Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 23

மீண்டும் மலரும் உறவுகள் 23

தியா நேற்று இரவு வீட்டிற்கு வந்ததிலிருந்து கல்லூரியில் நந்தாவுடன் பேசியதை யோசித்துக் கொண்டு இருந்தாள் .

மலர் என்னடி ஒரு மாதிரி இருக்க என்று கேட்டதற்கு ஒன்னும் இல்லம்மா நல்லா தான் இருக்கேன் .

ஏய் என்னடி சொல்லு.ஒன்னும் இல்லனு சொல்ற இல்ல  ஒன்னும் இல்லனு சொல்ற ஆனா  உன்ன பார்த்த  அப்படி ஒண்ணும் தெரியல ஏதோ போல இருக்க.

என்னடி  உடம்பு முடியலையா சொல்லு கண்ணம்மா. ஒண்ணும் இல்லைன்னு சொல்ற தான என்றாள்.

தன் மகள் எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டாள். அதுவும் தன்னிடம் ஒரு மாதிரியாக பேசுகிறாள் என்று நினைத்து தன்னுடைய கணவன் வரட்டும் என்று காத்திருந்தார் .

சிறிது நேரத்தில் கண்ணனும் வர எங்க மலரு கண்ணம்மா என்றார்.

உங்க புள்ள பின்னாடி தோட்டத்துல இருக்கா .எதோ ஒரு மாதிரி இருக்கா நான் கேட்ட பதில் கூட சொல்ல மாட்ற.

நீ புள்ளைய எதாச்சும் திட்டினியா? நான் உன் மகளை எதுவுமே திட்டலை மாமா .

போய் என்னன்னு கேளு எதும் பதில் சொல்ல மாட்ற என்கிட்டே ஒரு மாதிரி தான் பேசுற .

சரி சரி நாளைக்கு நல்ல நாள் வேற நீ புள்ளையை எதும் சொல்லதா நான் போய் பார்க்கிறேன்.

கண்ணம்மா என்று அழைப்புடனே செல்ல அப்பா என்று அவரை கட்டிக் கொண்டு சிரிக்க செய்தாள் .

என்ன கண்ணம்மா நீ முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கணு உன் அம்மா சொன்னா நீ  சிரிச்சா முகமாக இருக்க என்று கேட்டார்.

அந்த மலர் புள்ளைக்கு என்ன பத்தி உன்கிட்ட குறை சொல்லலனா  தூக்கமே வராது பா  .

பின்னாடியே வந்த மலர் அதைக் கேட்டுவிட்டு ஏன்டி சொல்ல மாட்ட.

புள்ள வந்ததில் இருந்து ஒரு மாறி இருக்கே  என்ன ஏதுன்னு தெரியலையே உன் அப்பாவ கேட்க சொன்ன.

எல்லாம் சொல்லுவ டி  என்ன குத்தம் சொள்ளலானா உங்க ரெண்டு பேத்துக்கும் தான் தூக்கம் வராதே  என்று தன் மேவாயில் இடித்துக் கொண்டார் .

நீ வந்ததுல இருந்து உன்னை அப்படி பார்த்த உடனே  என் மனசு அடிச்சு கிட்டது எனக்கு தாண்டி தெரியும் என்று முனகிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் .

இருவரும் மலரை பார்த்து சிரித்தார்கள். இருவரையும் முறைத்து விட்டு இருவருக்கும் டீ கொடுத்தார்.

பிறகு ,மூவரும் சிறிது நேரம் பின் கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

மலர் இரவு உணவு சமைத்த பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்து  சாப்பிட்டார்கள்,

கண்ணம்மா நாளைக்கு என்ன பண்ணலாம்னு சொல்லு. அப்பா நாளைக்கு வேலை இல்லையா ?

ஞாயிற்றுக்கிழமை கண்ணம்மா உன் கூட தான் இருப்பேன்.  இருந்தாலும் நீ வீட்ல இருக்கியா என்று தியா கேட்க .

நாளைக்கு என்  கண்ணம்மாவுக்கான நாள் என்றார்.

சிரித்த முகத்துடன் ஐ ஜாலி என்று தியா குதிக்க செய்தாள் .ரொம்ப குதிக்காத டி இப்ப தான்  10 வயசுன்னு நினைப்பு.

மலர் அவ்வாறு சொன்னவுடன் அவளது நினைவு நந்தாவிடம் சென்றது.

உன்னோட வயசு என்ன ?என்னோட வயசு என்ன என்று சொன்னது நினைவில் வந்து ஒரு சில நொடி சிரித்து விட்டாள்.

10 வயசு இல்ல 20 வயசு என்று சிரித்துவிட்டு தன் தாய் தாடையில் லேசாக கிள்ளிவிட்டு  அறைக்குள் புகுந்தாள்.

சின்ன புள்ளை டி அவ கிட்ட எதுக்கு வீம்புக்கு நிக்கிற .
மாமா உன் மக சின்ன பொண்ணு இல்ல சரியா?

அவளுக்கும் வயசுக்கு ஏறி கிட்டே போது மாமா நினைவில் இருக்கட்டும் .

தப்பா சொல்லுறியா ?உன் புள்ளைய யாரும் இங்க  தப்பா சொல்லல .ஆனா உன் பிள்ளை மேல ஒரு கண்ணு வச்சுக்கோன்னு சொல்றேன் .

வயசு புள்ள மறந்துராத .உன் மகளோட முகமும் சரி பேச்சும் சரி ஒரு மாதிரியா இருக்கு அவ்வளவு தான் சொல்லுவேன் .

அதுக்காக உன் மக தப்பு  பண்றான்னு நான் சொல்லல உனக்கு புரியும் அவ்வளவுதான் சொல்வேன் என்று விட்டு மலர் சமையல் செய்ய சென்று விட்டார்.

கண்ணனும் ஒரு சில நொடி தியாவை  எண்ணி யோசித்து விட்டு எதுவாக இருந்தாலும் தன் மகள் தன்னிடம் சொல்லாமலா இருப்பாள்.

எதுவாக இருந்தாலும் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிவிட்டு அமைதியாகிவிட்டார்.

இரவு சமைத்துப் பிறகு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றார்கள் .

இப்பொழுது எல்லாம் கண்ணன் வெளியில் ஹாலில் படுத்துக் கொள்வார் .

தியாவும் மலரும் அறையில் படுத்துக் கொள்வார்கள்.

மலர்  தூங்காமல் தியாவையே   பார்த்து கொண்டு இருந்தார். தியா தா ரொம்ப நேரமாக தன் அம்மா தூங்காமல் ஏதோ யோசனையில் அதுவும் தன்னை பார்த்து கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு  என்னம்மா என்று கேட்டாள்.

தியா கேட்டவுடன் மலர் எழுந்து உட்கார்ந்து தனது மகளின் தலையை வருடு விட்டுக் கொண்டு கண்ணம்மா அம்மா ஒன்னு  கேட்பான் தப்பா எடுத்துக்க மாட்டியே?

உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கன்னு தெரியல .ஆனா நீ நினைப்பது தப்புன்னு நான் சொல்லிட மாட்டேன்.

ஆனா அதுக்கான காலமும்  ,நேரமும் இது தானனு யோசிச்சுக்கோ வேற எதுவும் அம்மா சொல்ல மாட்டேன் .

உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். இது ஒன்னும் விளையாட்டுக்காக நான் சொல்லல உணர்ந்ததால் மட்டும் தான் சொல்றேன்.

யோசிச்சுக்கோ நீ செய்யறது தப்புன்னு அம்மா சொல்லல .ஆனா அதுக்கான நேரமும் காலமும் இதுவானு மட்டும் யோசிச்சுக்கோ என்று  விட்டு அவளது தலையை  வருடி விட்டார் .

தியா ஒரு சில நொடி யோசிக்க செய்தாள் .தன் அம்மாவும் தன்னுடைய வயதை கடந்து வந்தவர் தானே.

தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரியாமல் பேசவில்லை. என்ன விஷயம் என்று முழுமையாக தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர்ந்தால் தான் இவ்வாறு பேசுகிறார் .

அப்போது, தான் அந்த அளவிற்கு தான் நடந்து கொள்கிறோமா ,வெளிப்படையாகவா நம்முடைய செயல் இருக்கிறது என்று ஒரு சில நொடி யோசிக்க செய்தாள்.

அம்மா  நான் நிதானமாக யோசிக்கிறேன். அப்படி உன்னையும் அப்பாவையும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையும் கொண்டு வந்து நிறுத்த மாட்டேன் என்று தன் தாயின் கையை தான் தாடையில் வைத்து விட்டு தன் தாயின்  கண்ணை பார்க்க செய்தாள் .

மலரும் தியாவின் கண்ணை பார்த்து சிரித்து விட்டு நீ எங்களை எந்த ஒரு இக்காட்டான சூழ்நிலையிலும்  கொண்டு வந்து விட மாட்டாய் என்று எனக்கு தெரியும் என்றார்

தியா மலரை பார்த்து சிரித்தாள் .இதுதான் என் மலரு புள்ள என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஆனால் ,இப்படி சொல்லும் மகளே  நாளை தங்களை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்துவாள் என்பதை அப்போது  மலரும் அறியவில்லை .

அப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று எண்ணியிருந்தால் தியா இப்பொழுது இவ்வாறு ஒரு வார்த்தை விட்டிருக்க மாட்டாளோ என்னவோ.

மூவரும் அன்றைய பொழுது நன்றாக உறங்கினார்கள். மறுநாள் பொழுதும் நன்றாக விடிந்தது .

காலையில் எழுந்த உடனே வாசல் தெளிக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த மலர் தங்கள் வீட்டு வாசற்படியில்  இடித்து கொண்டார்.

இடித்து  கொண்ட உடனே மாமா என்று லேசாக  முனங்கினாள். கண்ணன் அப்பொழுதுதான் தூங்கி எழுந்தார்.

மலர் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்துவிட்டு என்ன ஆச்சு மலரு என்று கேட்டார்.

ஒன்னும் இல்ல  மாமா  வாச படியில இடுச்சுக்கிட்டேன் ஏதோ ஒரு மாதிரியா இருக்கு என்றவுடன் என்ன மலர் பண்ணது உடம்புக்கு என்றார்.

மலர் உடனே உடம்புக்கு ஒன்னும் பண்ணல மாமா .மனசுக்கு தான் .

இதுக்கெல்லாம  மலரு என்று கேட்க  உனக்கு புரியாது மாமா என்று விட்டு வாசல்  தெளிக்க போனார் மலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *