Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 4

மீண்டும் மலரும் உறவுகள் 4

“கண்ணன் அப்பொழுது நான் உன்னை விட்டு விடுவேன் என்று நினைக்கிறாயா ?என்றவுடன் மலரின் ஐந்து விரல்களும் கண்ணனின் தாடையை பதம் பார்த்திருந்தது “..

“என்னையா பேச்சு பேசுகிறாய் ?என்று கண்ணனின் சட்டையை கொத்தாக பிடித்தார் “.

“அம்மா என்று வந்து நின்றாள். தியா”

”  மலர் கண்ணனின் சட்டையிலிருந்து தன் கையை கீழே இறக்கிவிட்டு தனது கணவனை முறைத்து நின்றார் “.

“வேகமாக கண்ணன் தனது மகளின் அருகில் சென்று அவளது தலையை வருடி என்ன கண்ணம்மா என்றார் “..

“தியா தன் தாயை அமைதியாக பார்க்கச் செய்தாள் .”.

“அவர் அமைதியாக இருந்த உடன் அப்பா ,அம்மாவுடன் எதுவும் சண்டை போடாதே …”என்று விட்டு தன் தந்தையை கையோடு அழைத்துச் சென்றாள்”..

” கண்ணம்மா அம்மாவை தவறாக எண்ணி விட்டாயா ?என்று கண்ணன் கேட்க”..

“இல்லை ,அப்பா. “

“இது அம்மாவுக்கும் ,உங்களுக்கும் இருக்கும் விஷயம் .இதில் நான் தலையிட மாட்டேன்.”

” எனக்கு அம்மா நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துதான் வளர்த்து இருக்கிறார்கள்”..

” கணவன் மனைவி என்றால் சண்டைகள், பிரச்சினைகள் அனைத்தும் வர தான் செய்யும். அதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் .”

“அதில் மூன்றாம் நபர் யாரும் வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் “.

“மூன்றாம் நபர் யாரும் வராத வரை அந்த உறவு எப்போதும் நிலைத்து நிற்கும்”..

” மூன்றாம் நபர் வந்து விட்டால் இருவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை அங்கு காணாமல் போய்விடும் என்று அம்மா எனக்கு எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார்கள் “..

“நானும் அப்பாவும் எப்பொழுதாவது சண்டை இட்டல் கூட அதை நீ கண்டும் காணாமல் சென்று விடு பெரிதாக எண்ணி யார் பக்கமும் நிற்கவும் கூடாது”.

” அதேபோல் ,ஒருவரை குற்றம் சாட்டவும் கூடாது .அமைதியாக விலகிவிடு. “.

“இதையே எண்ணி உனது படிப்பையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி இருக்கிறார் என்றாள் தியா”..

“கண்ணனுக்கு தனது மலரை எண்ணி அவ்வளவு மகிழ்ச்சி “..

“மலரை எண்ணி மகிழ்ச்சி அடைந்து விட்டு தனது மகளை நெற்றியில் உச்சி முகர்ந்தார். தூங்குடா கண்ணம்மா”..

” தூக்கம் வருகிறது என்று சொன்னாய் என்று தனது மகளை தட்டிக் கொடுத்தார்.”

” அடுத்து அரை மணி நேரத்தில் தியாவும் தூங்கி இருந்தாள் “.

“கண்ணன் எழுந்து சமையலறை நோக்கி வந்தார். அப்பொழுதும் மலர் சமையலறை மீது சாய்ந்து கொண்டு தனது முந்தானையை திருவி கொண்டு இருந்தார்”..

” மலரை பார்த்த கண்ணன் மலரின் தோலில் தொட்டார்”..

“என்ன பேச்சு பேசுற மாமா நீ “என்று மலர் கண்ணனை கட்டிக்கொண்டு அழகு செய்தாள்”..

” மாமா நீ பண்றது உனக்கே சரியா இருக்கா ? என்ன பேச்சு பேசுறோம் என்று கொஞ்சம் யோசிச்சு பேசுறியா ?”..

“நான் நீ என்ன விட்டுட்டு போயிடுவேன்னு சொன்னேனா “..

“நான் உன்னை சந்தேகப்படுகிறேனா ?”.

“இதுக்கு தான் மாமா சொன்னேன். முடிஞ்சு போன விஷயத்தை பேசி நம்ம வாழ்க்கைக்குள்ள எதையும் கொண்டு வராத என்று உனக்கு புரியுதா இல்லையா என்று அழுதார்”..

” சாரி மலரு புள்ள “.

” நான் இனிமே அதை பத்தி பேசல சரியா “.

“நீ இனிமே அத பத்தி பேசாத யோசிக்காத”..

” இத பத்தி பேச வேணாம்னு சொல்லு என்றார் “..

“சரி என்று மலர் சொன்னவுடன் மாமா நம்ம தியா மனசுல எந்த ஒரு தப்பான விஷயத்தையும் விதைக்க கூடாது சரியா ?”.

“அவங்க சரியோ தப்போ, அதுக்காக அத நம்மளோட வாழ்க்கையில ,அதுவும் தியா ஓட வாழ்க்கையில நம்ம திணிக்க கூடாது “..

“அதையும் ஞாபகத்துல வச்சுக்கோ “..

“தியா மனசுல நம்ப ஒருத்தவங்க கெட்டவங்கன்னு பதிய வைக்க கூடாது”..

” அவங்க ஒட்டு மொத்த கேரக்டரும் தப்பா இருந்தா மட்டும் தான் அவங்க கெட்ட மாதிரி நம்ம பதிவு வச்சு நம்ம மகளை அவங்க கிட்ட இருந்து விலக நினைக்கணும் “..

“அவங்க நம்ப கிட்ட உறவாடவும் வரல, உனக்கு புரியும் நினைக்கிறேன்.”

” எதர்ச்சியாக பார்த்திருக்கிறார்கள். அவ நம்மளோட பொண்ணுன்னு அவங்களுக்கு தெரியாது “..

“அவங்க எதர்ச்சியா பார்த்து ஏதோ ஒரு பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணுகிறதா நினைச்சு தான் நம்ம பொண்ண கொண்டு வந்து விட்டு இருக்காங்க “..

“இங்க வந்த பிறகு தான் தியா நம்ப மகள் தான் என்பதே அவங்களுக்கு தெரியும்”..

” நம்மள ஏதாவது கற்பனை பண்ணிக்க கூடாது “..

“அவங்கள தப்பாகவும் சித்தரிக்க கூடாது “.

“உனக்கு புரியும் நான் இப்ப அவங்க சரின்னு சொல்லல , தப்புனும் ஒன்னும் சொல்லல “..

” தியா மனசுல எந்த ஒரு தவறான புரிதலையும் பதிய வைத்து விடக்கூடாது என்பதற்காக மட்டும் தான் சொல்றேன் சரியா ?என்றார்”..

” சரி என்று கண்ணன் மலரின் நெற்றியில் இதழ் பதித்தார்”..

“சரி வா மாமா பசிக்குது சாப்பிடலாம் என்றார் .இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட செய்தார்கள் “..

“பிறகு தன் மகளுக்கு ஆளுக்கு ஒரு பக்கம் போய் படுத்து கொண்டார்கள். மறுநாள் பொழுதும் நன்றாக விடிந்தது “..

” மலர் பக்கம் இருந்தும் ,கண்ணன் பக்கம் இருந்தும் ஒரு சில உறவினர்கள் வந்து தியாவை பார்த்துவிட்டு வாழ்த்தி விட்டு சென்றார்கள்”..

“மலர் தியா பத்தாம் வகுப்பு படிப்பதால் அடுத்த ஒன்பதாவது நாள் வீட்டிலேயே சிம்பிளாக வீடு அழைத்துக் கொண்டார்கள்”..

” உறவினர்கள் ஏன் பெரிதாக செய்யவில்லை என்று கேட்டதற்கு என் பெண்ணுடைய திருமணத்தை பெரிதாக செய்து கொள்கிறோம் என்றார்கள்”..

” ஏன் வசதி இல்லையா ?கண்ணா உனக்கு அப்படி செய்யாமல் இருக்க”..

”  வசதி இருக்கு இல்லை என்றெல்லாம் இல்லை. நான் ரொம்ப வசதியானவனும் கிடையாது ,அடிமட்டத்தில் இருப்பவனும் கிடையாது”..

“நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். என் பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன் இப்பொழுது அவள் படித்துக் கொண்டிருக்கும் பெண்”.

” அவளது கவனம் படிப்பில் தான் இருக்க வேண்டுமே தவிர தனக்காக இதை செய்கிறார்கள் அதை செய்கிறார்கள் என்பதில் இல்லை”..

” இந்த சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காக தான்  நெருங்கிய உறவினர்களை அழைத்து செய்கிறேன்”.

” மற்றபடி ஊரில் உள்ளவர்களையோ ,இன்னும் இருக்கும் மற்ற உறவினர்களையோ அழைத்து பெரிதாக என் மகளின் திருமணத்தை செய்து கொள்வேன். என்று ஒரே வார்த்தையாக முடித்துக் கொண்டார்”.

” தன் மகளிடம் ஏற்கனவே கண்ணன் ,மலர் இருவரும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டார்கள் “..

“கண்ணம்மா உனக்கு இந்த ஃபங்ஷனை பெரியதாக  செய்ய வேண்டுமா ?உன்னுடைய தோழிகளுக்கு எல்லாம் செய்திருப்பார்களே அதேபோல் என்றார்கள்”..

“வேண்டாம், எனக்கு அந்த அளவுக்கு பெரிதாக எல்லாம் செய்ய வேண்டாம் என்று அவள் சொன்ன பிறகு தான் ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவாக கேட்டுக் கொண்டுதான் இந்த முடிவை இருவரும் எடுத்தார்கள் “..

“இருவருக்குமே தன் மகள் தியா சொல்வது சரி என்ற பட்டதால் அமைதியாக விட்டுவிட்டார்கள் “..

“ஒன்பது நாள் கழித்து தியா மறுபடியும் பள்ளிக்கு எப்போதும் போல் செல்ல ஆரம்பித்தாள்”..

” எப்பொழுதும் போல் பள்ளி சென்று விட்டு தன் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தினாள்”..

ஆனால் ,”அதன் பிறகு ஏதாவது  ஆண்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் பேச செய்தாள் .”

” அதன் பிறகு அவள் மாத மாதம் தலைக்கு குளிக்கும் போதெல்லாம்  நாப்கின் உபயோகிப்பதை பற்றி இந்த மாதிரி நேரத்தில்  எல்லாம் அவளது எண்ணம் முழுவதும் தேவியை தேடிச் சென்றது”..

“அந்த ஆண்டி யார்?”

“ஏன் அந்த ஆன்ட்டி வீட்டிற்கு வந்தது தன் தந்தைக்கு பிடிக்கவில்லை”..

” தந்தைக்கும் ,தாய்க்கும் சண்டை வர காரணம் அந்த ஆண்டியா ?”..

“அப்படி ஒன்றும் அந்த ஆண்ட்டி தவறானவர் போல் தெரியவில்லையே “

“தனக்கு நல்லது தானே சொல்லிக் கொடுத்தார்கள் என்று அவ்வபோது நினைத்துக் கொள்வாள் “..

“அதுவும் அவள் சாதாரணமாக இருக்கும் பொழுது நினைக்க மாட்டாள் .தேவி சொன்னது ஏதோ ஒரு சில நொடிகளில் அவள் யோசிக்க செய்தாள் “..

“தேவி சொன்ன ஒரு சில விஷயங்கள் தன் வாழ்வில் வந்து செல்லும்பொழுது எல்லாம் அவள் தேவியை நினைக்க செய்வாள்”

“தேவிக்கும் , தியாவின் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்” என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *