தியா நந்தாவை இரண்டு முறை அழைத்த பிறகு கனவுலகில் இருந்து வெளியில் வந்தது போல் தனது முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு என்னிடம் பர்சனலாக பேசுவதற்கு உனக்கு என்ன இருக்கிறது .
என்ன பேச வேண்டுமோ ?பேசிவிட்டு கிளம்பு உனக்கு தான் வேலை இல்லையோ என்னவோ?
எனக்கு வேலை இருக்கிறது என்று கடினமாக பேசினான். இவ்வளவு நேரம் அமைதியாக பேசியவர் இப்பொழுது கடினமாக பேசுகிறாரே என்று அதிர்ச்சியாகி நந்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தியா உன்னை தான் என்றான். சார் அது வந்து என்று விட்டு அமைதியாக இருந்தாள். என்ன என்று இரண்டு முறை திட்டினான் .
என்ன ?விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்பு என்றான்.அவனது முகத்தை அமைதியாக பார்த்தவள்.
அவனை முறைத்துவிட்டு எனக்கு உங்களை பிடித்திருக்கிறது. என்ன? என்றான்.
ஒரு நிமிடம் நான் பேசி விடுகிறேன். நான் முதலில் இது இந்த வயதில் ஏற்படும் வயதுக்கோளாறு இன்ஃபக்ஷன் என்று தான் எண்ணினேன்.
முதலில் நான் உங்களை சைட் அடிக்கிறேன் என்று கூட யோசித்தேன். ஆரம்பத்தில் என்னவோ நான் உங்களை சைட் அடித்தது உண்மைதான்.
அது சாதாரணமாக தான் எனக்கும் தெரிந்தது. ஆனால் நாளாக நாளாக என்னுடைய பார்வை உங்கள் மீது மட்டும் தான் இருந்தது.
அதற்காக என்னுடைய படிப்பில் கவனத்தை சிதறவிட்டேன் என்றெல்லாம் அர்த்தமாகி விடாது.
என் படிப்பில் நான் கவனமாக தான் இருக்கிறேன். அது வேறு இது வேறு படிப்பு எப்படி என் வாழ்க்கையில் முக்கியமோ .
இதுவும் அதே போல் தான். அது வாழ்க்கைக்கு முக்கியமானது. இது என்னுடைய வாழ்க்கையே என்றாள்.
நன்றாகத் தான் பேசுகிறாய் என்று கை கட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.
நான் விளையாடவில்லை .உண்மையாக தான் சொல்கிறேன் சார் .
நீ உண்மையாக கூட சொல் யார் வேண்டாம் என்றது. நீ ஆரம்பத்திலேயே சொன்னாய். இது இந்த வயதில் ஏற்படும் இன்பாக்சிவேஷன் என்று சரியா?.
அது இது அதுவல்ல என்று புலம்பினாள். என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் பேசுகிறாய் .
சார் அப்படி இல்லை .வேறு எப்படி ?இவ்வளவு நாள் சாதாரணமாக சரி ஏதோ வயது கோளாறில் செய்கிறாய் என்று அமைதியாக கடந்து விட்டேன்.
ஆனால் , இப்பொழுது நேரடியாக அதுவும் கல்லூரியில் வைத்து என்னிடம் என்னை விரும்புகிறேன் என்று சொல்கிறாய்?
“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் ?அவ்வளவு தைரியமா” என்றான்.
“தைரியம் தான் என் மனதில் இருப்பதை உரியவரிடம் ஒப்படைப்பதில் ஒன்றும் தவறில்லையே ?”என்றாள்.
என்ன உரியவரிடம் ஒப்படைத்தாய் நான் உங்களை விரும்புவது உண்மை. என் மனதில் நீங்கள் இருப்பதும் உண்மை.
நான் உண்மையாக தான் உங்களை நேசிக்கிறேன் .அதனால் ,தான் உங்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் .
அப்புறம் சார் .போதும் நிறுத்திரியா கஷ்டப்பட்டு தான் உங்க அப்பா அம்மா உன்னை படிக்க வச்சிட்டு இருக்காங்க.
இதுக்கு தான் காலேஜ் அனுப்பிட்டு இருக்காங்களா? படிக்கிறதுக்கு அனுப்பலையோ .
சார். எங்க அப்பா அம்மா என்னை படிக்க தான் அனுப்புறாங்க .என்னுடைய படிப்பில் நான் கவனமாக தான் இருக்கேன் .
படிப்பில் எந்த குறையும் வைக்கிறது இல்ல . படிப்பில் கவனம் இல்லைன்னா கேளுங்க.
இதுவும் தவறான செயல் தான் . யார் சார் சொன்னது காதலிச்சா தவறுன்னு சொன்னாங்களா ?
கல்யாணம் பண்ணா தவறா ?எந்த ஊர்ல தவறு .கல்யாணம் பண்ணா தவறுன்னு சொல்லலா ஆனா.
இந்த வயசுல பெத்தவங்களே எத்தனையோ பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க .
நான் காதலிக்கிறது தப்பு இல்ல. தப்பானவங்களா தேர்ந்தெடுத்தா தான் தப்பே தவிர காதலிக்கிறதே தப்பா ஆகிடாது .
என்னுடைய காதலை என்னால தைரியமாகவே எங்க வீட்டுல சொல்ல முடியும். போய் சொல்ல வேண்டியது தானே .
உங்ககிட்ட சொல்லாம உங்க விருப்பம் இல்லாம போய் சொல்ல முடியாது இல்ல. நான் உன்கிட்ட வந்து எனக்கு விருப்பம் என்று சொல்லவில்லையே .
சார் .போதும் நிறுத்துரியா உன் வயசு என்ன என் வயசு என்னன்னு தெரியுமா ?
என்ன சார் ஒரு 10, 12 வருஷம் இருக்குமா? 12 வருஷமா.
“12 வருஷம் அவ்ளோ சாதாரணமா போச்ச உனக்கு. இப்ப தெரியாது இப்ப நீ ஜாலியா ஏதோ ஒரு நெனப்புல என்ன விரும்புறேனு சொல்ற.”
ஒரு வருஷம் போச்சுன்னா ஆறு மாசம் போச்சுன்னா தெரியும் அப்ப .
நான் அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன் .”நீ அப்படி நினைக்கிறாயா? இல்லையா? என்றது எனக்கு தேவையில்லாத விஷயம் சரியா?”
எனக்கு உன் மேல அப்படி ஒரு எண்ணம் இதுவரைக்கும் இல்லை.இனிமேலும் வராது.
சார். இப்ப சொல்றதுதான் இனிமேலும் வராது .இதுவரைக்கும் இல்லை. என்னை பொருத்தளவு நீ எனக்கு ஒரு ஸ்டுடென்ட். அவ்வளவுதான் .
ஸ்டாப் கிட்ட எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கோ. மற்றபடி தவறான நோக்கத்தில் பேசுற மாதிரி இருந்தா. என்கிட்ட உனக்கு பேச வேண்டிய அவசியம் கூட கிடையாது என்று விட்டு நகர்ந்தான்.
நந்தா இரண்டடி நகர்ந்தவுடன் மாமா என்று விட்டு உதயா வந்து நின்றான்.
ஒரு சில நொடி அமைதியாக பார்த்தான் நன்றாக சுற்றி முற்றி பார்த்துவிட்டு தியாவை தவிர வேற யாரும் இல்லை என்றவுடன் என்னடா இந்த பக்கம்.
உன்ன பார்க்க தான் மாமா . சரி வா என்று அவனை அங்கு இருந்து அழைத்துக்கொண்டு சென்றான்.
உதயா திரும்பி தியாவை பார்க்க செய்தான். தியா உதயாவை பார்த்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை .
தன்னுடைய கல்லூரி பையை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்று விட்டாள் .
மாமா அந்த பொண்ணு என்ன சொல்லுச்சு .டேய் உனக்கு அது தேவையில்லாத கேள்வி ?
மாமா சொல்ல மாட்டியா? டேய் நீ இப்போ எதுக்கு காலேஜ்க்கு வந்த அத சொல்லுடா .நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா .
அது கூட வா டா எனக்கு ஞாபகத்துல இருக்காது. என்ன நாள் என்றான்.
டேய் எனக்கு தெரியும் நீ வா என்று அவனை அழைத்து கொண்டு காலேஜ் விட்டு வெளியில் வந்தான்.
மேற்கொண்டு அதைப்பற்றி பேசவில்லை இருவரும் அவர்களது வண்டியை எடுத்துக் கொண்டு தியாவை கடந்து சென்றார்கள்.
உதயா தான் ஒன்றுக்கு இரண்டு முறை தியா நிற்கும் பஸ் ஸ்டாண்ட்டை திரும்பி பார்த்தான் . தியா ஒரு முறை பார்த்துவிட்டு அமைதியாக பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டாள் .
இந்த பெண் யார் என்று தெரியவில்லையே மாமாவிடம் பேசிக் கொண்டிருக்கிறது.
இருவரும் ஏதோ காரசாரமாக பேசியது போல் இருக்கிறது என்று எண்ணினான்.
முதலில் வீட்டிற்கு சென்ற பிறகு மாமாவிடம் இந்த பெண்ணை பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
அவனது மண்டையில் அப்பொழுதுதான் லேசாக மணி அடித்தது . ஒருவேளை இது தியாவாக இருக்குமோ என்று யோசித்து விட்டு அந்த பொண்ணு யாரு மாமா என்றான்.
நந்தா திரும்பிப் பார்த்துவிட்டு யார டா கேக்குற என்றான். உன்னிடம் காலேஜ்ல பேசிட்டு இருந்த பொண்ணு.
ஆமா அதுக்கு என்ன ?என்றான் .மாமா அந்த பொண்ணு உன்கிட்ட என்ன பேசிச்சு ?
டேய் உனக்கு வேற வேலை இல்ல வா என்றான். ஒரு வேளை அந்தப் பெண் தன் மாமாவை விரும்புகிறதோ .
அந்த பெண்ணின் கண்ணில் நான் மாமாவிற்கான காதலை பார்த்தேன் என்று யோசித்தான் .