Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 52

மீண்டும் மலரும் உறவுகள் 52

தியா முறைத்துக் கொண்டு நிற்க.

உதயா நந்தாவின் தோளில் கையை போட்டவன் .”மாமா உனக்கு நாக்குல சனி தாண்டவம் ஆடுது “என்றான்.

நந்தா தியாவை  பார்க்க.

அவள் முறைத்து கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு உண்மையை தான் சொன்னேன் .

என்ன இருந்தாலும் “உதயா பொண்டாட்டி உனக்கு அண்ணி தானே “என்றான்.

“சரிங்க அண்ணி வாங்க அண்ணி “என்றாள் சிரித்துக் கொண்டே தியா.

அண்ணா நீங்க வேற ஏன் அண்ணா. எப்பயும் போல கூப்பிடுறது தான் எனக்கும் சௌகர்யமாக இருக்கும் என்றாள்.

“எங்க என் தங்கச்சி அவள அண்ணினு கூப்பிட சொல்லிடுவானு நினைச்சு உன் தங்கச்சி முந்தி கிட்டு பேசுற பாத்தியா மாமா “என்று உதயா சிரித்து விட்டான்.

தேவி வந்த அன்னைக்கே அவள வச்சு ஏன்  டா நீயும் உன் தங்கச்சியும் உங்க வேலையை காட்டுறீங்க என்று சொல்ல.

அம்மா புதுசா ஏதோ மருமக வந்த உடனே..நல்ல புள்ள மாறி நாடகம் போடாத..

“சீரியல் மாமியார் மாதிரி கெத்தா இரு”.
அவ கிட்ட நான் தான் படாத பாடு பட  போறேன்  பாருங்க.

“நீ வேற போவியா மா” .. இனி தினமும் வைத்து மேய்க்க போறது நான்  தான என்று சொல்ல.

இப்பொழுது தனா உதயாவை முறைத்தாள்.

தியா சிரித்துவிட்டு நீ வா மச்சி இவங்க கடக்குறாங்க என்று தனாவின் தோளில் கையை போட்டு ஹாலில் உட்கார வைத்தாள்.

அப்படியே அன்று இரவு பொழுது வர மலர் திருமணம் முடிந்து கையோடு வீட்டிற்கு சென்றவர். மாலை தான் வீட்டிற்கு வந்திருந்தார்.

“அக்கா நைட்டு சடங்குக்கு எதுவும் செய்ய வேண்டாமா? “அவங்க வீட்ல இருந்து யாரும் வர மாட்டாங்க.

அது நமக்கே தெரியும் என்று சொல்ல.

தனாவை பார்த்த தேவி.

நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தங்கிக்கலாம். ஆனா மேற்கொண்டு என்ன செய்யலாம்னு உனக்கு என்ன தோணுதுன்னு சொல்லு என்று கேட்க.

ஒரு சில நிமிடம் கண்ணை உருட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சிரித்த முகமாக வந்த நந்தா எதுவானாலும்  மெதுவா பண்ணிக்கலாம் அக்கா.

ரெண்டு பேருக்கும் பெருசா வயசாகிடல இல்ல .

ரெண்டு பேத்துக்கும் கொஞ்சம் பேசி பழக டைம் கொடுப்போம் .

மூன்று மாதம் டைம் கொடுத்தோம் அதையே உன்னோட மகன் பெருசா யூஸ் பண்ணல.

ரெண்டு பேரும் பேசி கிட்ட மாதிரி எனக்கு தெரியல .அவங்க பேசி ஒருத்தவங்க இன்னொருத்தங்களை பற்றி புரிஞ்சுக்கட்டும்.

அவங்களோட வாழ்க்கை. அவங்க எப்ப வாழனும்னு ஆசைப்படுகிறார்களோ .

அவர்களுக்கு விருப்பம் இருக்கும் பொழுது அவர்கள் வாழ்க்கையை தொடங்கட்டும் என்றான்.

அப்பொழுது உதயா தனா நீ அந்த ரூம்ல படுத்துக்கோ என்று சொல்ல .

தியா உதயாவின் முன்பு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டு நின்றாள்.

“தியாகி பட்டம் லா இங்க உனக்கு யாரும் தர மாட்டாங்க” என்று விட்டு .

“உங்களுக்கு வேலை இல்லையா ?அசதியா இல்லையா ?”பெரியம்மா போய் தூங்குங்க என்று சமையலறைக்கு சென்று பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளுடைய அறைக்கு செல்ல .

தியா என்றான் உதயா .

நான் சொன்னது சொன்னது தான் அவர இழந்திட கூடாது என்று நினைத்தேன் .

அண்ணா உனக்கு வயசு இருக்கு சரியா .எனக்கும் வயசு இருக்கு.

மாமாவுக்கு வயசுக்கு போகுது இல்ல .

அத பத்தி எல்லாம் நான் இங்க பேசல .

அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும். எங்க வாழ்க்கை என்னைக்கு வாழனும்னு நாங்க ஆசை படுறோமோ அன்னைக்கு வாழ்ந்துக்குவோம்.

எங்க வாழ்க்கை வேற .உன்னோட வாழ்க்கை வேற 

அதுக்காக நீ வேற நாங்க வேற அந்த மாதிரி நான் சொல்லல .

நான் பேசுறது புரியும் உனக்கு.

நீ இப்ப  அவள விட்டு விலகி போறது அவளுக்கு தான் கஷ்டத்தை கொடுக்கும் .

இத நான் உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்லை.

நீயே புரிஞ்சுக்க அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.

உங்க மாமாவோட வளர்ப்பும் சரி ,பெரியம்மாவோட வளர்ப்போம் சரி எந்த அளவுக்கு இருக்குங்குறது இதுல தான் இருக்கு .

அவளை நம்ம வீட்டில் கொண்டு வந்து நிறுத்தினதோடு நிக்காம இனி நீ வாழ போற வாழ்க்கையில தான் அவங்களோட வளர்ப்பு இருக்கு என்று விட்டு சென்று விட்டாள்.

அதன் பிறகு கண்ணன் ,மலர் இருவரும் சொல்லிக்கொண்டு அவர்கள் வீடு நோக்கி சென்றுவிட .

தனா தான்  கையை பிசைந்து கொண்டு நின்றாள் .

தேவி சிரித்த முகமாக தனாவின் தோளில்  கையை போட்டு இது  உன்னோட வீடு டா எப்பவும் போல சாதாரணமா இரு .

சரியா? ரூமுக்கு போ அவனோட பேசி பழகு என்று விட்டு சென்று விட்டார்.

தனாவுமே அந்த ரூமுக்கு சென்று விட .

உதயா சிறிது நேரம் ஹாலில்  உட்கார்ந்து இருந்தவன் தன் மாமாவை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்றான்.

இறுதியாக நந்தா அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டு ரூமுக்கு வர .

தியா தான் நகத்தை கடித்துக் கொண்டு நடந்து கொண்டு இருந்தாள்.

என்ன  மேடம் ?”வெளியே அவ்வளவு பேச்சு பேசிட்டு இங்க வந்து எதுக்குடி நகத்தை கடிச்சிட்டு இருக்க” .

இந்த பழக்கத்தை வச்சுக்காதன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் என்று அவளது கையில் இரண்டு அடி போட .

அவனை முறைத்து பார்த்துவிட்டு “அவன் சட்டையை வேகமாக பிடித்து இழுத்தவள் உன் மச்சானுக்கு என்ன தியாகி என்ற நினைப்பா”என்றாள் .

அங்கு இப்ப தாண்டி அவன் கிட்ட கேட்டுட்டு வந்து .இப்ப என்கிட்ட வந்து அதே கேள்வி கேட்டா.

“நான் என்னடி பண்ணுவேன்” .

உன் அண்ணன் என்ன நினைப்புல  இருக்கிறான் என்று உன்ன தான் கேக்கணும்.

ரொம்ப தான் என்று  வாய் கோணித்து காண்பித்தாள்.

“அவளது உதட்டை பிடித்து தன் பக்கம் இழுத்து அவளது கண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க” .

தியா தன்னையும் மீறி கண்ணை மூடி நின்றாள் .

“அவளைப் பார்த்து சிரித்தவன் . அவளது கண்ணில் இதழ் பதித்து விட்டு கேடி கண்ண தர “என்றான் .

அவள் சிரித்துக் கொண்டே கண்ணை திறக்க .

“பொறுமையா ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கட்டுமே டி” .

அவன் லவ் பண்ணது என்னவோ உண்மைதான். ஆனால் தனாகிட்ட அவன் முழுசா அவன பத்தி சொல்லணும் .

ஆனா  “நிறைய விஷயம் இருக்குல்ல மாமா “என்று விட்டு இல்லைங்க  என்றாள்.

“கேடி “இப்ப என்ன சொன்ன என்றான்.

என்ன சொன்னேன். இப்ப என்ன என்னன்னு  கூப்பிட்ட சொல்லுடி என்றான்.

எப்படி  கூப்பிட்டேன் ஒன்னும் இல்லையே என்றாள்.

அவளது முடிகளை காதோரம் ஒதுக்கியவன் .”அவள் கண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே உண்மையை சொல்லு டி கேடி இப்ப என்ன சொன்ன என்று அவள் அருகில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர “.

இங்கு தியாவிற்கு  தான் நெஞ்சம் படப்படக்க ஆரம்பித்தது .அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளி விட்டவள்.

அவனை விட்டு விலகி சென்று கட்டிலில் சென்று உட்கார்ந்து கொள்ள .

அவளது அருகில் உட்கார்ந்து அவளது கை தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்.

“கேடி இப்ப சொல்ல மாட்ட இல்ல “

நம்ம விஷயத்துக்கு அப்புறமா வரேன் இரு என்று விட்டு தனாவுக்கு எந்த விஷயமும் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன் .

உன்னோட பிரண்டா நீயும் ஒரு சில விஷயங்களை சொல்லி இருப்ப சரியா ?.

நானே தனியா அவங்க வீட்டில் நேரில் சென்று பார்த்து சொல்லிட்டு தான் வந்து இருக்கேன் .

தனாவுக்கு தெரியாதுன்னு கிடையாது .

இருந்தாலும் “இந்த குடும்பத்தோட ஒன்றி வாழ்வதற்கும் ,உதயாவை முழுசா புரிஞ்சுக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு “தியா என்றான்.

அவனது கண்ணை உற்றுப் பார்த்தவள் .

அவனது தோளில் சாய்ந்து கொண்டு அவன் போட்டிருந்த சட்டையின் முதல் இரண்டு பட்டனை அவிழ்த்துவிட்டு அவனது நெஞ்சில் இருக்கும் ரோமங்களை பிடித்து இழுத்துக்கொண்டு தியா என்ற பெயரை தடவிக் கொண்டு இருந்தாள்.

“கேடி ஓவரா பண்ணாத “என்று அவளது கையை தட்டி விட்டு அந்த பக்கம் வந்து படுத்துக்கொள்ள .

தியாவிற்கு தான் சப்பு என்று இருந்தது. லைட் ஆப் பண்ணிட்டு தூங்கு .

டயர்டா இருக்கு என்றான். அவளும் கோபத்தில் லைட் ஆஃப் பண்ணிவிட்டு படுத்து விட.

தியாவிற்கு தான் தூக்கம் வருவேனா என்று இருந்தது.

“இந்த வாத்திக்கு கொஞ்சம் கூட ரொமான்ஸ் என்றே வராதா? ஜடம் ஜடம் “என்று  முனகினாள் .

“உன்னோட முனகல் இங்க வர கேட்குது டி “என்றான் .

“கேட்கணும் என்று தான் முணங்கிறது “என்று அவன் பக்கம் திரும்ப .

அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் .

“உனக்கு என்னடி பிரச்சனை”. என்ன வேணும் .

ஒன்னும் வேணாம் என்று கோபித்து கொண்டு திரும்பிக் கொள்ள .

“அவள் முடியை பிடித்து இழுத்தான்”.

“வலிக்குது “என்று திரும்பினாள்.

“வலிக்கட்டும் டி”.

“கூப்பிட்டது ஆசையா இருக்குனு தான் என்னடி சொன்னான்னு கேட்டேன்” .

ஆனா,”உனக்கு அவ்வளவு திமிரு. கொழுப்பு கூடிப்போச்சு டி “

“உனக்கு ரொம்ப சேட்டை “என்றான்.

ஆமாம்  “சேட்டை ,கொழுப்பு கூடி போச்சு தான் அடக்கிறது “என்று விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவளை பார்த்து சிரித்தவன்.

அவளது நெற்றியோடு நெற்றி முட்டி விட்டு” உன்னோட கொழுப்பையும் சேட்டையையும் அடக்கணும் அவ்ளோ தான “என்று சிரித்துக் கொண்டே கேட்க .

தியாவின் கண்கள் அலை பாய  செய்தது .திருத்திருவென முழித்துக் கொண்டு படுத்து இருக்க .

அவளது நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு ..

“பஸ்ட் படிச்சு முடிங்க  மேடம் “என்றான்.

ஏன் இப்ப நான்  படிப்புல என்ன குறை வச்சேன் என்றாள்.

படிப்பில் எந்த குறையும் இல்ல தான்.  ஆனா ஒழுங்கா படிச்சு முடி என்றான் .

அவனை முறைத்து விட்டு அவள் அந்த பக்கம் திரும்பிக் கொள்ள .

“கேடி என்ன பார்த்து தான் படுத்த என்ன ?குறைஞ்ச போயிடுவ “என்றான்.

ஆமாம்,குறைந்து தான் போயிடுவேன் .

“என்ன சொல்லி கூப்பிட்ட சொல்லு டி “என்றான் .அவள் அமைதியாக இருக்க .

“உன்ன தான் டி கேட்கிறேன் என்று அவன்  குரல் குழைவாகவே இருக்க “செய்தது .

“அவன் குரலில் கட்டுண்டு இருந்தவள் அவன் கண்ணையே உற்றுப் பார்த்துவிட்டு “மாமா” என்று இன்னொரு முறை அழைக்க “.

அவளை காற்று புகாத அளவிற்கு இருக்கி அணைத்து இருந்தான் .

ஒரு சில நொடி அவனது அணைப்பில் இருந்தவள். எனக்கு வலிக்குது என்று அவனை தள்ளிவிட்டாள் .

“கொஞ்ச நேரம் கூட மனுசன சந்தோஷமா இருக்க விட மாட்ட டி ” என்று அவளது தலையில் கொட்டினான் .

என்ன ?”இவ்வளவு சந்தோசம் சாருக்கு “என்றாள்.

” என் பொண்டாட்டி என்ன மாமானு கூப்பிட்ட சந்தோஷப்பட மாட்டேனா “என்றான்.

ஏன்,தினமும் உதயா அண்ணா உங்களை  மாமானு தான கூப்பிடுறாரு என்றாள்.

“அவன் கூப்பிடறது வேற ..நீ கூப்பிடறது வேற டி “

அவரோட தங்கச்சி தான நான் .அதில் என்ன பெரிய வித்தியாசத்தை கண்டுபிடிச்சிட்டீங்க என்றாள்.

” அவளை இழுத்து அணைத்து ஒரு சில நொடி அவளது கண்களை பார்த்துவிட்டு அவளது உதட்டில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை கொடுத்திருந்தான் “.

தியாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து இருந்தது.

“அவன் தரும் முதல் இதழ் முத்தம் .அதிர்ச்சியில் உறைந்து இருந்தாள்”.

அவளது கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது .

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன். ஒரு சில வினாடிக்குப் பிறகு அவளை விட்டு விலகி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

தியாவிற்கு எந்த பேச்சும் வரவில்லை .”தன்னையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் வர “.

“எனக்கும் உன் மேல எல்லா உணர்வும் இருக்குடி “வயசுக்கு தகுந்த எல்லா உணர்வும் இருக்கு .

*அது உன்கிட்ட காட்டாம வேற யார் கிட்ட காட்ட போறேன்”.

உன்கிட்ட காட்டக் கூடாதுன்னு  இல்ல.

ஆனால் இப்போ என்னால முடியல .”கொஞ்சம் எனக்கு டைம் கொடு டி “.

அதுக்கு காரணம் நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத என்று விட்டு அமைதியாக அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு படுத்துக் கொண்டான் .

தியாவுமே ஆனந்தத்தில் அவனை ஒரு சில நொடி நிமிர்ந்து பார்த்துவிட்டு தூங்கி இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *