Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 6

மீண்டும் மலரும் உறவுகள் 6

“கண்ணன் தேவியை விரும்பி தன் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார் “

“திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்கள் சென்றிருக்கும் நன்றாக ஒற்றுமையாக தான் இருந்தார்கள்”

” அப்பொழுது ,நந்தன் உடைய முழு பொறுப்பையும் கண்ணன் ஏற்றுக்கொண்டார் “

“தேவி வேலைக்கு செல்கிறேன் என்று சொன்னதிற்கு கூட அதான் நான் செல்கிறேனே என்றார் “

“இல்லை , நந்தனுக்கு தேவையான செலவுகள் பார்பதற்கு என்றதற்கு  நந்தனை எனது மகனாக ஏற்றால் தான் நான் உங்களை திருமணம் செய்து கொள்வேன் என்றாய்”..

“அப்படித்தான் நானும் அவனை மகனாக நினைக்கிறேன் “.

“நான் அவனை வேறுபாடு பார்க்கவில்லை என்று கூறியிருந்தார் .இருந்தாலும் தேவிக்கு ஒரு சில நேரங்களில் என்ன இருந்தாலும் தன் தம்பியை தான் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தார் “.

“ஏதோ ஒரு வேலையில் கூட கண்ணன் தனது தம்பியை ஒரு வார்த்தை சொல்லி விடக்கூடாது என்று பயந்தார் “

“அதை கண்ணனிடம்  கூறவும் செய்தார்.”

” என்னை நீ அவ்வளவு தான் புரிந்து கொண்டாயா? இருந்தாலும் என்றதற்கு கூட என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா தேவி என்று கேட்டார் “

“இல்லை என்று வார்த்தையை முழுங்கினார் தேவி”..

பிறகு “தேவியும் எந்த வேலைக்கும் செல்லாமல் முழுமையாக குடும்ப பொறுப்பை கண்ணனே ஏற்றுக்கொண்டார்”

” தேவிக்கு என்று வீடு வாசல் இருந்ததால் அந்த வீட்டில் கண்ணன் உடன் இருந்து கொண்டார் “

“நன்றாக தான் அவர்கள் வாழ்க்கை சென்றது. இரண்டு வருடங்கள் இருக்கும் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி தேவி ஒரு சில நொடி யோசிக்க செய்தார் “.

“எங்கு தனக்கென்று ஒரு குழந்தை வந்துவிட்டால் தனது கணவன் நந்தனை ஒதுக்கி விடுவாரோ என்று அஞ்சினார்” .

” அதை உணர்ந்த கண்ணன் தங்களுக்கு இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று கூட சொல்லியிருந்தார்”

” இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேவி கண்ணன் நந்தனை பார்த்துக் கொள்ளும் முறையை வைத்து தனது கணவன் தங்களுக்கு என்று குழந்தை பிறந்தால் கூட நந்தனை ஒதுக்க மாட்டார் என்பதை உணர்ந்த பிறகு இருவரும் தங்களுக்கு என்று ஒரு குழந்தை பற்றி யோசிக்க செய்தார்கள்” .

” அடுத்த மூன்றாவது மாதத்தில் தேவியும் கரு உண்டாகி இருந்தார்”

” அப்பொழுது நந்தன் பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருந்தான் “

“அவனுடன் பயிலும் மாணவர்களும் வீட்டிற்கு வந்து விட்டு செல்வார்கள்”

” அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் தேவி வீட்டில் இருப்பதால் மாலை டியூஷன் போல் எடுக்க செய்தார்”

” அதற்கு சம்பளம் எல்லாம் வாங்கவில்லை நந்தனுடன் பயிலும் மாணவர்களும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சில சிறிய பசங்களுக்கும் டியூஷன் எடுக்க செய்தார்”

” கண்ணன் இதற்கென்று கேட்டதற்கு தான் வீட்டில் தானே இருக்கிறேன். நான் இது சம்பளத்திற்காக செய்யவில்லையே படிக்கும் பசங்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக என்றார்.”

” கண்ணனும் முதலில் சம்பளத்திற்கு என்று  எண்ணி என்னை நம்பவில்லையோ என்று எண்ணியவர் பிறகு தேவி முழுவதாக கூறிய பின்பு சரி என்று விட்டுவிட்டார் “

“அப்படி நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் இடியாக இறங்கியது தான் ஒரு சம்பவம்”

” நந்தன்  அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். “

” அவனுடைய நண்பன் அவர்கள் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி இருந்ததால் அப்பொழுது  அவர்களுக்கு அரையாண்டு பரீட்சை நடந்து கொண்டிருந்ததால் நாளை டெஸ்ட் இருந்ததால் படிக்கவில்லை”

” ஒன்றுமே எனக்கு தெரியவில்லை கணக்கு புரியவில்லை என்று நந்தனுடைய நண்பன் அழுது கொண்டிருந்ததால் சரிடா தம்பி நான் சொல்லித் தருகிறேன் “

“இதற்கு எதற்காக அழுகிறாய் உனக்கு புரியும்படியாக சொல்லித் தருகிறேன் என்று தேவி கூறி அந்த பையனுக்கு இரவு 10 மணி வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்”

” கண்ணன் தினமும் வருவதற்கு இரவு பத்தரை தொட்டுவிடும் நந்தன் துணைக்கு இருப்பதாலும் தேவி சிறு வயதிலிருந்து வளர்ந்த இடம் என்பதால் கண்ணன் பயம் இல்லாமல் சென்று வருவார்”

” அப்பொழுது தனது மகன் டியூஷன் சென்று வெகு நேரமாகியும் வரவில்லை என்று நந்தனின் நண்பனின் தாய் தனது கணவனிடம் புலம்ப “

“தனது மகனை அழைத்து கொண்டு வருமாறு கணவனை அனுப்பி வைத்தார்”

” அப்பொழுது  நந்தனின் நண்பனை தேடி அவனுடைய அப்பா வந்திருந்தார்”

” தேவி அந்த பையனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தார் புரியும் படியாக விளக்கிக் கொண்டு இருந்தார் “

“அப்பொழுது அவர் கர்ப்பபதியாக இருந்ததால் லேசாக தலைச்சுற்றலும் வாந்தி வருவது போல் இருந்ததால் இருங்கடா என்று இருவரிடமும் சொல்லிவிட்டு வெளியில் வந்தார் “

“வெளியில் இரவு நேரமாகி விட்டதால் வெளியில் உட்கார வேண்டாம் வயது பசங்களை வைத்துக்கொண்டு  வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் என்று சொல்லி உள்ளே இருவரையும் படிக்க வைத்துக் கொண்டு இருந்தார் தேவி “

“அப்பொழுது நந்தனின் நண்பனை தேடி வந்த அவனுடைய அப்பா தேவி வீட்டிற்கு முன்பு வந்து நின்றார் “

“அம்மா தேவி என்னுடைய பையன் என்ன பண்ணுகிறான் படித்து விட்டானா ?என்று கேட்டதற்கு படித்து விட்டான் அண்ணா”

“இன்னும் கொஞ்சம் தான் ஒரு பத்து நிமிடம் உட்காருங்கள் “

“இன்னும் ஒரு கணக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு அவனை அனுப்பி வைக்கிறேன் அவன் பயப்படுகிறான் என்றவுடன் சரிமா என்று விட்டு திண்ணையில் உட்கார்ந்தார் “

“வயதில் பெண் பிள்ளை இருக்கும் வீட்டிற்குள் செல்ல வேண்டாம் என்பதற்காக வீட்டிலும் பசங்கள் தான் இருக்கிறார்களே “

“இன்னும் கண்ணன் வேறு வரவில்லை என்பதால் வெளியில் உட்கார்ந்து இருந்தார் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தேவி லேசாக மயங்கி சரிந்து விட்டு வாந்தி எடுக்க செய்தார். “

“தேவி என்னமா ஆச்சு என்று மாசமாக இருக்கும் பெண் என்பதால் தாங்கி பிடித்தார்”

” இல்ல அண்ணா ஒரு மாதிரி இருக்கு என்று உடன் சரிமா என்று விட்டு நந்தனை அழைத்துக் கொண்டே தேவியை உள்ளே கை தாங்களாக  அழைத்துச் சென்றார் “

“அப்பா என்ன ஆச்சு என்று நந்தனுடைய நண்பன் கேட்டவுடன் இந்த அக்காவுக்கு மயக்கம் வந்துடுச்சுடா ஒரு சோடா வாங்கிட்டு வாங்க டா என்றார்”..

” நந்தனும் அவனுடைய நண்பனும் சோடா  வாங்கிக் கொண்டு வரும் பொழுது தேவி இன்னொரு முறை வாந்தி எடுத்து இருந்தார் “

“அக்கா என்ன ஆச்சு என்று பதறியவுடன்  நந்தனிடம்   நண்பனுடைய அப்பா முத்து ஒன்னும் இல்ல நந்தா உன்னுடைய அக்கா மாசமா இருக்குல்ல அதனாலதான் இந்த மாறி நேரத்தில் இப்படி தான் இருக்கும் ஒன்று பயப்பட வேண்டாம்”

“சாப்டியா இல்லையா  என்றார்.இலா ப்பா மாமா வந்த பிறகுதான் சாப்பிடுவோம் பா என்றவுடன் வைத்து புள்ள தாச்சி இப்படித்தான் சாப்பிடாம இருப்பாங்களா என்று விட்டு இந்த சோடாவை கொடுக்குமாறு நந்தனிடம் சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றார். “

“அங்கு சமைத்து பாத்திரங்கள் இருப்பதால் கொஞ்சூண்டு சாப்பாடு போட்டு எடுத்துக் கொண்டு வந்து அவரே ஊட்டி விட்டார் தேவி  சோர்வாக இருப்பதால் ஊட்டி விட்டு தன் தோளில் இருக்கும் துண்டால் தேவியின் வாயை துடைத்து விட்டார் “

“நெற்றியில் இருக்கும் வியர்வையை  துடைத்துவிட்டு ஒன்றும் இல்லை அம்மா கொஞ்ச நேரம் படுத்து எழுந்தால் சரி ஆகிவிடும் என்றார்”

” அப்பொழுதுதான் ,கண்ணன் வீட்டிற்குள் நுழைந்தார் “

“அவர் வீட்டிற்குள் நுழையும் பொழுது கண்ட காட்சி முத்து தனது காதல் மனைவி தேவிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவரது வாயையும் ,நெற்றியும் துடைத்து விட்டதை தான்”

“இருந்தாலும் ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு தன் மனைவி தவறானவள் அல்ல என்று யோசித்து விட்டு எதர்ச்சியாக நடந்ததாக கூட இருக்கும் தானே தவறாக எண்ணக்கூடாது என்று எண்ணிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார் “

“வீட்டுக்குள் நுழைந்தவுடன் சரிப்பா கண்ணா பார்த்துக் கொள். உன் பொண்டாட்டி மாசமாக இருப்பதால் மயக்கம் ,வாந்தியாக இருக்கிறது “

“இனி இரவு சீக்கிரம் வந்து நேரத்திற்கு சாப்பிட சொல் பார்த்துக்கொள் என்று விட்டு நீ படித்த வரைக்கும் போதும் வா டா படித்ததை எழுதினால் போதும் என்று தனது மகனை முத்து அழைத்துக் கொண்டு சென்றார்”

” போகும் முத்துவை நன்றியாக தேவியும் “

“இவர் ஏன்? தேவிக்காக அக்கறை கொள்ள வேண்டும் என்று சிறிது அவரை நம்பாத பார்வையுமாக கண்ணனும் பார்க்க செய்தார்கள் “

“கண்ணனின் மனதில் ஏதோ ஒரு மூலையில் சிறுதுளி அங்கு சந்தேகம் ஏற்பட செய்தது “

“அந்த சந்தேகம் இருவரது வாழ்க்கையும் பின்னால் சூனியம் ஆகிவிடும் என்று அப்போது அவர் எண்ணவில்லை “

“அப்படி அவர் எண்ணியிருந்தால் இப்போது இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டார்கள்”

கண்ணனின் இந்த சந்தேகம் அவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தியது என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

1 thought on “மீண்டும் மலரும் உறவுகள் 6”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *