முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🌧-1
தேஜஸ்வனி கடிகாரத்தை பார்த்து கொண்டிருக்க அவளை காக்க வைக்காமல் நாயகி அகமேந்தி பெட்டியை கையில் ஏந்தி வந்தாள்.
வாசல் கதவு திறந்தே இருக்க அகமேந்தியை கண்டதும் தேஜஸ்வனி, “வாவ் வந்துட்டியா அகமேந்தி. உனக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன், உட்கார்” என்று அழைத்து பிரிட்ஜை திறந்து டின் கோலாவை எடுத்து நீட்ட, “வந்ததும் சில்லுனு வேண்டாம். எனக்கு குளிர்ச்சி ஒத்துக்காதுனு உனக்கு தெரியும்ல” என்று அகமேந்தி சோபாவில் அமர்ந்தாள்.
“எங்க ரெடியா கிளம்பி இருக்க தேஜூ.” என்றதும் தலையை சொரிந்தபடி,
“சாரி டி. நாளைக்கு நியூ இயர்ல. பெங்களூரே கொண்டாட்டமா இருக்கோம். அதான்… இன்னிக்கு பப் போனா நேரம் போறதே தெரியாது. டான்ஸ், லைட்ஸ், பாட்டு, கூத்து இப்படி செம ஜாலியா இருக்கும்.” என்றாள் தேஜூ.
“நீ பப்க்கு போவியா தேஜூ?” என்ற கேள்வியிலே தேஜூ அவளை பார்த்து. “அம்மா தாயே அன்டர் லைன் பண்ணி தானே சொன்னேன். எனக்கு டான்ஸ் பாட்டு பிடிக்கும். இங்க தான் நம்ம கண்ட்ரோல் பண்ண யாருமில்லை. அதான் இருந்துட்டு வருவோமே. நான் என்ன தண்ணி அடிக்கவா போறேன். சில் அகி” என்றாள்.
அழகான தமிழ் பெயர் தேஜூ சுருக்குவதாக எண்ணி ‘அகி’ ஆக்கி விட்டாள்.
“ஓ… அப்போ போகணும்… இங்க நம்ம கேட்க ஆள் இல்லை தான்” என்று பேச தேஜூ மௌனமாக,
“சரி போயிட்டு வா. நான் இங்க என்னோட லக்கேஜ் செட் பண்ணிடறேன்.” என்று கூற,
“நீயும் வாயேன் அகி. என் பிரெண்ட் வர்றேன்னு சொன்னா. நீ வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று ஆள் சேர்க்க, இரண்டு முறை கண்ணை உருட்டி,
“ஓகே வர்றேன் வெயிட் பண்ணு” என்று லக்கேஜை திறந்தவள் மேலே இருந்த பிங்க் சுடியை எடுத்து குளித்து விட்டு தலையை போனிடெய்லாக மாற்றி, வாட்ச் கட்டி போகலாம் என்றதும், இருவரும் கிளம்பினார்கள்.
ஊரில் தேஜூ, அகமேந்தி பள்ளி, கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். அகமேந்தி ஒரு வருடம் தன் படிப்பை விட்டு வீட்டில் தந்தை சொல்லுக்கு இணங்க வீட்டிலே டியூசன் மட்டும் எடுத்தாள்.
தந்தை வித்யாதரன் விருப்பம் அகமேந்தியை திருமணம் செய்து பக்கத்திலேயே பார்த்து கொள்ள வேண்டும் என்பது தான்.
ஆனால் போன முறை பெண் பார்க்க நாள், நட்சத்திரம் எல்லாம் முடிவு செய்து இருந்த நேரம் அகமேந்தியை பார்க்க வந்த பையன் தற்செயலாய் இறந்துவிட, வீட்டிலே அடைப்பட்டாள்.
தந்தை என்ன நினைத்தாரோ, அக்கணம் தேஜூ போன் செய்யவும் பணியிடம் காலியென்று கூற, ஒரு பேச்சுக்கு தந்தையிடம் வேலைக்கு போக கேட்டதும் சரியின்று சம்மதித்தார்.
தாயற்ற மகள், பாட்டி கல்பனாவின் வளர்ப்பில் இருந்து, இதோ தற்போது பெங்களுர் பணிக்கு வந்து விட்டாள்.
ஏற்கனவே தேஜூ இரண்டு வருடம் பணிபுரிந்த காரணத்தால் பெங்களூர் வாசம் அவளை பிடித்துக் கொண்டது.
தென் தமிழகத்தில் இருந்தும் அண்டை மாநிலத்தில் இருந்தும் வரும் இளைஞர்கள் பட்டாளத்தை கேள்வி கேட்க ஆளுமினறி, நவநாகரிக மோகத்திலும் நன்றாகவே செழிப்பாக புது கலாச்சாரத்தை ஏற்படுத்தி கொண்டார்கள்.
அதன் விளைவு பப் பார்ட்டி மது ஆட்டம் பாட்டம் என்பது சகஜமாக போனது.
அகமேந்தி இங்கு வருவதற்கு முன்னே தேஜூவால் இம்மாநகரத்தை பற்றி கேள்விப்பட்டடது உண்டு.
ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் இங்கே இருக்க கண்டதும், கேட்டதும் வைத்தும் யூகித்து இருந்தாள்.
வெறும் ஆட்டம் பாட்டத்தில் என்னவாக போகின்றது என்ற எண்ணத்தில் தான் மின்னும் வண்ண விளக்கின் ஒளிக்குள், குகை போன்ற இவ்விடத்திற்குள் புகுந்து வந்தார்கள்.
ஏதோ திருமண விழா போல இசையெழுப்பி ஆடும் மற்றவரை கண்டு தங்களை அறியாது ஒரு சந்தோஷம் உருவெடுக்க, மகிழ்ச்சியில் பழச்சாறை வாங்கி பருகினார்கள்.
இது போன்ற இடத்தில் பானங்கள் மாறிவிடுவதை, படத்தில் கண்டு ஒரு முறைக்கு இரு முறை பேரரிடம் கேட்டு ஆப்பிள் ஜூஸை கையில் ஏந்தி ஒரு ஓரமாக வந்து அமர்ந்து இருவரும் வேடிக்கை பார்த்தார்கள்.
சற்று நேரத்திற்கு எல்லாம் ஒரு ஆடவன் வந்து தேஜூவை தீண்ட, அகமேந்தியை கண்டு அவள் காதில் கிசுகிசுக்க,
“போ… வீட்டுக்கு போய் மற்றதை விரிவா சொல்லு” என்று அகமேந்தி சொன்னதும் தேஜூ தன் காதலன் கிஷோருடன் மெல்லிய ஆட்டம் ஆட அகமேந்தி மற்றவர்களின் ஆட்டத்தை கண்டவாறு இங்கே தான் வந்து விட்டதை தந்தைக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினாள்.
“ஹாப்பி நியூ இயர் பா” என்று அனுப்பி கொண்டு இருக்க அங்கே தருணேஷ் ஆடிக்கொண்டே, தன்னை பார்த்து சிரிக்கும் பெண்ணிடம் எல்லாம் ஹாப்பி நியூ இயர் என்று கூறி கட்டி பிடித்து கொண்டே வந்தான்.
அக்கணம் அங்கிருந்த டேபிளில் அமர்ந்தவன் சின்ன சிரிப்பை உதிர்க்க, அவனோ
“ஹாய் அப்பாவுக்கா விஷ் பண்ணிட்டீங்களா. எதிர்ல இருக்க எனக்கும் சொல்லிடுங்க.” என்று சிரிக்க, அவனின் தோற்றத்தில் நல்விதமாக எண்ணி, அகமேந்தி “ஹாப்பி நியூ இயர்” என்று கையை நீட்ட அவனோ “ஹாப்பி நியூஇயர்” என்று அவளை அணைக்க செய்தான். அடுத்த கணம்
“சீ… யார் நீ… சீப்பா பிகேவ் பண்ணற…” என்று தள்ளிவிட அங்கே சிலர் அகமேந்தியை விசித்திரமாக பார்த்தனர்.
“ஏய் விஷ் தானே பண்ணேன் ரொம்ப பண்ணற,” என்று தருணேஷ் கூறவும் தேஜூ உடனே ஓடிவந்தாள். அகமேந்தி இருக்கும் இடத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த தேஜூ ஓடி வந்தாள்.
“அகமேந்தி இது இங்க சாதாரணம் தான் ஓவர் ரியாக்ட் பண்ணாதே. எல்லாரும் நம்மளை பார்க்கறாங்க.” என்று தேஜஸ்வனி கூறவும் அகமேந்தி தன்னை அணைத்தவனை உறுத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.
கூடவே தேஜஸ்வனி அவள் நடைக்கு ஈடுகொடுக்கும் விதமாக ஒடினாள்.
வெளியே வந்தவள் உடனே ஒரு ஆட்டோ பிடிக்க தேஜஸ்வனி அவள் சென்றதை எண்ணி தன் வலது காலை தரையில் உதைத்து பார்க்கிங்கில் இருக்கும் ஸ்கூட்டி எடுத்து புறப்பட்டாள்.
அகமேந்தி திட்டியவனோ, எஸ்எஸ் பிரைவேட் லிமிட்டட் ஒர்க் பண்ணறேன். மன்திலி லாக்ஸ்ல சேலரி வாங்கறேன். நான் ஒரு பெண்ணை அணைத்தது தவறா டா. அதுவும் நியூஇயர்ல….”
“பெங்களூருக்கு புதுசா இருக்கும் விடுடா” என்றான் நண்பன்.
இங்கோ தனது இருப்பிடம் வந்த அகமேந்தி செருப்பை தான் எப்பொழுதும் கழட்டும் இடம் வந்து சரியாய் வைத்தவள் முகம் அலம்பி சோபாவில் அமர்ந்தாள்.
“மணி பத்து கூட ஆகவில்லை… அதுக்குள்ள வந்துட்ட.. அகமேந்தி இது நம்ம ஊர் இல்லை. பெங்களுர். இங்க எஸ்எஸ் பிரைவேட்லிமிட்டட் ஒர்க் பண்ண வந்துட்டு இந்த ஹக் பண்ணியதுக்கு கூட சிணுங்கிட்டு வர்ற. அங்க ஒர்க் பண்ணறவங்க ஒரே அறையில் ஸ்டே பண்ணுவாங்க தெரியுமா. நீ முப்பொழுதும் உன் கற்பனைகள் அதர்வா மூவி பார்த்தியா அது மாதிரி.” என்று தேஜஸ்வனி உரைக்கவும்.
“எங்க ஒர்க் பண்ணினாலும் நான் ஒர்க் பண்ண மட்டும் தான் வந்தேன். இப்படி கேளிக்கையில் அத்துமீற வர்றப்ப சும்மா இருந்து அந்த செய்கையை ஆமோதிக்கில்லை. குட் நைட் அண்ட் ஹாப்பி நியூ இயர்” என்று போர்வை போர்த்தி உறங்க போனாள் நாயகி அகமேந்தி.
அகமேந்தி ஒன்றும் அணைப்பது தவறு என்று எண்ணுபவள் அல்ல. ஆனால் ஒரு அணைப்புக்குள் இருக்கும் இதத்தில் அர்த்தம் உணர்ந்தவள். தருணேஷ் அணைத்தது உடலை தன் மீதே சாய்த்து கொண்டது போல இருந்தது. அவ்வளவு அருவருப்பு. ஒரு நிமிடமும் இனி அங்கே இருக்க பிடிக்காது வந்தாள்.
தேஜஸ்வனி ஜன்னலை வெறித்தாள். மக்கள் கூட்டம் வண்டியில் ராக்கேட் வேகத்தில் செல்வது கண்ணில் பட, அகமேந்தியை பார்த்து போனில் தன் ஆண் தோழமையோடு உரையாட ஆரம்பித்தாள்.
மணி பன்னிரெண்டு அடிக்க ஹாப்பி நியூ இயர் என்ற இளைஞர் இளைஞிகளின் குரல்கள் அளவில்லாமல் கத்தி ஆர்பரித்தது.
அகமேந்தி வராது இருந்தால் இன்னமும் தேஜூ தன் கிஷோரிடம் இருந்து இருப்பாள். அதுவும் போச்சு.
பப்பில் இன்னமும் அதே ஆரவாரம். தன் காதை தேய்த்து அங்கிருந்த சிறிய கோப்பையில் இருந்த மதுவை தன் தொண்டையில் இறக்கி கண் மூடி நின்றான் அவன். அவன் கண்ணில் அகமேந்தி தெரிய மனதுக்குள்ளே ‘ஹாப்பி நியூ இயர் டியர்’ என்றான் நாயகன் சைதன்யன்.
எப்பொழுதும் நியூ இயர் என்றால் இது போல வருபவன். என்ன அப்படி வரும் பொழுது எல்லாம் தன் நண்பன் கூட வருவான். இன்று இருவரும் இல்லை. அவரவர்கள் ஒவ்வொரு இடத்திற்கு சென்று செட்டில் ஆகிவிட்டனர்.
சைதன்யதன் மட்டும் இன்னமும் திருமணம் வேண்டாமென்று அலப்பறை செய்து கொண்டிருக்கின்றான். தாய் தந்தை என்று யாருமில்லை. கடந்த நான்கு ஆண்டில் தாய் இறக்க, அதற்கு பின் இரண்டாம் ஆண்டில் தந்தை செல்ல தனியாளாக தவிப்போடு விட்டு சென்ற சொத்தை வைத்து பணியில் முன்னேறிக் கொண்டிருப்பவன்.
பரம்பரை சொத்து ஊரில் இருக்க, தந்தைக்கு பெங்களுர் வாசம் பிடித்து போய் இங்கே வளரத் துவங்கினார்.
திருமணம் என்று யாரெனும் வீட்டில் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தால் அவன் இந்நேரம் மறுக்காமல் மணந்திருப்பான். அவனுக்கு தான் அப்படி சொல்ல யாருமில்லையே.
தாளமிட்ட நடையோடு காரோட்டி வீட்டுக்கு வந்தான். அருந்திய போதையின் பிடியில் உறங்கிப் போனான்.
அதிகாலை எழுந்த அகமேந்தி, தேஜூ அருகே வந்து, “ஹாப்பி நியூ இயர் தேஜூ. சாரி டி. நீ உன் லவ்வரோட வந்து அங்க இரசித்து நேரம் போக்கணும்னு இருந்து இருப்ப, நான் ஸ்பாயில் பண்ணிட்டேன்.” என்று வருந்த,
“இட்ஸ் ஓகே மா. ஹாப்பி நியூ இயர்.” என்று கன்னம் சேர்த்து வைத்து நகர்ந்தவள்.
சாப்பிட்டு ஸ்கூட்டியில் இருவரும் அந்த கட்டிடம் வந்தார்கள்.
“அகமேந்தி… பஸ்ட் டே. இந்தா ஸ்வீட். இந்த கம்பெனி பற்றி எதுவும் தெரியாது. ஆனா நல்ல சம்பளம் என்று தெரியும். எதுக்கோ நல்லபடியா இரு. சட்டுனு கோபப்படாதே.” என்று அணைத்து அவள் அடுத்த இரண்டு கட்டிடம் தள்ளியிருக்கும் தேஜூ அலுவலகம் செல்ல, அகமேந்தி தன் அலுவலக கட்டிடம் நோக்கி நடந்தாள்.
முதல் நாள் என்று விபூதி இட்டு வந்தவளை அங்கே கடந்து சென்றவர்கள் திரும்பி பார்த்து செல்ல, லிப்டில் ஏறியவள் அதனை அழிக்க, அதற்குள் இருந்த தருணேஷ், அவளை வேடிக்கை பார்த்து, “விபூதி நல்லா தானே இருக்கு எதுக்குங்க அழிக்கறீங்க” என்றான்.
அகமேந்தி திரும்பி பார்க்க, அங்கே இருந்த தருணேஷை கண்டு, “ஏய் யூ நீயா” என்று கேட்க, அவனோ யாரென யோசிக்க, நேற்று நடந்தவை நினைவு வந்ததும், சாரி கேட்டான். “நான் தான் தப்பா நடந்துக்கிட்டேன்” என்றதும் அகமேந்தியும் அவனை மன்னித்து விட்டதாக வெளியேறினர்.
முதல் நாள் அலுவலக பணியின், மேலோட்டமாக விவரித்து வாழ்த்து சொல்லி அனுப்பினான் சைதன்யன். அகமேந்தி தனது அலுவலுகத்தின் தலைவன் என்ற ரீதியில் கேட்டு நன்றி கூறி அகன்றாள்.
அதன் பின் வந்த காலங்கள், தருணேஷிடம் நண்பனாக மாறி போனாள். உணவு கூட ஒன்றாக உண்டனர்.
அகமேந்திக்கு அவ்வூரின் குளிர், பழக்க வழக்கங்கள் நன்றாகவே புரிந்து போனது. தேஜூ அவளின் காதலன் கிஷோர் தவிர தருணேஷிடம் நல்முறையிலே பழகினாள்.
சைதன்யன் அவளின் குணங்களை கண்டு தூரயிருந்து இரசிக்க ஆரம்பித்தான்.
அந்த மாதம் முடிய கம்பெனியை அன்றைய உணவினை வழங்க முடிவு செய்து மதியம் உணவினை ஒரு ஹோட்டலில் ஏற்படுத்தினர்.
உணவு முடித்து பேசிக்கொண்டிருந்த நேரம், தருணேஷ் ஒரு பூங்கொத்தை ஏந்தி வந்து காதலிப்பதாக அகமேந்தியிடம் கொடுத்தான்.
தூரத்தில் இருந்து பார்த்த சைதன்யன் அவர்கள் நின்றதிலே விஷயம் புரியத்துவங்க, அதிலும் அகமேந்தி தருணேஷிடம் இருந்து பூங்கொத்தை வாங்கி சிரிக்க, சைதன்யன் இயல்பாக போனை எடுத்து, “அகமேந்தி அப்பாவின் கையில் என் போட்டோ மாப்பிள்ளையா இந்த வாரத்தில் போய் சேரணும். அதுக்கான வழிமட்டும் செய். மீதி நான் பார்த்துக்கறேன்.” என்று மிக இயல்பாக அவ்விடத்தில் இருந்து கடந்து சென்றான்.
-சுவடு பதியும்.
- பிரவீணா தங்கராஜ்

Super start intresting sis.
superb starting padicha story but konjam maranthuten last ending la niyabagam vanthuduchi kudave padikiren. sikram puthu kathi kondu vanga
Yenakume title niyabagam eruku Anna story maranthuten. So thirmbavum padikalam