Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 3

மீண்டும் மலரும் உறவுகள் 3

“கண்ணன் சிரித்த முகமாக மலர் புள்ள என்று மலரின் இரு பக்கத் தோளிலும் கை போட்டார் பின் பக்கம் இருந்து”..

“போயா என்கிட்ட எதுக்கு வர..”

“உனக்கு உன் பிள்ளை தானே முக்கியம். நீ இல்லாமலாடி எனக்கு என் பிள்ளை கிடைச்சிட்டா”..

“இதற்கு ஒன்றும்  குறைச்சல் இல்லை என்று சினுங்கினார்”..

“எதையோ பண்ணு யா அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்தா என்னதான் ஏதாச்சு சொல்லுவாங்க”..

” உனக்கு என்ன? என்று சொல்லிட்டு டீ போட ஆரம்பித்தார்”..

“அதுக்காக, யாரோ சொல்றாங்கன்றதுக்காக நம்ம பிள்ளையை அடக்க முடியுமா ?”.

“ஒரு சில நிமிடம் கண்ணனின் கண்ணை உற்று பார்த்து விட்டு நான் எதுவும் சொல்லல”..

” இப்ப நீங்க சந்தோஷமா இருக்கீங்க. உங்க மனநிலையை கெடுக்க நான் விரும்பல என்று விட்டு போட்ட டீயை தனது கணவனின் கையில் கொடுத்துவிட்டு தன் மகளுக்கு டீ எடுத்துக் கொண்டு சென்றார்”..

” போகும் மலரையே பார்த்துக்கொண்டு நின்றார் கண்ணன் “..

“மலர் தியாவை தேடிச்சென்று தியாவின் கையில் டீ கொடுத்தார்”..

” எனக்கு டீ வேண்டாமே பசிக்குது மா”..

” சரிடா ,கண்ணம்மா அம்மா உனக்கு தோசை ஊத்தி தரட்டா. இல்ல ,இட்லி ஊத்தி எடுத்துக் கொண்டு வரட்டா என்றார் “..

“அம்மா சாதம் இருந்தால் கூட போதும். சரி டா கண்ணம்மா இரு என்று விட்டு சமையலறைக்கு சென்றார்”..

” அவரது பின்னோடு வந்த தியா தந்தையை பார்த்துவிட்டு  அப்பா பசிக்குது என்றாள்”..

” கண்ணன் உடனே மலரு புள்ளைக்கு பசிக்கிதாம் டி என்றவுடன் இரு யா  வரேன் அவளுக்கு தான் சாதம் எடுத்துட்டு வரேன் “..

“ஏன் இட்லி தோசை ஊத்தி தர வேண்டியது தானே என்றார் “..

“உன் மவ தான் சோறு வேணும்னு கேட்டா .நான் அவளுக்கு தோசை ஊத்தி தர மாட்டேன்னு சொல்லல என்று தனது கணவனை முறைத்து கொண்டே தன் மகளுக்கு சாதத்தை பிசைந்து எடுத்துக் கொண்டு வந்தார்”..

” கண்ணன் அதை வாங்கி தியாவிற்க்கு ஊட்டி விட்டார்”..

” சிரித்த முகமாக தன் தாய் தந்தையின் செல்லச் சண்டைகளை பார்த்துக்கொண்டு சாதத்தை உள்ளே தள்ளினாள் தியா”..

” அம்மா எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் போய் படுத்து கொள்கிறேன் என்றாள்”..

” இருடா கண்ணம்மா வருகிறேன் என்று விட்டு தன் மகளைப் பின் கட்டுக்கு அழைத்துச் சென்று இந்த மாதிரி நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் “..

“பேட் (நாப்கின்) எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் நகர்ந்தால் பயப்படக்கூடாது”..

” துணியில் பின்பக்கம் கரை படிந்தாலும் பயப்படாதே “..

“தன்னிடம் சொல்ல வேண்டும் என்று சொன்னார்.”..

” தன் தாய் சொல்ல சொல்ல அவளது தியாவின் நினைவுகள் ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் பொழுது தேவி தனக்கு சொல்லிய அறிவுரைகளை நினைத்து பார்த்தது”..

பிறகு ,”வீட்டிற்குள் திரும்பி பார்த்துவிட்டு தன் தாயிடம் அம்மா என்னை கொண்டு வந்து ஒரு ஆண்டி விட்டார்கள் அல்ல “..

“அந்த ஆண்ட்டி கூட இதுபோல்தான் சொன்னார்கள் .”.

“என்னை  தைரியமாக இருக்க சொன்னார்கள் என்ற உடன் எப்பொழுது இவ்வாறு எல்லாம் சொன்னார்கள் என்று  கேட்டதற்கு ஆட்டோவில் வரும்பொழுது என்றவுடன் சரி கண்ணம்மா என்று வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தார் “.

“அம்மா என்று கையை பிடித்தாள். என்ன கண்ணம்மா என்று மலர் கேட்டதற்கு நான் ஒன்று கேட்பேன் கோபித்துக் கொள்ள மாட்டாயே ?”..

“சொல்லுடா என்றவுடன் அம்மா அந்த ஆன்ட்டி யார் ?என்று உனக்கு தெரியுமா?”..

” அப்பா ஏன் கோபம் கொள்கிறார் ?அந்த ஆண்டியை பார்த்தவுடன் அந்த ஆண்ட்டி என்னிடம் தவறாக ஒன்றும் நடந்து கொள்ளவில்லையே “..

“எனக்கு நல்லது தான் செய்தார்கள். எனக்கு தைரியம் மூட்டினார்”..

” அவர்கள் கெட்டவர்கள் என்று யாருடா செல்லம் சொன்னது”..

“அப்பா ஆனால் கோபம் கொள்கிறாரே “..

“உன் அப்பா கோபம் கொண்டு விட்டால் அவர்கள் கெட்டவர்களாகி விடுவார்களா ?”..

இல்லை என்றாள்.

“ஒன்றும் இல்லைடா .அப்பாவிற்கு அந்த ஆண்டியை பிடிக்கவில்லை. அவ்வளவு தான்”..

” அதற்காக அந்த ஆன்ட்டி கெட்டவர்கள் என்று  ஆகிவிட மாட்டார்கள் சரியா ?”..

“அது எப்படி என் அப்பா நல்லவர் தானே.. அவருக்கு பிடிக்கவில்லை என்றால் “..

“நாளை உன் அப்பாவிற்கு என்னை கூட பிடிக்காமல் போகலாம் .அதற்காக, நான் கெட்டவள் என்று சொல்லி விடுவாயா ?”..

“அம்மா என்றாள். நான் சும்மா உனக்கு எடுத்துக்காட்டுக்கு தான் சொன்னேன்”..

“நான் கெட்டவள் என்று அப்படி சொல்லவில்லை .”

“உன் அப்பாவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக அனைவரும் கெட்டவர்களாகி விட மாட்டார்கள்”..

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும். சூழ்நிலை காரணமாக ஒருவர் இன்னொருவருக்கு கெட்டவராக தெரியக் கூடலாம்”.

” சரியா ?அதையும் நினைவில் வைத்துக்கொள்”..

” நீ சிறிய பெண் அல்ல .வளர்ந்து வரும் பெண்  நல்லது கெட்டதை தெரிந்து வாழ பழக வேண்டும் இனி.”..

” சரி மா என்றாள் தியா”..

” சரி வா என்று விட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் மலர்”..

” இவ்வளவு நேரம் அம்மா, மகள் இருவரும் பேசியதை கண்ணன் கேட்க தான் செய்தார் “..

ஆனால்,” வேறு எதுவும் பேசவில்லை .தன்மகள் வந்தவுடன் தன் மகளை தலையணையில் படுக்க வைத்து தட்டி கொடுத்தார்”..

” அப்பா நானே தூங்கிக் கொள்கிறேன் நீங்கள் போய் சாப்பிடுங்கள் நேரம் ஆகிறது என்றாள்”..

“கண்ணன் தன் மகள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு சரி டா கண்ணம்மா அப்பா சாப்பிட்டு வருகிறேன் என்று விட்டு எழுந்து  அறை கதவை லேசாக ஒதுக்கிவிட்டு மூவரும் ஒரே அறையில் தான் தங்கிக் கொள்கிறார்கள் ஹாலுக்கு வந்தார்”..

“கண்ணன் மலரை தேடி சமையலறைக்குச் சென்றார் .”..

“மலரு  நீ இங்க தான் இருக்கியா? என்றார் “..

“மலரு இவ்வளவு நேரம் பாப்பா கிட்ட என்ன டி பேசிட்டு இருந்த என்று கேட்டார்”..

” தன்  மனைவியை தன் பக்கம் திருப்பி தெரியல என்றவுடன் என்ன பார்த்து பதில் சொல் டி என்றார் “..

“என்ன சொல்ல வேண்டும் இப்பொழுது நான் எது சொன்னாலும் உங்களுக்கு தவறாக தான் தெரியும் “..

“நான் எதுவும் தவறாக சொல்லவில்லையே என்றார் மலர்”..

” அப்போது நான் தவறு என்று சொல்கிறாயா? “..

“மாமா நான் உன் மகள் கிட்ட பேசினதை நீ  கேட்ட என்று எனக்கும் தெரியும்”..

” இப்பவும் சொல்றேன் அவளுக்கு சொன்னது தான் உனக்கும் “..

“அவங்க அவங்க சூழ்நிலை அவங்க அவங்களுக்கு  அதை இப்போ இத்தனை வருஷத்துக்கு அப்புறம் நீ யோசித்து இருக்க நம்மளோட வாழ்க்கையை கெடுத்துக்காதே என்று விட்டு நகர்ந்தார் “..

“மலர் என்று கை பிடித்தார் கண்ணன்”..

“என்ன மாமா.”..

” இப்ப  என்னடி சொல்ற நான் உன்னை விட்டுவிடுவேன் என்று சொல்றியா ?”..
என்றவுடன் “மலரின் ஐந்து விரல்களும் கண்ணனின் தாடையில் பதிந்திருந்தது”..

“கொன்றுவேன்”. என்று” கண்ணனின் சட்டையை கொத்தாக பிடித்தவர். நான் எங்கேயாவது அப்படி சொன்னேனா”..

. “நீயே எதையாவது நினைச்சுக்க வேண்டியது இல்ல என்று விட்டு தனது கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டே சமையலறையை விட்டு வெளியில் வந்தார் மலர்”..

“மலர் கண்ணனை அடித்ததையும் இறுதியில் மலர் பேசிய வார்த்தையையும் கேட்ட தியா அதிர்ச்சியாகி தன் தாயை பார்த்தாள்”..

சமையலறையில் இருந்து வெளியில் வந்த மலர் தன் மகள் அங்கு நின்று கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு

” என்ன டி என்று கோபமாகவே கேட்க செய்தார் மலர் “..

“ஒன்றுமில்லை மா என்று தன்  தந்தையை கட்டிக் கொண்டாள் தியா “..

“ஒன்றும் இல்லை கண்ணம்மா என்று தன் மகளின் தலையை வருடி கொடுத்தார் கண்ணன் “..

” மலர் கண்ணனை அடித்ததை  தியா தவறாக எண்ணி விடுவாளா ?”என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்

தனிமையின் காதலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *