“உதயாவின் பிறந்தநாளை முன்னிட்டு உதயா ,தேவி ,நந்தா மூவரும் கேசரி சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு காலை உணவு வெளியே சாப்பிட்டு விட்டு மாலை பொழுது வரை வெளியே சுற்றி விட்டு மதியம் போல் வீட்டிற்கு வந்தார்கள் “
“மூவருக்கும் வெளியே சுற்றியது சிறிது அலைச்சலாக இருந்த உடன் சிறிது நேரம் அவர்களது அறையை நோக்கி சென்று தூங்கி எழுந்து விட்டு மாலை ஐந்து மணி போல் தேவி தான் முதலில் எழுந்து வந்தார் “
“அவர் எழுந்து வரும்போதே நந்தா சமையலறையில் டீ போட்டுக் கொண்டிருந்தான்”
” டேய் இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க வேண்டியது தானே என்றார்”
” அதெல்லாம் ஒன்றும் இல்லை உனக்கு தான் தினமும் அலைச்சல் என்றான்”
எனக்கு என்னடா அலைச்சல் அதன் என்னை பார்த்துக்கொள்ள நீயும் உனது மச்சானும் இருக்கிறீர்களே என்று சிரித்தார்.
” நான் இல்லாமலா என்று உதயா தன் மாமாவின் தோளில் கை போட்டான். ஆமாண்டா மச்சான் என்றான் நந்தா”
சரி போதும் உங்க மாமா மச்சான் பாச மழை என்று சிரித்தார்.
சரி இந்த என்று தேவியின் கையில் ஒரு கப் டீயை வைத்துவிட்டு தங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு கப் எடுத்துக்கொண்டு நந்தா வரவேற்பறைக்கு வந்தான்”
அனைவரும் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது புரோக்கர் வீட்டிற்கு வந்தார் .
என்னக்கா புரோக்கர் வந்திருக்கிறார் என்று கேட்டதற்கு என்னடா உனக்கு வயதாகிறது என்று நினைவில்லையா ?
இப்பொழுது தான் இருபது வயது என்று நினைக்காதே அதான் பெண் பார்க்கலாம் என்று அக்கா இன்னும் ஒரு இரண்டு வருடம் போகட்டுமே என்றான்.
” டேய் என்ன விளையாடுகிறாயா? இப்பொழுது வயது என்ன ஆகிறது இன்னும் இரண்டு வருடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் ?”
“இன்னும் இரண்டு வருடம் ஆனால் உன் மச்சானே ஒரு பெண்ணை பார்த்து விடுவான் என்று சிரித்தார் “
“இப்பொழுது கூட பார்த்திருப்பான் நீ வேறு என்று நந்தா சொல்லி சிரித்தான். “
“மாமா என்ன அக்காவும் ,தம்பியும் என்னை ஓட்டுகிறீர்கள்.”
” அம்மா ஒரு வேலை மாமா ஏதாவது பெண் பார்த்து வைத்திருக்கிறாறோ அதனால்தான் இரண்டு வருடம் டைம் கேட்கிறார் போல”
” நீங்கள் வேறு என்னை வைத்து கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று போகிற போக்கில் ஒரு குண்டை தூக்கிப் போட்டான்”
” தேவி தனது தம்பியை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு இவன் அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டான் என்றவுடன் உதயா சிரித்து விட்டான் “
நந்தா தனது அக்காவை பாவமாக பார்த்துவிட்டு அக்கா என்று சிணுங்கினான்.அதே போல ஏதாவது இருக்கிறதா? என்ன என்றார் .
“அப்படி இருந்தால் உன்னிடமும் ,அவனிடமும் சொல்ல மாட்டேனா?”
” அவன் தான் வேண்டும் என்று பேசுகிறான் என்றால் நீ வேறு என்றான்”
” அப்புறம் என்னடா என்றதற்கு முதலில் அவன் கல்லூரிக்கு செல்லட்டும் என்றான் “
“அவன் கல்லூரி செல்வதற்கும்,உனக்கும் என்ன சம்பந்தம் என்றார் .எதுவும் புரியாத மாதிரி பேசாதே “
“அவன் ஓர் அளவிற்கு தெளிவாக ஓரிடத்தில் வந்து நிற்கட்டும் “
“டேய் அவன் வேலைக்கு செல்லும் வரை காத்திருப்பாயா? அவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லையே “
“அவனுக்கு வெளி உலகம் முழுவதாக தெரிய வேண்டும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்கிறாயா?”
” டேய் என்றார் .மாமா எனக்கு வெளி உலகம் தெரிவதற்கும் ,நீ திருமணம் செய்து கொள்வதற்கும் என்ன மாமா சம்பந்தம் காமெடி செய்கிறாய் என்றான் “
“உதயா நான் காமெடி செய்யவில்லை. உனக்கு வாழ்க்கை புரிய வேண்டும் .உனக்கு வாழ்க்கை என்னவென்றால் என்ன என்று புரிந்த பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் “
” ஏன் நானா திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ தானே மாமா திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் “
“உனக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று புரியும் தானே? தெரியும் தானே ?பிறகு என்ன என்று கேட்டான்”
” எனக்கு புரிந்தது தெரிந்தது. அனைத்தும் உனக்கும் புரிய வேண்டும் தெரிய வேண்டும் என்றான்”
” தேவி நந்தா போதும் கொஞ்ச நேரம் அமைதியாக இரு .
“அவனுக்கு அனைத்தும் தெரியும் வரை நான் எந்த முடிவும் எடுப்பதாக இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் என்று விட்டு அவனது அறைக்குள் புகுந்தான்”
போகும் நந்தாவையே தேவி பாவமாக பார்க்க செய்தார்
என் வாழ்க்கையே எண்ணி இவனது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறேன். அவனுக்கு வயது ஏறுகிறது என்ற எண்ணமே அவனது நினைவில் இல்லையா ?
அவனுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று எண்ணினார்.
அப்போது உதயா தன் தாயின் தோளில் கை போட்டுவிட்டு அம்மா மாமாவாக நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லும் காலம் வரும் .
கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று விட்டு புரோக்கரிடம் ஐயா மன்னித்து விடுங்கள் .
மாமா இப்போது திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார். நாங்கள் அவரிடம் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவாக சொல்கிறோம்.
அதன் பிறகு பெண் பார்க்கலாம் மன்னித்து விடுங்கள். அம்மா மாமாவின் மீது இருக்கும் பாசத்தால் பெண் பார்க்க உங்களை வர சொல்லி விட்டார்கள் .
இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என் மாமாவிடம் பேசிவிட்டு உங்களை கொஞ்ச நாட்கள் பிறகு பார்க்கிறோம் என்று அனுப்பி வைத்தான்.
சரிப்பா ஒன்றும் பிரச்சனை இல்லை. நீங்கள் உன் மாமாவிடம் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவாக சொல்லுங்கள் அதன் பிறகு பெண் பார்க்கலாம் என்று விட்டு புரோக்கர் கிளம்பிவிட்டார் .
அப்பொழுது தேவி தான் என்னடா உனக்கு பக்குவம் இல்லை என்றான். இந்த அளவிற்கு பக்குவம் இருக்கிறதே.அப்பொழுதும் உன் மாமா இவ்வாறு சொல்லி செல்கிறானே என்று கவலை கொண்டார் .
அம்மா மாமா எனக்கு பக்குவம் இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை என்னிடம் மறைக்கிறீர்கள் அதை நான் தெரிந்து கொள்ளும் வரை என்று யோசிக்கிறார்.
டேய் என்றார். அம்மா போதும் நீங்கள் தான் ஏதோ ஒரு விஷயத்தை என்னிடம் மறைக்கிறீர்கள் மாமா கிடையாது சரியா ?
ஆனால் ,மாமா அது என்ன விஷயம் என்று என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அது என் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும் .
உங்களது வாழ்க்கையை இதுவரை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்று உணர்ந்ததால் மட்டுமே மாமா அமைதியாக இருக்கிறார்.
நீங்களாகவே மாமாவின் மனதை காயப்படுத்தி விட்டு நீங்களும் காயம் பட்டு கொள்ளாதீர்கள் .
கொஞ்ச காலம் பொறுங்கள். மாமாவிற்கு அந்த அளவிற்கு ஒன்றும் வயதாகவில்லை .
ஒரு வருடம் போகட்டும். அவராகவே ஏதாவது ஒரு பெண்ணை பிடித்து இருக்கிறது என்று சொல்வார் .
இல்லையென்றாலும் ,நான் கல்லூரியில் அடி எடுத்து வைத்தவுடன் மாமாவிடம் பேச செய்கிறேன் என்று விட்டு அவனும் தன் மாமாவின் அறை நோக்கி சென்றான் .
இப்படி இருவரும் சொல்லிவிட்டு செல்கிறார்களே
என் தம்பி குடும்பம் குட்டி என்று வாழ வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்காதா ?என்று இறைவனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு தன் தாய் தந்தையின் புகைப்படத்தை பார்த்தார்.
தேவி .
அவர்கள் இருவரும் மேலிருந்து வாழ்த்துவது இங்கு தேவிக்கு புரியவில்லை .
உன் வாழ்க்கைக்கான மொத்த விடிவு காலமும் ,உனது மகனின் விடிவுகாலமும் ,உன் தம்பியின் வாழ்க்கையும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது என்று மேலிருந்து தேவியின் பெற்றவர்கள் அசிசரியாக வாழ்த்தியது இங்கு தேவிக்கு கேட்கவில்லை.
ஒரே நேர்கோட்டில் மூவரின் வாழ்க்கையும் செல்லும் என்றால் அது என்ன என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
அன்புடன்
தனிமையின் காதலி