அத்தியாயம்-11
பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள்.
‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு அவனது அறைக்குள் சென்றான்.
பிரணவி மனசாட்சியோ ‘நீயெல்லாம் மனசுல தான் ஆத்ரேயன் சார் கூட பேசணும். நிஜத்துல பேசவே மாட்ட. இதுல அவரோட வாழறது கனவுலையும் நடக்காது.
இதுக்கு மிதுனாவே பரவாயில்லை. அட்லீஸ்ட் ஆத்ரேயன் சாரிடம் லவ் பண்ணியதை தைரியமா சொன்னா’ என்று நக்கல் புரிந்தது.
பிரணவியோ, ‘ஆமா அவ தைரியம் தான் பார்த்தேனே. யாராவது காதலிச்சவரை அசிங்கப்படுத்த தோணுமா? அவ செய்தா. ஆனா நான் காதலிச்ச என் ஆத்ரேயன் சார் மேலயிருந்த பழியை களைந்திருக்கேன்.
ஆமா நானும் தான் ஆத்ரேயன் சாரை காதலிச்சேன். நான் மட்டுமா? என் கிளாஸ்ல அஞ்சலி, லலிதா கூட காதலிச்சாங்க.
எத்தனை பேர் ஆத்ரேயன் சாரை காதலிச்சாங்க. இன்னிக்கு கூட சொன்னாரே. என்னை அஞ்சலியை லலிதாவை சேர்க்காம 22 பேர்.
ஆனா அத்தனை பேருக்கு இல்லாத அதிர்ஷ்டம் எனக்கு மட்டும் தான் அமைஞ்சது.
என் லவ் உண்மையானது. நான் அவரை உண்மையா காதலிச்சதுக்கு தான் கடவுள் தானா என்னை அவரோட சேர்த்து வச்சியிருக்கார்.
ஆஹ்… தானா…
நான் அவரிடம் காதலிப்பதாக தொல்லை செய்யலை. என் ஜாதகம் என் போட்டோ தானா அவர் வீட்டுக்கு போயிருக்கு. அப்படியிருக்க அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம்.
இந்த காலேஜ்ல அவரை யாராவது காதலிப்பதா வரட்டும் அப்ப வச்சிக்கறேன்’ என்று மனதிற்குள் சபதமேற்றி நின்றாள்.
எதிரே ஆத்ரோயன் கையை கட்டி, உனக்கு என்னாச்சு? தனியா என்னவோ மனசுக்குள்ள பேசற மாதிரி இருக்கு?” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தான்.
எந்த பதிலும் கூறாமல் ”ஒன்னுமில்லை சார் லேசா தலைவலி” என்று அவ்விடமிட்டு சென்றாள்.
ஆத்ரேயனோ கிச்சனுக்குள் சென்று காபி தயாரித்தான். அவர்கள் அறைக்கதவை தட்டிவிட்டு, “காபி” என்றான்.
“சார்… நீங்க காபி போட்டிங்களா.? எனக்காகவா?” என்று தந்தியடிக்க பரவசமாய் கேட்டாள்.
“ஒருத்தங்க தலைவலின்னு சொல்லிட்டு போகறப்ப, மனிதாபிமான அடிப்படையில் காபி போடறது பெரிய விஷயமா?” என்று கூறவும் வாய் அருகே குடிக்க சென்று அவனை ஏறிட்டாள்.
“குடி தலைவலி வராது. எனக்கு முன்ன வீட்டுக்கு வந்திருக்க… தலைவலின்னா?” என்று கேட்டு அவளது அறையை கவனித்தான்.
“ஆ..ஆமா சார்” என்றவள் மடமடவென குடித்தாள்.
“ரூமை அழகா வச்சியிருக்க. ஐ லைக் இட்” என்றவன் வெளியேற முயல, ‘ஆமா ரூமை பிடிச்சி என்ன பண்ணப் போறீங்க’ என்று முனங்கினாள்.
அவன் செவியில் நிச்சயம் கேட்டிருக்காது. அந்தளவு உதட்டசைத்து உள்ளுக்குள் பேசினாள்.
ஆனாலும் பேராசிரியனின் கவனம் அவள் மீதுயிருக்க, “என்ன முனங்குற?” என்றான்.
“ஒன்னுமில்லை சார்” என்றாள்.
“ஒன்னுமில்லையா?” என்று ஆத்ரேயன் கேட்க இல்லையென்றாள்.
ஆத்ரேயனோ நம்பாத பார்வையோடு வெளியேற, ‘சம்திங் ராங். என்னவோ சரியில்லை’ என்றது அவன் மனம்.
யாராவது ஏதாவது காயப்படுத்தி கோபப்படுத்தி விட்டார்களா? என்று யோசித்தவனுக்கு சில தனிப்பட்ட வேலைகள் காத்திருக்க வினாத்தாள் தயாரிக்க உட்கார்ந்தான்.
இரவு நேரம் உணவுண்ண அழைக்க, இன்டெக்ஸ் ஸ்டவ்வில் இட்லியை ஊற்றி வைத்தவள் காலையில் வைத்த வடைக்கறியை சூடுபடுத்த அவள் கணவனை அழைத்தாள்.
”சார்… சார் குழம்பு இதுல வச்சிட்டேன். எந்த பட்டன் சார்” என்று திணறினாள்.
ஓவன் மாடல் ஒவ்வொன்று ஒருவிதமாக இருக்கும். இங்கு இருப்பதோ சற்று கற்றுக் கொள்ள கடினமாக இருந்தது.
இவள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவென்பதால் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை.
ஆத்ரேயன் ஷர்ட்டின் முழங்கையை மடித்து விட்டபடி, “மேனுவல் புக் கொடுத்தேன் படிக்கலையா?” என்று எரிச்சலாய் கேட்டான்.
மடமடவென சில சுவிட்ச் பட்டனை தட்டி, பார்த்தியா நெக்ஸ்ட் டைம் நீயே கற்றுக்கணும்” என்று ஓட்டமெடுக்க பார்த்தவனிடம், “சார் மின்னல் வேகத்துல வந்திங்க. ஏதோ நம்பரை தட்டினிங்க. போறிங்க. நான் எங்க கற்றுக்க?” என்று சிடுசிடுவென பேசினாள்.
பிரணவிக்கு இன்னமும் கல்லூரியில் ஆத்ரேயன் ‘ட்ரூத் ஆர் டேரி’ல் பகிர்ந்த உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை.
“நீ என்ன சின்ன குழந்தையா? கைப்பிடிச்சி கற்றுத்தர? ஒரு விஷயம் கண் பார்க்க கை செய்ய தெரியாது?” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான்.
அவனுக்கு வினாத்தாள் தயார்படுத்தி முடித்து விட்டால் வேலை முடிந்தது. முதலாமாண்டு மாணவர்களுக்கு நாளை வைக்க போகும் தேர்வுக்கு வினாத்தாள் அது.
சில நாட்களாய் ஒரே நேரத்தில் இருவரும் சாப்பிடுவார்கள்.
ஆத்ரேயன் பிரணவியை தவிர்ப்பதற்காக பக்கத்தில் ஏதேனும் ஆங்கில புத்தகத்தை வாசிக்க வைத்துக் கொள்வான்.
பிரணவி மரியாதை நிமித்தமாக வேகமாக சாப்பிட்டு ஓடுவாள்.
இன்று இட்லியை பிய்த்தவள் வடகறியில் தொட்டு அப்படியே இருக்க, ஆத்ரேயன் அடிக்கண்ணால் பார்வையிட்டான்.
“பிரணவி” என்றதும் “சார்” என்று திரும்பினாள்.
”என்ன நினைக்கிற? ஒன்னுமில்லைன்னு மட்டும் சொல்லாத. உன் முகத்துல க்ளியரா தெரியுது.” என்றதும் பிரணவி தட்டில் கோலமிட, “ஏய் உன்னை தான் கேட்கிறேன். இங்க உன் பேரண்ட்ஸ் என்னை நம்பி அனுப்பியிருக்காங்க. எந்த உலகத்துல இருக்க?” என்று கோபமாய் அதட்டினான்.
தன்னிடம் மட்டும் இந்த கோபம். கல்லூரியில் இன்று வகுப்பறையில் அத்தனை மாணவ மாணவிகளிடம் இனிக்க இனிக்க சிரித்து பேசுகின்றார் என்ற வருத்தம் அவளுக்குள் தோன்ற, அது கோபமாய் உருமாறியது.
“சார்… சும்மா உங்களை நம்பி அனுப்பினாங்கன்னு சொல்லாதிங்க. உங்களை நம்பி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.” என்று பொரிந்தாள்.
எப்பொழுதும் பேசும் பணிவு பயம் இரண்டுமின்றி வார்த்தையில் அழுத்தமான கோபத்தை கண்டதும், “சரி கல்யாணம் பண்ணி அனுப்பினாங்க.
இப்ப எதுக்கு அதை நினைவுப்படுத்தற. நீ நார்மல்லா இல்லை என்ன காரணம். மனசை திறந்து சொல்லு பிரணவி.” என்று கேட்டதும் பிரணவியோ “நினைவுப்படுத்தலைன்னா இங்கேயும் யாராவது உங்களிடம் காதலிப்பதா உருகலாம்.” என்று முகம் தூக்கினாள்.
பிரணவியின் உரிமைப்போராட்டம் போல பேச்சில் தோணிக்க, “அதனால் உனக்கு என்ன?” என்றான்.
”எனக்கு என்னன்னா? எனக்கு ஒன்னுமில்லை. உங்களுக்கு தான் ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு பயப்படறேன். எனக்கென்ன கழுத்துல தாலி, நெத்தில குங்குமம், போதாதுக்கு மெட்டின்னு மூன்று விதமான அடையாளம். ஆனா நீங்க ஜம்முன்னு சுத்தறிங்க. மிதுனா மாதிரி இங்கேயும் யாராவது காதலிச்சா? இந்த கிளாஸ்ல கல்யாணம் ஆனவர்னு சொன்னிங்க. ஒவ்வொரு கிளாஸ்ல இருக்கறவங்களுக்கு தெரியுமா” என்று பேசிவிட்டு மூச்சு வாங்க நின்றாள்.
ஆத்ரேயன் முன் நீண்ட நெடிய பேச்சு இன்று தான் பேசியிருக்கின்றாள். அவளை வினோதமாய் பார்த்து, “அதுக்கு? காலேஜ்ல ஒவ்வொரு பொண்ணுங்ககிட்டையும் நான் கல்யாணமானவன்னு சொல்லணுமா? இல்லை உனக்கு தான் தாலி கட்டினேன்னு அறிவிக்கணுமா?
தாலி இருக்கு, பொட்டு வச்சேன், மெட்டி போட்டேன்னு அடுக்குற, கல்யாணம் ஆனவன்னு ஆண்களுக்கு ஒரு அடையாளத்தை சொல்லுங்க நானும் அடையாள அட்டை மாதிரி தாலியை கழுத்துல போட்டு திரியறேன். நீ ஒரு தாலியை போட்டு விடு” என்று ஆத்ரேயனும் பதிலுக்கு பேசினான். ‘என்னவோ இதெல்லாம் நான் கண்டுபிடிச்சு போடுன்னு சொன்னது மாதிரி சண்டைப்பிடிக்கிற’ என்று முனங்கினான்.
அந்த நேரம் புரப்பஸராக இருந்து சிறு பிள்ளையான இவளிடம் வாதடுவதை அவன் நினைக்கவில்லை.
பிரணவி முகம் எப்பொழுதும் போல இல்லை. அதை மாற்றிட துடித்தான்.
“தாலி தானே… இருங்க” என்று அவளது அறைக்கு சென்றாள்.
விறுவிறுவென திரும்பி வந்தவள் “இதை போடுங்க” என்று கொடுத்தாள். அதில் பெயர் இருப்பது தெரிய, “உன் பெயரை போட்டு நீ தான் என் மனைவின்னு தெரியப்படுத்தணுமா? புரப்பஸரும் ஸ்டூடண்டும் கணவன் மனைவின்னு காலேஜ்ல பேச வச்சி என் நிம்மதி குலைக்கணும். அதானே” என்றதும், “அதுல பிரணவின்னு போட்டிருக்கா?” என்று நக்கலாய் கேட்டாள் பிரணவி.
‘இன்னிக்கு என்ன எதிர்த்து எதிர்த்து பேசறா, காலேஜ்ல மிதுனா பத்தி பேசியதால சண்டை போடறாளா?’ என்று பார்க்க அந்த செயினில் ‘நீலாம்பரி’ என்றிருந்தது.
“யார் இது நீலாம்பரி? இந்த செயினை எதுக்கு என்னிடம் தர்ற?” என்று புரியாது கேட்டான்.
“நீலாம்பரியும் என்னோட பெயர் தான். என் பாட்டி அவங்க கூப்பிட ஆசையா வச்சது. நீலாம்பரி நேம் எனக்கு பிடிக்கலை. அப்படி கூப்பிட்டா காது கேட்காம நடிப்பேன்.
அப்பா பிரணவினு வச்சது தான் எனக்கு பிடிக்கும்.
என் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு இந்த செயினை தந்தாங்க.
பிரணவின்னு போடாம வேண்டுமின்னே நீலாம்பரின்னு போட்டு பிரசெண்ட் பண்ணிருக்காங்க.
நான் போடாம பீரோல வச்சிட்டேன்.
உங்களை யார் யாரோ பார்த்து காதலிக்கறாங்க.
இந்த நேம் செயினை கழுத்துல போட்டுக்கோங்க. யாரும் உங்களை பார்த்தாலும் உங்க நெஞ்சுல இந்த பெயர் போட்டு செயினால கல்யாணமானவர்னு ஒதுங்குவாங்க” என்று நீட்டினாள்.
ஆத்ரேயனுக்கு அந்த நேரம் பிரணவியின் பேச்சும் செய்கையும் புதிதாக தோன்ற, செயினை வாங்கினான்.
“நான் இதை போடுவேன்னு நினைக்கிறியா? நீயே ஓல்ட் நேம் சொல்லுறப்ப நான் எப்படி அந்த பெயர் இருக்கற செயினை கழுத்துல போடுவேன்.” என்று வினாதொடுத்தான்.
“நீங்க போடறதோ வேண்டாம்னு வச்சிக்கறதோ உங்க இஷ்டம்” என்று அடுத்து பேசும் முன் பிரணவி அவளது அறைக்குள் மின்னலாய் புகுந்தாள்.
‘நான் இதை போடுனும்னு நினைக்கறாளா?’ என்று ஆத்ரேயன் கையில் வைத்து பார்த்தான். ‘Nilambari’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
ஏனோ திருப்பி தர மனமில்லாது வைத்து கொண்டான்.
இரவெல்லாம் நானா பேசினேன். நானா அவரிடம் அப்படி துள்ளினேன்.’ என்று நகம் கடித்தபடி புரண்டு புரண்டு படுத்தாள் பிரணவி.
அவளுக்கு இருந்த கோபம் எல்லாம் வெளியே கொட்டியது போல தோன்றினாலும், தான் விரும்பியவரை யாரும் காதலிக்கும் பார்வையை வீசக் கூடாதென்று பேசி தள்ளிவிட்டாள்.
பிரணவியும் முன்பு ஆத்ரேயன் வந்தால் மனதை அலைப்பாய விடுவாள்.
பெண்ணின் மனம் திருமணமாகாதவன் என்ற கண்ணோட்டத்தில் தான் தனக்கு பாடம் நடத்தியவனை கண்டது. அவள் மட்டுமா? அஞ்சலி லலிதா என்று இருவரும் கூட ஆத்ரேயன் வகுப்பு என்றால் ஆர்வமாய் படிப்பார்கள்.
நாமெல்லாம் மனிதர்கள் என்பது போல அழகான ஆண்மகனை கண்டு ஏற்படும் சலனம்.
சிலருக்கு அது கடந்து விடும். மிதுனா போன்றவர்கள் வைத்த காதல் ஆபத்தானது. தனக்கு இல்லையென்றால் அவப்பெயரை இழுத்து காதலித்தவனை கெட்டவனாக மாற்றவர் பார்வைக்கு ஆளாக்குவது.
பிரணவி யாரிடமும் கூறாமல் தன் மனதோடு உறவாடினாள். இந்த ஆசை காதலாக மாறும் கல்யாணத்தில் முடியும் என்று கனவிலும் நினைத்ததில்லை.
அதனால் தான் தந்தை மாப்பிள்ளை பார்த்து முடிக்கவும் யாரை வேண்டுமென்றாலும் மணக்க நின்றாள்.
ஆனால் மனதில் ஆசையை உண்டாக்கியவன் கிடைக்க விடுவாளா.?! இது தான் கடவுள் போட்ட முடிச்சி என்று தந்தையின் வார்த்தையே தன் முடிவு என்று ஒரேபோடாய் போட்டு ஆத்ரேயனின் மாணவியாக இருந்தவள் மனைவி என்ற பந்தத்தில் நுழைந்தாள்.
என்ன அவன் மனதில் மாணவி என்ற பாறையை உடைத்து வீடு கட்டி அதில் மனைவி என்று குடிப்புக தான் காலம் அமையவில்லை.
-தொடரும்.
Super sis nice epi 👌👍😍 happa eppdiyo vaaiya thorandhu pesita aanalum endha professor ku puriya matengudhe🙄
Super super😍😍😍 Possessive war interesting👍👍👍
Supper next innike podunga pa 🥺🥺🥺
Yemma pranavi super ipafitan irukanum…. Edhukum othu vatalana thooki pottu mithichavadhu avana un vazhiku kondu va…. Ilana ivan maramaatan…. Super ka… Waiting for next ud…
மௌனமே வேதமா…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 11)
எப்ப சொந்த கதையை, சோக கதையை க்ளாஸ்ல எக்ஸ்போஸ் பண்ணிட்டானோ, அப்பவே பிரணவி மனசிக்குள்ள ஒரு பீதி வந்திடுச்சு, அவன் மேல ஒரு பொஸஸீவ்நெஸ்ஸூம் வந்திடுச்சு. இனி அவளா எதையும் செய்ய வேணாம், தானாவே எல்லாம் சுமூகமா நடந்திடும் பாருங்களேன்.
ஏன்னா, இதுவரைக்கும் ரெண்டு பேரும் இத்தனை நீளமா பேசினதே கிடையாது. முதல் தடவையா நீளமா பேசறாங்க, சிறு சிறு வாக்குவாதமும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ரெண்டு பேருக்குமே கோபமும் வருது.
எப்படியும் ஊடல் வந்தா, கண்டிப்பா சமாதான தூதுக்கு அடுத்த ஸ்டெப்ஸ் வைக்க வேண்டியதாயிருக்கும். அது கடைசியில போய் முடியற இடம் கூடலாத்தானே இருக்கும்.
ஸோ… ப்ராப்ளம் சால்வ்ட்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super. Super
Student a irukkum pothu crush a இருந்தது.இப்போ husband a ஆனபிறகு possessive aguthaa….mmm..,enna maa pesuraa…..நடத்துங்க நீலாம்பரி madam….😄😄😄
Pranavi ku crush possessive ellam iruku.aana indha professor ku oru feelings illayae innum aval ah student ah than ah pakkuran ithula avan manasula iva edampidikirathu rombhavae kastam polayae
Pesita oru valiya manasula ninaikuratha lam ketuta aana sir ku puriyalaye inum mathathu lam crt ah panraru aana love nu onu vara ava inum kasta padanum pola inum student ne nianachitu iruntha
💜💜💜💜💜
Spr going sis 👌 👌👌💕💕💕
அருமையான பதிவு
First step pranavi yeduththuttaa….
Eni vaaththi ku thaan bulb 💡 yeriyanum 😝😝😝😝
Super
Very interesting