ஆலி-24
சைதன்யன் வசந்திடம் ஆறுதலாக பேசிவிட்டான். ஆனால் அவனுக்குமே அச்சம் சூழ்ந்தது.
தருணேஷ் இந்த இரண்டு வருடத்தில் சைதன்யன் அறிந்த வகையில் சேகர் நண்பன். மது பப் செல்பவன். தன்னிடம் தோற்ற உணர்வில் அளவுக்கு அதிகமாகவே கோபமாக இருப்பவன்.
அகமேந்தியிடம் வம்பு செல்ல முனைந்தவன். என்னவளாக மாறிய பிறகு நிச்சயம் அவளிடம் வம்பை வளர்க்க மாட்டான்.
என் மீது எந்தளவு கோபம் இருக்கின்றதோ அதை விட வசந்த் மீது கோபம் இருக்கு தருணேஷிற்கு.
வசந்த் தானே ஆபிஸ் மற்றும் வீடுவரை கூடவே பயணித்து அவனை கண்கானித்தது.
வீடு வந்து காரை நிறுத்தி வீட்டுக்குள் நுழைய வீடே இருட்டியிருந்தது.
கதவு மட்டும் திறந்திருக்க தனது போனில் டார்சை ஆன் செய்து வந்தான்.
“த..த..” என்று திக்கியவன் அவன் பெயரிட்டு அழைக்க பிடிக்காமல் “வருணிகா.. வருணிகா..” என்று பெயரிட்டு அழைத்தான்.
“இங்க தான் இருக்கா” என்று தருணேஷ் குரல் கொடுத்தான். அதே நேரம் வசந்த் வரவும் “வருணிகா இங்க தான் இருக்காங்க.” என்று இருவரும் அக்குரல் வந்த திக்கில் செல்ல பெட்டில் படுத்திருந்தாள்.
வசந்த் அதை கண்டு வேகமாக, வருணிகா அருகே வந்து, “என் தங்கையை என்னடா பண்ண? அய்யோ தலையில் கட்டு கட்டியிருக்கா… இரத்தம் இருக்கு.” என்று தருணேஷை பார்த்து பயந்து கேட்டான்.
“ஒன்றும் ஆகலை… நான் ஆல்கஹால் பாட்டில் எடுக்க ட்ரை பண்ணினேன். அவ தடுத்தா… கொஞ்சம் கைகலப்பு ஆகி பாட்டில் சுவற்றில் பட்டுடுச்சு. சுவற்றுல கரண்ட் பாக்ஸ் இருந்ததா, அதனால பாட்டில் பட்டு வெடிச்சு நெருப்பு பொறி பட்டுடுச்சு. அதுல ஒரு கண்ணாடி பீஸ் அவ ரெற்றியில பட்டு இப்படி மயங்கிட்டாங்க.” என்றான்.
“டாக்டரிடம் காட்டாம என்ன பண்ணிட்டு இருக்க? அவளை என்ன பண்ணின?” என்று காலரை பிடித்து வசந்த் கேட்டான் ஏன்னென்றால் வருணிகாவின் துப்பட்டாவை கழுத்தில் சுற்றியிருந்தமையால் பயத்தில் கேட்டு உலுக்கினான்.
“அய்யோ அதான் சொன்னேனே கரண்ட்ல பாட்டில் பட்டுச்சுனு. வீட்ல கரண்ட் இல்லை. அதனால வேர்க்கும்னு ஷாலை எடுத்து கையில வைச்சிருந்தேன். எனக்கு தெரியாம குரங்குதனமா கழுத்துல சுற்றிட்டேன். பிடி உன் தங்கை ஷால்.
கொஞ்சநேரம் பயந்துட்டேன். அவள் தான் ஒன்றுமில்லைனு அவளா செல்ப் பஸ்ட்எயிட் பண்ணினா. ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு கதை கேட்டு மயங்கிட்டா. அதுக்கு பிறகு டாக்டரை கூப்பிட்டேன். வந்து பார்த்து ஏதோ ஊசிப்போட்டு டிரஸ்ஸிங்பண்ணிட்டு போனாங்க. அவளா எழுந்திடுவானு சொன்னாங்க.
பட் இப்ப வரை எழுந்துக்கலை. டாக்டரிடம் கேட்டேன். நீயா எழுப்பாதே. அவளா மருந்து எபெக்ட் போனதும் எழுந்துப்பா சொன்னார். அதான் வெயிட்டிங்.
ஆறு மணி வரை வெளிச்சமிருந்தது. இப்ப தான் இரண்டு மணிவரை இருட்டா இருக்கு. மெழுகுவர்த்தி எதுவும் இல்லை. உன் தங்கை போன்ல தான் டார்ச் லைட் ஆன் பண்ணினேன். சனியன் சுவிட் ஆப் ஆகிடுச்சு.” என்று பேசவும் சைதன்யன் வாயே திறக்கவில்லை.
வசந்த் மட்டும் தருணேஷ் பேசியதை கேட்டுக்கொண்டே வருணிகா… வருணிகா எழுந்திருமா” என்று தட்டவும்,
“ஹலோ அதான் சொன்னாரே மருந்து இருக்கறவரை தூக்குவாங்களாம். தானா எழுந்துப்பா. வெயிட் பண்ணு.” என்று கூறினான்.
சைதன்யன் பின்னாடியே செல்ல கண்ணாடி பாட்டில் கால் வைக்க அது ஓசையெழுப்பியது.
“கண்ணாடி சில் சிலயிடத்தில இருக்கலாம்.” என்று தருணேஷ் கூறவும் ஷூ கால் அதிர நடந்து வந்தவன்.
“வசந்த் அவங்க பொறுமையா எழுந்துக்கட்டும் நீங்க அவங்களை என் காரில் கூட்டிட்டு போங்க.” என்று கார் சாவியை நீட்டினான்.
“இல்லை சார் இருக்கட்டும். எழுந்ததும் பைக்லயே கூட்டிட்டு போறேன். அதான் சேப்பா இருக்காளே அது போதும்” என்று வருணிகா பக்கத்தில் அமர்ந்தான்.
தருணேஷ் லேப்டாப் மௌஸ் பேடை வைத்து வருணிகாவுக்கு விசிறிவிட்டான்.
வசந்த் பார்க்க, “இந்தாங்க விசுறுங்க.” என்று இடம் விட்டு அகன்றான்.
சைதன்யனோ, “பரவாயில்லை வசந்த் நீங்க உங்க தங்கையை தூக்கிட்டு அழைச்சிட்டு போங்க. நாளைக்கு காலையில் கார் கொண்டு வந்து விடுங்க. வீட்ல ஓய்ப் தேடுவாங்க.” என்று கூறவும் சாவி வாங்கி தங்கையை தூக்க போக, ஏனோ உதவுவதற்கு தருணேஷ் குனியவும் வசந்த் பார்த்த பார்வையில் கையை மடக்கி நின்றான்.
“சார் நீங்க எதுல போவீங்க..?” என்று வசந்த் கேட்கவும், “கேப் புக் பண்ணிக்கறேன் வசந்த் நீங்க போங்க” என்றதும் வசந்த் வருணிகாவை அழைத்து புறப்பட்டான்.
வசந்த் சென்றதும் சைதன்யன் ஒர் பக்கம் நிற்க, தருணேஷ் மறுபக்கம் நின்றான்.
“என்ன அட்வைஸோ சொல்லிட்டு போ. இல்லை ஜெயித்துட்டேன் சீன் போடணுமா போட்டுட்டு போ. தேவையில்லாம நிற்காதே. எனக்கு எரிச்சலா இருக்கு.” என்றான் தருணேஷ்.
“எனக்குமே எரிச்சலா இருக்கு. இங்க எல்லாம் வந்துட்டேனேனு. பட் எனக்கு சீன் போடவோ அட்வைஸ் பண்ணவோ இங்கே நிற்கலை. அகமேந்தி பீல் பண்ணறா… நீ என்னவோ அன்னிக்கு பேசிட்டனு வருந்தினா. ப்ளிஸ் அதை சரிப்படுத்து.” என்றான் சைதன்யன்.
“வாவ்… நீ என்னிடம் ப்ளிஸ் போட்டு கேட்கற…” என்று அவ்வறை அதிர சிரித்தான்.
சைதன்யன் தன்னையடக்க பெரும்பாடுபட்டு நின்றான்.
தன்னவளுக்காக நிற்கின்றோம் என்ற ஒன்று அவனின் சிரிப்பை ஏளனத்தை கடத்த முயன்றான்.
“கிளம்பு காத்து வரட்டும். சொல்ல வந்ததை சொல்லிட்டியே… வீட்ல உன் ஓய்ப் தேடுவாங்க” என்று நக்கலாக வீட்டை பூட்ட சாவியை எடுத்தான்.
ஏதேனும் பேச போய் மீண்டும் போதை நாடுவானோ என்ற அச்சமும் சூழ அமைதியாக நடந்தான். கேப் புக் செய்ய மறந்து நடக்கவும், பின்னால் சீறி பாய்ந்து பைக் வந்தது.
தருணேஷ் முன்னே வந்து உறுமி, “எனக்கு டின்னர் வாங்கணும். அதான் பைக் எடுத்தேன். வேணுமின்னா டிராப் பண்ணவா?” என்றான்.
“அகமேந்தியிடம் ஒழுங்கா பேசினாளே போதும். உன் உதவி வேறெதுக்கும் தேவைப்படாது.” என்று அருகே சென்ற காரை மறித்து, தன் அட்ரஸ் சொல்லி செல்ல இரட்டிப்பு தொகை தருவதாக கூறி அவசரம் என்றதும் உடனடியாக கேப் ஏற சொன்னான் அந்த காரின் ஓட்டுனர்.
இருபாதை இருவரும் இருபக்கம் செல்ல நேர்ந்தது.
வீட்டுக்கு சென்றதும் அகமேந்தி வாசலில் காத்திருக்க, சைதன்யன் வந்ததும் நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள்.
“ஹேய் ஸ்வீட்ஹார்ட் என்ன பனியில் நிற்கற. உள்ள வா.” என்றதிலே அவன் சென்ற விஷயம் சாதகமாக மாறியிருக்கும் என்று எண்ணினாள்.
“கை அலம்பிட்டு வாங்க. சாப்பிடலாம்.” என்று கூப்பிடவும் யோசனையோடு சென்றான்.
எனக்காக என் அகமேந்தி. சேர்ந்து சாப்பிட இருக்கா. அவன் ஏன் அம்மா இருந்தும் தனியா சுத்தறான். அவங்க ஏன் கண்டிக்கலை என்று யோசனையில் முழ்கினான்.
“என்னாச்சு… அவசரமா போனிங்க.” என்று பரிமாறவும், “ஒன்றுமில்லை டியர். வருணிகா வீட்டுக்கு வரலை வசந்த் கொஞ்சம் பயந்துட்டான்.” என்று சாப்பிட்டான்.
இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டு இருக்கேனே என்று யோசித்தவள் “இது இது… அவனை பார்த்துக்க ஏற்பாடு செய்த கேர்டேக் நேம்?” என்று அகமேந்தி கேட்கவும், ஆம் என்பதாய் தலையசைத்து முடித்தான்.
“ரொம்ப யோசிக்கதே ஸ்வீட்ஹார்ட் அந்த பொண்ணு மயங்கிட்டா” என்று நடந்தவையை கூறினான்.
“தேங்க் காட். வசந்த் மேல இருக்கற கோபத்தை அந்த பெண்ணிடம் காட்டலை.” என்றதும் ம்ம் என்றான்.
அறைக்கு வந்த பிறகு சைதன்யன் கட்டிபிடித்து நெஞ்சில் சாய்ந்தாள்.
“என்னாச்சு என் ஸ்வீட்ஹார்ட்கு? தானா என்னை தேடுது.” என்று கேட்கவும், “ஏன் நானா தேடக்கூடாதா. ஐ மிஸ் யூ க்ரஷ்” என்றாள்.
“ஐ மிஸ் யூ டூ டியர்” என்றவன் அவளை தன்னோடு இணைத்து கட்டிக் கொண்டான்.
இங்கு கண்விழித்த வருணிகாவை திட்டிக் கொண்டிருந்தான் வசந்த்.
“நீ பார்த்துக்கறது தருணேஷ் என்று ஒர் வார்த்தை சொல்லியிருந்தா கூட நான் சைதன்யன் சாரிடம் பேசி அவாய்ட் பண்ணியிருப்பேன். எத்தனை முறை கேட்டேன். சார் யாரை பார்த்துக்க கேட்டாருனு.” என்று கத்தினான்.
“அவளை சாப்பிட விடு வசந்த். அதான் இப்ப தெரிந்துடுச்சே. இனி அனுப்பாம பார்த்துக்கலாம்.” என்று வசந்த் மனைவி சக்தி கூறவும் வருணிகா அமைதியாய் உணவு உண்டாள்.
அடுத்த நாள் காலை வரையும் அமைதியாக தான் இருந்தாள். அவள் கிளம்ப வசந்த் தடுக்கவும் வெடிக்க ஆரம்பித்தாள்.
“இங்க பாரு அண்ணா… உன் வேலையை பற்றி நான் என்றைக்காவது கருத்து சொல்லியிருக்கேனா. இல்லைல… இது என்னோட ஜாப். சில வேலையை ஆத்மார்த்தமா செய்யறப்ப தடுக்க நீ யாரு. நேற்று அண்ணாவா நடந்துக்கிட்ட ஓகே. அட்வைஸ் பண்ணின சரி. பட் வேலைக்கு போகக்கூடாதுனா என்ன அர்த்தம்?” என்று டிபன் பாக்ஸை எடுத்து வைக்க, சக்தி முன் வந்து நின்றாள்.
“உங்கண்ணா வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லலை. அங்க வேண்டாம்னு தான் சொன்னார் மா. நேற்று எப்படி பயந்துட்டார் தெரியுமா. உனக்கு தருணேஷ் பற்றி தெரியும் தானே. அண்ணா எவ்ளோ சொல்லியிருக்கார் அதை கேட்டும் இப்படி பேசலாமா?” என்று பேசி புரிய வைக்க முயன்றார்.
“அண்ணி அண்ணா சொன்னது வெளித்தோற்றத்தில் அவர் நடந்துக்கிட்டது. மேபீ அவர் சுபாவமே அப்படி தான். பட் அவருக்குள்ள வேற எண்ணமும் இருக்கு. உரிமை போராட்டம் அவரோட ஒருத்தர் கூடயிருந்தாலே எல்லாம் சரியா மாறுவார். இந்த நேரம் என்னை பார்த்துக்க சொல்லியிருக்காங்க. அட்லீஸ்ட் டிரக்ஸ் எடுக்காத வரையாவது கூட இருந்தே ஆகணும். நான் போக போறேன். எனக்கு எந்த ஆபத்தும் வராது. அவனை நானே சமாளிப்பேன்.” என்று கிளம்பவும் வசந்த் அமைதியாக இருந்து விட்டான்.
இவளிடம் பேசுவதற்கு பதில் சைதன்யன் சாரிடம் பேசுவோம் என்று காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அழைப்பு மணி அடித்து காத்திருக்க, அகமேந்தி கதவை திறந்தாள்.
“உள்ளவாங்க” என்று அழைத்து, “க்ரஷ் வசந்த் சார் வந்திருக்கார்.” என்று கூப்பிட்டாள்.
“உட்காருங்க..” என்று காபி போட சென்றாள்.
வசந்த் கையை பிசைந்து நின்றான்.
“என்ன வசந்த் காரை ஆபிஸில் வாங்கிக்கலாம்னு பார்த்தேன். என்ன அவசரம்?” என்று அமரவும் வசந்த் முகம் தயக்கத்தில் திணற,
“என்னாச்சு வசந்த். வருணிகா கண்விழிச்சப்ப அவனை பற்றி தவறா சொன்னாளா?” என்று கேட்கவும்,
“இல்லை சார் அப்படி சொன்னா பரவாயில்லையே. நான் வேலைக்கு போகாதேனே சொல்லிட்டு நிம்மதியா இருப்பேன். ஆனா அவள் அவனுக்கு சேவை செய்ய காலையிலே சண்டை போட்டு போயிட்டா. வேலைக்கு போகாதேனு சொன்னதுக்கு என் வைலை என் இஷ்டம்னு சொல்லறா. நீங்க தான் சார் புரியவைக்கணும். அவளுக்கு பதில் வேறயாராவது அனுப்ப, உங்க சுந்தர் சாரிடம் கேளுங்க. வருணிகா வேண்டாம் சார்.” என்று பயந்தான்.
“இந்த பயம் எதுக்கு வசந்த்?” என்று அகமேந்தி கேட்கவும்,
“மேம்… உங்களுக்கு தெரியாது. அவன் அம்மா இல்லைனு பொய் பேசறவன். ரிச் அநாதைனை சிம்பத்தி கிரியேட் பண்ணுவான். டிரிங்ஸ் டிரக் பழக்கம் இருக்கு. இதுல தம்பினு கூட பார்க்காம அடிச்சிருக்கான். பணத்துக்காக காதலை விலைப் பேசியிருக்கான்.
உங்களை கவலைப்பட வைச்சிருக்கான். சாரை எதிர்த்து திமிரா பேசினான். இது போதாதா மேம்.” என்று கூறவும் அகமேந்தி சிரித்து விட்டாள்.
“ஏன் சார் அப்படி பார்த்தா… உங்க சைதன்யன் சார் ஆள்மாறாட்டம் பண்ணியிருக்கார், என் போன்ல தருணேஷ் நம்பரை எரேஸ் பண்ணிட்டு அவரோட நம்பரை சேவ் பண்ணியிருக்கார். அந்த தப்புக்கு கூட்டு சேர்ந்தது நீங்களும் தானே. என்னிடம் காதலா பேசி அங்க என் அப்பாவிடம் எப்படியாவது ஜாதகம் மாற்றி பொய்யா தானே வந்தார். அதுலயும் உங்க கூட்டு இருக்கு தானே.
நான் அவனுக்கு சப்போர்ட் பண்ணலை. அவன் தரப்பில் இருக்கற பாயிண்ட் ஆப் வியூவில் பாருங்க நல்லவனா தெரியுவான்.
எனக்கு ஆள்மாறாட்டமே செய்தாலும் சைதன்யனை பிடிக்க ஆரம்பிச்சது அவரோட பாயிண்ட் ஆப் வியூவில் பார்த்ததால தான்.
அவரோட காதல் எந்தளவு தவறு செய்யுது. எனக்காக என்ற ஒர் காரணம்.
அதுமாதிரி தருணேஷ் பண்ணவும் சில காரணம் இருக்கு. அப்பாவுக்கு மகனா கர்வமா இருந்தவனிடம் நீ கொள்ளி போட கூட முடியாதுன்னா என்ன செய்ய.. அட்லிஸ்ட் அங்கீகாரமாவது கொடுத்திருக்கலாம்.” என்று பேசவும் சைதன்யன் அவள் பேச்சை பிடிக்காமல் எழுந்து சென்றான்.
“வசந்த் நான் வருணிகாவிடம் பேசறேன். நான் ஆபிஸ்கு போறேன் வாங்க சேர்ந்தே போயிடலாம்.” என்று அழைக்கவும் கிளம்பிவிட்டான்.
தான் பேசியது தவறா… இல்லையே… தருணேஷ் என்னிடம் தவறாக நெருங்க முயன்றான். அதன் பிறகு வந்த நாட்களில் அப்படியில்லை. அது ஆணித்தரமாக அவளால் கூறயியலும். அப்படியிருக்க கெட்டவன் தான் என்று சித்தரிக்க இயலவில்லை. உண்மை தானே சொன்னோம். க்ரஷை என்னிடம் கோபப்பட மாட்டான் என்று மற்ற வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
-சுவடுபதியும்.
-பிரவீணா தங்கராஜ்.

Konjam nithanama yosicha avan purinchipaan
Yes tharunesh has some issue. Or some black episode behind him. Let me wait for some more intresting facts. Intresting sis.s