👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12

ஆலியே -12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மனதில் ஓட்டி பார்த்த நிகழ்வு நிஜத்தில் காட்சியாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

ஐயர் மந்திரங்களை உச்சரித்து முடிக்க, அவனும் அம்மந்திரங்களைக் கூடவே உச்சரித்தான். இடையிடையே அகமேந்தியை பார்வையிட்டான்.

அகமேந்தியோ அக்னியில் கண்பதித்து இருந்தாலே ஒழிய, விழியைச் சற்றும் மாற்றி வேறு திசையில் பார்க்கவேயில்லை.

என்னவோ இவள் பார்வைக்குப் பயந்து நெருப்பாகக் கொழுந்துவிட்டு எரிவது போலத் தன்யன் கற்பனையில் எண்ணி சிரித்திட, அகமேந்தி சின்னதாக ஒர் முறைப்பை வழங்கி மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

வித்யாதரன் வந்த கூட்டத்தினரை கண்டு பயந்தவர் மகள் எதுவும் சொல்லாமல் இந்நேரம் வரை அமைதி காப்பதில் நிம்மதியடைந்தார். அவருக்கு நேற்றே தருணேஷ் ஒதுங்கிடுவான் என்று கூறியதில் சந்தோஷம்.

பொன்தாலி மஞ்சள் கழுத்தில் அணிவித்து முடித்துக் குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைக்க, அகமேந்தி முகம் அதே அமைதியிருந்தது.

பாட்டி கல்பனாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கியதும், அடுத்து தந்தை வித்யாதரன் காலிலும் விழுந்து வணங்கினாள்.

அடுத்து சொல்லாமலே ப்ரியங்கா காலில் அகமேந்தி விழ, இம்முறை சைதன்யன் நெடுமரம் நிற்க வைத்தது போல நின்றான். அகமேந்தி பார்க்கவும் வேறுவழியின்றி வணங்கி எழுந்தான். அன்னையிடம் காலில் விழ இவனுக்கு என்னவாம். ஒரு வேளை ப்ரியங்கா அத்தைக்கு இந்தக் காதல் பிடிக்கவில்லையோ எனத் தோன்றியது. இவன் பாடு எப்படியோ போகட்டும் என இவள் கொடுக்கும் மரியாதையைச் சரியாகக் கொடுத்தாள்.

பின்னர்ப் புகைப்படக்காரர் நேர்த்தியாக எடுத்திருக்க, கூட்டம் சென்றதும் தம்பதிகளை நெருங்கி நின்று எடுக்கச் சொல்ல, அவளோ “எனக்குப் பசிக்குது போட்டோ எல்லாம் எடுக்க முடியாது” என்று சொல்லவும் சைதன்யன் அவள் பின்னால் உணவுண்ண சென்றான்.

புகைப்படக்காரர் இங்கு இரண்டு ஸ்டில் எடுக்க இங்கேயும் வந்து நிற்க, உணவு பரிமாறி உண்பதை எடுத்தார்கள்.

அடுத்து ஊட்டிவிடக் கூறவும் அதற்கு அகமேந்தியோ, “ஏன் அண்ணா இன்னமும் எத்தனை காலத்துக்குத் தான் சாப்பாடு ஊட்டிவிடறதை எடுக்கப் போறீங்க. நிம்மதியா சாப்பிட விடுங்க. நீங்களும் சாப்பிடுங்க. போங்க அண்ணா” என்றதும் புகைப்படக்காரரே என்ன ஜோடி என்பதாக வியந்தனர். அதே ஊர்காரர்கள் என்பதால் அகமேந்தி இப்படிக் கூறிவிட்டாள். அவர்கள் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போவதாகப் பேச்சு எழவும், வித்யாதரன் “மாப்பிள்ளைக்குப் பெங்களுர்ல தான் வீடு. இப்ப அங்க போனா, இரவு இங்க திரும்ப வருவது சாத்தியமில்லை. அதனால இங்க தான் இருக்கப் போறோம். மதியம் சாப்பாட்டை முடித்திட்டு பொறுமையா வேலையைப் பாருங்க” என்று கூறி வந்தவருக்குத் தேங்காய் பையை விநியோகித்தார்.

ப்ரியங்கா இருக்காமல் கிளம்பவும் அகமேந்திக்கு முதல் முறையாக ‘இவங்க என்ன யாரோட கல்யாணத்துக்கு வந்த மாதிரி முடிந்ததும் கிளம்பறாங்க.’ என்று எண்ணி ப்ரியங்காவை பார்க்க, அவரோ சைதன்யனிடம் “கிளம்பறேன் பா.” என்று ஒற்றை வார்த்தையில் விடைப்பெற்றார்.

“மாப்பிள்ளை நீங்க இங்க ரெஸ்ட் எடுங்க” என்று வித்யாதரன் கூற, “நான் ஓட்டு வீட்டுக்கே போறேன் மா.” என்றான் தன்யன்.

புகைப்படக்காரரோ “அண்ணாச்சி அகியும், மாப்பிள்ளை சாரும் சேர்ந்து இருக்கற போட்டோ தனியா இல்லை. காலையிலே எடுக்க முயன்றோம். அகி பாப்பா போட்டோ எடுக்கவே விடலை.” என்று குற்றம் சாட்டினர்.

“என்னப்பா தம்பி இப்ப வந்து சொல்ற… மாப்பிள்ளை நீங்க சொல்லிருக்கக் கூடாதா. அவ சொன்னா அப்படியே விட்டுட்டீங்களா…” என்றவர் யோசிக்க,

நீங்க ஏன் மாமா கவலைப்படறீங்க. சார் அந்த ஓட்டு வீடு நியர் பை நிறையப் பூச்செடி இருக்கு. அங்க எடுக்கலாம்… ஆனா உங்க அகி பாப்பாவை நீங்களே கூப்பிடுங்க” என்று கூறிவிட்டான்.

அகியும் என்னவோ எதுக்கோவென்று ஓட்டு வீட்டுப் பக்கம் வந்து தனித்துப் பூச்செடியோடு நின்று போட்டோ எடுத்தாள்.

தனியாக எடுக்கும் வரை சிரித்த முகமாகக் காட்சியளித்தவள், வேஷ்டியை மடித்துக் கட்டி கம்பீரமாக வரப்பில் நடந்து வர, அகமேந்தி அவனையே கண்விரித்துக் காண செய்தாள்.

அவளின் அருகே வந்து ஒற்றைப் புருவம் உயர்த்தி நிற்க, அவளுக்குப் பிடித்தமான செயலென்று அவனையே இரசித்தாள்.

அவன் அதைக் கண்டுக் கொண்டு சிரித்ததும், அவளுக்கோ தன்னையறியாமல் இரசித்தது தன்மீதே எரிச்சலாகி போனது.

தன் வாயாலே எத்தனை முறை சைதன்யனை சைட் அடிப்பதை அவள் வாயாலே அவனிடமே கூறியிருப்பாள். இன்று அது தோன்ற விலக முற்பட்டாள்.

இவர்களின் செய்கையைப் புகைப்படக்காரன் சத்தமில்லாமல் சில ஸ்டில்களை எடுத்து பதிய வைத்துக் கொண்டார்கள். அது வெகு இயல்பாய் அழகாய் பதிவானது.

“ஹலோ கல்யாணம் ஆனா போட்டோ எடுப்பாங்க மா. தாலியே அக்சப்ட் பண்ணியாச்சு.” என்று பின்னங்கழுத்தை கோதியவாறு சொல்லி முடித்தான்.

அதற்கேற்றவாறு போட்டோக்காரரும் இங்க மல்லி செடி பக்கத்துல இரண்டு பேரும் நில்லுங்க. சன்லைட் மறைகின்ற இடத்துல பாருங்க.” என்று எடுக்கவும் அப்படியே நின்றாள்.

“லைட்டா சிரி பாப்பா” என்று புகைப்படக்காரர் லென்ஸை சரிசெய்ய, மல்லிப்பூவை பார்த்தவள் மனம் சன்லைட்டை பார்க்க, அதே நேரம் அவளின் வெற்றிடையைத் தன் கரங்களைக் கோர்த்திருந்தான் சைதன்யன்.

அது மட்டுமா அவளின் சங்கு கழுத்தில் தன் தாடையைப் பதித்து, “சன் மறையுது ஸ்வீட்ஹார்ட். மூன் மெல்ல மெல்ல இருளை கொடுத்து நம்ம லைப்பை பிரகாசிக்க வரப்போகுது.” என்று கூற அவனின் பேச்சில் கூறவருவதையும் அவன் செய்கையிலும் லயித்துக் கிடந்தாள்.

அதன் பின் மேலும் சில போட்டோ எடுத்து புகைப்படக்காரர் கிளம்பிட, அவன் கையோடு கோர்த்திருந்த அவள் மென்கரத்தை வருடி முத்தமிட செல்ல, சைதன்யன் தலையைக் குனிய, சூரியனின் மாலைநேர வெயில் கண்களைக் கூசவும், இடம் மறந்து சைதன்யன் சைகை கண்டு கையை உதறி வேகமாகத் தன் வீட்டை நோக்கி ஓடினாள்.

“ஸ்வீட்ஹார்ட்… மெதுவா போ. கிழே விழுந்தா… நான் தூக்க வேண்டியதா மாறிடும். உனக்கு அதுவும் பிடிக்காது.” என்று கூறவும் சினத்தோடு சென்றாள்.

இரவு வரட்டும் இதே மாதிரி நெருங்கட்டும் அப்ப இருக்கு அவனுக்கு என்று மனதிலே கருவினாள்.

சைதன்யன் விருப்பத்துக்கு இணங்க, அந்த ஓட்டு வீட்டிலே அலங்கரிக்கத் துவங்கினார்கள்.

தேஜு அலங்கரித்து முடித்து அவள் வீட்டுக்கு சென்றுவிட, தனியாக நடந்து வர, அங்கே லைட் எரிய கண்டாள்.

‘இந்தப் பாதையில் லைட் வைத்தது அவனா தான் இருக்கும். என்னவோ இங்கயே தங்கற மாதிரி என்னயெல்லாம் பண்ணி வைச்சிருக்கான். இந்த அப்பாவிடம் முதல்ல பேசணும். என்னதான் சொல்லி கன்வின்ஸ் பண்ணினானோ?’ என்று புலம்பலோடு வந்தாள்.

“சந்தோஷமா… நினைத்ததை நடத்தி காட்டிட்டியா… இப்ப நிம்மதியா” என்று கத்தவும்,

“வந்ததும் கத்தணுமா ஸ்வீட்ஹார்ட் ரிலாக்ஸா சண்டை போடலாம். அதுக்குத் தானே ஒரே ரும்ல மேரேஜென்ற பெயர்ல இப்படி நேரம் எல்லாம் பார்த்து தந்து இருக்காங்க.” என்றான்.

“உனக்குக் கொஞ்சம் கூடக் குற்றவுணர்வு இல்லையா? என்ன தான் காதலென்றாலும் சின்ன உறுத்தல் இல்லை… சே.” என்று சொல்லி முகம் சுழித்தாள் அகமேந்தி.

“குற்றவுணர்வு இல்லைனு உனக்குத் தெரியுமா. எவ்ளோ வலி உள்ளுக்குள் அனுபவித்து இருப்பேனு உனக்குச் சொன்னா புரியாது. ஏன்னா நீ இப்ப என் கூடச் சண்டை போடற நோக்கத்தில் மட்டும் தான் வந்திருக்க.” என்று பாதிப் பாலை குடித்து விட்டு, “உனக்கா எப்போ உன் பாதியா நான் தெரியறேனோ, அப்போ நீ பாதிப் பால் குடிச்சிட்டு கொடு. குட் நைட்” என்றவன் படுக்கப் போகத் தலையனையை எடுக்கவும் தலை அந்தக் கயிற்றுக் கட்டிலில் இடிக்கவும் சரியாக இருந்தது.

“அம்மா… எதுக்கு இப்படிப் பண்ற… வலிக்குது. நான் பாட்டுக்கு உன்னைத் தொந்தரவு பண்ணாம தூங்க போனேன். எதுக்குத் தூங்கவும் விடாம பண்ற” என்றான்.

அவன் அம்மா என்றதுமே அகமேந்திக்கு ப்ரியங்கா நினைவு வந்தது. பையன் திருமணம் முடித்து இப்படியா அவர்கள் பாட்டிற்குச் செல்வார்களென்ற எண்ணத்தைக் கேட்டு விட்டாள்.

“உங்கம்மா… சாரி அத்தை எதுக்கு இங்க தங்கலை. யாரோ ஒரு திருமணத்துக்கு வந்துட்டு போற பீல்ல கிளம்பிட்டாங்க. அப்பாவும் வற்புறுத்தலை. நீயும் அமைதியா இருக்க. ஏன் அவங்களுக்கு உன் காதல் திருமணம் பிடிக்கலையா…?” என்றாள் திமிராக.

தன்னை அவர்களுக்குப் பிடிக்காமல் பையன் விருப்பமென அப்படி நடந்துக் கொள்கின்றனரோ என எண்ணி இப்படிக் கேட்டாள்.

“அவங்க என் அம்மாவே இல்லை. ஜஸ்ட் நடிக்க வந்தாங்க.” என்றவன் அவள் கையிலிருந்த தலையனை எடுத்து மீண்டும் படுக்கச் செல்ல, அகமேந்தி அதிர்ந்து திரும்பினாள்.

“ஹலோ…. இப்ப என்ன சொன்னீங்க. மறுபடியும் சொல்லுங்க.” என்றாள்.

“தருணேஷ் உன்னைப் பிரப்போஸ் பண்ணியதும். நீ அதை அக்சப்ட் பண்ணிட்ட. அதனால உன் மூலமா உன் இதயத்தில் இடம் பிடிப்பதற்குப் பதிலா. அரேஜ் மேரேஜ்னு காய் நாகர்த்த போட்ட பிளான். உனக்கு அம்மா இல்லையென்ற காரணத்துல கட்டிக்கற போற வீட்ல அம்மா இருக்கணும்னு மாமா எதிர்பார்த்தார். அதனால நான் அம்மா இருப்பதா சொல்லி திருமணத்துக்கு அவங்களைப் பேச அனுப்பினேன்.”

“அப்போ… அவங்க உன் அம்மா இல்லையா?” என்று கோபமாகக் கேட்டாள்.

“இல்லை… உங்கப்பாவுக்கு என்னைப் பிடிச்சிடுச்சு. அதுக்குப் பிறகு உண்மையைச் சொல்லிட்டேன். உனக்கும் பிடிச்சிடுச்சி ஆனா நீ என்னிடம் லவ்வை ஓப்புக்கணும் அப்போ சொல்வேன்.” என்று கண்ணடித்தான்.

“என்ன மாதிரி 420 நீ… யாரோ ஒருத்தரை அம்மானு சொல்லி பிளே பண்ணியிருக்க? இடியட் இடியட்.” என்று தலையனையைப் பிடுங்கி வைத்து அவன் தோளிலே அடித்தாள்.

“ஏய்ய்… வலிக்குது ஸ்வீட்ஹார்ட். நான் ஒன்றும் இருக்கிற அம்மாவை இல்லைனு சொல்லி ‘ரிச் அநாதை’னு ஏமாற்றலை.

இல்லாத உறவை இருக்குனு சொன்னேன் அவ்ளோ தான். நான் ஒன்றும் 420 இல்லை.” என்று சாதரணமாகச் சொல்லி கையைத் தலைக்கு முட்டு கொடுத்துப் பதிலுரைத்தான்.

“நீ… நீ.. பேசறது… அப்போ… தருணேஷ் பொய் சொன்னானா.” என்று கேட்டாள்.

“இங்க பாரு… போன்ல க்ரஷ்கிட்ட பேசும் போது தன்யனை பற்றிப் பேசின. அப்போ அக்சப்ட் பண்ணியதுக்கு ஓரே ரீசன்.

நானே க்ரஷ் நானே தன்யன் என்றதால தான்.

நீயும் நானும் நாளைக்கு எங்கயாவது பப், கடற்கரை, பங்ஷன், மால்னு எங்கயாவது யாரையாவது பார்க்கிறப்ப சைட்டோ, மார்க் போட்டோ, ஜஸ்ட் லைக் தட் அதர் பாய்ஸ் பற்றிப் பேசினா கூட… சில்… நான் பெரிசுப்படுத்த மாட்டேன். பட் அவனைப் பற்றிப் பேசாதே. எனக்குப் பிடிக்காது.” என்று தன்யன் பிடிவாதமாக அழுத்ததிருத்தமாகக் கூறி முடித்தான்.

“பார் டா. அப்போ நல்லவன் மாதிரி, நாம அப்படி இருப்போம் இப்படி இருப்போம்னு கதை விட்ட. இன்னிக்கு ஆர்டினரி ஹஸ்பெண்டா பேசற. இதுல சார் காதலிச்சு புரிந்து நடக்கிற மாதிரி பில்டப்.

ஜோக்ஸ் அப்பார்ட்… அவன் அநாதை இல்லை அப்படித் தானே. அப்போ அவனுக்குக் குடும்பம் இருக்கு. அவன் என்னிடம் கூறிய முதல் பொய் அப்படித் தானே.”

“எ ஸ்மால் மிஸ்டேக் முதல் பொய் இல்லை. இரண்டாவது பொய்.

முதல் பொய் அவன் உன்னை விரும்புவதா சொன்னது. அவன் உன்னை உண்மையா விரும்பலை. இரண்டாவது பொய் அவனுக்குக் குடும்பம் இருக்கு. பெரிய குடும்பம் எல்லாம் இல்லை. ஒரே ஒரு அம்மா. அவங்களைக் கூட உனக்குத் தெரியும்” என்று அகமேந்தியை பார்க்க, அவளோ யாராயிருக்குமெனப் பார்த்தாள்.

“ப்ரியங்கா…. அவங்க தருணேஷோட அம்மா.” என்றவன் கொட்டாவி விட்டுக் கண்கள் சொருகியது.

“ஸ்வீட்ஹார்ட் நீ கலந்த தூக்கமாத்திரை வேலை செய்யுது. எனக்கு என்னையறியாம தூக்கம் வருது. குட்… நை..ட் ஸ்வீட்.” என்று கண்ணயர்ந்தான்.

“அடேய்…. பக்கி… எழுந்துரு…. அய்யோ… இப்படி என்ன என்னவோ சொல்லிட்டு தூங்கி வழியற…” என்று அவனைப் போட்டு உலுக்க அவனோ நித்திரை பிடியில் கிடந்தான்.

“ஓ மை காட். இவன் என்னிடம் வம்பு பண்ணிட்டா என்ன பண்ணவென்று தூக்க மாத்திரை போட்டேன். இப்படிப் பொசுக்குனு ப்ரியங்கா தருணேஷ் அம்மானு சொல்லிட்டுத் தூங்கறான். கடவுளே… அவங்க எப்படி இவனுக்காகப் பேச வந்தாங்க. குழப்பமா இருக்கே….” என்று தனியாகப் புலம்பினாள்.

-சுவடுபதியும்

-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!