Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 2

மீண்டும் மலரும் உறவுகள் 2

“தேவி அவரது வீட்டை நோக்கி சென்றவுடன் மலர் ஒரு சில நொடி வெளியே நின்று தேவி போகும் திசையை பார்த்துவிட்டு சந்தியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்”..

” உள்ளே சென்றவுடன் கண்ணன் மலரிடம் கத்த ஆரம்பித்தார்.”

” என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய் ?” திறந்து வீட்டில் எதோ வந்தது போல் வந்து விட்டு செல்கிறார்கள் “..

“நீ மாட்டும் உறவு கொண்டாடி கொண்டு இருக்கிறாய் என்று கத்தினார் “..

“ஏங்க போதும். அளவுக்கு மீறி உங்களுடைய பேச்சு செல்கிறது”..

” அவர் நம்முடைய பெண்  பெரிய பெண்ணாகிவிட்டால் என்பதால் தனிமையில் இருந்ததால் வீடு தேடி கொண்டு வந்து விட்டு செல்கிறார்”..

” அவ்வளவுதான்”..

” மற்றபடி நீங்கள் எண்ணுவது போல் எதுவும் கிடையாது”..

” நீங்களாகவே எதையாவது மனதில் நினைத்துக் கொண்டு யார் மீதும் பழியை சுமத்த கூடாது”..

அவ்வளவுதான், என்று விட்டு “தனது கணவனை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு தன் மகள் இருப்பதையும் கண் காண்பித்து விட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்”..

” அந்த ஆண்டியை உனக்கு தெரியுமா? அம்மா”..

“அப்பா ஏன்? இவ்வளவு கோபம் கொள்கிறார்”..

” இதுவரை என்னிடம் கடிந்து கூட ஒரு வார்த்தை பேசியதில்லையே “..

“இப்பொழுது என்னவென்றால் அந்த ஆண்டியை பார்த்தவுடன் அவ்வாறு கோபமாக பேசுகிறார்”..

” இப்பொழுது உன்னிடமும் இவ்வாறு கடிந்து பேசுகிறார்”..

” நம் இருவரிடமும் அப்பா இதுவரை இது போல் கடிந்து பேசியதில்லையே என்று கேட்டாள். தியா”..

“தன்மகள் கேட்டது ஹாலில் இருக்கும் கண்ணனுக்கும் கேட்க செய்தது”..

” அவர் முனக செய்தார். இவளை பார்த்து விட்டேன் அல்லவா ?”..

“அப்பறம் எப்படி பேசுவேன் என்று முனகினார்”..

“மலர் தனது கணவனை முறைத்து விட்டு ஒரு பாத்திரத்தை டொம்மென்று வைத்தவுடன் தன் வாயை அமைதியாக மூடிக் கொண்டார் கண்ணன்”..

” அதன் பிறகு அவர் வாய் திறக்கவில்லை.”

” கண்ணன் அதன் பிறகு ஒரு சில நொடி அமைதியாக இருந்துவிட்டு தன் மகள் பெரிய பெண் ஆகிவிட்டால் என்பதே புத்திக்கு உரைத்த பிறகு வேகமாக தனது மகளின் அருகில் வந்து மகளை அணைத்து நெற்றி முறித்தார்.”..

“சந்தியா (தியாவிற்கு )நினைவு வந்தது. இதே போல் தானே அந்த ஆண்டியும் தன்னை நெற்றி முறித்தார் என்று எண்ணினாள்”..

பிறகு ,”அம்மா எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்ற உடன் அப்படி தாண்டா கண்ணம்மா இருக்கும்”..

” கொஞ்ச நேரம் இரு என்று விட்டு தனது  கணவனிடம் ஒரு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வர சொல்லிவிட்டு”..

” தன் மகளை பாத்ரூம் அழைத்துச் சென்று பாத்ரூம் சென்று விட்டு வருமாறு சொல்லிவிட்டு”..

” அக்கம் பக்கம் இருக்கும் ஒரு சிலரையும் அழைத்து விட்டு அருகில் உள்ள வயதான பாட்டிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்தார் “..

“அம்மா என்று அவள் நெளிந்து கொண்டே இருந்தாள் “..

“இருடா கண்ணம்மா அப்பா வந்து விட்டார். நாம் அனைத்தையும் ஆரம்பித்து விடலாம் என்ற பிறகு கடகடவென்று தியாவிற்கு  தண்ணி ஊத்தும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டது”..

” அக்கம் பக்கம் உள்ள உறவினர்கள் தியாவிற்கு தாய் மாமா இல்லையா ?என்று அங்கு இருக்கும் பாட்டி ஒன்று கேட்டதற்கு இல்லைம்மா என் வீட்டில் என் உடன் பிறந்தது ஒரு பெண் மட்டும்தான் என்று வாய் மூடிக் கொண்டார்”..

“ஒரு பெண்தான் என்றவுடன் சரி மா என்று விட்டு உன் சொந்த பந்தத்திற்கு எல்லாம் சொல்லவில்லையா ?”..

“அவர்களெல்லாம் இங்கு இல்லை தூர தொலைவில்  இருக்கிறார்கள்”..

” நீங்கள் எல்லாம் என் உறவுகள் போல் தான். நீங்களே என் மகளுக்கு தண்ணீர் ஊற்றலாம் என்ற உடன் சிரித்த முகமாக அக்கம் பக்கம் இருப்பவர்களும் வயதில் பெரியவர்களும் தியாவிற்கு தண்ணீர் ஊற்றி அவளை வீட்டிற்குள் அழைத்தார்கள்”..

“தியா வீட்டிற்குள் ஒரு மூலையில் உட்கார தனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்ற உடன் கண்ணன் இந்த சடங்கு எல்லாம் என் மகளுக்கு தேவையில்லை”..

” அவள் எப்பொழுதும் போல் இந்த வீட்டில் வளம் வர வேண்டும் என்று ஹாலிலேயே அவளை உட்கார வைத்தார். “..

“நீ தூங்கும் பொழுது உன்னுடைய அறையில் சென்று தூங்கிக் கொள்ளலாம் கண்ணம்மா என்றார் “..

“அவளும் தன் அப்பாவிடம் சலுகையாக அப்பா எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது படுத்துக் கொள்கிறேன் என்றாள்”..

” அவரும் தன் மகளை தன் மடியில் தாங்கிக் கொண்டு தட்டிக் கொடுத்தார்”..

” அவளையே பார்த்துக்கொண்டு இருந்தார். மலரும் தனது கணவனின் தோளில் வந்து தலை சாய்த்தார்”..

” வந்திருந்த சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினரும் சாப்பிட்டுவிட்டு சென்றிருந்தார்கள் “..

” மாலைப்பொழுதை தொட்டிருந்தது. மலர் தனது கணவன் தோளில் சாய்ந்திருந்தார்”..

” கண்ணனின் தோளில் ஈரம் படர்வதை உணர்ந்து மலர் புள்ள என்ன ஆச்சு ? என்றார் “..

“ஒன்றும் இல்லை மாமா என்று விட்டு கண்ணை துடைத்தார்”..

“இந்தா மலரு என்ன ? என்றார் கண்ணன். என்னவென்று உங்களுக்கு தெரியாதா? என்றார் “..

“மலரு என் வாயை கிளறாத ?”..

“அடிபட்ட நான் என் வலியை  அவ்வளவு சீக்கிரம் மறக்க  முடியாது ‘..

“அதுக்குன்னு எத்தனை வருஷம் என்றார்”..

“எத்தனை வருடம் என்றெல்லாம் கிடையாது. என் ஆயுள் இருக்கும் வரை என்று விட்டு தனது மகளின் தலையை மெதுவாக எடுத்து தனது மனைவியின் மடியில் வைத்து விட்டு எழுந்தார்”..

“ஏங்க  என்று மலர் கை பிடித்ததற்கு கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க விடு “.

“நான் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டு வருகிறேன்”..

” ஏதாவது தேவை என்றால் புள்ளை என்னை கேட்டால் போன் செய் என்று விட்டு நகர்ந்தார் கண்ணன்”..

” கண்ணன் மனதிற்குள் ஆயிரம் வலிகள் ,ஆயிரம் நினைவுகள் வந்து வந்து சென்றது”..

” மலரும் பழைய நினைவுகளில் உழன்று கொண்டிருந்தார் “..

“இரவு 7 மணி போல எழுந்த தியா தன் தாயிடம் அம்மா அப்பா எங்கே ?என்று கேட்டாள் “..

“அப்பா வெளியே வேலையாக சென்று இருக்கிறார் என்று தன் மகளை அழைத்துக் கொண்டு சென்று பாத்ரூமில் விட்டுவிட்டு அங்கு பின்கட்டில் இருக்கும் வேப்பிலை மரத்திலிருந்து இரண்டு கொத்து வேப்பிலையை உருவினார்”..

“தன் மகள் தலையில் சொருகி விட்டார் .அம்மா இது எதற்கு ? என்று கேட்டதற்கு இந்த நேரத்தில் காத்து கருப்பு அண்டாமல் இருப்பதற்கு தான் கண்ணம்மா என்றார் “..

“சரி என்று விட்டு தன் தாயுடன் வீட்டிற்குள் பின்கட்டில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது கண்ணன் ஒரு சில தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்”..

” அப்பா என்று மகள் அழைத்த உடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கண்ணன் தியாவின் கையில் தின்பண்டங்களை திணித்தார் “..

“ஐ லவ் யூ பா என்று அவரது தாடையில் முத்தம் வைத்தாள். வைத்துவிட்டு அந்த தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறையில் புகுந்து கொண்டாள்”.

“மலர் தியா என்று அழைப்பதற்கு முன்பே மலரின் கையைப் பிடித்த கண்ணன் அவளை எப்பொழுதும் போல் ஃப்ரீயாக இருக்க விடு “..

“எதற்கும் அவளுக்கு தடை விதிக்க வேண்டாம். நாம் அவளை வீட்டுக்குள் அழைக்கும் பொழுது ஐயர் வைத்து தானே அனைத்து சடங்கும் செய்ய போகிறோம் ஒன்று பிரச்சனை இல்லை என்றார் “..

“மலர் தனது கணவனை முறைத்துவிட்டு அவரது கையை விட்டுவிட்டு சமையலறைக்குள் புகுந்தார் “..

“அடியே மலர் புள்ள என்றார்  சிரித்த முகமாக கண்ணன் .முறுக்கிக் கொண்டு சென்றார் மலர் “..

“கண்ணன் மனதில் அப்படி என்ன வலிகள் இருக்கிறது” என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் .

அன்புடன்

தனிமையின் காதலி

கதை நகர்வு எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு தங்களது விமர்சனங்களை ஓரிரு வார்த்தைகளில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *