Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 44

மீண்டும் மலரும் உறவுகள் 44

மூவரும் ஹோட்டல் சென்று இறங்க தேவி ஏற்கனவே வந்திருந்தார் .

நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, தேவி தான் உதயா என்கூட வருவான். நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க என்று சொல்ல.

இல்லக்கா என்று நந்தா வாய் எடுக்க .

சொன்னா கேளு டா என்றவுடன் வேறு எதுவும் பேசாமல் தேவியுடன் உதயா உட்க்கார்ந்து கொள்ள.

நந்தாவுடன் தியா ஏறிக்கொண்டாள்.

நீங்க ரெண்டு பேரும் வெளியவே இருங்க பெரியம்மா அவர் என்னை விட்டுட்டு வருவாரு என்று சொல்ல .

தியாவை முறைத்த தேவி “நான் என் மகள் வீட்டுக்கு வர்ரதுக்கு எதுக்கு தியா யோசிக்கணும்” என்று விட்டு அமைதியாகி விட்டார்.

” வீட்டிற்கு வரும் வரை தன்னிடம் ஏதாவது பேச மாட்டாளா ?”என்று அவளை பார்த்துக்கொண்டு இருந்தான் நந்தா.

கண்ணாடி வழியாகவே அவனைப் பார்த்தவள். அமைதியாகவே வந்தாள்.

“கேடி ஏதாச்சும் வாயை திறக்கிறாளா ?”பாரு என்று மனதிற்குள் எண்ணினான்.

“மேடம் என்கிட்ட பேச மாட்டீங்களோ ? “என்றான்.

“நீங்க தான் சார் என்கிட்ட பேசல ?”நான் பேசாம இல்ல.

“அப்போ நீ எதுவும் சொல்லல” .

திரும்ப ஆரம்பிக்காதீங்க ஃபர்ஸ்ட் ல இருந்து “இப்ப என்னதான் உங்களுக்கு பிரச்சனை” என்றாள்.

“எனக்கு என்னடி பிரச்சனை” என்று அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான் .

ஒற்றை கையால் வண்டியை ஓட்ட ஒரு சில நொடி அவனது கைக்குள் தன் கையை வைத்திருந்தவள் .

“ரோட்ல போயிட்டு இருக்கோம் வண்டி ஓட்டிட்டு இருக்கீங்க “என்றாள்.

” ஏன் ,அது எனக்கு தெரியாதோ?” என்று அவளை பின்பக்கமாக திரும்பி முறைத்து பார்த்தான்.

  “நம்ப விசியத்தை வீட்ல போய் வச்சுக்கலாம்” என்றாள்.

” என்னத்த ?”
என்று  கண்ணாடி வழியாக அவளை பார்க்க .

“பஞ்சாயத்தை சண்டையை” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அது சரி என்று எப்பொழுதும் போல கலகலப்பாக இருவரும் பேசிக் கொண்டு வர .

அவர்களுக்கு சிறிது இடைவெளி விட்டு வந்து கொண்டிருந்த தேவிக்கு மனம் குளிர்ந்து போனது .

அதன் பிறகு ,நால்வரும் வீட்டிற்கு வந்து சேர.

தேவியை வரவேற்று டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து மலர் கொடுக்க .

சரி மலர் நேராமாகுது நாங்க கிளம்புறோம் தியாவை விட தான் வந்தோம் என்றார் .

சரிக்கா என்றவுடன் நந்தா தன் கையில் இருந்த பார்சலை மலர் கையில் கொடுத்தான்.

சிறிது நேரம் அந்தக் கவரைப் பார்த்த மலர் இது என்ன தம்பி என்று கேட்டதற்கு .

இல்ல நாங்க நாலு பேரும் சாப்பிட்டோம் அதான் உங்க ரெண்டு பேத்துக்கும் என்று சொல்ல.

“வீட்ல சமைச்சு இருக்கேன் தம்பி “என்றார்.

இருக்கட்டும் அப்படி இருந்தால் நாளைக்கு அதை சூடு பண்ணி சாப்பிட்டுக்கோங்க இப்போ இதை சாப்பிடுங்க என்றான்.

சரி என்று தலையாட்டிவிட்டு மூவரிடமும் சொல்லிக் கொண்டு நந்தா ,தேவி ,உதயா மூவரும் அவர்கள் வீட்டு நோக்கி சென்று விட்டார்கள் .

அதன் பிறகு நாட்கள் அழகாக சென்றது .

தியா காலேஜில் நந்தாவை பார்த்துக் கொள்வாள்.

தினமும் வீட்டிற்கு வந்தவுடன் தியாவாகவே ஒரு ஒரு மணி நேரம் கழித்து அவனுக்கு போன் செய்வாள்.

அவனும்  வீட்டிற்கு வரும் வழியில் ஹெட்செட் போட்டுக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டு வருவான்.

வீட்டுக்கு வந்த பிறகு எப்படியும் ஒரு அரை மணி நேரம் பேசுவான்.

அதன் பிறகு ,தனது அக்கா மச்சானுடன் உட்கார்ந்து காலேஜில் நடந்ததை சொல்லிவிட்டு சிரித்து பேசிவிட்டு இரவு 9 மணிக்கு மேல் அவளுடன் பேச செய்வான் .

அந்த நேரம் அவளுக்கு படிக்கும் நேரம் என்று அவனாவே ஒதுக்கி இருந்தான் .

தியாவுமே அதை பழகிக் கொண்டிருந்தாள் .

அப்படியே ஆடி மாதம் 17 நாள் முடிந்து இருந்தது.

18 வது நாளுக்கு முன்பாகவே நந்தாவிற்கு தனியாகவே அழைத்த மலர் நந்தாவிடம் நாளைக்கு ஆடி 18 தம்பி .

காலேஜ் லீவு இல்லை என்று எனக்கு தெரியும் . மூணு பேரும் லீவ் போட்டுடு வந்தீங்கன்னா .

தியாவும் லீவு போட்டு இருந்தா  நாளைக்கு வீட்டுக்கு வந்துட்டு போக வசதியா இருக்கும் என்றார்.

சரிக்கா நாங்க மூணு பேரும் வந்திடுறோம் என்று விட்டு ஒரு சில நொடி யோசித்த நந்தா “தியாவை கையோடு கூட்டிட்டு போயிடலாம் தானே” என்றான்.

மலருக்கு ஒரு சில நொடி தன்னை மீறிய சந்தோஷம் தான்.

தங்கள் மகள் தங்களுடன் நாளையிலிருந்து இருக்க மாட்டாள் என்று எண்ணம் தோன்றினாலும் ,தங்களை விட தங்களை போலவே தங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்ளும் நந்தாவும் ஒரு குடும்பம் கிடைத்ததில் தாயாக மட்டற்ற மகிழ்ச்சி தான் .

நான் அவர் கிட்ட கேட்டு சொல்றேன் தம்பி என்றார். சரி என்று  வைத்து விட்டான்.

“மலர் கண்ணனிடம் சொல்ல கண்ணம்மா விருப்ப பட்டா போகட்டும் மலரு”.

அவளுமே இங்க வந்ததிலிருந்து ஒரு மாதிரி தான் இருக்கா ஒன்னும் பிரச்சனை இல்லை.

நம்ம வேணும்னா அப்பப்ப போய் பாத்துக்கலாம் .

“உனக்கு அங்க போக வர  சங்கடமா இல்லையா  மாமா “என்று கேட்டாள்.

ஒன்னும் இல்ல மலரு விடு.

“எல்லாம் நம்ம பிள்ளை பேசுற மாதிரி தான் அவளே சொல்லிட்டாளே இது எனக்கான தண்டனைனு.”

“வாழ்நாள் முழுவதும் இதுக்காக ஒதுங்கியே இருக்க முடியுமா ?” நம்ப ஆசை ஆசையா வளர்த்த பிள்ளையை பாத்துக்கலாம் இனி எல்லாத்துக்கும் பழகிக்க வேண்டும் என்று.

இவ்வளவு நேரம் தனது தாய் ,தந்தை பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தியா நான் நாளைக்கு எங்க வீட்டுக்கு போறேன்.

எனக்குமே அவங்க ஞாபகமாவே   இருக்கு. நான் இனி இரண்டு பேர் கிட்டயும் போன்ல பேசுறேன் என்று கண்ணனைப் பார்த்துக் கொண்டு சொல்ல .

கண்ணன் தன்னை மீறி தன் மகளை வந்து கட்டிக்கொண்டு அழ செய்தார் .

அவரது அணைப்பில் ஒரு சில நொடி இருந்தவள். அமைதியாக விலகி கொண்டாள் .

கண்ணனும் அதற்கு மேல் பெரிதாக எதுவும் பேசவில்லை.

மறுநாள் காலை மூவரும் வேலைக்கு விடுமுறை எடுத்திருக்க .

தியா கல்லூரிக்கு லீவு சொல்லி இருந்தாள்.

ஆடி 18 க்கு ஆடு, கோழி ,மீன் என்று கண்ணன் எடுத்துக் கொண்டு வந்திருக்க.

முதலில் ஸ்வீட் வைத்து பரிமாற .அதன் பிறகு நான் வெஜ் வைத்து பரிமாற செய்தார்கள் .

நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட .

முதலில் மூவரும் வந்தவுடன் பூஜை அறைக்கு அழைத்து சென்று நந்தாவிற்க்கும் ,தியாவிற்கும் ஆடி18 க்கு முதல் தேவை என்று சொல்லி இருவருக்கும் துணி எடுத்து கொடுத்து தங்களால் முடிந்த அளவிற்கு நகை செய்து இருந்தார்கள் .

இருவரும் அந்த துணியை போட்டுக்கொண்டு வந்தவுடன் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று சாமி கும்பிட்டு விட்டு அதன் பிறகுதான் சாப்பிடுகிறார்கள்.

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் இருக்கும் நந்தாவிற்கு தியாவை பார்க்க வேண்டும் போல் இருக்க.

அவள் இருக்கும் அறைக்குள் புகுந்து இருந்தான்.

அவள் சேலை கட்டி இருந்ததால், கசகசா என்று இருக்கிறது என்று சொல்லி சுடிதார் மாத்தலாம் என்று உள்ளே வந்தாள் .

நந்தா பின்னாடியே வந்திருக்க.. “சேலையை கழட்ட முந்தானையில் கை வைக்க நந்தாவை பார்த்துவிட்டு திக்கி திணறி என்ன சார் “என்று கேட்டாள்.

நந்தா அவளை தன் பக்கம் திருப்பி  அவளையே பார்த்துக் கொண்டிருக்க .

“என்ன சார் “என்றாள்.

“வீட்டுக்கு இப்போ எங்களோடவே வர ஐடியாவா ? “இல்ல இந்த மாசம் ஃபுல்லா இங்கையே இருக்க ஐடியோவா மேடம் என்றான்.

அவனிடம் சிறிது விளையாடலாம் என்று எண்ணியவள் “ஆடி மாசம் முழுசும் அம்மா வீட்டில் தான் இருக்கணும்னு சொல்லி இருக்காங்க” .

நீங்க என்ன 18 க்கு வந்துட்டு  கூப்பிடுறீங்க. இந்த மாசம் ஃபுல்லா இங்க இருந்துட்டு அப்புறம் தான் வருவேன் என்றாள்.

அவளை முறைப்புடன் பார்த்தவன் .”அவளது கையை இறுக்கி பிடித்து இங்கே தங்கிடலாம் அப்படின்னு நினைச்சேன் வச்சுக்கோ கொன்றுவேன் “என்று அவளை ஒற்றை  விரல் நீட்டி எச்சரித்தான்.

“இப்போ கையோடு என் கூட வீட்டுக்கு வர வழியை பாரு” .

இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் தான் உனக்கு டைம் அதுவரைக்கும் உங்க அப்பா அம்மா கிட்ட இன்னும் என்ன கொஞ்சனுமோ கொஞ்சிக்கிட்டு வீட்டுக்கு வந்து சேரு என்றான்.

“தியா அவனை முறைப்புடன் பார்க்க.”

“என்னடி முறைப்பு” என்று அவளை விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன் என்ன தோன்றியதோ” அவளுடன் ஒட்டி நின்று தன் மொபைலில் செல்பி எடுத்துக்கொண்டு அவளது நெற்றியில்   முதல் முத்திரையை பதித்துவிட்டு “எதுவும் பேசாமல் வெளியில் வந்தான் .

அவன் இதழ் பதித்த நொடி தியாவிற்க்கு தான் உடல் சிலிர்த்து அடங்கியது .

அவள் என்ன உணர்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை.

“இவருக்கு  தன் மேல் காதல் வந்துவிட்டதா ?இல்லையா ?”என்று தான் அவளது எண்ண ஓட்டங்கள் இருந்தது .

ஆனால் ,இதற்கான விடை முழுவதாக தனக்கு தெரியவில்லை என்று எண்ணினாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ காலில் தியா ,நந்தா இருவரும் பேசிக் கொண்டிருக்க .

அங்கு இருக்கும் வரை நார்மல் கால் மட்டும்தான் நந்தாவிடம்  தியா  பேச செய்வாள்.

இப்பொழுது தனது தாய் வீட்டிற்கு வந்த பிறகு அதுவும் அன்று ஹோட்டலுக்கு சென்று வந்த பிறகு தினமும் இரவு வீடியோ காலில் பேசி கொள்கிறார்கள்.

இப்போலாம்” தினமும் வீடியோ காலில் பேசுறீங்க, நார்மல் கால்லே வரது இல்ல”.

அங்க இருக்கும் போது நார்மல் கால்ல தான பேசிட்டு இருந்தீங்க .

இங்க இருக்கும் போது உன்னை தினமும் பார்த்துட்டு இருந்தேன் டி .

இப்போ “நீ தான் உங்க அம்மா வீட்ல இருக்கியே”.

“இருந்தா என்ன?” அதான், தினமும் காலேஜ்ல பாக்க தான  செய்றீங்க என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் .

இருந்தாலும் ,”வீட்டில் பார்க்கிற மாதிரி வருமா ?”என்றான்.

“காலேஜ்ல இருந்தா வர உணர்வே வேற”.

அங்க இருந்தா நீ ஸ்டூடன்ட் நான் ப்ரொபசர் அத தாண்டி வேற எந்த உறவும் கிடையாது.

அப்போ “வீட்டுக்கு வந்தா மட்டும் வைஃப் என்ற உணர்வு வருமா ?”என்று கேட்டாள்.

அவன் அமைதியாக இருந்தவுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போ “உங்களுக்கு என் மேல எந்த உணர்வும் இல்லையா?” என்று பட்டென்று கேட்டு விட .

அவளது கண்ணை உற்றுப் பார்த்து விட்டு “இப்போ  என்ன டி பேசிட்டு இருக்க நீ” என்றான்.

இல்ல எதுக்காக என்கிட்ட வீடியோ காலில் தினமும் பேசுறீங்க என்று கேட்டாள்.

” என் பொண்டாட்டி கிட்ட நான் வீடியோ கால் பேசறது தப்பா டி “என்றான்.

இந்த “பொண்டாட்டின்ற உணர்வு எந்த அளவுக்கு ,என் கழுத்துல தாலி கட்டினதாலையா? “இல்ல “அதையும் தாண்டி உங்களுக்கு என் மேல வேற ஏதாச்சும் இருக்கா” என்றாள்.

“உனக்கு என்னடி தெரியனும் இப்போ “என்றான்.

நான்  ஸ்டார்டிங்ல இருந்தே உங்க கிட்ட கேட்டுடு இருந்தது தான்.

திரும்பவும்  அதை தான் கேட்கிறேன் .
“பொண்டாட்டினா என்ன அர்த்தம் “என்று கேட்டாள்.

“எந்த அளவுக்கு இருக்கு நம்மளோட உறவு இப்போ”.

“என்னோட பொண்டாட்டி அவ்ளோதான் சரியா ?””அதுக்கு மேல உன் மேல எனக்கு எந்த ஒரு ஃபீலிங்ஸும் இல்லை போதுமா “என்றவுடன் தியா கோபத்தில் போனை வைத்திருந்தாள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *