Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 54

மீண்டும் மலரும் உறவுகள் 54

முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட தியா சுற்றியுள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தனாவின் ரூமுக்கு செல்ல .

தனா என்ன பண்ணிட்டு வர என்று கேட்டாள் .

அங்கு சொன்னது தாண்டி அவர்கள் எனக்கு மரியாதை தர வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன் .

ஆனா ,”இந்த வீட்டுக்கும் சரி, அவருக்கும் சரி மரியாதை தரவில்லை என்றால் அந்த வீட்டுக்கு நான் அவரை கூட்டிட்டு போக மாட்டேன் “என்றாள்.

அவளை சமாதானப்படுத்த வந்த தேவியும் ,நந்தாவும் இதை கேட்டுவிட்டு தங்கள் வீட்டிற்கு வந்து இருக்கும் இரண்டு மருமகளை எண்ணி சந்தோஷம்.

இப்படிப்பட்ட மருமகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமைதியாக ஹாலுக்கு வந்து விட.

நந்தா தனது அக்காவின் தோளில் கையை போட்டு தன்னருகில் நிற்க வைத்துக் கொண்டான் .

உதயாவுமே தனாவின் சித்தியை முறைத்துவிட்டு தனது  அம்மாவின் அருகில் வந்து நின்று கொண்டான்.

தியா அவளை சமாதானப்படுத்தி வெளியில் அழைத்துக் கொண்டு வர .

தனாவின் சித்தி  தாங்கள் எடுத்துக் கொண்டு வந்த கட்டப்பையில் இருந்த பழம் பூ ஸ்வீட்டை வெளியே எடுத்து வைத்து தாம்பூல தட்டில் வைத்தார்.

உதயாவையும் அருகில் அழைத்து  தியா ,நந்தா ,தேவி கையில் கொடுத்து எங்க பொண்ணையும் ,மருமகனையும் மறு வீட்டுக்கு அழைச்சிட்டு போலாம்னு வந்திருக்கோம்.

இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்துட்டு வரட்டும் என்று கூப்பிட .

நந்தா தான் சிரித்துக் கொண்டே உதயாவை பார்க்க.

உதயா அவனுடைய ரூமிற்கு சென்று வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டு வந்தான்.

தனாவும் புடவை கட்டிக் கொண்டுவர .

பிறகு இருவரையும் அழைத்துக் கொண்டு தனா வீட்டிற்கு சென்றார்கள் .

அங்கு தடபுடலாக சமைத்து இருந்தார்கள்,  தனாவின் சித்தி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சமைத்து இருந்தார்.

தனாவின் தம்பியும், தங்கையும் தங்களால் முடிந்த உதவிகளை தங்களுடைய அம்மாவிற்கு செய்து தங்களால் முடிந்த அளவிற்கு மறு வீட்டு தேவைக்கு அனைத்தும் செய்திருக்க.

திருப்திகரமாக சாப்பிட்டுவிட்டு இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கி விட்டு  தங்கள் வீட்டில் வந்து அடைந்தார்கள். தனாவும் ,உதயாவும் .

“இருவருக்கும் புரிதல் வர வேண்டும். காதல் மட்டும் இருந்தால் பத்தாது”.

“வாழ்க்கையில் கணவன், மனைவியாக வாழ்வதற்கு முதல் அடித்தளமே புரிதல் தான் “.

“எத்தனை தவறுகள் இருந்தாலும் அனைத்தையும் மன்னிக்கக் கூடிய மறக்கக்கூடிய சக்தி புரிதலுக்கு மட்டுமே இருக்கிறது” என்பதை உதயாவிற்கு சிறுவயதிலிருந்து நந்தாவும் சரி தேவியும் சரி சொல்லி வளர்த்திருக்க .

தங்களுக்குள் முதலில் புரிதலை வளர்த்துக்கொண்டு பிறகு தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லலாம். என்று உதயா முடிவு செய்து அதை தனாவிடமும் சொல்லி இருந்தான்.

அதற்கேற்ப இருவரும் தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு வந்தார்கள் .

இங்கு நந்தா, தியா இருவருக்கும் அவ்வபோது  முட்டிக்கொண்டும் ,மோதிக் கொண்டும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் .

அவர்கள் ரூமில் மட்டும் மாமா என்று தியா தினமும் அழைப்பாள்.

நந்தாவாகவே  கேட்டிருந்தான் .”இனிமேல் மாமான்னு கூப்பிடுறியா” என்று , கேட்டான்.

அதான் “உங்க மச்சான் கூப்பிடுறாரு இல்ல என்று சிரித்துக் கொண்டே சொல்ல” .

அவளது கழுத்தில் மாலை போல் தன் கையை போட்டுக் கொண்டவன் .அவன் கூப்பிடறதும் நீ கூப்பிடுறதும் ஒன்னு இல்லன்னு அன்னைக்கே சொல்லி இருந்தேன்.

“கொன்றுவேன் டி” உன்ன என்று சொல்ல.

அன்றைய நினைவில் முகம் சிவந்தாள். அதன் பிறகு ரூமில் மட்டும் நந்தாவை  மாமா என்று அழைப்பாள் .

ஹாலில்  வாத்தி ,சார் ,வாங்க போங்க என்று சொல்வாள்.

தியாவையும், தனாவையும் ஒரே வண்டியில் காலேஜுக்கு சென்று வர சொல்லிவிட்டான் நந்தா .

எங்க அண்ணன் கொண்டு வந்து விடுவாரு உங்களுக்கு என்ன வந்துச்சு என்று தியா சொல்ல .

“அவனுக்கு வேற பொழப்பு இல்லை என்று நினைச்சியா ?”அவன் உனக்காக தான் ஃபர்ஸ்ட் சீக்கிரமாக வீட்டுக்கு வந்தான். “அது தெரியுமா ?உனக்கு ” என்றான்.

தியா தன் கணவனை முறைத்து விட்டு “எனக்கு தெரியும்” என்றாள் .

நந்தா தான் சிரித்துக்கொண்டே அப்புறம் என்னடி உனக்கு பிரச்சனை .இருந்தாலும் என்றாள்.

“அவன் பொண்டாட்டிக்கான டைமா அவனுக்கு கொடுக்க தெரியும்”.

.”அவன் தங்கச்சிக்கான டைமையும் அவனுக்கு குடுக்க தெரியும்” சரியா என்று அவளது தலையில் கொட்டி விட்டு இரண்டு பேரும் ஒரே வண்டியில போயிட்டு வரீங்க” என்றான்.

“உங்க தங்கச்சியை நம்பி வண்டியில் அனுப்பி வைப்பீங்க. எனக்கு ஒரு வண்டி வாங்கி தர முடியாதா ? “என்று கையை இடுப்பில் வைத்து முறைத்துக் கொண்டு நிற்க .

தேவி தான் அவளது கையை தட்டி விட்டவர் .”எது என் தம்பி உனக்கு வண்டி வாங்கி தரமாட்டேன்னு சொன்னனா டி “

கல்யாணம் ஆன புதுசுலையே வண்டி வாங்கி தரேன் அதுல காலேஜ் போனு சொன்னதுக்கு நான் போகமாட்டேன் .

உதயா கூட தான் போவேன் என்று சொன்ன .

“இப்போ நல்லா கேடி வேல பாக்குற டி “என்று சொல்ல.

“நந்தா திரு திருவென முழித்தான்”.

நம்ம மாமா எதுவும் பண்ணி வச்சி இருக்காரோ என்று யோசித்தான் உதயா நந்தா வின் முழியை பார்த்து.

தியா சிரித்துவிட்டு நந்தாவை பார்த்துவிட்டு ,தேவியின் தாடையை பிடித்து சிரித்தவள்.

சும்மா பெரியம்மா விளையாட்டுக்கு என்று நாக்கை சுழற்றி காண்பித்து விட்டு தனாவுடன் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தாள் .

இப்படியே நாட்கள் வேகமாக சென்று அந்த வருடமும் முடிந்து .

மூன்றாவது வருடம் ஆரம்பமாகி இருந்தது.

காலையில் காலேஜுக்கு நந்தா அவசரமாக கிளம்பி கொண்டு இருக்கு .

அவனது அருகில் வந்து பின் பக்கம் இருந்து அவனை கட்டிக்கொண்டு தியா அவனது   முதுகில் சாய்ந்து நிற்க .

“காலையிலேயே என்னடி உனக்கு காலேஜ் கிளம்பலையா” என்றான் .

“கிளம்பனும் “என்றாள் .

அவள் பக்கம் திரும்பி நின்று “என்ன டி” என்றான்.

” அவனது மீசையை முறுக்கிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டே இருந்தாள்”.

அவனுக்கு கூச்சமாக இருந்தது .இருந்தாலும் அவளை பார்த்து விட்டு என்னடி என்றான்.

“இன்னைக்கு நியூ ஸ்டூடண்டுக்கு பிரஷர்ஸ் பார்ட்டிக்கு ஸ்டேஜ்ல பாட சொல்வாங்க இல்ல இன்னைக்கு  என்ன பாட்டு பாடுவீங்க “என்று கேட்க.

“எதை எதையோ யோசித்து கனவு கோட்டையில் இருந்த நந்தாவிற்கு சப் என்ற ஆகிவிட” .

அவள் தாடையில் இருந்து கையை எடுத்தவன் .”அவளை முறைத்துவிட்டு ரொம்ப முக்கியம் இப்ப இது “என்றான்.

இந்த நேரத்தில் ரொம்ப முக்கியம் பாரு இது என்று எண்ணி  விட்டு “கண்ணாடி பக்கம் திரும்பி அவள் செய்தது போல தன் மீசையை முறுக்கி விட்டு “தனது தலையை சீவிக் கொண்டு இருந்தான் .

அவனை முறைத்துவிட்டு உங்க கிட்ட தானே கேட்டுட்டு இருக்கேன் என்றாள்.

“அத காலேஜ்ல வந்து பாத்துக்கோ “என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் ரூமில் இருந்து வெளியில் வர .

“யோவ் வாத்தி சொல்லிட்டு போயா “என்று கத்தி  கொண்டே வெளியில் வந்தாள் .

அப்போதுதான் காலேஜ் கிளம்பி வந்து சாப்பிட்டு கொண்டு இருந்த தனா ,வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த உதயா ,தேவி மூவரும் அவளை பார்த்து  சிரித்து விட.

வெளியில் வந்த நந்தா தியா பக்கம் திரும்பி அவளை முறைத்தவன்.

” ஒழுங்கா பேசி பழகு டி “என்று சாப்பிட உட்கார்ந்தான்.

மெதுவாக அவனது அருகில் வந்து கேட்க.

தேவி தான் “என்ன டி” என்று கேள்வி கேட்டார். ஒன்னும் இல்ல பெரியம்மா  என்றாள்.

ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டும் நந்தா  வாய் திறக்கவில்லை .

கோபத்துடன் தேவியை பார்த்து “இன்னைக்கு உங்க  தம்பி  காலேஜ்ல என்ன பாட்டு பாடுவார்னு கேட்டு சொல்லுங்க “என்றாள்.

அவர் “என்ன பாட்டு பாடுறாரோ ,யாருக்காக பாட போறாரோ “என்று தனா கண்ணடித்து சொல்ல.

உங்க அண்ணன் எனக்காக ஒன்னும் பாட்டு பாட மாட்டார் என்று முறைத்தாள் .

“சத்தியமா சொல்றேன் டி காலேஜ்ல போய் உனக்காக நான் ஏன் டி பாட்டு போடுவேன்” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு சாப்பிட்டு கிளம்ப.

  அவள் அவனை முறைத்துக் கொண்டே இருக்க சாப்பிட்டு சீக்கிரம் காலேஜ் கிளம்பி வர வழியை பாரு  என்று விட்டு தன் மச்சனை பார்த்தான்.

சரி டா ,சரி தானா ,சரி க்கா என்று முவரிடமும் சொல்லி  விட்டு .

தியாவை பார்த்து லேசாக கண்ணடித்து விட்டு கிளம்பி விட்டான்.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் .

அவளது தலையில் கொட்டிய தேவி “நைட்டு வந்து உன் பஞ்சாயத்தை வச்சுக்கோ டி “.

இப்போ காலேஜ் கிளம்பு நேரமாகுது என்றார்.

தியா தன் காலை உதறி விட்டு காலேஜ் பேக் எடுத்துக் கொண்டு  வந்து ,வந்து தொல டி  போலாம் என்றாள் தனாவிடம் .

உதயா சிரித்துக் கொண்டிருந்தான் .வெளியில் வந்தவுடன் தனா வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்க .

“தியா  நந்தாவிற்கு போன் செய்து  யோவ் வாத்தி  உனக்கு வர வர என் மேல பாசமே இல்லை யா ” என்று சொல்ல.

இங்கு சிரித்துக் கொண்ட நந்தா “சின்ன புள்ளத்தனமா நடந்துக்காம காலேஜுக்கு வர வழியை பாருடி “என்றான் .

“உன்கிட்ட சின்ன புள்ளையா நடந்துக்காமா வேற யார்கிட்ட நடந்துக்கிறது ” என்று விட்டு போனை கட் செய்து இருந்தாள்.

தன்னை மீறி சிரிப்பு  வந்தவுடன் காலேஜ் வந்து விட்டோம் .அவளைப் பற்றிய நினைப்பு இருக்க கூடாது என்று எண்ணியவன் .

அமைதியாக காலேஜ்க்கு  சென்று விட்டான் .

தியா வந்து வண்டியில் உட்கார.

இருந்தாலும் ,உங்க அண்ணனுக்கு இவ்வளவு திமிரு வேணாம் என்றாள்.

“லூசு அங்க போன பிறகு  அவர் என்ன பாட்டு பாட போறாருன்னு தெரிஞ்சிட போகுது “.

“ஏன்? ஒரு வருஷமா அவர் கூட குப்பை கொட்டி இருக்கியே அவர்கிட்ட உனக்காக ஒரு பாட்டு கூடுமா நீ பாட சொல்லி கேட்கல”.

“இல்ல அவரா உனக்காக ஒரு பாட்டு கூடவா பாடியதில்லை “என்று கேட்டுக்கொண்டே வண்டியை ஓட்ட.

கண்ணாடி வழியாக அவளை முறைத்த தியா” அவரும் பாடுனது இல்ல ,நானும் கேட்டதில்ல “.

எனக்கு அவர் கிட்ட கேட்க தோணல .இன்னைக்கு தான் தோணுச்சு கேட்டேன் அதுக்கும் பதில் சொல்லல என்றாள்.

தனா தியாவை எண்ணி சிரித்து விட்டு   கண்ணாடி வழியாக அவளை பார்த்தாள் .

தனா வேறு எதுவும் பேசாமல் காலேஜில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினாள்.

முதல் இரண்டு ஹவர் மட்டும் பாடம் எடுத்திருக்க .

அதன் பிறகு முதல் வருட மாணவ,  மாணவியர்களுக்கு பிரஷர் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ப்ரோக்ராமாக முடிந்திருக்க.

பழைய ஸ்டூடண்ட்ஸ் நந்தா சார் என்று மைக்கில்  கத்த.

சிரித்துக் கொண்டே மைக் முன்பு வந்து நின்றான்.

அனைவரும் இவர் என்ன பாட்டு பாடுவார் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்க .

மற்ற மாணவர்களின் போலவே தியாவும் கையை பிசைந்து கொண்டு ஒரு இடத்தில் நிற்காமல் நந்தா என்ன பாட்டு பாடுவான் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள்.

அருகில் இருந்த தனா தான் தியா  ஒரு இடத்தில் நிற்க மாட்டியா டி .

“உன் கால் தரையில நிக்காத” என்ன பாட்டு பாட போறாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிட போகுது என்றாள்.

அவளது கையை திறந்துவிட்டு தனது கர்ச்சீப் கொண்டு அவளது கையைத் துடைத்துவிட்டு.

எதுக்கு இப்போ இவ்ளோ  டென்ஷன் ஆகுற என்று அவளது நெற்றியில் லேசாக தட்ட செய்தாள் .

“உனக்கு எப்படி டி என்னோட பீலிங்ஸ் புரியும்” என்றாள்.

தனா   சிரித்துவிட்டு “உன் ஃபீலிங்ஸ் எனக்கு எதுக்கு டி புரியணும் “என்று அவள் காதில்  கிசு கிசுக்க

தனது ஆருயிர் தோழி தனாவை பார்த்து முறைத்து விட்டு ஆமாம் “உனக்கு ஏன் புரியனும் “என்றாள்.

தனா சிரித்து விட்டு “உன்னோட  ஃபீலிங்ஸ் எங்க  அண்ணனுக்கு புரிஞ்சா போதும்டி “என்றாள்.

தியா அவள் சொன்ன விதத்தில் அவளைப் பார்த்து சிரித்து வைத்தாள் .

மாணவர்கள் பெரிதாக கூச்சலிட்டார்கள் நந்தா சார் நந்தா சார் என்று ..

அதன் பிறகு தியாவின் கவனமும் சரி ,தனாவின் கவனமும் சரி ஸ்டேஜில் இருக்கும் நந்தாவின் பக்கம் தான் சென்றது.

நந்தாவும் தனது காந்த குரலால் பட ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *