தனா சென்றவுடன் தியாவை அமைதியாக பார்க்க.
“என்னடி “என்றான்.
ஒன்றுமில்லை என்று அவள் தலையாட்ட அவளைப் பார்த்து சிரித்து விட்டு.
சரி வா..
நேரம் ஆகுது வீட்டுக்கு போலாம் என்று அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான்.
போகும் வழி எங்கும் தியா நகத்தை கடித்துக் கொண்டே வந்தாள் .
இவருக்கு எப்படி தெரியும் என்று புரியாமல் ,ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட நந்தாவும் எதுவும் கேட்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிடலாம் நாளைக்கு வேலைக்கு போகணும் என்று சொல்லி
தியாவை கையோடு அழைத்துக் கொண்டு ரூமுக்கு சென்றான்.
டிரஸ் மாற்றிக் கொண்டு வர.
நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு அவர்கள் ரூம் நோக்கி சென்று விட்டார்கள் .
“இவரிடம் கேட்கலாமா ?வேண்டாமா ?”என்று யோசனையோடே படுத்திருக்க .
“மேடம் படிக்கிற ஐடியா இல்லையா ?”என்றான்.
“நான் தான் இன்னைக்கு காலேஜ் போகளையே அப்புறம் என்ன?”
“ஏன் போன் பண்ணி கேட்டிருக்கலாமில்ல ?.”
“ஏன் ?நான் என்ன ஸ்கூலா போறேன் “என்று அமைதியாகி விட்டாள்.
அதன் பிறகு வேறு எதுவும் வாதாட வில்லை ஒரு சில நொடி திரும்பி திரும்பி அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள் .
“அவள் அருகில் நெருங்கி படுத்து அவள் காதோரம் வந்து தியா என்று கூப்பிட”.
அதிர்ச்சி ஆகி அவன் பக்கம் திரும்பியவள் அவன் மீது மோதிய நின்றாள்.
“என்ன சார் ? “என்றாள்.
அவளை பார்த்து சிரித்துவிட்டு “இந்த குட்டி மூலை குள்ள அப்படி என்ன ?பலத்தை யோசனை “என்றான்.
“ஒன்னும் இல்ல “என்றாள்.
சரி படுத்து தூங்கு காலையில காலேஜ் போகணும் என்றான் .
“உங்களுக்கு என்கிட்ட எதுவும் கேட்க வேண்டியது இல்லையா ?”என்று கேட்டாள்
“எதுவும் இல்லடி தூங்கு “என்றான்.
“இல்ல அது உங்களுக்கு என்று ஏதோ பிதற்ற “செய்தாள் .
“அமைதியா தூங்கு” என்றவுடன் எதுவும் பேசாமல் பயத்தில் ஒரு சில நொடி அவனை திரும்பி பார்த்து விட்டு படுத்தவுடன் தூங்கி இருந்தாள் .
அவளை பார்த்து சிரித்து விட்டு கேடி என்று எண்ணி விட்டு அமைதியாக படுத்து விட்டான்.
மறுநாள் காலேஜ் வரும்போது தியா தாலி வெளியே போட்டுக் கொண்டு, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டு வந்து இருந்தாள்.
அவளைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
“அவளுடைய நண்பர்கள் தியா உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா “என்றார்கள்.
“நேத்து லீவ் அதுக்கு தான் போட்டியா? “என்றார்கள்.
அனைவரையும் பார்த்து சிரித்தவள் .இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடியே என்று விட்டு அமைதியாகி விட்டாள்.
“உன்னுடைய ஹஸ்பண்ட் என்ன செய்றாரு” என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க.
தியா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள் .
சொல்கிறேன் என்று விட்டு அமைதியாகிவிட்டாள் .
அதற்கு முன்பாகவே தனாவுடன் நேத்து வந்த பொண்ணு தன்னுடைய கிளாஸ் ரூமில் விஷயத்தை பரப்பி இருக்க .
ஃபர்ஸ்ட் ஹவர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அது பாதி காலேஜை சேர்ந்திருந்தது .
நம்ப நந்தா சாரோட வைஃப் தான் செகண்ட் இயர்ல புடிக்கிற சந்தியா என்ற பெண் என்று சென்று இருக்க .
வேகமாக ஓடி வந்த ஒரு பையன் “நந்தா சார் காலேஜ் விட்டு போறாராம் பிரின்சிபல் கிட்ட பேசிட்டு இருக்கிறார் “என்றான்.
நம்ம ஹச் ஓ டி சார்கிட்ட ஃபர்ஸ்ட் பேசிட்டு அவங்களோட பிரின்ஸ்பல் ரூமுக்கு போய் இருக்காங்க என்று சொன்னான்.
தியாவிற்கு இந்த விஷயம் அதிர்ச்சி தான். காலையில் கிளம்பும்போது அவனாகவே அவளது தாலியை எடுத்து வெளியில் போட்டான் .
“அவளது வெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்துவிட்டு இப்படியே போ” என்றான்.
அவள் அவனை அமைதியாக பார்க்க .
“சொன்னத செய்” என்று விட்டு அமைதியாகி விட்டான்.
தியா காலேஜ் கிளம்பி வெளியில் வரும் போது நந்தா ஹாலில் உட்கார்ந்து இருக்க
என்ன டா நேரம் ஆகுது கிளம்பாமல் இருக்க என்று தேவி கேட்க.
இன்னைக்கு எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு கா.
அதை முடிச்சுட்டு தான் காலேஜ் போவேன். நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி இருந்தான்.
அதை நினைத்து பார்த்து விட்டு தான் கிளம்பும் வரை அவர் கிளம்பாமல் உட்கார்ந்து இருந்தது இந்த காரணத்தினால் தானா .
“நந்தா காலேஜ் விட்டு செல்ல போகிறாரா ?வேலையை ரிசைன் பண்ண போகிறாரா? “என்று அதிர்ச்சியில் இருக்க.
இங்கு நந்தா பிரின்ஸ்பல் இடம் பேசிக் கொண்டிருந்தான் .
சாரி சார் எனக்கும் சந்தியாவிற்கும் திருமணமாகிவிட்டது என்று சொல்லியிருந்தான்.
ஸ்டுடென்ட் ப்ரொபசர் மேரேஜ் பண்ணிக்கிறது தப்புன்னு சொல்ல மாட்டேன் .
நீ மதிப்புமிக்க ஒரு இடத்துல இருக்கனு உனக்கு ஞாபகம் இருக்கா.
“ஒரு ப்ரொபஸ்ரா நீ ஒரு ஸ்டுடென்ட் கல்யாணம் பண்ணி இருக்கிறது மறைச்சி இருக்கிறது சரியா?”
அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது சரின்னு சொல்ல மாட்டேன் சார்.
என்னோட சிட்டுவேஷன் அப்படின்னு சொல்லி இங்க நான் இதிலிருந்து தப்பிக்கவும் விரும்பல .
என்னோட வைஃப் ஒரு ஸ்டூடண்ட் அப்படின்னு தெரிஞ்சு தான் சார் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
இது நல்ல காலேஜ் என் வைஃப் இங்க படிக்கணும்னு ஆசைப்படுகிறேன்.
எனக்கான கெரியரை நான் வெளிய கூட பாத்துக்குறேன் .என்னோட வைஃபை காலேஜ் விட்டு தூக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.
நான் என்னுடைய வேலை ரிசைன் பண்ண தான் இப்போ வந்து இருக்கேன் என்றான்.
அவனை ஒரு சில நொடி பார்த்த பிரின்ஸ்பல் இவனைப் போன்ற ஒரு ஆசிரியரை இந்த கல்லூரி இழக்க விரும்பாத காரணத்தினால் ,நந்தா உன்னோட வைஃபை நாங்க அந்த காலேஜ் விட்டு தூக்கல .
அதேபோல உன்ன இழக்கவும் எங்களுக்கு மனசு இல்ல .
“ஆனா, ஒன் கண்டிஷன் “என்றான்.
பிரின்ஸ்பலை பார்த்து சிரித்தவன். எங்களுக்கு கல்யாணம் ஆகி போர் மன்த் ஆகுது சார்.
இந்த இயர் ஸ்டார்ட் ஆகும் போதே சந்தியா என்னுடைய வைஃபா தான் இந்த காலேஜ்ல அடி எடுத்து வச்சா .
இந்த போர் மந்த்ல யாராவது எங்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து இருந்தாலோ .
இல்ல அவ என்கிட்ட அந்த மாதிரி (ஹஸ்பண்டா எண்ணி) பிஹே பண்றதையோ பார்த்து இருந்தா .
உங்க கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தா மேற்கொண்டு நீங்க ஆக்ஷன் எடுக்கலாம்.
அதுக்கப்புறம் நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை.
“என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே மாதிரி என்னோட பொண்டாட்டி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”.
இந்த காலேஜ் கேம்பஸ் குள்ள எங்க ரெண்டு பேருக்கும் ப்ரொபசர் ஸ்டுடென்ட் என்று உறவை தாண்டி வேற எந்த உறவும் கிடையாது.
இன்னொரு விஷயம் காலேஜ் கேம்பஸ் தாண்டின பிறகு அவ என் கண்ணுக்கு என்னோட வைஃபா மட்டும்தான் தெரியுவா.
நான் என்னோட ஸ்டுடென்ட்ஸ்க்கு நல்ல முன் உதாரணமாக இருக்கணும்னு தான் நினைக்கிறேன் .
தப்பான விதத்துல அவங்கள கொண்டு போற அளவுக்கு என்னோட ஆக்டிவிட்டி இருக்காது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் கெட்ட உதாரணமாக இருக்க நினைக்கல .
அதனால்தான் ,அதையும் இங்க இப்போ உங்க முன்னாடி பதிவு பண்ணிக்கிறேன்.
“காலேஜ் கேம்பஸ் விட்டு வெளியே போயிட்டா என்னோட வைஃப் .
வைஃப் தான் இருப்பா ஸ்டுடென்ட் டா இருக்க மாட்டா”.
காலேஜ் கேம்பஸ் குள்ள அவ எனக்கு ஸ்டுடெண்டா மட்டும் தான் இருப்பா இதுக்கு அப்புறம் உங்களுடைய விருப்பம்.
நான் வாக்கு தவற மாட்டேன் நினைக்கிறேன். “அதே மாதிரி என்னோட வைஃப் அப்படியே நடந்துக்கு வாங்க “என்றான் .
ரெண்டு பேருமே நான் இப்ப சொன்ன மாதிரி நடந்துக்குவோம் சார் என்று வாக்கு கொடுத்துவிட்டு வெளியில் வர .
தியா மூச்சு வாங்கிக்கொண்டு வந்து நின்றாள் .
அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் “கிளாஸ் ரூமுக்கு போற வேலை இல்லையா ?”
“கிளாஸ் வச்சுட்டு இங்க என்ன வேலை “என்று கேட்க.
“இல்லை, சார் அது “என்று இழுத்தாள் .
உங்களுக்கு பஸ்ட் ஹவர் யாரு என்று கேட்டான்.அவளும் ஸ்டாஃப் நேம் சொல்ல அருகில் இருந்த தனாவை பார்த்தான்.
“ஸ்டாப் கிட்ட பர்மிஷன் வாங்கினீங்களா ?”என்ற உடன் தனா முந்திக்கொண்டு இல்லை என்றவுடன் ஃபர்ஸ்ட் ஸ்டாப் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு கிளாஸ் விட்டு வெளியே வர பழகுங்க என்றான்.
வேறு எதுவும் பேசாமல் நிற்காமல் கூட ஸ்டாப் ரூம் நோக்கி சென்று விட்டான் .
வெளியில் வந்த ஹச்ஓடி தியா ,தனா இருவரையும் பார்த்தவர் .தியாவை தன்னுடைய கேபினுக்கு வருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட.
தியா தனாவுடன் ஸ்டாப் ரூம் நோக்கி சென்றாள்.
hd யை சென்று பார்த்தவுடன் ஹச் டி பிரின்ஸ்பல் ரூமில் நடந்ததை சொல்ல ரொம்ப தேங்க்ஸ் சார் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் சென்று விட்டாள் .
அன்றைய பொழுது அப்படியே கழிய .
மாலை அவன் காலேஜ் விட்டு வரும்போது காலேஜில் நடந்த அத்தனையும் கோபத்தோடு தியா உதயா தேவி இடம் சொல்லிக் கொண்டிருக்க .
தேவிக்குமே சிறிது சங்கடமாக இருந்தாலும் ,தன் தம்பி எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை என்று உறுதியாக இருந்தார்.
“உங்க தம்பி பண்ணுது சரியா பெரியம்மா” ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல என்று சொல்ல .
உதயா தான் “அது எவ்வளவு நல்ல காலேஜ் என்று தெரியுமா ?”
நீ எடுத்த மார்க்குக்கு கிடைச்சிருக்கு .நல்ல கோச்சிங் தியா என்றான்.
அதேதான் நானும் சொல்றேன் அண்ணா.
அவருக்கும் தான். என்னதான் அவருக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும், மத்த காலேஜை விட இந்த காலேஜ்ல நல்ல பேரும் புகழும் இருக்கு.
ஒரு ஸ்டூடன்ட்டா சொல்றேன் நல்ல ப்ரொபசர் அண்ணா அவர்.
எனக்காக அவரோட ப்ரொபஷன எதுக்கு விடணும்.
வேற காலேஜ் கிடைக்காதுன்னு சொல்லல .அந்த காலேஜ்ல இருக்குற ஸ்டுடென்ட் நல்ல ஒரு ப்ரொபசர இழந்திடுவாங்க என்றாள்.
இவ்வளவு நேரம் தியா பேசியதை கைகட்டி கொண்டு கதவின் ஓரம் என்று கேட்டுக் கொண்டிருந்தான் நந்தா.
முதலில் நாந்தாவை பார்த்த தேவி தான் “எப்ப டா வந்த” என்று கேட்க .
உன் மக என் மேல கொல காண்டுல இருக்கும்போதே வந்துட்டேன் என்றான்.
அவனை பார்த்து முறைத்தவள் கிச்சனுக்கு செல்ல.
தேவியும் ,உதயாவும் சிரித்துக் கொண்டார்கள் .
நந்தா எதுவும் பேசாமல் தன்னுடைய ரூமுக்கு சென்று பிரஷ் ஆகி விட்டு வெளியில் வர .
மூவருக்கும் டீ யை கொடுத்துவிட்டு தனக்கு ஒரு டீ எடுத்துக் கொண்டு நந்தாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
“திரும்ப முருங்க மரத்துல ஏறி உட்கார்ந்து கிட்டா “என்று லேசாக அவளுக்கு கேட்கும் விதத்தில் முனு முனுத்தான்.
தியா அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அமைதியாக விட்டாள் .
தேவி தான் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல டா என்றார்
சொல்லிருந்தா ஒத்துக்கிட்டிருப்பியா அக்கா பேசிட்டு வந்து சொல்லிக்கலாம்னு தான் கா.
“எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு மேக்ஸிமம் என்ன ரீசைன் பண்ண விட மாட்டாங்கன்னு” .
“ரொம்ப தான் தைரியம் நீ இல்லனா வேற ஸ்டாப் இல்லையான்னு கேட்டிருந்தா தெரிஞ்சிருக்கும் என்று தியா இங்கு கவுண்டர் கொடுக்க “அவளை பார்த்து முறைத்தான் நந்தா.
உதயா பக்கென்று சிரித்து விட்டான். தேவிக்குமே லேசான சிரிப்புதான் இருந்தாலும், தன் தம்பியை பார்த்துவிட்டு அமைதியாக இருக்க.
சிரிச்சிரு க்கா எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கணும் என்றவுடன் தேவியும் சிரித்து விட்டார்.
“நான் நல்லா தாண்டி கிளாஸ் எடுப்பேன் “.
“என் மேல நான் நம்பிக்கை வைக்காமா வேற யாரு டி நம்பிக்கை வைப்பாங்க “என்றான்.
“உன்னை மாதிரி மக்கு இல்ல “என்றான். எது நான் மக்கா என்று அவனிடம் சண்டைக்கு சீறிக்கொண்டு வந்து நின்றாள்.
“உனக்கு நீ நல்ல ஸ்டூடண்ட்ஸ் என்று நம்பிக்கை இருக்கும்போது நான் நல்ல ஸ்டாப் என்று எனக்கு நம்பிக்கை இருக்காதா ?”என்று கண்ணை சுருக்கி கேட்க
அவனைப் பார்த்து முறைத்து விட்டு தியா அமைதியாகி விட்டாள் .
நந்தாக்குமே அதன் பிறகு அந்த பேச்சை வளர்க்க விருப்பமில்லை .
அவனும் அமைதியாகி விட்டான்.
அப்போது நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்க. அந்த நேரம் நந்தாவிற்கு ஃபோன் வந்தது.
ஒரு சில நொடி போனை எடுத்து பார்த்தவன் புது நம்பராக இருக்க .
ஹலோ என்றான் .அந்தப் பக்கம் தியாவின் தோழி தனா அழைத்திருந்தாள்.
“ஹலோ சார், நான் தானா “என்றாள்.
ஒரு சில நொடி தியாவை பார்த்தவன் “சொல்லு மா “என்றான்.
அது எங்க வீட்ல என்று விட்டு அமைதியாகி விட .
உங்க வீட்டு அட்ரஸ் மட்டும் எனக்கு லொக்கேஷன் அனுப்பு என்றவன் போன் வைத்து விட்டான் .
அக்கா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று விட்டு வேகமாக நந்தா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட.
யார் போன் செய்தார்கள் என்ன விவரம் என்று புரியாது மூவரும் தான் போன் வந்து அடுத்த செகண்ட் நந்தா கிளம்பியதை எண்ணி யாரகா இருக்கும் என்று எண்ணினார்கள்
அதுவும் எப்படி இருந்தானோ அதே உடையோடு கிளம்பி இருக்க .
யாருக்கு என்னாச்சு என்ற ஒரு படபடப்பில் நந்தா போன் செய்ய மாட்டானா ?என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.