Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 5

மீண்டும் மலரும் உறவுகள் 5

“அக்கா அக்கா எங்க இருக்க”..

” அக்கா என்று கேட்டுக்கொண்டே வாலிப வயது உடைய ஒரு ஆண்மகன் தனது அக்காவை கூவி கொண்டே வந்தான்”..

” டேய் என்னடா இங்க  பூஜை அறையில் தான் இருக்கிறேன் “..

“எதற்காக ?”.

“காலையிலேயே இப்படி என்னை ஏலமிட்டு கொண்டிருக்கிறாய்?”. என்றார் .

“இன்று என்ன நாள் என்று உனக்கு தெரியும் தானே அப்புறம் என்ன ?என்றான் “..

“என்ன நாள் உன் மச்சானுக்கு பிறந்தநாள் அவ்வளவு தானே ..”

“அதற்கு எதுக்கு இவ்வளவு அலப்பறை”.

“என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்கிறாய் .”

“அவன் எங்கே அவன் எங்கும் ஓடிப் போகவில்லை. அவனுடைய அறையில் தான் மல்லாக்க படுத்திருப்பான் “.

“போய் எழுப்பு என்றார்.”

“தேவி என் மச்சானை குறை சொல்லவில்லை என்றால் உனக்கு தூக்கம் வராது என்று தன் அக்காவிடம் வாய் கோனித்து காண்பித்து விட்டு தனது அக்கா மகனின் அறையை நோக்கி சென்றான்”..

“கட்டிலும் காளை நந்தன் என்கிற நந்தா”

“தனது அக்கா மகன் உதயாவின் அறையை திறந்து கொண்டு உள்ளே சென்றான்”..

” தன் அக்கா சொல்லியது போல் போர்வையை போர்த்திக்கொண்டு மல்லாக்க படுத்திருக்கும் தனது மச்சான் காதில் ஹாப்பி பர்த்டே மச்சான் என்று மெதுவாக சொல்லிவிட்டு அவனை எழுப்பினான் நந்தா”.

“மாமா இன்னும் கொஞ்ச நேரம் “.

“டேய் நீ தூங்குற நேரம் நான் அக்கா கிட்ட திட்டு வாங்கறதா இருக்கு”..

” 12-வது படிக்கிறேன் என்ற பயம் கொஞ்சமாச்சும் இருக்கா அவ்வளவு கேரளசா இருக்க “..

“தினமும் உன்னால் நான் திட்டு வாங்குறேன் நீ குடுக்குற செல்லம் தான் என்று என்னை திட்டிட்டு இருக்கு அக்கா? “.

“போ மாமா எப்ப பார்த்தாலும் உன் அக்காவுக்கே சப்போர்ட் பண்ற என்று சினுங்கி கொண்டே எழுந்தான் உதயா”..

” எது என்று நந்தா சிரித்து முகமாக தனது மச்சானை பார்த்து கேட்டான் “.

“சும்மா மாமா என்று நந்தாவின் தாடையில் இதழ் பதித்துவிட்டு ஒரு டென் மினிட்ஸ் குளிச்சிட்டு வந்துடறேன் என்று விட்டு வேகமாக குளியல் அறை  நோக்கி ஓடினான். நந்தா சிரித்துக் கொண்டான் “..

“அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது. பிறகு தனது தலையை உலுக்கி விட்டு தனது அக்காவை தேடி சென்றான்”..

” அவர் பூஜை அறையில் இருக்கும் அனைத்து சாமி படங்களுக்கும் பூ வைத்து விட்டு சமையல் அறையில் கேசரி கிண்டி கொண்டு இருந்தார் தேவி”..

” என்ன அக்கா இவ்ளோ நேரம் உன் மகனை திட்டிட்டு இருந்த இப்ப அவனுக்காக கேசரியோ என்றான்”..

” அவனுக்காகவா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனால் , நான் எதுவும் செய்யாமல் இருந்தால் நீ சும்மா விட்ருவியா”..

“அக்கா நா அக்கா தான் என்று இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது உதயா கிச்சனில் ஆஜர் ஆனான்”..

“என்ன மாமா அக்காவும் ,தம்பியும்  கொஞ்சி முடிச்சிட்டீங்களா “..

“பாசமலர் படம் ஒட்டியாச்சா? என்றான்”..

” படவா என்று அவனது தலையில் கொட்ட வந்தார் தேவி. அக்கா என்று நந்தா கத்தியவுடன் சரிடா உன் மச்சான கொட்டல போதுமா என்று சிரித்து முகமாக சொல்லிவிட்டு இரு பவுலில் கேசரியை இருவருக்கும் கொடுத்தார் “..

“அப்போது நந்தா தான் மச்சான் வா சாமி கும்பிட்டு சாப்பிடுவோம் என்றான்”..

” மாமா கையில் கேசரியை கொடுத்துட்டு இப்படி பேசற”..

” நீ இப்ப தாண்டா குளிச்சிட்டு வந்த வாடா என்று விட்டு தன் அக்காவையும் அழைத்துக் கொண்டு மூவருமாக விளக்கேற்றி சாமியை தரிசனம் செய்துவிட்டு மூவரும் ஆளுக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் கேசரி எடுத்துக் கொண்டு வந்து உட்காந்து சாப்பிட செய்தார்கள்”..

” தேவி  உடன்பிறந்த தம்பி தான்  நந்தன் பிரைவேட் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறான் “..

“உதயா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் . தேவியின் மகன்.”

“தியா( சந்தியா )படிக்கும் அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்”..

” தேவிக்கும் ,நந்தாவிற்கும் கிட்டத்தட்ட 12 வருடங்கள் வித்தியாசம் இருக்கும் “..

“தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தவமிருந்து தேவியின் தாய், தந்தை பெற்றெடுத்த குழந்தை தான் நந்தா”.

” ஆனால் , எந்த அளவிற்கு தவமிருந்து பெற்றார்களோ ஆனால் அவனை வளர்க்க முடியாமல் விதி அவர்களது வாழ்க்கையில் சதி செய்தது”..

” நந்தாவிற்கு இரண்டு வயது இருக்கும்பொழுது தாய் நோய்வாய்ப்பட்டு இறக்க. தந்தை அடுத்த ஆறு மாதத்தில் மனைவி இல்லாமல் தன்னால் இந்த உலகத்தில் இருக்க முடியவில்லை என்று வேதனையில் உடல்நிலையை கவனித்துக் கொள்ளாமல் உடல் நலக்குறைவால் இறக்க செய்தார்”..

” இரண்டு வயதான தனது தம்பியை வைத்துக்கொண்டு தன் வாழ்க்கையும் திரும்பிப் பார்த்து தன்னையும் தேற்றிக்கொண்டு தன்  தம்பியையும்,தனது வாழ்க்கையை வாழ ஆரம்பித்தவர் தேவி “..

“அப்படி தனது தம்பிக்காக என வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் புயலை வீசி சென்றவன் தான் கண்ணன்”..

” வரும்பொழுது பூவாக வந்தவன். செல்லும்பொழுது புயலாக சென்று இருந்தார் ஆகையாலே கண்ணன் என்றால் நந்தனுக்கு எட்டாக்கனி “..

“தன் அக்காவின் வாழ்க்கையை சூனியம் ஆக்கியவன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நபர் தன் அக்கா வாழ்க்கையில் திரும்பி ஏதேனும் ஒரு விதத்தில் கூட தான் பார்த்து விடக்கூடாது என்று எண்ணும் அளவிற்கு நந்தன் இந்த உலகில் வெறுக்கும் ஒரு ஆள் இருக்கிறது என்றால் அது  கண்ணன் தான்”..

“கண்ணன் எப்படி தேவி வாழ்க்கையில் நுழைந்தார்”..

” கண்ணனுக்கு அவர்கள் வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டது”.

” அப்பொழுது தேவி தனது தம்பியையும் ஓரளவிற்கு வளர்த்துவிட்டு தன்னையும் தேற்றிக்கொண்டு ஒரு டிகிரி மட்டும் முடித்து இருந்தார்”..

” தேவி தன் தம்பியை பக்கம் இருக்கும் உறவினர்களின்  உதவியுடன்  வளர்த்து விட்டார் “..

தன் தாய் ,தந்தை சேர்த்து வைத்த சிறிது காசு ,பணத்திலும் நல்ல உறவினர்கள் மூலமாக ஒரு அளவிற்கு வளர்ந்து ஒரு டிகிரி முடித்துவிட்டு ஒரு சிறிய செல்போன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்”..

“அங்கு தான் கண்ணனை பார்க்க நேரிட்டது “..

“கண்ணனும் அதே செல் ஷாப்பில் வேலை செய்தார் அப்பொழுது தேவி கண்ணன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது “..

“தேவியை விட ,கண்ணன் தேவியை உயிருக்கு உயிராக நேசிக்க செய்தார் “..

“தேவி தன் வீட்டு சூழ்நிலையை சொல்லி தனக்கும் காதலுக்கும் எட்ட தூரம் என்று சொல்லியும் நான் உன்னையும் ,உன் தம்பியையும் நன்றாக பார்த்துக் கொள்வேன். “.

“நீங்கள் இருவரும் இனி என்னுடைய பொறுப்பு என்று சொல்லி தன் வீட்டினரையும் எதிர்த்து தேவியை மணம் முடித்தார் “..

“கண்ணன் இப்படி தேவிக்காக தன் குடும்பத்தையே எதிர்த்து தேவியை மணமுடித்த கண்ணன் இப்பொழுது தேவியை முற்றிலுமாக வெறுப்பதற்கான காரணம் என்ன ?”என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “மீண்டும் மலரும் உறவுகள் 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *