Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11

ஆலியே -11

தூரத்தில் தருணேஷ் வந்து கொண்டிருந்தான். ‘அமெரிக்காவில் இருந்து எப்பொழுது வந்தான். ஒரு வார்த்தை போனில் கூறவில்லையே.’ என மனம் எண்ண ‘ஏ முட்டாளே போன் பதிவாகியிருக்கும் எண் தன்யனோடது.’ என மூளை இடித்துரைத்தது.

“ஹாய் அகி…” என்றதும் அகமேந்திக்கு ஒர் அந்நிய பாதிப்பே வர,

“ஸ்வீட்ஹார்ட் ஏதோ கேட்கணும்னு சொன்னியே கேளு…” என்றான் கையைக் கட்டி மரத்தில் சாய்ந்து நின்றான் தன்யன்.

தன்யன் குரலில் ஒரு காந்தயீர்ப்பு வந்து அகமேந்தியை ஆள, கண்கள் அவனிடம் சென்று தருணேஷை வந்தடைந்தது.

“தருணேஷ் நீ என்னை விரும்பற தானே. நமக்குத் தானே மூன்று நாளில் திருமணம் நடக்கப் போகுது. க்ரஷ் வேற என்னனென்னமோ சொல்லறார்.” என்றதும் தன்யனுக்குக் கர்வம் சேர்ந்தது.

க்ரஷாகப் பேசியது தன்யனாகிய நானென அறிந்தாலும் கூப்பிடுகின்றாளேயெனச் சந்தோஷம் கொண்டான்.

“ஐ அம் சாரி… நான் விரும்பினேன். பிரப்போஸ் பண்ணினேன். ஆனா திருமணம் என்று நான் பேசலையே… என்ன உலருற அகி.” என்றான் தருணேஷ்.

“ஓகே… அப்பா மூலமா இவரோட மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு. நீ இல்லாதப்ப இவர் இப்படி ட்ராப் பண்ணி பிளே பண்ணியிருக்கார். இப்ப ஊரரிய திருமணம் என்றவரை போயிடுச்சு. பரவாயில்லை.. நீ என்னைத் திருமணம் செய்து இவர் முகத்துல கரியை பூசு தருணேஷ்.” என்று பேசி முடித்தாள்.

தருணேஷிடம் எந்தப் பதிலும் இல்லை.

“லுக் இப்படித் திடீரெனத் திருமணம் என்றால் என்னால அதை ஏற்க முடியாது.” என்று பேச,

“தருணேஷ் இப்படித் தவிக்க விடாதே.. இன்னில இருந்து மூன்றாவது நாள் திருமணம். அப்பா ஊர் முழுக்கப் பத்திரிக்கை வச்சியிருக்கார். போன முறையாவது பெண் பார்க்க வந்தவன் இறந்துட்டு அதுவே பெரிய கதை மாதிரி பேசினாங்க. இப்ப திருமணம் வரை வந்து நின்றா நல்லாயிருக்காது. அதுக்காவது இந்தக் கல்யாணம் நடக்கணும்.

இதுவொன்றும் சிட்டி இல்லை. பக்கத்துல கொலையே நடந்தாலும் நமக்கென்னனு இருக்க, இது கிராமம் சின்னதா பிரச்சனை வெளியே தெரிஞ்சாலும் கண்ணு காது வைத்து பேசுவாங்க. அப்பாவும் உடல்நிலை பார்க்கணும்ல… தருணேஷ்.” என்று முடிக்க,

“கல்யாணம்னா விளையாட்டா அகி. நான் வீட்ல சொல்லணும்.”

“நீ அநாதைனு தானே சொன்ன? சே இந்த முட்டாளுக்கு அதுவும் நினைவுயில்லை. என்னடா புதுசா அம்மா சொல்லறானே அப்பவே யோசித்துக் கேட்டு இருக்கணும். அம்மா இருப்பது தன்யனுக்குத் தானே உனக்கில்லையே… நீ தான் தனியாள் ஆச்சே பிறகென்ன” என்றாள் அகமேந்தி.

“உன்னை எப்படியாவது என்னிடம் சாய வைக்க அப்படிச் சொல்லிட்டேன்.” என்றதும் அகமேந்திக்கு சற்றே தருணேஷ் மீது நம்பகதன்மை ஆட்டம் கண்டது.

அதுவும் க்ரஷ் கர்வமாகச் சிரிக்க, தான் இங்கே கேலியாக இருக்கின்றோமோயென்ற எண்ணம் வலுத்தது.

“ஓகே… இப்ப மேரேஜ் பண்ண முடியுமா? முடியாதா…? இல்லை…. தன்யன் மிரட்டி உன்னை இப்படிப் பேச வைக்கிறாரா?” என்றாள் வீராப்பாக….

“ஐ காண்ட் அகி. நான் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லையே…” என்றதும் தன்யன் கம்பீரமாகக் காட்சியளிக்க, அகமேந்தி தன்யன் புறம் திரும்பாமலே… தான் தோற்ற வலியை உணர்ந்தாள்.

“இப்ப சந்தோஷம் தானே… உங்க இஷ்டம் போலச் செய்யுங்க. நான் கல்யாணத்துல கலாட்டா பண்ண மாட்டேன்…” என்று விறுவிறுவெனக் கத்திவிட்டு சென்றாள்.

செல்லும் பொழுது தன்யன் தன்னை விளையாட்டாய் எண்ணிவிட்டானே என்ற ஆதங்கம் அதிகமாகவே இருந்தது.

சைதன்யன் தருணேஷை அலட்சியமாகப் பார்த்து, போனை எடுத்தான்.

“வசந்த் பத்திரத்ததைச் சொன்ன சொல்படி அவனிடம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க” என்று முடித்துக் கொண்டு, தருணேஷிடம் “கல்யாணம் ஆகற நேரம் பத்திரம் உன் கைக்கு வரும்.” என்று பேசி கடந்தான்.

அன்று சைதன்யன் அகமேந்தி ஊருக்கு வர தயாராகிக் கொண்டிருந்த போது, தருணேஷ் வேகமாகச் சைதன்யன் வீட்டுக்கு வந்தான்.

அமெரிக்காவில் இருந்து நேராக வந்திருப்பான் போல….

சூட்கேஸ் பெட்டியை வீசியெறிய அது சைதன்யன் காலடியில் விழுந்தது.

“ஏன் இப்படிப் பண்ணறீங்க. என்னை அங்க அனுப்பிட்டு இங்க உங்களுக்கும் அகமேந்திக்கும் திருமண ஏற்பாடு பண்ணறீங்க. அவ நான் விரும்பியவ” என்று கூச்சலிட்டான்.

சைதன்யன் பேச தருணேஷ் பேச கைகலப்பு ஆகுமோயென வசந்த் பயந்தான். ஆனால் பேச்சு என்னவோ சுமூகமாக மாற்றிவிட்டான் சைதன்யன்.

எங்கே பேச்சை கொண்டு சென்றால் எப்படி முடியுமென அறிந்து வைத்திருந்தான்.

அதுவுமில்லாமல் இந்த ராஜாராணி படத்தின் ஜெய் வசனம் போல, எனக்கு அகமேந்தி சமாதானம் செய்யறது தான் கஷ்டம். மற்றபடி தருணேஷ் எல்லாம் மேட்டரே இல்லை’ என்று இருந்தான் சைதன்யன்.

அதற்கேற்ற மாதிரி தருணேஷ் நடவடிக்கை பத்திரம் வைத்து டீல் பேச மாறிட செய்தான். மாற்றம் வரதானே செய்யும் கிடைக்கும் பலன் அதிகமாக இருந்தாள்.(என்ன நடந்ததுனு பிறகு க்ரஷ் ஒவ்வொரு அத்தியாயமா சொல்வான்)

தருணேஷ் அங்கே இருக்காமல் சென்றான்.

சைதன்யன் கழுத்துக் கட்டிலில் படுத்து நிம்மதியாக இருந்தான்.

அவனுக்கு இத்தனை சுமூகமாக எல்லாம் மாறிவிடுமென எண்ணியிருக்கவில்லை.

தருணேஷ் வீம்புக்காக அகமேந்தியை தனக்கு விட்டு கொடுக்க மாட்டானென நம்பியிருந்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது.

அகமேந்தி எப்பொழுது தன்னை க்ரஷ்ஷாக உணர்ந்தாளோ அப்பவே அவளைச் சாய்த்திட முடியுமென நம்பினான்.

உறங்கும் நேரம் வித்யாதரன் வந்து பேச, நடந்தவையைச் சொல்லி முடித்தான். அகமேந்திக்கு அறியாதது தருணேஷ் எப்படி மறுத்துச் சென்றான் என்பதையும் தெளிவாகச் சொன்னான்.

“என்ன தம்பி ஆபிஸை எழுதி கொடுத்திட்டீங்களா…..” என்று கேட்க சைதன்யன் சிரித்துக் கொண்டே ஆம் என்பதாய் சொல்லி முடித்தான்.

வித்யாதரனுக்கு ஓரளவு புரிந்தது. அதனால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அவரிடம் தான் அனைத்தையும் ஒப்பித்து இருந்தானே.

தன் இரு கையிலும் மெஹந்தியை கழுவி கொண்டிருந்த அகமேந்தியிடம், “மாப்பிள்ளைக்குச் சாப்பாடு கொடுக்க அப்பவே செல்வராசுவிடம் சொன்னேன். அப்ப மறந்துட்டு போயிட்டான். இப்ப பாரு உன் அப்பா எத்தனை முறை போவான். நீ கொடுத்துட்டு வா…” என்று அதட்டினார் கல்பனா.

“ஏய் கிழவி… மற்ற நேரமெல்லாம் பொண்ணும் பையனும் சந்திக்கக் கூடாது அது இதுனு பேசுவ… இப்ப மட்டும் என்ன நான் போகணுமா” என்று அகமேந்தி கத்தினாள்.

“ஏன்டி அந்தத் தம்பியும் ஹோட்டலையா தங்கியிருக்கு. அதுக்கு என்னவோ அந்த மாமரத்து பக்கத்துல இருக்குற ஓட்டு வீடு பிடிச்சிருக்குனு அங்கையே தங்கிடுச்சு. இராத்திரி நேரம் பாதை சரியா தெரியாம உங்கப்பன் விழுந்துடுவானு உன்னைச் சொன்னேன். பெரிசா கத்துற. இரண்டு நாளு கழிச்சு நீ தானே பண்ணணும். இப்ப சோறு கொண்டு போக என்னவாம்.” என்றதும் மனதில் என்ன கத்தி என்ன பிரோஜனம் கடைசியில் நான் தான் கொண்டு போக வேண்டியதாக இருக்கு எல்லாம் தலையெழுத்து என்று முனங்கலோடு சென்றாள்.

அவள் வருவதை அணிகலன்களின் ஓசையில் அறிந்தவன் கட்டிலில் நன்றாகத் தலைக்குக் கையை முட்டு கொடுத்து சாய்ந்து இருந்தான்.

“மருதானி எல்லாம் நல்லா சிவந்து இருக்கு… உன் க்ரஷ் மேல அவ்ளோ லவ்வா ஸ்வீட்ஹார்ட்.” என்று அவள் கைகளைப் பார்வையிட்டவாறு கேட்டான் தன்யன்.

“இது ஒன்றும் மருதானி இல்லை. மெஹந்தி… யார் வைத்தாலும் சிவக்க தான் செய்யும். எல்லாம் கெமிக்கலோட ரியாக்ஷன்.” என்று கொண்டு வந்த உணவை டொம் டொமெனச் சத்தமிட்டவாறு வைத்தாள்.

“நானும் கெமிக்கல் ரியாக்ஷன் பற்றித் தான் சொன்னேன் ஸ்வீட்ஹார்ட்.” என்றான் குறும்போடு.

“இங்க ஒன்று நமக்குள் ஒரு மண்ணும் வராது. இங்க எல்லாம் இருக்கு எடுத்து சாப்பிடுங்க.” என்று செல்ல,

“லுக் ஸ்வீட்ஹார்ட் எனக்கு எடுத்து வைத்து சாப்பிட தெரியாது. பிரட் பால் என்றால் ஓகே. இத்தனை கேரியர் இருக்கு ப்ளில் ஹெல்ப் மீ…” என்றான்.

தலையில் அடித்தவாறு இலையைப் போட்டு பரிமாற வரிசையாக எடுத்து வைக்காமல் எதையோ தேடினாள்.

”என்ன எல்லாப் பாக்ஸையும் எடுத்தெடுத்து பார்த்து வைக்காம… என்ன தேடற…?” என்றான். அதே நேரம் அவை தட்டுப்பட்டது.

சின்ன டப்பாவில் பிரட் அல்வா இருக்க எடுத்து வைத்துவிட்டு மற்றவையைப் பரிமாறினாள். இலையில் முதலில் உண்பது இனிப்பு தானே அதைத் தனக்கெனத் தேடியதில் மகிழ்ந்தான். பின்னே ஏனோ தானோவென்று எடுத்து பரிமாறி செல்லாது தேடினாளே.

பீன்ஸ் பொரியல் உருளை வறுவல் சாம்பார் கத்திரி மசியல் என்று வகைப்படுத்தி வைத்து நிமிர, தன்யன் தன்னைப் பார்ப்பதை அறிந்து திரும்பிக் கொண்டாள்.

சைதன்யனும் எதுவும் பேசி பிரச்சனையைக் கிளப்ப விரும்பவில்லை.

“தேங்க்ஸ் அகமேந்தி.” என்றான்.

என்றுமே ஸ்வீட்ஹார்ட் என்பவன் இன்று அப்பெயரை சொல்லாமல் தன் பெயரையே உச்சரித்ததை எண்ணி கேள்வி கேட்க துடித்தாலும் பேச்சை நீட்டிக்கப் பிடிக்காது எடுத்து புறப்பட்டாள்.

இருட்டில் செல்லும் அவளைப் பார்த்து இருக்க, “அம்மா….” என்ற சத்தத்துடன் அவள் குரல் கேட்க ஓடி வந்தான்.

” என்னாச்சு…” என்று கேட்க அவனுக்குப் பதில் அனுப்பாமல் முள்ளை எடுத்து அவன் முகத்திற்கு நேராக நீட்டி தூக்கியெறிந்தாள்.

“ராஜதுரை ஹோட்டலில் தங்க என்னவாம். இங்க வந்து தங்கிட்டு இரவுல முள்ளு குத்தாம என்ன செய்யுமா.” என்றவள் அவள் பாட்டிற்குப் புலம்பி கொண்டு சென்றாள்.

தன்யன் இந்தப் பாதை தெரியும் விதமாக நாளைக்கு ஒரு லைட் போடணும் என்று எண்ணிக் கொண்டான்.

அடுத்தத் தினம் தெரிந்த கொஞ்ச நஞ்ச உறவுகளும் வீட்டை நிறைக்க, வந்தவர்கள் எல்லாம் தன்யனை கண்டு விட்டுப் புகழ்ந்தார்கள்.

அதிலே பாதிக்கு மேல் எரிச்சலடைந்தாள்.

தேஜும் வந்து சேர்ந்து தன்யனை கண்டு வாயை பிளந்து அகமேந்தியிடம் விசாரிக்கச் செய்தாள்.

“என்ன பண்ண சொல்லற தருணேஷ் கல்யாணம் பண்ணி இவன் முகத்தை உடைப்பான்னு பார்த்தா, அவன் எனக்கென்ன என்று போயிட்டான். அப்பா ஆசையா வரன் பார்த்துப் பத்திரிக்கை அடிச்சு தன்யனுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண கனவு கண்டார். அவரிடம் போய், நீங்க அனுப்பிய போட்டோவில் என் காதலன் போட்டோ இருந்ததால் தான் ஓகே சொன்னேனு சொல்ல முடியலை. அப்பாவிடம் அவன் உண்மையைச் சொல்லி என்னமோ பண்ணிட்டான். இந்தத் தருணேஷும் பயந்து ஓடிட்டானா… இல்லை பணத்தைக் கொடுத்து எதாவது பண்ணிட்டாரா புரியலை. என்ன இருந்தாலும் நான் வேண்டுமென்றால் நிலையா பதில் பேச தெரியாது அந்தத் தருணேஷுக்கு.” என்று வெடித்தாள்.

தேஜுவோ நேரம் காலமெல்லாம் இல்லாமல், “பரவாயில்லை.. நீ க்ரஷ்ஷா இருந்த தன்யனை தானே கல்யாணம் பண்ண போற அப்பறம் என்ன?” என்று சொன்னது தான் தாமதம்.

“அப்பறம் என்னவா…. அவன் என் உணர்வோட விளையாடி இருக்கான் தேஜு. இது ஆள்மாறாட்டம். எந்த விஷயத்துக்கு ஆள்மாறாட்டம் செய்தாலும் தப்பில்லை. ஒரு பெண்ணோட மனதில் இடம் பிடிக்க இப்படிப் பண்ணினா. அவள் நிலை என்னவாகும்னு ஒரு முறை யோசித்தாரா?

இதே சென்சிடிவ் ஹார்ட் கொண்ட பெண்ணா இருந்தா தற்கொலைக்கு முயன்று இருப்பா. தன் காதலிச்சவன் வேறயென்று. அவனை விடப் பெட்டராவே இருந்தாலும் நேசித்தது ஒருத்தரை திருமணம் செய்யப் போறவன் ஒருத்தன் என்றால் சாதாரண விஷயமா?

இல்லை…. இந்தத் தன்யன் என்னவோ மறைக்கறான். தருணேஷை என்ன சொல்லியோ ஆப் பண்ணி வைத்திருக்கான்.

இவனுக்கு இப்ப பதிலடி தரமாட்டேன். கல்யாணம் முடியவும் ஆட்டி படைப்பேன். அப்போ இருக்கு இவனுக்கு.” என்று கருவினாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தன்யன் சிரித்தபடி அப்படியே நழுவினான்.

முதலில் அகமேந்தி பேசிய பொழுது வருந்தினான். உண்மை தானே விரும்பியவன் ஒருவன் மணப்பவன் ஒருவன் என்று மெல்லிய மனம் படைத்த பெண்ணின் உணர்வில் அல்லவா விளையாடி இருப்பது. வருந்த செய்தான்… ஆனால் மனமோ தன்யனை அவள் விரும்பவில்லை என்றவொன்றே மற்றதினை அழிக்கவும், தன்னை அவள் இதயத்தில் நிலைநிறுத்தவும் அதுவே போதுமானது.

என்ன திருமணம் முடித்துப் பதிலடியா… என்று சிரித்தவன் அவளின் சின்னப்பிள்ளை தனமும் தெளிவாக விளங்கியது. அதே சமயத்தில் தான் என்னவோ செய்து இருப்பதை அறிந்திருக்கிறாளென வியக்கவும் செய்தான்.

ஒன்றா இரண்டா செய்தவைகள். தான் செய்தவையும் தன் நிலையும் புரியும் நேரம் அவளின் மனம் நிச்சயம் மாறுமென நம்பினான்.

நாளை நடக்கும் திருமண விழாவை மனக்கண்ணில் ஓட்டி பார்த்தான்.

-சுவடுபதியும்

  • பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!