Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 24

மீண்டும் மலரும் உறவுகள் 24

மலர் யோசனை உடனே தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் வந்தார்.

தியா எழுந்தவுடன் கண்ணன் மலர் இருவரும் தியாவின் ஆளுக்கு ஒரு பக்கம் காதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்கள்.

தியா இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு இருவரது கன்னத்திலும் முத்தம் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

அவள் குளித்துவிட்டு வந்தவுடன் அவளுக்கு என்று வாங்கிய புது துணியை கண்ணன் கொடுக்க தேங்க் யூ  அப்பா.

அப்பான்னா அப்பா தான் என்று அவரது கன்னத்தில் முத்தம்   வைத்தாள்.

அம்மா நீ  என்ன வாங்கின என்று கேட்டாள். உன் அப்பா வாங்கினாள் என்ன நான் வாங்கினாள் என்ன டி இரண்டும் ஒன்று தான் என்றார்.

மலரு நல்ல சமளிக்கிற என்று தன் தாயின்  நெற்றியில் முட்டிவிட்டு நீ வேற அப்பா வேற இல்ல தான் என்று மலரின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவர்கள் வீட்டில் இருக்கும் அறைக்கு சென்று தன்னுடைய புது துணியை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள் .

அப்பா எப்படி இருக்கு என்று கேட்டாள். உனக்காகவே தேடி கண்டுபிடித்து வாங்கினது கண்ணம்மா  நல்ல இல்லாம போகுமா ?

என் கண்ணம்மாவுக்கு சூப்பரா இருக்கு ராசாத்தி கணக்கா இருக்கா என்று சிரித்தார் .

என்ன மாமா இது பாவாடை சட்டை . ஏன் மா அப்பா வாங்கினது உனக்கு தெரியாதா ?

உன் அப்பா என் கிட்ட எங்க காமிச்சாரு  .

ஏன் டி இந்த சட்டைக்கு என்ன ?என் புள்ளைக்கு பாவாடை சட்டை நல்லாதான் இருக்கும்.

பாவாடை சட்டை உன் பிள்ளைக்கு நல்லா தான் இருக்கும் .ஆனா உன் புள்ள இன்னும் சின்ன புள்ள இல்ல மாமா .

20 வயசு ஆயிடுச்சு மறந்துராத .
இருக்கட்டும் டி நீ  ஓவரா பண்ணாத . என் பிள்ளைக்கு 20  வயசான என்ன எத்தனை வயசு ஆனாலும் என் புள்ள எனக்கு சின்ன புள்ள தான்.

உன் புள்ள உனக்கு தான் மாமா  சின்ன புள்ள . ஊர்ல இருக்கிறவங்களுக்கும் சின்ன புள்ள இல்ல அத மனசுல வச்சுக்கோ என்றார்.

தனது கணவனிடம் பேசி  விட்டு சரி டி திரும்பு என்று தியாவை திருப்பி அவளது தலையை காய வைத்துவிட்டு அவளுக்கு லேசாக தலையும் சீவி விட்டு தங்கள் வீட்டு செடியில் பூத்த குண்டு மல்லி  பூவை கோர்வையாக கட்டி தன் மகளின் தலையில் சூடி அழகு பார்த்தார் மலர்.

பிறகு ,மூவரும்  வீட்டில் இருக்கும் சாமியை கும்பிட்டு விட்டு இட்லியும் ,பொங்கலும் , கேசரியும்  செய்தார் மலர் .

சாப்பிட்டுவிட்டு மூவரும் கோவிலுக்கு சென்று விட்டு மதிய உணவு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.

சரி கோயிலுக்கு போலாமே என்று இறுதியாக கோவிலுக்கு போறதுக்கு தேவையான எடுத்து வைக்க சென்றார் மலர்.

அங்க போகும்போது வாங்கிக்கலாம் மலரு என்றார். என்ன மாமா எதை பார்த்தாலும் அங்க வாங்கிக்கலாம் இங்க வாங்கிக்கலாம் .

தேங்காய் நம்ம மரத்துல இருக்கு. நம்ம செடியில் பூ இருக்கு .வெற்றிலையும் பின்னாடி நம்ப கொடியில  இருக்கு. எத பாத்தாலும் வெளியே வாங்கலாம் வெளிய வாங்கலாம் சொல்ற .

காசு நிறைய செலவு பண்ணதா மாமா சேர்த்து வைக்க பாரு  பொட்ட புள்ள பெத்து வச்சு இருக்கோம்.

ஏன் டி அதுக்காக என் புள்ளைய நான் இப்பவே கட்டிக் கொடுக்க போறேன் .இப்பயே கட்டி கொடுக்க போறனு நான் சொல்லால.

“நீ  உன் புள்ளைய எப்ப வேணாலும் கட்டி கொடு .ஆனால் விலைவாசி என்ன விக்குதுனு  மறந்துடாத சேர்த்து வைக்கணும் சரியா ? “என்றார்.

தியா தனது தாய் தந்தையின் செல்ல சண்டையை பார்த்து சிரித்துக் கொண்டாள்.

நல்ல சிரி டி என்று மலர் தன் மகளைக் முறைத்தார்.

தியாவின் தலையில் கொட்ட வந்தார்.  மலரு  என்று கண்ணன் சொல்ல. நான் கொட்டலை மாமா உன் பிள்ளையை என்று விட்டு சிரித்துக் கொண்டார் .

தியா தன்  தாயை ஒரு பக்கமாக கட்டி அணைத்து மலர் தாடையில் முத்தமிட்டாள்.

பிறகு மூவரும் ஒன்றாக வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு சாமியை தரிசனம் செய்வதற்காக கோவிலை நோக்கி சென்றார்கள் .

கோவிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு கோவிலை சுற்றி வரலாம் என்று சொல்லிவிட்டு மூவரும் பேசிக்கொண்டே சாமியை சுற்றி வந்தார்கள் .

அப்பொழுது கோயிலுக்கு அருகில் உள்ள குளத்தங்கரையில் உட்காரலாம் என்று விட்டு மூவரும் குளத்தங்க கரையில்  உட்கார்ந்து தேங்காய் உடைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுதுதான், கோவிலுக்குள் நுழைந்த நந்தா, தேவி, உதயா மூவரையும் பார்த்த தியா என்ன நந்தா சார் இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார் என்று எண்ணி விட்டு அவளது கண்ணில் பட்டது என்னவோ நந்தா மட்டும் தான்.

நந்தாவின் மீது தனது முழு பார்வையையும் வைத்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய பிறந்தநாள் அன்று நாம் இவரை பார்ப்போம் என்று எண்ணவில்லையே என்று யோசித்து விட்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

  பிறகு ,மூவரும் சாமி முன்பு வந்து அர்ச்சகரிடம் அர்ச்சகத்தட்டை கொடுத்துவிட்டு சாமியை தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது தான் இந்த பக்கம் அருகில் உதயாவும் இந்த பக்கம் தேவியும் நிற்பதை பார்த்துவிட்டு இந்த ஆண்டியை நாம் எங்கோ பார்த்திருக்கிறோமே என்று ஒரு சில நிமிடம் யோசித்து விட்டு இந்த ஆன்ட்டி தானே அந்த ஆண்ட்டி என்று யோசித்தாள்.

அதன்பிறகு தான் தன் தந்தை திட்டியதெல்லாம் யோசித்துவிட்டு இந்த ஆண்டியை தன் அப்பா எதற்காக திட்டினார் .

இன்னும் அதற்கான விடை கிடைக்கவில்லையே ?ஆனால் இவருக்கும், நந்தா சாருக்கும் என்ன உறவு என்று யோசித்து விட்டு அம்மா  ஒரு நிமிஷம் வந்துடறேன் .

என்னோட சார் அங்க இருக்கார் பேசிட்டு வரேன் என்று விட்டு ஓடினாள்.

மெதுவா போ கண்ணம்மா என்று மலர் கூறியதையும் காதில் வாங்காமல் ஓடினாள்.

இரு கண்ணம்மா நானும் வரேன் என்று கண்ணன் கூறியதை கேட்காமல் துள்ளி குதித்துக் கொண்டு ஓடினாள்.

மலர் இங்கு சிரித்து கொண்டார் . உன் மக எப்படி துள்ளி குதிச்சிட்டு போறா பாரு மாமா என்று இரு மலரு  நானும் பார்த்து பேசிட்டு வரேன்.

நானும் வர மாமா யாருன்னு பாப்போம் .அந்த மனுஷனை என்று விட்டு இருவரும் பேசிக் கொண்டே வந்தார்கள் .

நந்தா முன்பு வந்து  நின்று நந்தா சார் என்று கத்தினாள். மூவருமே ஒரு சேர கண்ணை திறந்தார்கள் .

எதிரில் இருக்கும் தியாவை பார்த்தவுடன் தேவியின் முகம் மாற்றத்தை காட்டியது .

நந்தா  இவள் எங்கே இங்கே என்று மனதில் யோசித்தான். உதயா  இந்த பெண் தானே நாம் நேற்று பார்த்தது என்று யோசித்தான் .

மூவரும் யோசனையில் நின்று கொண்டிருக்கும் பொழுது சார் எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் அதான் கோவிலுக்கு வந்திருக்கேன்.

நீங்க என்று கேட்டாள். உடனே உதயா தான் தன்னுடைய யோசனையில் இருந்து  வெளியில் வந்தவன் இன்னைக்கு தான் என்னோட அம்மாவுக்கும் பிறந்த நாள் என்றான்.

உதயா சிரித்த முகத்துடன் ஹாப்பி பர்த்டே பாப்பா என்றான்.தேங்க்ஸ்னா என்று கை குலுக்கினாள் .

அடுத்த நொடி கண்ணன் கண்ணம்மா என்று வேகமாக கத்தினார் .

கண்ணன் தன் கையில் இருக்கும் தேங்காய் சில்லை கீழே போட்டு அதிர்ச்சி உடனே தன் அப்பாவை திரும்பிப் பார்த்தாள் தியா.

இத்தனை வருடங்களில் தன் தந்தை இவ்வளவு ஆவேசமாக  கத்தி அவள் கேட்டதே இல்லை.

இப்பொழுது ஏன் இவ்வாறு கத்துகிறார் என்று யோசனையோடே அவரை பார்க்கச் செய்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *