Skip to content
Home » மீண்டும் மலரும் உறவுகள் 7

மீண்டும் மலரும் உறவுகள் 7

“நந்தன் அதன் பிறகு மாமா அக்காவிற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்ற உடன் ஒன்று இல்லடா என்று நந்தனின் தலையை வருடி விட்டு தேவியை கைத்தாங்களாக தாங்கள் இருக்கும் அறைக்குச் சென்று படுக்க வைத்தார் “

பிறகு “மாமா வாருங்கள் சாப்பிடலாம் என்றான். இல்லடா நீ சாப்பிடு என்றதற்கு மாமா நீங்கள் சாப்பிடாமல் நான் எப்படி என்றான்”

” நந்தனை பார்த்து லேசாக சிரித்து விட்டு முகம் ,கை கால் கழுவி கொண்டு வந்தார் பிறகு நந்தனுக்கு கண்ணன் ஊட்டி விட்டு தானும் உணவு உண்டு கொண்டு படுத்தார்”

” அவர் படுத்தவுடன் அவருக்கு உறக்கம் வரவில்லை .தேவியை  ஒரு சில நிமிடம் திரும்பி பார்த்தார் அசதியில் தேவி ஆழ்ந்து உறங்கி இருந்தார் “

அப்படியே அன்றைய பொழுது கழிந்து மறுநாள் நன்றாக புலர்ந்தது “

“ஒரு வாரம் கடந்து இருந்தது. பரீட்சை ரிசல்ட் வந்திருந்தது நண்பனுடைய நண்பன் அசோக் தான் கணக்கில் நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறேன் என்று தேவி அக்காவிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டான். “

“இதற்காக போய் பயப்படுவார்களா ?”

“இதற்காக தானே அன்று பயந்தாய் என்று சொல்லி சிரித்தார்
சாரிக்கா என்னால் தானே உங்களுக்கு அன்று அப்படி ஆகிவிட்டது என்றான் அசோக்”

“உன்னால் எல்லாம் இல்லை என் வயிற்றில் இருக்கும் குட்டி பாப்பாவால் தான்  என்று சிரித்தார்”

“அவனும் இந்த பாப்பா எப்போது வரும் என்னுடனும் நந்தனுடனும் விளையாட என்று கேட்டான் “

“உங்களுடன் இல்லாமல்  வேறு யாருடன் விளையாடும் நீங்கள் இருவரும் தான் வளர்க்க வேண்டும் இந்த குட்டி பாப்பாவை”

” ஏன் குட்டி தம்பி எல்லாம் வேண்டாமா என்றதற்கு எனக்கு எனக்கு என்று நந்தன் கை தூக்கினான் “

“எனக்கு தம்பி பாப்பா தான் வேண்டும் என்று அசோக் கத்தினான். எனக்கு தங்கச்சி பாப்பா வேண்டும் என்று சிரித்தான் நந்தன் . “

“சரிடா என்று விட்டு பேசிக்கொண்டிருக்கும் போது அசோக்கின் அம்மா சிரித்து முகமாக வந்து தேவி உனக்கு ஏழாவது மாதம் நெருங்கி விட்டது தானே  என்றார் “..

“ஆமாக்கா என்றார் தேவி சரிடி வளைகாப்பு வைக்கலாமா என்று கேட்டதற்கு ஒரு சில நொடி தயங்கி நின்ற தேவி அக்கா என்றார்”

“ஏன்? எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு உறவு மாதிரி தெரியலையா ?”

“அப்பா அம்மா இல்லைனா என்ன நாங்க இல்லையா என்று தைரியம் மூட்டினார் “

“பிறகு அசோக் உடைய தாயே தங்களால் முடிந்ததை வாங்கிக் கொண்டு வந்து தேவிக்கு ஏழாவது மாதம் சாதம் கொடுப்பதாக கண்ணனிடமும் சொல்லிவிட்டு  நல்ல நாள் பார்த்து அந்த வாரத்திலேயே ஏழாம் மாதம் வளைகாப்பும் சிறியதாக செய்தார்கள்”

” இவர்கள் ஏன் ?என்னுடைய மனைவிக்கு செய்ய வேண்டும் என்று கண்ணனுக்கு சிறிது யோசனை வந்தது”

” அப்பொழுது , கண்ணன் உடன் வேலை செய்யும் நண்பர்களும் ஏன் உன்னுடைய மனைவிக்கு உன் மச்சானுடைய நண்பன் வீட்டில் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு அவர்கள் அக்கம் பக்கம் இருப்பவர்கள் தேவி மேல் இருக்கும் பாசத்தில் செய்தார்கள் என்றான் கண்ணன் “

“ஆனால் , அக்கம் பக்கும் இருக்கும் அனைவரும் இவ்வாறு அனைத்தையும் எடுத்துக் கட்டி செய்யவில்லையே “

“அவர்கள் வீட்டில் மட்டும் தானே என்று கேட்டார்கள் “

“அது என் மச்சானுடைய நண்பன் குடும்பம் என்று விட்டு நகர்ந்து விட்டான் கண்ணன் “

ஆனால் ,”கண்ணன் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் பேசிய பேச்சின் விளைவாக  யோசிக்க செய்தார் “

“அவர்கள் ஏன் தங்களுக்கு என்று செய்ய வேண்டும். அன்று என்றால் அசோக்கின் அப்பா அவ்வாறு நடந்து கொண்டார் “

“இது தூய்மையான உறவு தானா ?இல்லை என்று யோசித்தார்.”

” பிறகு தனது தலையை உலுக்கி விட்டு நாம் இப்படி தவறான கோணத்தில் என்ன கூடாது”

” அதுவும் என்  தேவியை  என்று விட்டு அமைதியாக வீட்டிற்கு சென்றார் “

“அன்று  இரவு தேவி கண்ணனை பின் பக்கம் இருந்து அணைத்துக் கொண்டு படுத்தார் “..

“கண்ணன் என்ன தேவி என்றார் .”

“ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையா இப்போதெல்லாம் என்னிடம் நெருங்குவது இல்லையே என்று தேவி சிறிது வருத்ததுடன் கேட்டார் “

“இல்ல தேவி உனக்கு உடல்நிலை சரியில்லை .மாசமாக இருக்கிறாய் இந்த மாதிரி நேரத்தில் என்று நிறுத்தினர் அதெல்லாம் நான் டாக்டரிடம் கேட்டுவிட்டேன் ஒன்பது வாரம் வரை இருந்து கொள்ளலாம்”

” ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னார் மெதுவாக செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் என்றார் “

“சரிமா இன்று உனக்கு  அசதியாக இருக்கும் இல்லை என்றதற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்றார் தேவி”

“பிறகு அங்கு அழகான தாம்பத்தியம் நடந்தேறியது “

“நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது “

“தேவிக்கு எட்டாவது மாதம் பிறந்திருந்தது நந்தனும் ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்தான்”

” தினமும் பள்ளி சென்று கொண்டு வந்திருந்தான் அவனுக்கு ஒன்பதாம் வகுப்பு ஆரம்பத்திலேயே பத்தாம் வகுப்பு பாடம் எடுக்க ஆரம்பித்து இருந்தார்கள் “

“ஆகையால் ,அசோக் நந்தனுடன் பள்ளி முடிந்து வந்தவுடன் இரவு சாப்பிடும் வேலையில் தான் தன் வீட்டிற்கு செல்வான் “

“இரவு 8 ,9 மணி போல் அப்பொழுது அசோக் உடைய தங்கை எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பெண் பெரிய பெண் ஆகிவிட்டால் என்பதற்காக முத்து தனது மகன் அசோக்கை அழைக்க வந்திருந்தார் “

“என்னென்ன என்று கேட்டுக்கொண்டு வந்தார் தேவி”

” இல்லம்மா பாப்பா பெரிய பொண்ணு ஆயிட்டா அதான் அசோக்க அழைச்சிட்டு போலாம்னு என்றார் “

“இப்ப எட்டாவது தான அண்ணா  படிக்கிறா என்று கேட்டதற்கு ஆமாம்மா இப்பல்லாம் என்ன பண்றது 6வது, 7வது படிக்கும்போதே வந்துடுத்துங்க என்றார் “

“சந்தோஷமான விஷயம் தானா விடுங்க அதெல்லாம் ஒன்னும் இல்ல பாப்பாக்கு தேவையானதை அக்காவும், நீங்களும் சொல்லிக் கொடுத்தாளே  போதும் என்று விட்டு அசோக்கை அனுப்பி வைத்தார்”

” பாப்பா ஒன்று கேட்ட தப்பா எடுத்துக்க மாட்டையே என்றார் முத்து “

“என்ன அண்ணா இதுல என்ன இருக்கு சொல்லுங்க இல்ல புள்ள பெரிய பெண் ஆயிடுச்சு புள்ளைக்கு தேவையானது என்னென்ன வாங்கணும்னு பொண்டாட்டிக்கு தெரியல கொஞ்சம் என்னனு தேவைணு  வந்து பாக்கிறியா “

“தப்பா எடுத்துக்காத நேரம் கெட்ட நேரத்தில் வந்து கேக்குறேன்  என்றார் “

“இதுல என்ன அண்ணா இருக்கு நமக்குள்ள அவளும் என்னோட பாப்பா மாதிரி தானே என்று விட்டு நந்தனிடம்  நீ அங்க  வரக்கூடாது “

“இங்கையே இரு அக்கா மட்டும் சென்று விட்டு வருகிறேன் என்றார் “..

“சரி க்கா என்று விட்டு நந்தன் படித்துக் கொண்டிருந்தான் .”

“அங்கு சென்று என்ன என்ன வாங்க வேண்டும் என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து இருந்தார் தேவி “

“சரி என்று விட்டு  அசோக்கின் அப்பா அம்மா இருவரும் அசோக் தங்கைக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வந்தார்கள் “..

“அதுவரை உடன் இருக்க சொல்லி அசோக்கின் அம்மா கேட்டு கொண்டதால் தேவி  அசோக் மற்றும் அசோக் தங்கையுடன் இருந்து விட்டு இரவு 9:00 மணி போல் அசோக்கின் அப்பா அம்மா இருவரும் வந்த பிறகு தன் வீடு நோக்கி கிளம்பினார் தேவி “

” இந்த நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம் தேவி அண்ணனுடன் வீட்டிற்கு செல் அண்ணன் உன்னை அழைத்துக் கொண்டு செல்வார். “

“இல்லக்கா இங்க இருக்க வீடு தானே  என்ற உடன் இல்லம்மா நேரம் கெட்ட நேரத்துல வயித்து புள்ள தாச்சி தனியா போக வேண்டாம் என்று சொல்லி அதுவும் இங்கு வந்துட்டு  என்று தன் வீட்டு மரத்தில் இருக்கும் வேப்பிலை எடுத்து தேவியின் தலையில் சொருகி விட்டார்”..

“சரி மா அண்ணன் கூட  போ   என்று அனுப்பி வைத்தார் சரி என்று விட்டு முத்துவும் தேவி உடன் நடந்து பேசிக்கொண்டே வந்தார்”..

” தம்பி நல்லா படிக்கிறான் மா நல்ல மார்க் எடுப்பான என்று தனது மகனைப் பற்றியும் ,தன் மகளுக்கு சத்தான உணவு என்னென்ன கொடுக்க வேண்டும் என்றும் பேசிக்கொண்டு வந்தார்கள் “.

“அசோக்கின் அப்பா அம்மா இருவரும் கூலி வேலை செய்வதாலும் படிக்காதவர்கள் என்பதாலும் தங்கள்  பிள்ளைகளின் வாழ்க்கைக்காக பேசிக் கொண்டு வந்தார் முத்து “

“அன்று சீக்கிரமாகவே வந்திருந்தார் கண்ணன் “

“முதலில் உள்ளே தான் சென்று இருந்தார்.”

“தேவி வெளியே சென்று இருப்பதால் தேவிக்காக திண்ணையில் உட்கார்ந்து இருந்தவர் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு  வருவதை குறுகுறுவென பார்த்தார் “..

“அவருக்கு சந்தேகமும், நெருடலும் அதிகமாகி கொண்டே இருந்தது”

” தன் மனைவி இந்த நேரத்தில் முத்துவுடன் அதுவும் சிரித்து பேசிக் கொண்டு வருகிறாள் என்று எண்ணினார் “

“கண்ணனின் மனதில் சந்தேக பேய் புகுந்து கண்ணன் ,தேவி இருவரது வாழ்க்கையும் எந்த அளவிற்கு பாதித்தது “என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் .

அன்புடன்

தனிமையின் காதலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *