எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன்.
அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா என்று கூறியதும் மறைந்தது. உனக்கு என்னை தெரியவில்லையே என்று கோபத்தில் அடித்துவிட்டேன்” என்றான் கதிர்.
“இத்தனை நாளும் நான் உன்னை தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீ என்னை நினைக்கவே இல்லையா அக்கா….?” என்று ஏக்கமாக அவள் முகம் நோக்கினான்.
உன்னை மட்டும் அல்ல எந்த ஆண் முகத்தையும் நினைக்க நான் விரும்பவில்லை. காமவெறி பிடித்தவர்கள் ஆண்கள். அவர்களின் கைப்பாவை பொம்மை என்னைப்போல உள்ள பெண்கள். என்னை தேடி அப்பன் வருவான். அவன் சென்றதும், மகன் வருவான். அவன் பின்னே தாத்தனும் வந்து தடவி செல்வான் என்று விரக்தியாக சிரித்தாள்.
அப்பனை போல் நீயும் இருப்பாயோ…? என்று நினைத்தேன். மன்னித்து விடு… என்று நீளமாக பேசி முடித்தாள்.
அவளின் ஒவ்வொரு சொல்லிலுமே அவள் அனுபவித்த வேதனை தெளிவாக புரிய, அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அந்த ஆறடி ஆண் மகனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
அவன் கண்ணீரைத் துடைத்து “இனி இதைப்பற்றி நான் நினைக்கவோ, பேசவோ விரும்பவில்லை. இனிமேல் உன்னுடன் நலமாக, சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்”.
“நான் உன்னுடன் இருப்பதில் உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே?”
“என்ன அக்கா இப்படி சொல்லுற… உன்னை தேடி எத்தனை வருடம் அழைந்தேன். நீ என் கூட இருக்கிறதெல்லாம் கஷ்டமே இல்லை” என்று அவளை அணைத்தான்.
முதல் முறை ஒரு சகோதர அணைப்பு…. மிகவும் மகிழ்வாக உணர்ந்தாள் ஓவியா எனும் மாதவி.
இத்தனை நாட்களாக தேடிய தனது அக்காவை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கதிர் மாதவியை அழைத்துக்கொண்டு சென்னையை சுற்றினான். இரவு உணவகம் சென்று உணவு முடித்துவிட்டு தாமதமாகவே வீட்டிற்கு வந்தார்கள்.
அதன் பிறகு அவன் கவனம் முழுவதும் வேலையில் செல்ல, பொறுப்பான அக்காவாக மாறினாள் மாதவி. வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வது, தம்பிக்கு தேவையான உணவை வீட்டிலேயே சமைத்து, அவனை ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து கவனித்துக் கொண்டாள்.
நாட்கள் கடக்க, ஒரு நாள் மும்பையில் இருந்து அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது. ஒரு அமைச்சர் கொடுக்கும் பார்ட்டிக்கு வரவிருந்த ஒரு மந்திரி, மாதவிதான் தனக்கு வேண்டும் என்று கேட்கிறார். ஆகையால் நீ உடனே மும்பைக்கு வா என்று அழைத்தார் அந்த அமைச்சர்.
அவரிடம் இனிமேல் எனக்கு ஃபோன் செய்யாதீர்கள். நான் எங்கும் வரமாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டு ஃபோனை அணைத்து விட்டாள். அதை மறந்தும் விட்டாள். மறுநாள் காலையில் அவர்களது குடியிருப்பச் சுற்றி காவி வேட்டி சுற்றியது.
காலையில் ஜாகிங் செல்ல எழுந்த தேவராஜனின் கண்களில் பட, என்ன என்று விசாரித்தான். அவர்கள் கதிரின் வீட்டிற்கு வந்திருப்பதாக கூற, அவனே அழைத்துக் கொண்டு மேலே வந்தான்.
கதிரின் வீட்டு கதவை தட்டிய தேவராஜன், கதவை திறந்த மாதவியை மேலிருந்து கீழ் பார்த்தான். கதவைத் தட்டிவிட்டு எதுவும் கேட்காமல் இருக்கும் தேவராஜனை குழப்பமாக கண்ட மாதவி, அவனின் அருகில் இருந்த கரைவேட்டி கட்டியவனின் பார்வையைக் கண்டு திடுக்கிட்டாள்.
“சார் என்ன வேணும். எதற்கு கதவை தட்டினீர்கள்?” என்று சற்று கோபமாக கேட்டாள் மாதவி.
தேவராஜனும் அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டு “கதிர் எங்கே?” என்றான்.
அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு கதிரே அவனது அறையில் இருந்து வெளியே வந்துவிட, தேவராஜனை கண்டு புன்னகைத்து, “வாங்க சார்” என்று வரவேற்று, அவரின் பின்னால் நின்றவனை குழப்பமாக பார்த்தான்.
“உன் வீட்டிற்கு வந்த விருந்தாளி தான். அதான் அழைத்து வந்தேன்” என்று உரிமையாக சொல்லிக்கொண்டே, கால் மேல் கால் போட்டு அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தான்.
“யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கரை வேஷ்டி கட்டியவனை கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டே அதிகாரமாக கேட்டான் கதிர்.
“நான் ***** கட்சியில் இருந்து வருகிறேன். இந்த பொண்ணை” என்று மாதவியை காண்பித்து “உடனே அழைத்து வரச் சொல்லி அமைச்சர் சொன்னார். இப்பொழுது கிளம்ப வேண்டும்” என்றான்.
அவன் சொன்னதும் கதிரின் முஷ்டிகள் இருக்க, அவனை அடிக்க கை ஓங்கி விட்டான்.
வேகமாக அவனைத் தடுத்த தேவராஜன் “இவனை அடித்து என்ன ஆகப் போகிறது” என்று புன்னகைத்தவாறு சொல்லிவிட்டு, அவனிடம் திரும்பி “உன் ****** கட்சி மேலிடத்தில் சொல்லிவிடு. இனிமேல் அவள் எங்கும் வரமாட்டாள் என்று” என்று சொல்லிவிட்டு அவனின் தோளில் கை போட்டு அவனை அழைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே சென்றான்.
அவர்கள் சென்றதும் கதவை பூட்டிய கதிர் “என்ன ஆச்சு அக்கா? யார் இவன்? எதற்காக உன்னை வர சொல்கிறான்?” என்று கேட்டுவிட்டு மாதவனின் பயந்த முகத்தைப் பார்த்து, “அவன் வருவான் என்று உனக்கு தெரியுமா?” என்று அழுத்தமாக கேட்டான்.
அவள் மறுப்பாக தலையை ஆட்டிவிட்டு, நேற்று ஃபோன் வந்தது என்று சொல்லி அமைச்சர் பேசியது முழுவதையும் கூறினாள்.
“என்னிடம் உடனே சொல்லி இருக்கலாமே” என்று சொல்லி விட்டு சிறிது நேரம் யோசித்த கதிர், “சரி அக்கா நீ பயப்படாதே. இதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி காவல் நிலையம் செல்ல கிளம்பினான்.
அன்று கிளம்பியவன் தான் இரண்டு நாட்கள் அவன் வீட்டிற்கு வரவில்லை. மூன்றாம் நாள் காலை காலிங் பெல் தொடர்ந்து அடிக்க, வேகமாக வந்து கதவை திறந்த மாதவி, சுவற்றில் சாய்ந்து இருந்த தம்பியின் கோலம் கண்டு அதிர்ந்து, கீழே விழ இருந்தவனை தாங்கி பிடித்து ஷோபாவில் உட்கார வைத்தாள்.
உடல் எங்கும் அடி வாங்கிய காயங்களுடன் இருக்கும் தம்பியை கண்டு கலங்கினாள். என்ன செய்ய என்று தெரியாமல், யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியாமல் ஒரு நொடி கலங்கி நின்றாள். பின்னர் உடனே எதிர் வீட்டின் கதவை சென்று தட்டினாள். கதவை திறந்த காமாட்சி மாதவியைக் கண்டு புன்னகைத்து என்ன? என்று கேட்க, தன் தம்பி அடி வாங்கி வந்ததை பற்றி கூறி, “தயவுசெய்து உதவி செய்யுங்கள் அம்மா” என்றாள்.
மாதவியின் குரல் கேட்டு வெளியே வந்த தேவராஜன் அவள் கூறியதை கேட்டு வேகமாக சென்று பார்க்க, உடல் முழுவதும் அடி வாங்கிய கதிரைக்கண்டு, உடனே அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சொல்ல கிளம்பினான். மாதவியை பார்த்து “நீயும் வா” என்று அழைத்துச் சென்றான்.
மருத்துவமனை சென்று சிகிச்சை அளிக்க, கொஞ்சம் தெளிந்தான் கதிர். என்ன நடந்தது என்று தேவராஜன் விசாரிக்க மாதிவியை கலக்கமாக பார்த்தான் கதிர்.
அதன் பிறகு எதுவுமே தேவராஜன் அவனிடம் கேட்கவில்லை. அன்று பகல் முழுவதும் மருத்துவமனையில் இருந்துவிட்டு இரவு வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அவனை படுக்கையில் படுக்க வைத்த தேவராஜன், மாதவியை பார்த்து “நான் அம்மாவிடம் இவனுக்கு குடிப்பதற்கு கஞ்சி தயாரிக்க சொல்லியிருந்தேன். அவர்கள் தயாரித்து விட்டார்களா? என்று பார்த்து வாங்கி வா” என்று அவளை அனுப்பினான்.
அவள் சென்றதும் அறைக்கதவை சாற்றிய தேவராஜன் “இப்ப சொல்லு. என்ன நடந்தது?” என்றான்.
“அன்று மாதவியை வரச் சொன்ன அமைச்சர் தான்” என்று நிறுத்திய கதிர், “நான் அன்று மதியம் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஃபோன் வந்தது. ஊருக்கு வெளியே ஒரு இடத்தைச் சொல்லி, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்திருப்பதாக. நான் இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றேன்.
குடோனுக்குள் சென்றது மட்டும்தான் எனக்கு நினைவிருக்கிறது. தலையில் ஒரு அடி விழுந்தது. உடனே மயங்கி விட்டேன். அதன் பிறகு நேற்று காலையில் மருத்துவமனையில் இருந்தது தான் நினைவு இருக்கிறது” என்றான்.
சிறிது நேரம் யோசித்த தேவராஜன் “சரி நீ நன்கு ஓய்வெடு. இதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டிற்கு வந்தான்.
அங்கு சமையலறையில் மாதவியின் குரல் கேட்டது.
“நான் பார்த்துக் கொள்கிறேன் அம்மா. நீங்கள் துருவ்வை கவனியுங்கள்” என்று சொல்லி கஞ்சியை கிண்ட ஆரம்பித்தாள்.
“இன்று ஏனோ தெரியவில்லை மா? இவன் அழுது கொண்டே இருக்கிறான்” என்று அழும் தன் மகனை சமாதானப்படுத்திக் கொண்டு, துவையல் அரைப்பதற்கு தேவையானவற்றை எடுத்தார்.
அப்பொழுது அங்கு வந்த தேவராஜன் காமாட்சியின் கையில் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, “துருவ் கண்ணா! ஏன் அழுறீங்க?” என்று கொஞ்சிக் கொண்டே, “நீங்க சமையலை பாருங்க. நான் இவனை பார்த்துக்கொள்கிறேன்” என்று காமாட்சியை பார்த்து சொல்லிவிட்டு, மாதவியை மேலிருந்து கீழ் அழுத்தமாக பார்த்துக் கொண்டே, ஹாலில் விளையாடிக் கொண்டிருக்கும் வாசுகியின் அருகில் உட்க்கார்ந்து துருவ்வுக்கும் விளையாட்டு காட்ட ஆரம்பித்தான்.
கதிருக்கு உணவு தயாரானதும் எடுத்துகொண்டு, காமாட்சிக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றாள். தம்பிக்கு கஞ்சி கொடுத்து மாத்திரை கொடுத்து விட்டு திரும்ப, அவளை பார்த்தவாறு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் தேவராஜன்.
எதிர்பாராமல் அவனை அங்கு கண்டதும் அதிர்ந்த மாதவி, தன்னை சமாளித்துக்கொண்டு “என்ன சார்?” என்றாள்.
“அம்மா உனக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. டைனிங் டேபிள்ல வைத்திருக்கேன்” என்றான் அவளின் மீது இருந்த கண்களை அகற்றாமல்.
“ஏன் சார் உங்களுக்கு வீண் சிரமம். எனக்குத்தான் இங்கு சாப்பாடு இருக்கிறதே!” என்றாள் அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் சுவற்றை பார்த்தவாறு.
“ஓஓ.. அப்போ அதை நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி உணவு மேஜையில் இருந்த பாத்திரத்தை திறந்தான்.
நேற்று இரவு செய்த சப்பாத்தி இருக்க, “ஓ.. இந்த வெறும் சப்பாத்தி மட்டும் உனக்கு போதுமா?”
திறக்க விடக்கூடாது என்று வேகமாக பாத்திரத்தை பிடிக்க வந்த மாதவி, அவனின் மீது மோதி விட்டாள். அவன் முறைத்ததில் பயந்து வேகமாக விலக, கீழே விழ பார்த்தாள்.
அவள் விழாதபடி
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
நன்றி மா 😊😊
Super ivanga rendu perum jodi seruvangala
சூப்பர். .. தேவாக்கு ஜோடி மாதவி தானா
நன்றி 😊😊
ஆமாம்
Deva ku pair madhavi ahh
Nice epi