Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-2

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-2

❤-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    அகமேந்தி பூங்கொத்தை வாங்கிப்  பார்த்து, இந்த பூவெல்லாம் ரொம்ப அருமையா இருங்கு தருணேஷ். ஆனா பாரு இதை வாங்கி நானே வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் நான் உன்னை விரும்பணும். எனக்கு இந்த மோதலில் வந்த காதல் என்று மாயவுலகத்தில் வாழ்ந்து பழக்கம் இல்லை.

      நான் வேலைக்கு வந்து ஒரு மாதத்தில் காதலென்று இங்க உன்னிடம் உருக தயாரில்லை. மன்னிச்சுடு. நாம நண்பர்கள். அதோட நிறுத்திப்போம்.” என்று அவனிடம் பூங்கொத்தை முகர்ந்துவிட்டு அந்த வித்தியாசமான மலர்களில் அவளுக்கு பிடித்த ட்யூலிப் மலர் மட்டும் எடுத்து கொண்டு திருப்பி கொடுத்தாள்.

      தருணேஷிற்கு காதல் நிராகரிக்கப்பட்டது சின்ன கவலை என்றாலும், அகமேந்தி அடிக்கவோ, திட்டவோ செய்யாது கோபப்படாமல் அழகாக பதிலை கூறி விலகியது அவனுக்கு நிம்மதி தான்.

     “சரி பரவாயில்லை. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கேனே அது போதும்” என்பதாய் சிரிக்க, அகமேந்தி அவளிடத்தில் வந்து அமர்ந்தாள்.

     ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவள். பூவை தன் பூ ஜாடியில் வைத்து விட்டு பணியை துவங்கினாள்.

     சைதன்யன் இருவரின் நடவடிக்கையை கண்டு, அவர்கள் இருந்த இடத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமிராவை பல முறை போட்டு பார்த்து, உதட்டில் முறுவல் தெறிக்க, ஏளனமாக சிரித்து முடித்தான்.

     அப்ளிக்கேஷன் பார்மில் அகமேந்தி புகைப்படத்தை பக்குவமாக கிழிப்படாமல் எடுத்தவன் தன் பர்சில் வைத்து, அவளை கண்ணாடி வழியாக பார்த்து முடிக்க, அவளோ இடது கையால் பேனாவை வாயில் வைத்து, கணிணி திரையில் கண்டவற்றை சிறிதாக குறித்துக் கொள்ள எழுத துவங்கினாள்.

      இடது கையில் எழுதிக் கொண்டிருக்கும் அகமேந்தியை கண்டு அவனும் ஒரு பேனா எடுத்து எழுத முயன்றான். ஆனால் முடியவில்லை. கஷ்டப்பட்டு கோழி கிறுக்கலாக ‘அகமேந்தி’ என்று எழுத துவங்கினான். 

    அதுவோ எல்.கே.ஜி பிள்ளை போல கையெழுத்து போனது.

    மாலை தருணேஷ் வந்து பைக்கில் டிராப் செய்ய நிற்க, அகமேந்தி மறுக்க வாயெடுக்க, தேஜஸ்வனி வரவும் தன் தோழி வந்துவிட்டதாக, கூறி தவிர்க்க, தருணேஷ் முகவாட்டத்தை நன்றாகவே காண முடிந்தது.

    அகமேந்திக்கு இப்படி யாரையும் கஷ்டப்படுத்தி பார்த்திராத காரணத்தால் அவனின் வதங்கிய முகம் அவளுள் அவன் பாவமாக பதிந்து போனது.

    தேஜஸ்வனி தான் “என்ன மா தருணேஷ் சோகமா இருக்கான்.” என்று கேட்க ஸ்கூட்டியில் சென்றவாறே அகமேந்தி அவனுடன் இன்று நடந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டாள்.
   
    “ஏய் சூப்பர் பா. நானும் கிஷோரும் கூட முதல்ல சண்டை தான் போட்டோம். அப்பறம் பிரெண்ட் என்னை இப்ப காதலிக்கறோம். நீயும் காதலில் விழ, அந்த காலம் தள்ளுறது போல தோன்றுது.” என்று தேஜஸ்வனி கண்ணடிக்க,

     “அய்யோ… தேஜூ… சண்டை போட்டவனையெல்லாம் காதலிக்கணும்னா நான் நம்ம ஊர் மேட்டு தெருவுல பாதி பேரிடம் இப்படி தான் வம்பளந்து வைத்து இருக்கேன். பேசாம போறியா.” என்று பதில் தரவும், தேஜூ யோசனையாக எண்ணி பார்த்து தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

     வீட்டுக்கு வந்ததும் முகம் அலம்பி சோபாவில் அமர, “அவனை பார்க்க பாவமா இருந்தது. தனியா கூட்டிட்டு போய் விரும்பலை என்பதை சொல்லியிருக்கலாம். ஆனா அவன் தான் அவன் வேலை பார்க்கற இடத்தில் நான் வந்தப்ப எல்லோரும் பார்க்கற மாதிரி லவ் சொல்லிட்டான்.” என்று முடிக்க, தேஜூ உச்சுக் கொட்டி முடித்தாள்.

      “அவனை பற்றி இந்த நேரம் எதுக்கு பேசணும் விட்டு போவியா.” என்று கூறியவள், ‘இது தான் காதலோட முதல் கட்டம். அவனை பற்றியே பேச வைக்கும்.’ என்று முணங்க, தலையணைனை தூங்கி தேஜூ மேல் எறிந்தாள் அகமேந்தி.

    பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்து,  தன் தந்தை வித்யாதரனோடு பேசி முடித்து நைட் சூட்டில் உறங்க செல்ல, தேஜூ இன்னமும் சாப்பிட்டபடி, “ம்… ம்ம்…. ரவாகிச்சடி வேண்டுமா.” என்று பேச, காதில் ஹெட் செட் வைத்து அகமேந்தி தனதறையில் உறங்க போனாள்.

     காதில் மெல்லிசையாக ஏஆர் ரகுமான் பாட அதன் இசைக்கு ஏற்ப, அவள் தலை தாளமிட்டபடி, இசையில் லயித்தது.

     பாடலில் தருணேஷை மறந்தே போனாள். நல்ல தூக்கம் தூங்கி காலை ஏழு மணிக்கு எழுந்து சோம்பல் முறித்தாள்.  

    தன் ஊரில் தன் வீட்டு வாசலில் அழகாக நீர் தெளித்து கோலமிட்ட நாட்களை எண்ணி பார்த்தது.

     தன் ஊரை வீட்டை எண்ணி அதன்  நினைவுகள் சுமந்து கொண்டு எழுந்தாள்.

      அகமேந்தியின் காதில் ஹெட்செட் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க, அதனை எடுத்து மேஜையில் வைத்து போனில் சார்ஜ் இருக்கா என்று பார்த்தாள். அதுவோ உயிருக்கு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றேன் என்று ஐந்து விழுக்காடு இருப்பதாய் காட்டியது.

     ஓஎம்ஜி…. இதே வேலையா இருக்கேன்’ என்று மனதில் தன்னையே அர்சித்து எழுந்ததும் முதல் வேளையாக போனை ஜார்ஜரில் போட்டு முடித்து, பிரெஷ் செய்ய சென்றாள்.

மற்றொருத்தி பேசி பேசியே, போனை அப்படியே வைத்திருப்பாளோ என்னவோ, பெட்டிலிருந்து போன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போல, தன் உதிரி பாகத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்தன.

    அகமேந்தி கையோடு குளித்து முடிக்கும் பழக்கம் இருக்க, வந்தவள் பார்வையில் சிதறிய போன் துண்டுகள் இருக்க, டாக்டராக போன்று அதனை ஒவ்வொன்றாய் எடுத்து பாகத்தை இணைத்து முடித்தபடி தேஜூவை எழுப்பினாள்.

     “குட் மார்னிங்…” என்று கண்ணை திறக்க மனமின்றி பாதி திறந்து தலையணையை தலைக்கு தோதாக, எடுத்து வைத்தாள்.

     “எருமை இங்க பாரு மொபல் உடைஞ்சி கிடக்கு.” என்று கூற சட்டென எழுந்து பார்க்க, போன் பாதியாக உடைந்து கீறல் விட்டிருந்தது.

      “அச்சோ… உடைந்திடுச்சா..” என்று வருந்திட,
 
    “என்னைக்கு என் போன் உடைய போகுதோ? நானும் இப்படி தான் பாட்டு கேட்டு அப்படியே வைக்கிறேன்” என்று கொடுக்க,

    “மேடம் நான் பாட்டு கேட்கலை. கிஷோர் கூட பேசிட்டு இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன். விடு அவன் புது போன் வாங்கி தருவான்” என்று அசட்டையாக பதில் வந்தது.
  
    அகமேந்தி “அவன் எதுக்கு வாங்கி தரணும்?” என்று கேட்க,

    “அவன் தானே பாய் பிரெண்ட் கணவனாக போறவன்.” என்று பதிலளித்து எழுந்துக் கொள்ள,

    “நீ தான் சம்பளம் வாங்கற நீயே வாங்கிக்கோ” என்று கேட்க, பிறகு எதுக்கு பாய்பிரெண்ட். இரு பத்து நிமிடத்தில் வர்றேன்.” என்று காக்கா குளியல் குளிக்க, அதற்குள் பிரெட் டோஸ்டரில் பிரெட் ரெடி செய்து முடித்திருக்க, நான்கு வாய் உள்ளே தள்ளி அலுவலகம் சென்றனர்.

     எப்பொழுதும் போல தேஜூ அகமேந்தி ஸ்கூட்டரில் வந்து இவள் அலுவலகம் விட்டுவிட்டு, கடந்திட லிப்டில் சென்று நுழைந்தாள். 

     அதே நேரம் இருவர் ஏற வந்தவர்கள் ஒதுங்கி நிற்க, குழப்பமாய் திரும்பி பார்த்தாள்.

   அங்கே சைதன்யன் கூலர் கிளாஸ் அணிந்து அவனை அறிந்திடவிடாது கண்ணை மறைத்தது. மற்றவர்கள் ஏறாதது கண்டு தயங்கி நிற்க, சைதன்யன் உள்ளே வந்ததும் அவர்கள் ஏறவில்லையென்று, கதவை அடைத்தான்.

      சின்ன முறுவலிட்டவள் வணக்கம் தொடுத்து அமைதியாக வர, அவனோ பேரண்டத்தின் அமைதியை கையாண்டு இருந்தான்.

    அப்படி தான் தோற்றுவித்தது அவன் பிம்பம். ஆனால் கண்ணில் மின்னல் பூக்க, அகமேந்தியை அவன் விழிகள் பருகத் துவங்கியது.

     காதலில் ஒர விழி பார்வையில் உச்சம் பித்தாகும் நேரம் தங்கள் தளம் வந்துவிட்டதாக கணினி குரல் வந்து நினைவுருத்த, முன்னே வேகமாக கடந்து சைதன்யன் செல்ல, தருணேஷ் அகமேந்தி வருவதை கண்டு வேகமாக வந்தவன், தன் அலுவலகத்தை ஆளுமை செய்யும் சைதன்யனை கண்டதும் ஒதுங்கி நின்றான்.

      அகமேந்தி அடுத்து வரவும், “ஹாய்… ஏதாவது யோசித்தியா அகமேந்தி.” என்றான்.

    ” என்ன யோசனை தருணேஷ்…” என்றவள் சிந்தனையில் பதிலில் தருணேஷ் சோகமாக, அவன் வாடியதை நேற்று மனக்கண்ணில் ஓட்டி பார்த்து, நினைவை திரும்ப பெற்றவளாக, “என்ன தருணேஷ் காலையிலே வந்து நிற்கற. எனக்கு லவ் பண்ண நோ ஐடியா.” என்று நடக்க,

    “சரி பிரெண்ட்டா கூட இல்லையா. ” என்று சாக்லேட்டை கொடுக்க,

       “எனக்கு சாக்கலேட் ஆஹ். சாரி தருணேஷ். நான் சாப்பிடறது இல்லை. எனக்கு ஒத்துக்காது. சளி பிடிக்கும். ஆல்ரெடி நண்பர்கள் தான். அதானால இந்த கேள்வியை திரும்ப கேட்காதே” என்று அவளின் கேபினில் அமர்ந்து அங்கிருந்த சின்ன விநாயகரை தொட்டு கும்பிட்டவள், கணினியை உயிர்பித்தாள்.

    தன்னை யாரோ உற்று உற்று நோக்குவதாக முதுகில் பார்வை ஊற, தருணேஷ் பக்கம் கோபமாக திரும்ப, அவனோ தனது ஒயர் கணினியில் பிடித்து இருந்ததை கனெக்ட் செய்து கொண்டிருந்தான்.

      அதே நேரமும் தன்னை யாரோ பார்ப்பதாகவே உணர முடிந்தது அகமேந்திக்கு.

    தன் பிரம்மை என்று பணியில் முழ்க, அங்கே அலறல் ஒலி கேட்க, திரும்பினாள்.

    தருணேஷ் இருந்த இடத்தில் கூட்டம் இருக்க புரியாது அங்கே கூடியிருந்தவர்களின் அருகே வந்து பார்க்க, அதே நேரம் சைதன்யன் வந்து “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

    “கரெண்ட் ஷாக் அடிச்சியிருக்கு சார்.” என்று சக பணியாள் பதில் தர, “ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணுங்க. ட்ரீட்மெண்ட் செலவை நான் பார்த்துக்கறேன்.” என்று சொன்னவன் தன்னவள் அருகே நின்று தருணேஷை பார்த்து கலங்கி நிற்பதையும் கண்டான்.

      இருவர் தருணேஷை அழைத்து செல்ல, “அக..மேந்…தி…” என்றவனது உளரல் காதில் ஒலிக்க, தானும் வருவதாக அவள் கிளம்பினாள்.

    அவன் உயிருக்கு ஒன்றுமில்லை என்றாலும் மருத்துவமனையில் சிறிது நேரம் அனுமதித்து அவனுக்கு சிகிச்சை பார்க்கப்பட்டது. அதுவரை வெளியே அமர்ந்து இருந்தாள்.

      அகமேந்தி தனக்கு காதல் தூது விடுத்தவன் ஆயிற்றே என்றும் அவனை அழைத்து செல்லும் நேரமும் தன் பெயரை உச்சரிக்கின்றானே என்ற எண்ணத்தில் தான் இங்கு வந்தது.

    இங்கு சைதன்யனோ அடக்கப்பட்ட கோபத்தில் அமர்ந்து இருந்தான். அவளை அனுமதிக்காமல் இருக்க வேண்டியது தானே இப்ப என்ன தனியா கோபத்தில் இருக்க, என்று மனசாட்சி வக்கணையாக கேள்வி கேட்டது. அதனிடம், ‘என்ன பண்ணறது. வர்ற காலத்தில் அவளை திருமணம் முடித்த பிறகு இந்த இன்சிடெண்ட் அப்போ என்னை போகவிடலையே நீ கல்நெஞ்சக்காரன் என்று தன்னை எண்ணிக் கொண்டால் தன் நிலை அப்போது விளக்கம் அளித்தாலும் அது சரியாக இருக்காது.

     அதற்கு இப்பொழுது விட்டு பிடிப்பதில் தவறில்லையே என்றதை தான் அவன் மனம் சிந்தித்தது.

       இங்கு தருணேஷ் விழிதிறந்து பேச ஆரம்பிக்க, “உங்க வீட்ல யாரையாவது வரச்சொல்லு வந்ததும் நான் கிளம்பறேன்.” என்று மொட்டையாக அகமேந்தி கூறினாள்.

     “எனக்கு யாருமில்லை. ரிச் அநாதை” என்று முடிக்க, அகமேந்தி மனம் அந்த வார்த்தையில் உருகி விட்டது.

    இப்ப தான் கூடயிருந்த இருவரையும் போக சொல்லியிருந்தாள். இப்பொழுது என்ன செய்ய என்பதாய் எண்ணியிருக்க, சைதன்யன் அங்கே வந்ததை உணராது, நின்றவளை அங்கே செவிலி பெண் வந்து, “சார் பில் கேட்டிங்களே?” என்று நீட்ட திரும்பினாள்.

     “தேங்க்ஸ்…” என்றவன் பேச்சு இனிதாய் முடித்து கடினமாக மாற்றி, “நீ என்ன பண்ணற, ஜஸ்ட் ஷாக் தானே.” என்று முடித்தவன், “வசந்த் இனி நீங்க பார்த்துக்கோங்க. வீடு வரை விட்டுட்டு வாங்க” என்றதும் வசந்த் சரியென சொன்னார்.

    “கோ..” என்று அகமேந்தியை பார்த்து கூற அவள் செல்ல தயங்கி வெளியேறினாள். அதன் பிறகு தருணேஷை பார்க்க இயலாத வகையில் வசந்த் அழைத்து சென்றிருந்தான். சைதன்யன் பில் செட்டில் செய்து கிளம்ப, ஆட்டோவிற்காக நின்றிருந்தாள்.

     காரை எடுத்தவன் அப்படியொருத்தி நிற்பதை கூட கண்டுக்கொள்ளாமல் கடந்து முடித்தான்.
  
      தேஜஸ்வனி போன் செய்ய, தனக்காக அவள் நின்றிருப்பாளே என்ற எண்ணம் தோன்ற “நானா வீட்டுக்கு வந்திடறேன் தேஜூ. நான் இப்ப ஆபிஸ்ல இல்லை. வந்து பேசறேன்” என்று அணைத்து ஆட்டோ ஏறினாள்.

-சுவடு பதியும்.

-பிரவீணா தங்கராஜ்

4 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!