Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 20

மீண்டும் மலரும் உறவுகள் 20

நாட்கள் உருண்டோடியது அனைவரும் அவர்களது வேலையை பார்த்து கொண்டு இருந்தார்கள்.

தன்னுடன் மற்ற ஸ்டுடென்ட்ஸ் பேசும் விதத்திற்கும் தியா பேசும் விதத்திற்க்குமான  வித்தியாசத்தை நன்றாக உணர செய்தான் நந்தா.

இருந்தும் இது வயது கோளாறில் என்று எண்ணி அமைதியாக அவளை கண்டும் காணாமல் விலகி விடுவான்.

நந்தா ,உதயா ,தேவி மூவரும் அன்றைய நிகழ்வுகளை பரிமாறி கொள்வது வழக்கம் அது போல் தினமும் அன்றைய நிகழ்வுகளை பரிமாறிக் கொள்ளும் பொழுது நிறைய நேரங்களில் தியாவை பற்றி தான் நந்தாவின் பேச்சு இருந்தது.

உதயா கூட விளையாட்டாக என்ன மாமா அடிக்கடி நீ அந்த தியா என்ற பெண்ணை பற்றி சொல்லி கொண்டிருக்கிறாய் என்று கேட்டதற்கு நாம் எப்பொழுதும் போல் அன்னைக்கு நடக்கிறது பேசுவது போல தான் பேசுறேன்.

இதுல எங்க இருந்து அந்த பொண்ணை பத்தி பேசுறேன்.

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பேசுறது தினமும் நிறைய இடத்தில் அந்த பொண்ணோட பேச்சு தான் வருது என்று தேவி சிரித்தார் .

அக்கா என்று நந்தா சினுங்கியதற்கு  அவன் சொன்னது என்னவோ உண்மை தானடா அந்த பெண்ணை பற்றி அதிகமா பேசுவது போல் தான் எனக்கும் தெரிகிறது .

போ க்கா ரெண்டு பேரும் ஓவரா பண்றிங்க என்று விட்டு நந்தா  தன் அறையை நோக்கி ஓடி விட்டான் .

தேவியும் தனக்கு வேலை இருப்பதால் சமையல் அறைக்கு சென்று விட்டார் .

தியாவும் தினமும் கல்லூரியில் நடந்ததை தன் தாய் ,தந்தையிடம்  சொல்ல செய்வாள் .

நந்தாவை பற்றியும் தனக்கு பாடம் எடுக்கும் வகுப்பு ஆசிரியர் என்று சொல்லி இருக்கிறாள்

மற்றபடி பெரிதாக நந்தாவை பற்றி அவள் எதுவும் பேச மாட்டாள் .நாட்களும் சென்றது.

உதயாவும் தனது இறுதி ஆண்டுக்காக காத்துக் கொண்டிருந்தான். முதல் செமஸ்டர் எக்ஸாம் தியாவிற்கு முடிந்திருந்தது.

முதல் செமஸ்டர் முடிந்து ரிசல்ட் க்கு காத்துக் கொண்டு இருந்தாள். அடுத்த செமஸ்டர் ஆரம்பமாகி இருந்தது.

காலேஜ் பத்தி  நந்தா வீட்டில் பேசி கொண்டிருந்தான். எல்லாம் நல்ல ஜாலியா சுத்திட்டு இருக்காங்க எவ்ளோ மார்க் வருதுன்னு தெரியல.

ஒரு சிலர் நல்லா படிப்பாங்க. ஒரு சிலர் ஆவரேஜ் ஸ்டூடண்ட் தான்.மீதி தான்  தெரியல. ஓரளவுக்கு மார்க் வந்துட்டா பரவா இல்ல.

மாமா தியா எப்டி படிக்கும்  என்றான் உதயா. நந்தா உதயாவை முறைத்து விட்டு அதெல்லாம் ஓரளவுக்கு  நல்ல படிக்கிற பொண்ணுதான் .

ஃபர்ஸ்ட் மார்க் வருமானு தெரியல. சொல்ல முடியாது . ஆனா சான்ஸ் இருக்கு என்று சொல்லி சிரித்தான்.

என்ன மாமா சிரிக்கிற அந்த பொண்ண பத்தி பேசினாலே சிரிக்கிற .

“டேய் மச்சான் எத்தன டைம் சொல்றது அவ சின்ன பொண்ணு டா. உனக்கே சின்னவ.”

“ஏன்,? சின்ன பொண்ணா இருந்தா சைட் அடிக்க கூடாது. லவ் பண்ண கூடாது, கல்யாணம் பண்ண கூடாதுனு எதுவும் இருக்கா என்ன?”.

இல்ல தான். ஆனால் ,எனக்கும் அந்த பொண்ணுக்கும் செட் ஆகாது சரியா

எனக்கு அந்த மாதிரி தாட் கிடையாது. அவ்வளவுதான் சொன்னேன் .

போ மாமா உன்னை போய் யாராச்சும் வேணாம்னு சொல்வாங்களா ?

நான் பொண்ணா பிறந்து இருந்த நானே உன்னை  கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன் மாமா என்று தனது மாமாவை கட்டிக்கொண்டு சிரித்தான் உதயா.

கல்யாணம் பண்ணிக்கலாம் மச்சான் யார் வேணாம்னு சொன்னது என்று சிரித்தான்.

நந்தா வேகமாக உதயாவை தள்ளி விட்டான் .யோவ் மாமா என்று விட்டு சிரித்தான் உதயா.

அவனா நீ ?இவ்வளவு நாள் இது தெரியாமா போச்சே.

உன் கூட உன்ன நம்பி நான் வேற ஒரே ரூம்ல துங்குறேன் என் கற்புக்கு என்னைக்கு ஆபத்து வருமுனு தெரியலையே என்றான் சிரிப்புடன் நந்தா..

வேகமாக தேவி நந்தாவின் தலையில்  கொட்டினார் என்ன டா பேச்சு இது.

பின்ன அவன் இவ்வளவு நேரம் பேசும் போது அமைதியா கேட்டுட்டு இருந்த இப்ப மட்டும் பொங்குற.

நந்தா  என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ.

நானும் வருச கணக்கா சொல்லிட்டே இருக்கேன் .நீ கல்யாணம் பண்ணாத தால தான அவன் அப்படி பேசுறான்.

அமைதியா போற எப்போ பாரு. நீ மட்டும் என்ன க்கா நினைச்சுட்டு இருக்க .

உனக்கு என்ன அக்கா பிரச்சனை. டேய்  எனக்கு என்ன பிரச்சனையா ?

உனக்கு வயசு ஏறிட்டே போது அது உனக்கு ஞாபகத்துல இருக்கா ?

அக்கா நான் என்ன சொண்ணனு நீ மறந்திட்டியா?

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல டா. நீ இவன் கிட்ட  என்ன சொல்ல நினைக்கிறயோ சொல்லிக்கோ .

“அக்கா “என்றான் அதிர்ச்சியாக..

நீ தானடா சொன்ன. உன் மச்சானுக்கு விவரம் தெரியணும் அவனுக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அவன் கிட்ட எல்லா உண்மையும் விஷயத்தை சொல்லிட்டு  நான் கல்யாணம் பண்ணிக்கிறேனு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல டா.

இனி உன் மச்சான் கிட்ட நீ எல்லாம் விவரத்தையும் சொல்லிட்டு நீ கல்யாணம் பண்ணிக்க .

ஆக மொத்தம் எனக்கு என் தம்பிக்கு கல்யாணம் ஆகணும். அவனுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது .

உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு அத பாரு என்ன பத்தி யோசிக்காத என்ன பத்தி யோசிக்க நீயும்  அவனும் என் கூடவே தான இருக்கீங்க.

உனக்கு கல்யாணம் பண்றதுல என்ன டா பிரச்சனை கல்யாணம் ஆகிட்டா நான் உன்னை விட்டு போயிடுவேனு பயப்படுறியா?

உன் வாழ்க்கை இனி நீ தான் பாக்கணும் .

என் வாழ்க்கையில் நடந்து  முடிஞ்சத பேச போறதால ஒன்னும் ஆக போறது இல்ல.

என்ன அக்கா சொல்ற .நந்தா  திரும்ப திரும்ப நீ தான் பேசிட்டு இருக்க எங்கள பாக்க வேணாம்னு நான் சொல்லல சரியா ?.

நீ எந்த அளவுக்கு எங்கள பாத்துக்கணும்னு ஆசைப்படுறியோ அதே மாதிரி தான் நானும் உன்னை பாத்துக்கணும்னு ஆசைப்படுறேன்.

உன் கல்யாணத்தை பாக்கணும்னு ஆசைப்படுறேன் .

மாமா உனக்கு பிடிச்ச பொண்ண பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ மாமா.

என்னடா ரெண்டு பேரும் பேசி வச்சு கிட்டு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்களா ?

அப்படிலாம் இல்ல மாமா.

அப்படிலாம் இல்லன்னா என்னடா அர்த்தம் .நான் தான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலா இல்ல.

பண்ணிக்கிறேன்னு தான சொல்றேன். கொஞ்சம் பொறுங்கன்னு சொல்றேன்.

கொஞ்சம் கொஞ்சம்னு இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நான் பொறுக்கணும்.

உனக்கு வயசு 30 தொற்றுச்சு மறந்துடாதே என்று விட்டு சமையல் அறையை நோக்கி சென்று விட்டார் தேவி.

மாமா என்றான் உதயா.

எனக்கு தெரியாது டா ஆனா அம்மாவும் ,பிள்ளையும் எதோ ஒரு முடிவோட பேசிட்டு இருக்கீங்க என்று  விட்டு அறையை நோக்கி சென்று விட்டான் நந்தா.

கோபமாக போகும் இருவரையும் பார்த்துவிட்டு தன் தலையில் கை வைத்தான் உதயா.

இந்த மாமாவுக்கு ஒரு பொண்ணு சிக்க மாட்டேங்குது.

இந்த மாமா மனசுல ஒரு பொண்ணுமே இல்லையா? என்று வானத்தைப் பார்த்து புலம்பி விட்டு ஆண்டவா எங்க மாமாவுக்கு சீக்கிரம் ஒரு பொண்ண செட்டப் பண்ணி விடு என்று தன் தாத்தா பாட்டி புகைப்படத்தையும் பார்த்து கேட்டு விட்டு நகர்ந்தான் உதயா.

அவர்கள் இருவரும் அவனைப் பார்த்து சிரித்தார்கள்.

உன் மாமாவுக்கு தானே பொண்ணு கூடிய விரைவில் உங்கள் வீடு தேடி வருவாள் என்று  புகைப்படம் வாயிலாக சொன்னது அவனுக்கு எங்கே கேட்க போகிறது .

அதன் பிறகு வீட்டில் திருமணத்தைப் பற்றிய பேச்சு கொஞ்சம் நாட்களுக்கு எடுக்கவில்லை .ஒரு மாதங்களுக்கு மேல் கடந்திருந்தது.

கல்லூரி முடிந்து நந்தா வீட்டிற்கு கிளம்புவதற்கு வந்து கொண்டிருந்தான் அப்பொழுது தியா சார் ஒரு நிமிடம் என்றாள்.

நந்தா ஒரு நிமிடம் நின்று தன் நெற்றியை  நீவி விட்டு என்னம்மா என்று கேட்டான் .

நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் .

சொல்லு மா என்று கேட்க.

    சார் தனியா பர்சனல் ஆக பேச வேண்டும்.

ஒரு நிமிடம் அவளது கண்ணை உற்று பார்த்து விட்டு சரி சொல்லு என்றான் .

நந்தா  சுற்றி  முற்றி பார்த்தான் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை .

அவளுக்கு பஸ் வரும் நேரம் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து இருப்பதால் இங்கு எப்பொழுதும் போல் உட்கார்ந்து  விட்டு தான் செல்வாள் என்று நந்தாவிற்க்கும் தெரியும்.

ஆகையால்,, அவள் எப்போதும் போல் உட்கார்ந்திருக்கிறாள் என்று தான் இருந்தான் .

ஆனால் ,அவள் தன்னிடம் பேச வேண்டும் அதுவும் பர்சனலாக என்றவுடன் நந்தாவிற்கு உள்ளுக்குள் லேசாக பயம் கூட ஏற்பட ஆரம்பித்தது .

இவள் எதற்காக தன்னிடம் பர்சனலாக பேச வேண்டும் என்று சொல்கிறாள்.

என்ன  விஷயமாகவா இருக்கும் ஒரு வேளை தன்னிடம் காதலிப்பதாக சொல்வாளோ என்று எண்ணி விட்டு ஒரு நிமிடம் நிதானித்து விட்டு மனதிற்குள்ளே அதிர்ச்சியாகி அவளைப் பார்த்தான் .

சார் என்று இரண்டு முறை அழைத்த பிறகு தனது கனவுலகத்தில் இருந்து வெளியில் வந்தவன் .

லேசான விரைப்புடன் என்னிடம் பர்சனலாக பேச உனக்கு என்ன இருக்கிறது என்று கேட்டான்.

இவ்வளவு நேரம்  அமைதியாக பேசியவர். இப்பொழுது விரைப்புடன் பேசுவதை பார்த்துவிட்டு ஒரு சில நிமிடம் அதிர்ச்சியாகி அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *