக்கார அக்காவிடம் பஸ் நேரம் தெரிந்து கொள்ள சொன்னார் .நானும் தெரிந்து கொண்டேன் .
கண்ணன் அதற்கு நல்ல மகராசன் போல என்று சொன்னார் .தியா சிரித்துவிட்டு இன்று அவர் கல்லூரியிலும் நன்றாக பாட செய்தார் அப்பா நன்றாக பாடுவார் போல.
சரிம்மா என்று விட்டு கண்ணன் அசதியில் எழுந்து விட்டு கொஞ்ச நேரம் படுகிறது னா படு கண்ணம்மா என்று விட்டு எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தார்.
சிறிது நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு அவர்களது வேலையை பார்த்தார்கள் .
அப்படியே நாட்கள் உருண்டு ஒரு மாதத்திற்கு மேல் சென்றிருக்கும் தியாவும் எப்பொழுதும் போல் கல்லூரிக்கு சென்று வந்தாள் அவ்வப்போது நந்தாவை சைட் அடிக்க செய்வாள்.
நந்தாவிற்கு தியாவின் பார்வை ஒரு மாதிரியாக இருந்தது .
சரி இந்த வயதில் இது இன்பாக்ட்சுவேஷன் ஆக கூட இருக்கலாம் .இல்லை, அந்த பெண் தன்னை சைட் அடிக்க மட்டும் செய்யலாம் என்று அவளை கடந்து விட்டான்.