அத்தியாயம்-13
பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள்.
அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள்.
ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது.
‘கதவை சும்மா சாற்றி வச்சிட்டு என்ன பண்ணறா?’ என்று வந்தவன், “பிரணவி?” என்று அழைத்தான்.
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, முதலில் குளித்து விட்டு வருவோமென சென்று புத்துணர்வோடு வந்தான். ரூம் கதவு திறக்காமல் இருக்கவும், பிரணவி.. பிரணவி” என்று கதவை தட்டினான்.
‘காலேஜ்ல வேற அழுதா, இங்க கதவை திறக்கலை? என்னவாம் இவளுக்கு’ என்று சத்தமாய் கூப்பிட்டான்.
‘பிரணவி’ என்று உச்சரித்தாலே ‘சார்’ என்று முன் வந்திடும் ரகம். இன்று கத்தியும் வராமல் போக ‘ஏய் பிரணவி கதவை திற?” என்று கத்தினான்.
கதவு உடைக்கவில்லை விட்டால் அதையும் முயன்றியிருப்பான்.
ஆத்ரேயன் துடித்து கத்துவதை பொறுகாக மாட்டாமல் கவலையாக கதவை திறந்துவிட்டாள்.
“இப்ப எதுக்கு கத்தறிங்க?” என்று சாதூரியமாக கேட்டாள்.
‘சார்’ என்ற முதல் வார்த்தை நறுக்கிய பேச்சு.
“கத்தறேன்னா… இங்க மெயின் கதவை சும்மா சாத்தி வச்சிட்டு, ரூம்ல கதவை பூட்டி என்ன பண்ணற?” என்று அதட்டினான்.
இந்த அதட்டலுக்கு அமைதியாக வேண்டியவள். இன்று நடந்த பேச்சு பேச வைத்தது.
“நான் எப்படி போனா உங்களுக்கு என்ன? வீட்ல மட்டும் அதிகாரம் பண்ண வேண்டியது” என்று விசும்பினாள்.
அவள் கல்லூரியில் அழுதது நினைவு வர, பேசும் பேச்சும் அழுகையாக தொடர, “ஓ.. காலேஜ்ல என்ன நடந்துச்சு? சீனியர் ரேக் பண்ணினானா?” என்று கேட்டான்.
“ரேக் பண்ணி அழறது எனக்கு புதுசில்லையே. என்ன முன்ன எங்கப்பா கூடயிருந்தார்.” என்று தேம்பினாள்.
“நான் ரியாக்ட் பண்ணாதது தான் இப்ப பிரச்சனையா?” என்று ஒரு பேராசிரியனாக ‘தந்தை’ என்ற வார்த்தையிலிருந்து தற்போது கணவன் தான் கூடயில்லையென்ற குற்றச்சாட்டும் பேச்சை பிடித்துவிட்டான்.
அவள் அழுவும் போது ஆத்ரேயனை கண்ட நொடி, அவனை இறைஞ்சி அழைப்பது போல இருந்ததே.
“பின்ன இல்லையா… நீங்க ரியாக்ட் பண்ணாதது பிரச்சனை தான்.
அந்த சீனியர் என்னனென்ன பேசினான் தெரியுமா?” என்று சீறினாள்.
“நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்தேன். பொண்ணு பார்க்க வந்த நீங்க, என்னை பிடிக்கலைன்னா அப்படியே போக வேண்டியது தானே. என் படிப்பு பாழாகும்னு, தாலி கட்டினிங்க. இப்ப எவனெவனோ என்னை நிறுத்தி, கல்யாணமான பின்னாடியும் படிக்க முடியுதா? படிக்க விடறாரா உன் புருஷன், புக்கை தூக்கி போட்டு படுக்கைக்கு கூப்பிட்டா என்ன பண்ணுவ? எக்ஸாம் நேரம் புக் எடுத்தா படிக்குற நினைப்பு வருதான்னு கேவலமா கேட்கறான்.” என்று விம்மி கத்தவும் ஆத்ரேயன் அமைதியானான்.
அவனால் என்ன பேச முடியும்? அவனது மௌனம் பிரணவிக்கு கோபத்தை அதிகரித்தது.
“ஏன் சார்… நான் ஒருத்தன் முன்ன அழறேன். உங்களுக்கு மனசு துடிக்கலை. என்ன ஏதுன்னு விசாரிக்க வரக்கூடாது? அட்லீஸ்ட் மனைவியா இல்லை… மாணவிக்கு ஏதோ பிரச்சனைன்னு வந்து எட்டிபார்த்திருக்கலாம்ல?” என்றாள். அவள் அந்த கரிசணையை தான் எதிர்பார்த்தாள்.
“பிரணவி நான் எப்படி வர்றது? என் கூட சீரியஸா லைப்ரரி இன்சார்ஜர் பேசிட்டு இருந்தாங்க. அவங்களை விட்டுட்டு, உனக்கு என்ன நடக்குன்னு வந்து எப்படி பார்க்கறது. நான் அங்க புரப்பஸர். ஒவ்வொருத்தரா போய் ஏன் அழற? என்னாச்சுனு கேட்க முடியாது.” என்ற அடுத்த நிமிடம், “நான் உங்க ஓய்ஃப் சார். நீங்க புரப்பஸர் என்றதால் என்னை எப்பவும் மாணவியா தான் பார்ப்பிங்களா?” என்றதும் மீண்டும் மௌனம்.
“அப்ப எதுக்கு சார் என்னை கல்யாணம் செய்திங்க? பேசாம இவ என் ஸ்டூடண்ட் கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு போயிருந்தா நான் பாட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருப்பேன். அவரிடம் கெஞ்சி மேல படிக்க கேட்டிருப்பேனே. மிஞ்சி மிஞ்சி ஒரு செமஸ்டர் வேஸ்டாகியிருக்கும். இப்படி என் வாழ்க்கையே வேஸ்ட் ஆகிடும் போல இருக்கு.” என்று அழுதாள்.
”இப்ப காலேஜ்ல நடந்தது தான் பிரச்சனையா? இரண்டு நாள்ல சரியாகிடும் மறந்துடுவ. அதுக்கு எதுக்கு வாழ்க்கையே வேஸ்டாகிடும்னு பேசற?” என்றான். அவனும் எவ்வளவு நேரம் சமாதானம் செய்ய முயன்று தோற்று நிற்பது.
“இன்னிக்கு நடந்தது மட்டும் வச்சி பேசலை. இத்தனை நாள் என்னை நீங்க என்ன அர்த்தத்துல பார்த்துக்கறிங்கன்னு நினைச்சு பயந்து பேசறேன்.” என்றவள் கண்ணீரை துடைத்து, “மிதுனா மட்டும் உங்களை காதலிக்கலை சார். என் கிளாஸ்ல அஞ்சலி, லலிதா இரண்டு பேரும் விரும்பினாங்க. அதோட நானும் உங்களை காதலிச்சேன்.” என்றதும் விசுக்கென நிமிர்ந்து, கழுத்தை நெறிக்க வந்து தன்னை கட்டுப்படுத்தினான்.
“நம்ம காலேஜ்ல போன் எல்லாம் கொண்டு வரக்கூடாது. அதை மீறி போனை காலேஜ் கேம்பஸ்ல யூஸ் பண்ணுவாங்க. அது சில புரப்பஸருக்கு நல்லாவே தெரியும்
ஆனா நான் ஏன் கெமிஸ்ட்ரி லேப்ல வரை கொண்டு வந்தேன்.? உங்களுக்கு தெரியுமா?
உங்களை… உங்களுக்கு தெரியாம… நீங்க புக் படிக்கிறப்ப ஒரேயொரு போட்டோ எடுத்திடலாம்னு வந்தேன்.” என்றதும் ஆத்ரேயன் இதயம் அதிர்ச்சியானது கண்கள் அனலை கூட்டியது.
ஆத்ரேயன் சினம் கண்டு, பிரணவி கையிலிருந்த போன் நழுவியது. ஆனாலும் சொல்ல வந்ததை இன்றோடு சொல்லிவிடும் முயற்சியை கைவிடவில்லை.
வார்த்தைகளை தந்தியடித்து, திணறி, “உ..உங்களை போட்டோ எடுக்க தான் வந்தேன். மிதுனா வந்து பேசவும் ஒரேயிடமா நின்றுயிருந்திங்க. அப்ப தான் வீடியோ எடுத்தேன். ஆனா மிதுனா பழிப்போட்டு பேசவும் மிரட்டவும் எல்லாம் போன்ல ரெக்கார்ட் ஆச்சு.
அப்ப கூட பயந்து அங்கிருந்து வந்துட்டேன். ஆனா உங்க மேல பழி போட்டு மிதுனா அசிங்கப்படுத்தவும் மனசு துடிதுடிச்சு போச்சு. நான் ரொம்ப மதிப்பு வச்சி, காதலிச்சவர் மேல எப்படிப்பட்ட பட்டம் கட்ட பார்க்கறான்னு, உங்க மேல தப்பில்லைன்னு சொல்லி என் கிளாஸ் மேமிடம் வீடியோ காட்டினேன்.
மீதி உங்களுக்கு தெரியும்.
மிதுனா எங்க வீட்ல வந்து இரண்டு பொறுக்கியோட மிரட்டவும், அப்பா எனக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்தார்.
நீங்க மிதுனாவோட காதலை தவிர்த்ததுக்கு என்ன சொன்னிங்க? நீங்க புரப்பஸர் அவ ஸ்டூடண்ட் என்றது தான். அதனால என் காதல் சொல்லாதது, உங்களை பொறுத்தவரை செல்லாததுன்னு நினைச்சேன்.
அப்பா யாரை பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக்கற முடிவுல பிராக்டிக்கலா இருந்தேன்.
என்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளையா வந்தவரும் நீங்க” என்றதும் ஆத்ரேயன் மெதுவாக அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மாறினான். இவள் பேசுவதை பார்த்தால் பிரணவி தன்னை விரும்பி மணந்திருக்கின்றாளா? என்று சிந்திக்க அவளோ அப்படி தான் என்பது போல பேசினாள்.
“கேட்டிங்களே.. என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா சம்மதமா?’ன்னு நான் விரும்பியவரை கல்யாணம் செய்ய நான் ஏன் யோசிக்கணும். அதான் அப்பா இஷ்டம்னு பதில் சொன்னேன்.” என்றதும் ஆத்ரேயன் இமை மூடினான்.
“இப்பவும் சொல்லறேன். நான் மிதுனா மாதிரி காதலிக்கறதா உங்களை தொல்லை பண்ணலை. அப்பா பார்த்த வரனை கல்யாணம் பண்ணிருக்கேன்.
உங்களுக்கு நான் மாணவியா தெரியறேன். மனைவியா பார்க்க மாட்டேங்கறிங்க. ஒரு கார்டியன் மாதிரி வழிநடத்தறிங்க.
எனக்கு கார்டியன் வேண்டாம். எனக்கு… எனக்கு.. எனக்கு நீங்க உங்க மனைவி என்ற உரிமை தான் வேண்டும்.
இப்ப கிடைக்காட்டியும் என்னைக்காவது மனைவியா பார்ப்பிங்கன்னு காத்திருக்கேன். ஐ..ஐ.. லவ் யூ. லவ் யூ ஆத்ரேயன் சார்” என்றாள்.
ஆத்ரேயன் இமை மூடி திரும்பிய வினாடிக்குள் அறைக்குள் பதுங்கிவிட்டாள். கீழே விழுந்த அவள் போனை கூட எடுக்காமல் ஓட்டப்பந்தய வீராங்கனையாக அறைக்குள் ஒளிந்துக் கொண்டாள்.
ஆத்ரேயன் ஒரு வார்த்தை உதிர்த்து காயப்படுத்தினாலும் இன்று அவளால் தாங்கயியலாது.
நீண்ட நாளாக ஆத்ரேயனை விரும்பிய விஷயத்தை இன்று அவனிடம் அவளாக தைரியமாக சொல்லிவிட்டு சென்றாள்.
எத்தனை நாளாக தான் ஊமையாக காதலை சொல்லாமல் பொத்தி வைத்திருப்பது. இத்தனை மாதம் புரப்பஸர் என்ற முகத்தையே காட்டி பயமுறுத்தி எட்டியே நிறுத்திவிட்டார்.
இதற்கு மேலும் காதலை சொல்லாமல் இருந்தால் அவள் காதலுக்கு விடிவுக்காலம் ஏது?!இனி ஆத்ரேயன் என்ன திட்டினாலும் கேட்டுக்கொள்ள வேண்டும். காதலை சொல்லாமல் கடத்தி வருந்துவதை விட, சொல்லிவிட்டு வருந்தினாலாவது பயன் உண்டா என்று காத்திருந்தாள்.
ஆனாலும் உள்ளுக்குள் ஆத்ரேயனை நேரில் இனி சந்திக்க அச்சமிருந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Super
Athreiyan enna solluva n nu theriyala aana Pranavi oda kobam thappu nu thonala ava sonnathu pola vera yara chum kalyanam panni irundhalum manaivi nu karisanam aachum avan kita kedaichi irukum la inga athuvum illayae kalyanama ah na nall la irundhu avaluku guardian ah than irindhu irukan ippo iva love vera sollita enna pannuvano
Superrrrr
Spr going 👌 👌👌waiting for nxt ud 😍
💛💛👍👍💛💛💛🫰🏼🫰🏼🫰🏼🫰🏼
💜💜💜💜💜💜💜
Super super😍😍😍😍
அருமையான பதிவு
மௌனமே வேதமா…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 13)
அய்யோ..! அய்யோ..! இது என்ன எல்கேஜீ புள்ளைங்க லவ்வா…? லவ்வை சொன்னா அடிச்சுப்பூடுவாங்கன்னும், ஸ்டாண்ட் அப் ஆன் தி பென்ச்ன்னு பனிஷ்மெண்ட் கொடுத்துடுவாங்கன்னும் பயப்பட…?
இந்தா புள்ளை பிரணவி…!
ஆத்ரேயன் வேணுமின்னா உனக்கு காலேஜ்ல ப்ரொபஸரா இருக்கலாம். ஆனா, வீட்ல அவரு உனக்கு வெறும் புருசன் தான். நீ அவரை காலேஜ்ல பார்த்து லவ் பண்ணியிருந்தாலும், உங்க அப்பாமார் மாப்பிள்ளையா பார்த்து செலக்ட் பண்ணித்தான் உனக்கு கட்டி வைச்சாரு. அப்ப இது பெரியவங்க ஏற்பாடு பண்ண கல்யாணம். ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணலை, ஆனா, கல்யாணம் பண்ணப்பிறகு தாராளமா காதலிக்கலாம். ஸோ…உன் புருசன் தான், உனக்கு மட்டும் தான்… பீ ஹேப்பி…!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Solra varaikum payam varala…. Sonna pinnadi ninnaa aduchuruvanu odiye poitaa😂😂😂😂… Haioo haiooo.. Ini thala yenna panna poguthunnu therilaiyeee🥳
vaya teranthu ava manasula irukuratha ellam solita pranavi ipovathu sir ku puriyuthanu papom college la tha professor ah irukarna veetlaum apadiye iruntha eppadi ithula pranavi kova padurathula entha thappum illaye crt ah kekura ipo love panathaium sollita ithuku sir pathila enava irukum therilaye
Super sis nice epi 👌👍😍 eppadiyo manasula erukuradha dhairiyama sollita parpom professor enna Panna poraro nu🤔
Semma
Super..