Skip to content
Home » மௌனமே வேதமா-12

மௌனமே வேதமா-12

அத்தியாயம்-12

நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள்.

‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.‌

அவனை கண்டு சங்கடமாய் நிற்க, “இப்ப தான் எழுந்தியா? குயிக்கா கிளம்பு. லஞ்ச் கேண்டீன்ல பார்த்துக்கலாம். இப்ப சாப்பிட பிரட் இருக்கு” என்றதும் தாமதப்படுத்தாமல் குளிக்க ஓடினாள்.‌

‌ அவள் கல்லூரிக்கு செல்ல தயாராகி வரவும் சாப்பிட்டு, ஆத்ரேயன் ஷாக்ஸ் அணிந்து ஷூவிற்கு பாலீஷ் போட்டிருந்தான்.

மடமடவென தட்டிலிருந்ததை விழுங்கினாள்.

ஷூ பாலீஷ் செய்து அணியும் கனம் ஆத்ரேயன் குணிய, பிரணவி கொடுத்த செயின் மின்னியது.

இது அது தானா? என்று‌ கண்ணை கசக்கி ஏறிட, ஆத்ரேயன் பைக் கீசெயின் எடுத்து புறப்பட தயாரானான்.

அவசரமாய் தட்டை சிக்கலில் போட்டு புஸ்தக பையை எடுத்து வீட்டை பூட்டுவதாக வெளியே வந்தவள் பார்வைக்கு, ஆத்ரேயனின் நெஞ்சில் முதல் பட்டன் போடாமல் இருக்க, அவன் நெஞ்சு ரோமத்தோடு நீலாம்பரி என்ற பெயர் பதித்த தங்கசெயின் உறவாடியது.

அவள் அதனை ஆச்சரியமாக காணும் நேரம் ஆத்ரேயன் புறப்பட்டு விட்டான்.

அய்யோ அவரு நீலாம்பரின்னு பெயர் இருக்குற செயினை கழுத்துல போட்டிருக்கறார்.

இனி எவளும் பார்க்க மாட்டாளுங்க.

அப்படியே பார்த்தாலும் மேரேஜ் ஆனவர்னு சட்டுனு பார்வையை மாத்திப்பாளுங்க’ என்ற கொண்டாட்டத்துடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

பேருந்து இருக்கையில் வீற்றுக்கொண்ட போது கனவில் மிதந்தாள்.

இருசக்கர வாகனத்தை இயக்கிய படி, இடது கையால் செயினை தொட்டு பார்த்தான்.

நேற்று முழுக்க போடலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் வைத்து, மற்ற பெண்களின் மனதில் சலனத்தை விதைக்க வேண்டாமென்று நல்லெண்ணத்தில் அணிந்தான்.
‌‌
தவறு செய்பவரையை விட தவறு செய்ய தூண்டும் அழகிற்கு இனி யாரும் உரிமைக் கொண்டாட வேண்டாமென்ற தகவலாக அணிந்தான்.‌

பெண்கள் மட்டும் தாலி மெட்டி பொட்டு அணிந்து கொள்வதை போல இது இருக்கட்டும் என்ற எண்ணம்.

அழகால் ஆபத்து. இங்கே பிரச்சனை அழகால் வருகின்றதே. தவிர்க்கும் முடிவு அவ்வளவே. மற்றொரு காரணம் பிரணவி முகம் வாடி கோபமாய் நீட்டினாள்.

மிதுனா போல இங்கு யாராவது வந்து நின்றால்?

ஆத்ரேயன் வண்டி நிறுத்தி வரும் போதே செக்கியூரிட்டி கண்கள் கூர்நோக்கி செயினை கண்டது. புது செயின் வேறு‌ பளபளப்பில் மின்னியது‌.

வருகை பதிவேட்டில் கையெழுத்தானது போட அங்கே சிலர் ‘செயின் நல்லாயிருக்கு சார்.” என்றனர்.

“ஓய்ஃப் பெயரா சார்?” என்றதற்கு அளவான புன்னகையை வீசினான்.

நீலாம்பரி என்ற பெயர் ஆத்ரேயனை பார்க்கும் அனைவரின் கண்களுக்கும் புலப்பட்டது.

மாணவிகள் ‘சார் ஓய்ஃப் பெயர் நீலாம்பரியா?’ என்று கிசுகிசுத்தனர்.

மதியத்திற்கு மேலாக கேண்டீனில் சாப்பிட சென்றார்கள். அதன்‌பின் பிரணவி வகுப்பிற்கு வந்தான்.

வரும்போதே மாணவ மாணவியர்கள் தங்கசெயினை கண்டு விட்டனர்.‌

“சார்… செயின் இதுக்கு முன்ன போட்டிருந்திங்களா?” என்று கேட்டான் ஒரு மாணவன்.

“சார் நீலாம்பரி தான் மேமோட நேமா சார்” என்று மோனிகாவிற்கு முன்னிற்கும் மாணவி கேட்க, “ஆமா மா” என்றவன் மாணவர் பக்கம் பார்த்து, “நேத்து இங்க நடந்த கூத்து, ஓய்ஃபிடம் பேசப்பட, அவங்க ஓவரா சண்டை.

என்னது 22 பேர் காதலிச்சிருக்காங்களா? அதுல காலேஜ்ல வேலை பார்க்குற இடத்துல மூன்றா? அப்படின்னு இங்கேயும் யாராவது பிரப்போஸ் பண்ணிட போறாங்கன்னு பயந்து நைஸா என் கையில் அவங்க பெயரை பொறிச்ச செயினை கொடுத்து போட்டுக்க சொல்லிட்டாங்க. சோ… நான் இதை போட்டுக்க வேண்டிய நிர்பந்தம்” என்று சிரித்துக் கொண்டே உரைத்தான்.

பிரணவியோ முன்னின்று மாணவி ‘மேமோட பெயர் நீலாம்பரியா சார்?’ என்ற மேமில் சிரிக்க, ஆத்ரேயன் பேசவும், கமுக்கமாய் தான் எந்த காரணத்தில் அவனுக்கு செயினை அணிந்திட நீட்டினோம் என்பதை அறிந்ததில் பதுங்கினாள்.

“சார் அப்ப நீலானு செல்லமா கூப்பிடுவாரா?” என்ற கிசுகிசு எழவும், என்றைக்கும் இந்த பக்கம் திரும்பாதவன், பேசி முடித்து பிரணவி பக்கம் பார்வையை திருப்பினான். மாணவி பேசியதை கேட்டும் கேளாதவன் போல நடந்துக் கொண்டான்.

அவள் ஒளிவதை கண்டு மேலும் புன்னகை விரிந்தது.

“ஓகே ஸ்டூடண்ட் அடுத்த பாடம் நடத்தறதுக்கு முன்ன, லாஸ்ட் சேப்டர்ல ஒரு டெஸ்ட் வச்சிடலாம். படிக்க சொன்ன போர்ஷன் படிச்சிங்களா?” என்று கேட்டு போர்டில் வினாவை எழுத, “எஸ் சார்‌” என்ற கோரஸ் குரல்கள் எழுந்தது.

அதன்பின் நேரங்கள் நெட்டி முறித்து கடத்திட, இனிமையாக சென்றது.

இதில் பிரணவிக்கு ஏககுஷி.

மதியம் கேண்டீனில் சாப்பாடு வாங்கியவள் சாப்பிட்டு கொண்டே ஆத்ரேயனை நோக்கவும், அவனோ ஒரு சின்ன முறைப்புடன் சாப்பிட்டான்.

‘இவர் கிளாஸ்ல நல்லா தானே பேசினார்.‌ இப்ப என்னவாம் எதுக்கு முறைக்கறார்? ஒருவேளை ஸ்டாப் ரூம் முழுக்க கிண்டல் கேலின்னு மத்தவங்க பேச அதுக்கு என்‌மேல கோபப்படுறாரோ? இருக்கும் இருக்கும்’ என்று கையை அலம்பி வகுப்பை நோக்கி நடந்தாள்.

சற்று முன் தான் ஆத்ரேயனுக்கு சங்கவி அழைத்தாள். சாதாரணமாக தான் நலம் விசாரிப்போடு பேச்சு கடந்தது. நடுவில் பிரணவி பற்றி விசாரிக்க, ‘ஆஹ் நல்லா பார்த்துக்கறேன், நல்லா சமைக்கறா, அவ கிளாஸ் டெஸ்ட்ல நல்ல மார்க் ஸ்கோர் பண்ணறா,’ என்று அடுக்கினான் ஆத்ரேயன்.

சங்கவி பொருக்கமாட்டாது, “நிறுத்துடா… எப்ப பாரு அவளோட புரப்பஸர் மாதிரியே பழகற. அவளுக்கும்‌ அறிவேயில்லை. புருஷன் சுத்தி வர வைக்க தெரியலை‌. பாட புஸ்தகமே கதின்னு கிடக்கா.” என்று திட்ட, “இப்ப என்ன நானும் பிரணவியும் நல்ல கணவன் மனைவியா வாழறோம். எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டணுமா?” என்று ஆத்ரேயன் பல்லை கடித்து பேசினான்.‌

சங்கவியோ “நான் உனக்கு அக்காடா. நீ சின்ன வயசுல, முதல் முதல்ல அனா ஆவன்னா படிக்க கத்துக்கிட்டதே என்னிடம். குருவை மிஞ்சின சிஷ்யனா சமாளிக்காத.

தினமும் வீட்ல வீடியோ கால் போட்டு பேசறப்ப எல்லாம். நீ ஒரு ரூம் வரும், அவ ஒரு ரூம்லையும் இருப்பதையும் ரூம்லயிருக்கற பெயிண்ட் கலரே காட்டி கொடுக்கும்.

இதுல ஒரே ரூம்ல இருப்பியா? இந்த ஆறு மாசமா தனி தனியா தங்கறது எங்களுக்கு தெரியாதா?

அப்பா அம்மாவுக்கு கூட தெரியும்‌. சரி ஏதோ புரப்பஸரா இருக்கான். அவனுக்கு தெரியாததான்னு உன்னிடம் இதை பத்தி பேசலை. கேட்கலை.

அந்தபொண்ணை கொடுத்த வீட்ல அந்த மகராசனும் எல்லாம் தெரிந்தும் உன்கிட்ட கேட்காம நாகரீகமா இருக்கார். எல்லா நேரமும் இப்படி இருக்க மாட்டாங்க ஆத்ரேயா‌.” என்று திட்ட, “ஏய் போனை கொடு” என்று சங்கவியின் கணவர் வினய் வாங்கி, “ஏன்‌மாப்பிள்ளை இப்படி இருக்க, படிப்பு மட்டும் அவசியமா? பொண்டாட்டியும் அவசியமாச்சே.

நீ தேன்நிலவுக்கு கூட போகலை. ஏதாவது படத்துக்காவது கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை.” என்று கேலி செய்ய ஆத்ரேயனுக்கு வந்த கோபத்திற்கு அக்கா புருஷனிடம் காட்ட முடியாது “சரிங்க மாமா” என்று துண்டித்து விட்டான்.‌

ஆத்ரேயன் மனதில் ரூம்லயிருந்து வீடியோ கால் பேசியிருக்கா. ஏன்‌ ஹால்ல வந்து பேச வேண்டியது தானே? சை… இவளால மாமா என்னை பேசறார். இதுல அக்கா வேற’ என்று எண்ணியவன் முன் பிரணவி புன்னகைத்தாள் பதிலுக்கு சிரிப்பானா என்ன?

அன்று வீட்டிற்கு வந்து இதை கூறி அதட்டினான். கிட்டதட்ட சண்டை.

“இல்லை சார் ரூம்ல சம்டைம் நைட்டி போட்டுப்பேன்.‌ ஹால்லன்னா உங்களை பார்க்கணும் சங்கடமா இருக்கும்.” என்று உரைத்தாள்.

இதற்கு பின் எப்படி திட்டுவான்.
அவனுமே வீட்டில் முட்டி வரை ஷார்ட்ஸ், கையில்லாத பனியன் என்று சுற்றுவான்.
பிரணவி இருப்பதால் இங்கு அறவே தவிர்த்து விட்டான்.

வீட்டில் எந்நேரமும் பிடி மாஸ்டர் போல ஃபுல் டிராக் டீஷர்ட் என்று அலைகின்றான்.

அவனை போலவே அவளும் அறைக்குள் நைட்டி போட்டு சுத்துபவளாக கருதியப்பின் மௌனமாய் சென்றான்.‌
அதன் பின் வந்த நாட்கள் எல்லாம் அமைதியாக கழிந்தது.

பெரும்பாலும் ம்ம் சரி ஓகே என்ற‌ ஓரிரு வார்த்தைகள் உதிர்த்து கடந்திடுவார்கள்.

பிரணவி ஆத்ரேயனிடம் இயல்பான கணவன் மனைவி வாழ்வை நினைத்து பார்க்கவில்லை.

தான் க்ரஷாக எண்ணிய பேராசிரியர் கணவனாக வந்தடைந்ததே பெரும் பாக்கியம். இதில் பேராசை எதுவும் வேண்டாமென முடிவெடுத்தாள்.

அவள் முடிவெடுத்தால் எல்லாம் சரியாக இருக்குமா? விதி சும்மாயிருக்காதே.

அன்று எம்.எஸ்.சி முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் பிரணவியை அழைத்தார்கள்.

கல்லூரி ஆண்டுவிழா வருவதால் ‘கிளாஸ் நடப்பது அரிதாக போவோர் வருவோரை நிறுத்தி வெட்டியாக பேசி நேரத்தை கடந்தினார்கள்.

அப்படி தான் பிரணவியை அழைத்து பேசும் நேரம் அவள் குங்குமமும் தாலியும் கண்ணில் படவும், “நீ கல்யாணம் ஆனப்பொண்ணா?” என்றான் ஒருத்தன்.

“ம்ம் ஆமா அண்ணா” என்றாள்.

“அண்ணாவா? ஏய்.. சீனியர்னு சொல்லணும்” என்றான் மிரட்டலாக.‌

“ஓகே சீனியர்” என்றாள்.

“ஆமா கல்யாணமாகி எப்படி படிக்கறிங்க? ஹஸ்பெண்ட் படிக்க எல்லாம் விட்டாரா?” என்று கேட்கவும் அந்த தோரணையே அருவருப்பை தந்தது.

“அவர் படிப்புக்கு இம்பார்டன்ஸ் தருவார்.” என்றாள் பிரணவி.

“அந்த தாலி எடுத்துகாட்டு” என்று ஒருவன் கேட்க, நடுக்கமாய் கையில் ஏந்தினாள்.

“என்ன மாங்காய் சங்கு எதுவும் இல்லை.?” என்றான். அவன் தெலுங்கன்.‌ அதனால் அவ்வாறு கேட்டான்.

“அது ஒவ்வொருத்தங்க ஒவ்வொரு மாதிரி தாலி டிசைன் உண்டு.” என்று உரைத்தாள் தோழி மோனிகா. மோனிகா கைகளை பிடித்து நின்றாள் பிரணவி.  

“டிசைனை விடுடா. ஜீனியர் பாப்பா பாடம் படிக்கறப்ப படுக்கையறை நினைப்பு வராதா? இல்லை உன் ஹஸ்பெண்ட் உன் புக்கை மூடி வச்சிட்டு ரூமுக்கு கூப்பிட மாட்டார்?” என்றான் விஷமமாக. 

பிரணவிக்கு கண்ணீர் சுரந்தது. “டேய் விட்டுடு அந்த பொண்ணு அழுவுது” என்றான் சகமாணவன். பிரணவி அழுவதற்கு மற்றொரு காரணம் தூரத்தில் ஆத்ரேயன் அவள் அழுவதை பார்த்தும் அவளை தேடி வந்து விசாரிக்காமல் கல்லு போல நிற்பதே.   

“இல்லைடா மச்சான். நாம விழுந்து விழுந்து படிச்சும் மார்க் வர மாட்டேங்குது. இவளுங்க மாதிரி இருக்குற பொண்ணுங்க எப்படி படிப்பாங்க? மனசு புத்தகம் பக்கம் போகுமா?” என்று கேட்கவும், “அதான் நான் முன்னேற என் புருஷன் காரணம் என்று பக்கம் பக்கமா அடிச்சி விடுவாளுங்க.” என்று அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.    

“என்ன முன்னேற்றம் மாமு. வயிறு பெருத்து குட்டி போடுவாங்க” என்றதும் சரவெடி போல சிரித்தனர். 

அதன் பின் கொஞ்ச நேரம் கழித்து வேறு மாணவிகள் அகப்பட மோனிகா பிரணவியை விட்டார்கள். 

பிரணவி அழுதுக் கொண்டே இருக்க, மோனிகாவோ இப்ப எதுக்கு அழுவற பிரணவி? அவனுங்க அப்படி தான் பேசுவாங்க. பொறுக்கிங்க சீனியர் என்ற கொம்பு. 

இது மாதிரி கூட படிக்கிற பொம்பள பிள்ளைங்க என்கிட்ட கேட்டாங்க. என்ன பண்றது. எல்லாம் அவங்க இந்த நிலையில் இருந்து பார்த்தா இப்படி கேட்பங்களா?  எல்லாம் நம்ம பதில் சொல்லி ஓய்ந்து போனது தான் மிச்சம்.” என்று சாதாரணமாக கடந்தாள். 

பிரணவிக்கு அவ்வாறு கடக்க முடியவில்லை. அதுவும் ஆத்ரேயன் தூரத்தில் இருந்து பார்த்து அருகே வந்து விசாரிக்காமல் போனது நெஞ்சை அழுத்தியது. 

தொடரும். 

14 thoughts on “மௌனமே வேதமா-12”

  1. பிரணவி மா…நீ நினைக்கர்து புரியுது…ஆன ஆத்ரேயன் அப்படியா?…இல்லையே…என்ன பண்றது. பிரச்சனை ரொம்ப extreme ஆனா தான் ஆஜர் ஆவாரு….🤷‍♀️

  2. Yema pranavi indha robot kita poi idhellam ethir paarkardhu thappu ma…
    Iru veena akka edhavadhu oru vazhi pannuvanga…. Sangavi akka ku bayapadalanaalum namma veena akka ku bayandhu tan aganum…

  3. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 12)

    ஆமா… எல்லாத்துக்கும் புருசன் வருவானா சப்போர்ட்டுக்கு..?
    சில விஷயத்தை நாம தான் ஹாண்டில் பண்ணனும். இவ என்ன சின்ன குழந்தையா..?
    அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்துடுவேன்னு சொல்லி மிரட்ட ? இல்லை புருசனை கூட்டிட்டு வந்து அடிச்சு வெளுத்துடுவேன்னு சொல்ல ?
    இவளுக்கு வாயில்லையா…?
    இருந்தாலும் அதை புருசன் கிட்ட மட்டும் தான் காட்டுவாளா ? திருப்பி தர வேண்டியது தான். அந்த கோபம் தான் ஆத்ரேயனுக்கும்ன்னு
    நினைக்கிறேன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *