Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 25

மீண்டும் மலரும் உறவுகள் 25

கண்ணன் கண்ணம்மா என்று வேகமாக கத்தியவுடன் தியா திரும்பி பார்த்துக் கொண்டே தன் கையில் இருக்கும் தேங்காய் சில்லுகளை கீழே போட்டு விட்டு தன் தந்தையை அதிர்ச்சியாக பார்க்கச் செய்தாள்.

தன்னுடைய அப்பா இத்தனை வருடங்களில் தன்னிடம் இவ்வளவு வேகமாக பேசியது இல்லையே என்று தன் தந்தையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

கண்கள் சிவப்பு நிறத்தில் இருந்தது தன் அப்பா எதற்காக இவ்வளவு கோபம் கொள்கிறார் என்று யோசனையாக தன்  தந்தை பார்த்துக் கொண்டிருந்தாள் .

வேகமாக தியாவின் அருகில் வந்தவர் உதயாவின் கையைத் தட்டி விட்டார் . என்ன சார் என்ன ஆச்சு என்று உதயா கேட்டான்.

தேவி அமைதியாக கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தார் .நந்தா தான் உதயா விடு என்று விட்டு அமைதியாக இருந்தான்.

மலர் தான்  மாமா என்று கையை பிடித்தாள்.

மலர்  தான்  அமைதியாக இரு மாமா எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று தன் மாமாவின் கையை பிடித்துக் கொண்டு நின்றார்.

ஒரு நிமிஷம் என்று விட்டு வெட்கமா இல்ல என்று தேவியை பார்த்து கேட்டார். தேவி வேகமாக நந்தாவின் கையை பிடித்தார்.

நந்தா ஏதோ பேச வாய் எடுத்தவன். தன் அக்காவின் கைப்பிடியை  பார்த்து விட்டு  அமைதியாக இருந்தான். 

பின்பக்கம் இருந்து மலருமே கையெடுத்து கும்பிட்டார்

அப்பா என்று தியா சொல்ல கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா என்றார்.

அப்பா எதுக்கு வெக்கமா இல்லையான்னு சொல்றீங்க என்ன நடந்துச்சு .

உங்களுக்கு இந்த ஆன்ட்டியை புடிக்கலையா ? எனக்கு இதுவரைக்கும் காரணம் தெரியல அதனால அமைதியா விட்டுட்டேன் .

இவர்தான் எனக்கு பாடம் எடுக்கிற  சார் என்றாள். உன் படிப்பும் குட்டி சவுறா  போன மாதிரி தான் என்றவுடன் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த உதயா இப்பொழுது வேகமாக கத்தினான்.

என்ன சார் விட்ட ஓவரா பேசிட்டு போறீங்க .யார் நீங்க ? யார் நீங்க  என்று கேட்கிறேன் .

என் மாமாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். என் மாமாவை பத்தி பேசுறீங்க. அதும் அவர்  வகுப்பு எடுக்குறது பத்தி.

என் மாமா எந்த அளவுக்கு வகுப்பு எடுப்பார்னு உங்களுக்கு என்ன தெரியும் .

என் மாமா பத்தி பேசுற தகுதியே உங்களுக்கு கிடையாது .

இதுல அவர் வகுப்பு எடுப்பது பற்றி எல்லாம் பேசுறீங்க. 

ஆமாம் உன் மாமா  பத்தி  பேச எனக்கு தகுதி இல்ல  தான். உன் மாமாவுக்கு அதைப் பற்றி பேச தகுதி உள்ளதா ?.

உங்க தகுதி எனக்கு வருமா சார் .போதும் ஒரு நிமிஷம் நிறுத்துறீங்களா .

டேய் யாருடா நீ எவனுக்கோ பிறந்தவன் எல்லாம் என் முன்னாடி நின்னு பேசி கிட்டு என்றவுடன் நந்தா வேகமாக தன் கையில் இருக்கும் பூ கூடையை தூக்கி எறிந்து விட்டு போதும் அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை .

ஒரு அளவுக்கு மேல பேசக்கூடாது .ஏன் டா பேசக்கூடாது என்றார் .

அமைதியா விலகிப் போயிட்டு இருக்கும்போது சீண்டி கிட்டு இருக்கீங்க.

எது நீங்க  அமைதியா போனீங்களா ? என் வாழ்க்கையை  மொத்தமா அழிச்சிட்டு நீங்க அமைதியா இருக்கீங்களா?

எது நாங்க உங்க வாழ்க்கையை  அழிச்சமா  நல்லா இருக்கே கதை அப்பறம்.

யார் யாரோட வாழ்க்கையை அழிச்சது . நந்தா வேண்டாம் டா விடு .

ஆமா எப்படி வேணும் நம்ம பக்கம் நியாயம் இருந்தா தானே வேண்டும் என்ற உடன் போதும் நிறுத்தியா என்ன நானும் பார்க்கிறேன் ஓவரா போயிட்டு இருக்கு .

என்ன எங்க அக்கா நியாயமா இல்ல . நானும் என் அக்காவுமா உன்னை ஏமாத்தனம் .

ஆமா எதுவுமே தெரியதவரு பாரு இவரு நாங்க என்ன  உன் சொத்து பத்தையா புடுங்கிட்டு உன்ன விட்டோம்.

அதை பிடுங்கியிருந்தா கூட பரவால்ல டா .

அம்மா சாமி அதை பிடிங்கி இருந்தா கூட பாரவ இல்லையா ?

இங்க பாரு நாங்க  உன்கிட்ட வம்பு வலக்கு வரல . இன்னைக்கு  நல்ல நாளும் அதுவுமா சாமி கும்பிட வந்து இருக்கோம் அமைதியா போயிடு .

பரவால்ல டா  இன்னும் இந்த கேடு கெட்டவளுக்கு பிறந்தநாள் ஒன்னு தான் கேடா ? .

என்ன என்று உதயா கேட்க .

ஆமா உன் ஆத்தாவுக்கு அந்த பிறந்தநாள் ஒன்னு தான் கேடு பாரு. என்ன விட்டு ஓவரா பேசிட்டே போறீங்க .

அமைதியா விலகி போகணும்னு நினைச்சா கூட விட மாட்டீங்களா .

விலகி  போங்கடா மொத்தமா என் வாழ்க்கை விட்டு ஒளிஞ்சு போவிங்கனு  நினைச்சேன்.

இப்படி என் வாழ்க்கையில்  குறுக்க வந்து விளையாடுவீங்கன நினைச்சேன்.

அன்னைக்கு உன் அக்கா வரும்போதே  நினைச்சேன் என்ற உடன் தன் அக்காவை திரும்பி பார்த்தான் நந்தா.

தேவியின் தலை தானாக கீழே இறங்கியது .அம்மா என்றான் உதயா.

இல்லடா அது என்றார்.  தியா தான்  இல்ல சார் அது நான் ஏஜ்ஜென்ட் பண்ணப்ப இந்த ஆன்ட்டி தான் என்ன கொண்டுவந்து வீட்டில் விட்டார்கள்.

அதுதான் அப்பா சொல்றாரு .ஆனா இந்த ஆன்ட்டிக்கும் ,அப்பாவுக்கும் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியல .

ஏய் இவள இனி ஆன்ட்டி ஆன்ட்டின்னு சொல்லாது. இவ  ஒரு பச்சை துரோகி என்றார்.

இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா என்ன பண்ணுவனே தெரியாது என்று நந்தா வேகமாக கத்த செய்தான் .

தேவியின் கை உருவிக்கொண்டு எப்படி எப்படி என் அக்கா  பச்ச துரோகியா ?.

பின்ன இல்லையா என் கையாலா தாலி கட்டி கிட்டு வேற ஒருத்தவனோட புள்ளையா சுமந்தவளா என்னன்னு சொல்வாங்க என்று கேட்க இங்கு தியா,உதயா இருவரும் அதிர்ச்சியில் நின்றார்கள்.

மாமா கண்ணம்மா என்று மலர் கத்த கண்ணனின் பார்வை தியா பக்கம் சென்றது .

நந்தாவுமே தியாவின் பார்வையை பார்த்துவிட்டு இவ்வளவுதான் உனக்கு மரியாதை .

நீ மரியாதை பத்தி பேசாத என்றவுடன் அப்பொழுது கூட கண்ணன் அமைதியாக இல்லாமல் நான்  எதையும் மூடி மறைக்கணும்னு நினைக்க வில்லை.

நான்  எந்த விஷயத்தையும் கிண்டி கிளற   வேணான்னு நினைக்கிறேன் .இதுவரை மூடி மறைக்க நினைக்கல சரியா ?

உனக்கு பெரிய வலி கிடையாது .இதை கூட உணராமல் இருக்க பாத்தியா உன்னையெல்லாம் என்ன சொல்ல நீயெல்லாம்  மனச ஜென்மமே இல்ல.

இன்னும் நீ திருந்தல. என்னடா நான் திருந்தனும். கேடுகெட்ட வாழ்க்கை  நீங்க வாழ்ந்துகிட்டு .

நான் ஏன் டா திருந்தனும் என்று கத்தினார் . எது நானும் எங்க அக்காவும் கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்து கிட்டு  இருக்கோமா?

இப்போ என்னயா  உனக்கு இவன் யாருக்கு பொறந்தவன் என்று  உனக்கு இன்னமும் டவுட்டா?

இவன் யாருக்கு பிறந்தவன்னு உனக்கு தெரியுமா ? என்று உதயாவின் சட்டையை கழட்டு டா என்றான்.

உதயா  அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்தவன்.  உதயா என்று கத்தியவுடன் தனது சட்டையை அவிழ்த்தான்.

நந்தா அவனை வேகமாக பின்பக்கம் திரும்பி நிற்க வைத்தவன் பாத்தியா பாத்தியா நல்லா பாத்துக்கோ.

அம்மா மலர் அக்கா இதே மாதிரி உன் புருஷன் முதுகுல இருக்கா பார்த்து இருப்ப இல்ல இருக்கா என்று விட்டு ஒரு தழும்பு மாதிரி இருக்கும் மச்சத்தை காண்பித்தான்.

பிறகு உதயாவின் காதை திருப்பி இந்த காதில் ஒரு மச்சம் இருக்கா இதே இடத்தில் உன் புருஷன் காதிலும் இருக்கான்னு பாத்துக்கோ .

இன்னும் உனக்கு விளக்கம் வேணும்னா வா டி என் ஏ ரிப்போட் எடுக்கலாம் வா அப்போ உனக்கு எல்லாம் விளக்கமாக தெரிஞ்சுடும்.

“உனக்கான விளக்கம் சரியா ? “நானும் உன் மகளுக்காக பேசவேண்டாம் .ஒரு அளவுக்கு மேல யோசிச்சேன் .

ஆனா நீ என்ன பேச்சு பேசுற   உனக்கு  மரியாதை அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும் என்று ஆவேசமாக  கத்தினான்.

தேவி அங்கேயே மடிந்து உட்கார்ந்து அழ செய்தார். உதயா அதிர்ச்சியில் தனது மாமாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தியாவும் அதிர்ச்சியாகி நந்தாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள் .கண்ணனின் நிலை குத்திய பார்வை உதயாவின் மீது இருந்தது .

மலர் கையை பிசைந்து கொண்டு நிற்க செய்தார் .தம்பி என்று மலர் பேச வருகையில் போதும் இதுக்கு மேல எதுவும் பேச வேணாம்னு நினைக்ககிறேன்

வீட்டுக்கு கிளம்புங்க இதுக்கு மேல நான் எதுவும் பேச விரும்பல என்று கையெடுத்து கும்பிட்டான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *