Skip to content
Home » மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14

ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.

   இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.

   வீட்டின் வாசல் கதவை தாழிட்டு விட்டு லைட்டை அணைத்து அறைக்கு வந்தான். கையோடு பிரணவி போனையும் எடுத்து வந்தான்.

   கீழே விழுந்ததில் கண்ணுக்கு தெரியாத லேசான விரிசல்.

   Lock போட்டு பத்திரமாக வைத்திருந்தாள்.‌ ஆனாலும் பேட்டர்ன் தெரிந்து வைத்திருந்தான். ஒரு முறை அவள் போடும் போது பார்த்திருந்தானே. அவள் போனை எடுத்து கேலரியை நோண்டினான்.

 அதன் பின் போனை ஓரமாய் வைத்துவிட்டு, நீட்டி நிமிர்ந்தான்.

   எண்ணங்கள் அவன் மிதுனா பேசிய பின், கல்லூரி முதல்வர் அறையில் இருந்த அவனின் கடந்த காலத்திற்கு சென்றது.

   அந்த நொடி ‘மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர்’ என்ற அவப்பெயரை தாங்கி முள்ளில் அமர்ந்த நிலையில் இருந்தான். இதில் யாருக்கும் போன் போடவும் கைகள் சண்டித்தனம் செய்தது.

நல்லவன் என்று பெயரை மீட்டெடுக்க எந்த வழியும் திறக்காத நிலை. இதில் மஃப்டியில் போலீஸ் வந்து சட்டை காலரில் கை வைக்கவும் பாதி சடலமாக உணர, அதே பிடி தளர்ந்து தான் நல்லவனென்ற பேச்சை முதல்வர் வீடியோவோடு காட்டினார்.

அந்த போனை உபயோகித்து பிரணவி எடுத்த வீடியோ அவள் தன் நற்பெயரை காப்பாற்றிய தேவதையாக அந்த நொடி ஆத்ரேயனுக்கு தோன்றியது.
 
   அதன் பின் சற்றும் கல்லூரியில் நிற்க பிடிக்காமல் வந்துவிட்டான்‌. அடுத்த நாள் கல்லூரிக்கும் செல்லவில்லை.

  பிரணவியிடம் தனிப்பட்டு நன்றி கூறும் எண்ணத்தை விட, தாய் தந்தை திருமணம் என்றதும் அதற்கு சம்மதித்தான்.

  புகைப்படத்தில் பிரணவியை கண்டதும் தான் அன்னையிடம் தனக்கு உதவியவள் என்ற ரீதியில் நன்றி கூறிவிட துடித்தான். மற்றபடி மணக்க போகும் முடிவு அந்த நேரம் சுத்தமாக இல்லை.

  பிரணவி தந்தை பிடிவாதமாக பேச, மிதுனா வேறு பிரணவிக்கு குடைச்சல் தரயென, தன்னால் பிரணவி படிப்பு பாழானதாக கருதி மணக்க ஒப்புக்கொண்டான்.
 
   அதன் பின் தங்கள் உறவு தாமரை மேல் நிற்கும் பனித்துளி போல பட்டும் படாமலும் நகர்ந்தது.
இந்த நாளை தவிர்த்து பிரணவி தன்னை என்றும் எதிர்த்து பேசியதும் கிடையாது.
   இன்று தான் மடை திறந்த வெள்ளமாக காதலித்ததையும் உரைத்து விட்டாள்.

   ஆத்ரேயன் ஒரு முடிவோடு நித்திரையை அணைத்தான்.
  
   அடுத்த நாள் காலையில் கல்லூரி கிளம்பினாள் பிரணவி. பரீட்சை நெருங்குகின்றதே. அறைகதவை திறந்து பூனை போல எட்டி பார்த்தாள்.

   உணர்ச்சிகளை தொலைத்தவன் நான்.‌ நீ என்ன பேசினாலும் ‘நான் கற்பாறை’ என்பது போல ஆத்ரேயன் சாப்பிட்டான்.‌

    அவன் அவளை கண்டுக்கொள்ளாமல் இருக்கவும், அவளும் காதலித்ததை கூறிவிட்டாயிற்று என்று சாப்பிடாமல் அவனுக்கு முன் பையை தூக்கி கொண்டு நடந்தாள்.

  தான் சாப்பிடாமல் செல்வதை கண்டு ஆத்ரேயன் சார் அழைக்கவில்லை என்று அதற்கும் சற்று நேரத்தில் கலங்கினாள்.

   பேருந்து ஏறி அமர்ந்தவள் புத்தக பையில் தன்னிரு கைகள் மடக்கி, முகம் புதைத்து அழுகையை அடக்கினாள். அப்படியிருந்தும் லேசான கண்ணீர் எட்டி பார்த்தது. கல்லூரி வரும் வரை நிமிரவில்லை. விரைவாக வந்ததால் மோனிகாவும் இல்லை.

   கல்லூரி அடியெடுத்து, வகுப்பறைக்குள் நுழைந்ததும் ஆளாளுக்கு கிசுகிசுத்தனர்.

  பிரணவிக்கு நேற்று சீனியர் தன்னை நிறுத்தி பேசிய விவகாரம் வகுப்பில் தெரிய வித்தியாசமாய் பார்க்கின்றனரென்று எண்ண, மோனிகா ஓடி வகுப்பறை வந்ததும், ‘ஏய்… பிரணவி… நீ தான் ஆத்ரேயன் சாரோட ஒய்ஃப்பா? என்னிடம் கூட மறைச்சிட்ட கள்ளி” என்று சிரிக்க, பிரணவி புரியாமல் விழித்தாள்.

“உன் வாட்ஸப் டிபி செமையா இருக்கு. கல்யாண கோலத்துல அடக்கமா நீயும், கம்பீரமா சாரும் அய்யோ சூப்பர். நம்ம காலேஜ் குரூப்ல ரஞ்சித் தான் உன் டிபியை கவனிச்சு குரூப்ல போட்டான். கிளாஸ்ல எல்லாருக்கும் நீ தான் சார் ஒஃய்ப்னு தெரிந்திருச்சு. ஆமா உன்னை டேக் பண்ணி கேட்டதுக்கு நீ ஏன் எதுக்கும் ரிப்ளை பண்ணலை.” என்று கேள்வி மழையை கொட்டினாள்.

‘என் போன் நேத்து… சாரிடம் பேசிட்டே தவறவிட்டேன். ஹால்ல கிடந்தது. சார் எடுத்திருப்பாரோ?’ என்று நினைத்தவள் சடுதியில், ”என்ன டிபி? என்கிட்ட காட்டு” என்று கூற,  மோனிகா பிரணவியை விசித்திரமாக பார்த்து ஏதோ நடந்துள்ளதென, அவள் தன் போனை மறைத்து பிரணவிக்கு காட்டினாள். 

   திருமணத்தில் எடுத்த புகைப்படம் மாலையும் கழுத்துமாக, பொன் தாலி மார்பில் தவழ, அழகாய் இருந்தது. அவள் தான் ஆசையாக கேலரியில் பதிவிறக்கம் செய்து அடிக்கடி பார்ப்பாளே. அதே புகைப்படம்.

   பிரணவியோ, ‘இப்ப இதை ஏன் என் வாட்ஸப் டிபியா வச்சார்?’ என்றவளுக்கு குழப்பம் உண்டானது. ஆனால் வகுப்பு ஆசிரியர் வரவும் மோனிகா போனை ஒளித்து வைத்துக் கொண்டாள்.‌

   பாடம் நடத்தும் போது, பேராசிரியர் கூட தன்னை அடிக்கடி அதிகப்படியாக பார்வையிட்டதை பிரணவியால் உணர முடித்தது. அது ஆத்ரேயன் மனைவி என்ற பார்வை என்று புரியாமல் இல்லை.

   அடுத்தடுத்த வகுப்புக்கு இடைவெளியிருக்க, “ஏ உன்‌ பேர் பிரணவி தானே? சார் நீலாம்பரின்னு செயின் போட்டிருக்கார்? பதில் சொல்லு பிரணவி?” என்று மோனிகா உலுக்கினாள்.

“பச்… அது என்‌ பாட்டி எனக்கு வச்ச பெயர். மேரேஜ் கிஃப்டா செயின்ல அந்த பெயரையே போட்டுட்டாங்க” என்று சுரத்தையின்றி உரைத்தாள்.

   “ஏ… என்ன டல்லாயிருக்க? ஓ.. அந்த பசங்க பேசியதா?” என்றதற்குள் பேராசிரியர் வரவும், மீண்டும் அமைதி. இடைவெளியில் மோனிகா பிரணவியை அழைத்து மீண்டும் கேட்க, பிரணவி ஆத்ரேயன் தான், தன் கணவர் என்பதை வாய் வார்த்தையால் கூறினாள்.

   அதன் பின் நிறைய கிசுகிசு பேச்சு. மதியம் சாப்பாட்டை கேண்டீனில் முடித்தாள். மோனிகா துளைத்தெடுப்பது போல கேள்வியை குடைய அவளிடம் நடந்ததை பகிர்ந்தாள்.
   “இப்ப நான் சந்தோஷப்படுவதா? துக்கப்படுவதா? நேத்து சீனியர் அண்ணா பேசியதுல கோபத்துல அவரிடம் நிறைய பேசிட்டேன். சார் என் போனை எடுத்து வாட்ஸப் டிபியா கல்யாண போட்டோ வச்சிட்டார்” என்று சோகமாய் உரைத்தாள்.

   நேற்று கிண்டல் கேலி செய்த சீனியர் கூட ஒதுங்கி சென்றார்கள்.

   மதியத்திற்கு மேலாக ஆத்ரேயன் வகுப்பு இருந்தது. ஆனால் ஆத்ரேயன் கூடவே மற்றொரு வேதியல் ஆசிரியர் வந்தார். அதனால் மாணவர்கள் சற்று ஆர்ப்பாட்டத்தை தவிர்த்திருந்தனர்.

   ”டியர் ஸ்டூடண்ட் உட்காருங்க.
  இவர் ஸ்டீபன். இன்னையிலயிருந்து நியூ ஜாயின். உங்களுக்கு கெமிஸ்ட்ரி புரபஸராக வருவார். நான் இனி வரமாட்டேன். ஆல்ரெடி போர்ஷன் கம்பீளிட் பண்ணிட்டேன். டவுட்னா தாராளமா கேளுங்க.” என்றவன் கைகடிகாரத்தை பார்த்து, “ஸ்டீபன் நான் என் புது கிளாஸை பார்க்க போறேன். நீங்க கண்டினியூ பண்ணிக்குங்க” என்று விடைப் பெற்றான். ஸ்டீபன் செல்ல வேண்டிய வகுப்பை ஆத்ரேயன் கேட்டு வாங்கிக்கொண்டான்.
   இந்த வகுப்பை ஆத்ரேயன் ஸ்டீபன் ஆசிரியருக்கு மாற்றி விட்டான். காரணம் பிரணவியை தவிர்க்க நினைத்ததே.

    பிரணவி ஆத்ரேயன் வருகையில் ஏறிடவில்லை. அதே போல் ஆத்ரேயனும் அவள் புறம் பாராமலேயே மின்னலாய் பேசி சென்றான்.

    அதன் பின் ஸ்டீபன் பெயரை கேட்க பொழுதுகள் கழிய, மற்ற மாணவர்கள் “சார் இன்னும் இரண்டு மாசம் கூடவே இருக்கலாம். பச்…. ” என்று ஒவ்வொருத்தரும் மனதை தேற்றிக்கொண்டனர். பிரணவி மனைவி என்பதால் மாணவியை தவிர்ப்பதாகவும் பேச்சு உலாவியது.

  கொஞ்ச நாள் என்றாலும் மனதை பிசைந்து அழகாய் பாடம் நடத்தினார் என்ற பேச்சு. அன்று முழுவதும் கிசுகிசுக்கு பஞ்சமின்றி நகர்ந்தது.

வீட்டிற்கு வந்த மாலை பொழுதில் ஹாலில், அவளது போன் டீப்பாயில் இருந்தது. பிரணவி தன் போனை எடுத்து வாட்ஸப் டிபியாக, வீட்டில் மலர்ந்த மயில் மாணிக்க பூவை மாற்றி வைத்தாள். ஓரளவு கல்லூரியில் தெரிந்ததே போதுமென்ற எண்ணம்.

   அதன் பின் கல்லூரி பரீட்சை முடியும் வரை ஒரே வீட்டில் இருவரும் மௌனமாய் நடமாடினார்கள்.

    சாப்பிடவும் அடிக்கடி ஏதேனும் வீட்டில் காய்கறி இருக்கா? என்ன சமைக்க போற? இன்னிக்கு வெளியே சாப்பிட்டுப்பேன்’ இத்யாதி உரையாடல்களே இருவருக்குள் இருக்கும்.

  காதலை உரைத்தப்பின்‌ இனி பேசுவதற்கு என்ன உள்ளதென்று அவளுமே மௌனமானாள். முக்கியமாக ஆத்ரேயனிடம் பேச அச்சமிருந்தது.

   கல்லூரி கடைசி பரீட்சை முடிய, தன் வண்டியை எடுத்து ஆத்ரேயன் பிரணவி பேருந்து ஏறும் இடத்தில் வந்தான்.

  “வண்டில ஏறு” என்றான் ஆத்ரேயன்.

   பிரணவி திகைத்து விழிக்க, மோனிகா தான் தள்ளாத குறையாக பிரணவியை வண்டியில் ஏற்றினாள்.

ஓரளவு மோனிகா இவர்கள் பிரச்சனை அறிந்தவளே. புரப்பஸர் ஸ்டூடண்டை கல்யாணம் செய்து உள்ளார்‌. அவளோ ஆத்ரேயன் சாரை விரும்பியிருக்க, ஏற்றிவிட்டு மகிழ்ந்தாள்‌.

   பிரணவிக்கு எங்கு செல்கின்றோமென கேளாமல் வந்தாள். ஆத்ரேயன் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்தான். கோவிலுக்கு செல்ல தோன்றாமல், கடற்கரைக்கு அழைத்து சென்றான்.

  பிரணவியோ அவனை பின்‌தொடர, மணலில் வீற்றுக்கொண்டு அருகே கையை காட்டி உட்கார கூறினான்.‌
 
   ‘பக்கத்திலா?’ என்று விழிக்க, “ரொம்ப யோசிக்காத உட்காரு. இன்னையிலயிருந்து நீ என் ஸ்டூடண்ட் கிடையாது. எக்ஸாம் முடிச்சிட்ட.” என்று நக்கலாய் உரைத்தான்.

   கடலை வெறித்தவாறு “உன் கழுத்துல நான் தான் தாலி கட்டியிருக்கேன்.  பயப்படாம உட்காரு.” என்றான்.‌

அவளும் தயங்கி தயங்கி, அப்பொழுதும் இடைவெளி விட்டே அமர்ந்தாள்.

  பிரணவி அமரவும், “கல்லூரி மாணவரிடம் புரப்பஸர் அத்துமீறல், பள்ளி மாணவியிடம் ஆசிரியர் பாலியல் வன்முறை, பள்ளி மாணவியிடம் ஆசிரியர் காதலித்து ஓட்டம், டியூஷன் படிக்க சென்ற பெண் கர்ப்பம்’ இதெல்லாம் இப்ப பேப்பர்ல ரொம்ப சகஜமா இருக்கு.

ஆனா என்னை பொளுத்தவரை ஒரு புரப்பஸரா எந்த ஸ்டூடண்ட் மீதும் தப்பான பார்வையை வீசிட கூடாதுன்னு நினைக்கிறவன்.

அதனால தான் மிதுனாவை ரிஜெக்ட் பண்ணினேன். அப்படின்னா கூட அவ காதலை ஏற்றுக்காம போனது நல்லது.

இல்லைன்னா அவ காதலிச்சு என்‌மேல பழி சுமத்துவாளா? காதல் பழியை போடாது. பழியை களையறதுக்கு துடிக்கும்.

   லைக்… உன்னை மாதிரி. உன் காதலை நீ சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. ஆனா தாலி கட்டுறதுக்கு முன்னவே, எங்கம்மா  தனியா கூப்பிட்டு ‘மிதுனாவை ஸ்டூடண்ட் என்று காதலிக்காம அட்வைஸ் பண்ணி அனுப்பின. பிரணவியிடம் கூட அவ ஸ்டூடண்ட் என்ற கோணத்தில் கல்யாணத்தை நிறுத்த சொன்ன. ஆனா அவங்க அப்பா பிடிவாதமா பேச வேற வழியில்லாம மாப்பிள்ளை கோலத்துல நிற்க. இப்ப தாலி கட்டிடலாம்‌ பிரணவியை படிக்க வைப்போம். மீதி யோசிக்க வேண்டாம்னு இருந்துடாத. தாலி கட்டினா அவளை மனைவியா பார்க்கணும், கணவனா உன்னோட கடமையை நீ சரியா செய்யணும். அப்ப வந்து அதெல்லாம் முடியாதுனு அவளை விலகி நிறுத்தி, பிரியலாம்னு தப்பு கணக்கு போடாத. ஆசிரியர் தொழில் எப்படி புனிதமா நினைக்கிறியோ, அதை போல தான் இந்த உறவும். பெயருக்கு வாழ்ந்து நடிச்சி மற்றவர்களை ஏமாத்தற மாதிரி உன்னை ஏமாத்திங்காத’னு சொன்னாங்க.

    ‘அவ படிப்பு முடியும் வரை என்னால அவளை அப்படி பார்க்க முடியாது. அவளுக்கு என்னால தான் படிப்பை ஸ்பாயில் ஆகியிருக்கு. அதனால் நிச்சயம் மனைவியா நடத்த மாட்டேன்.’னு அம்மாவிடம் சொன்னேன்.

  ‘அப்ப தாலிக்கு என்னடா மரியாதை? இதுக்கு அவ வேற யாருடனாவது வாழ்ந்துப்பாளேனு சொன்னாங்க. அன்னைக்கு நீ சொன்னியே. யாரோடவது வாழ்ந்து கெஞ்சி படிச்சிருப்பேன்னு.‌

   அம்மாவும் அதை சொல்லவும், ‘நான் என்ன பண்ணனும்னு கேட்டேன்.

   தாலி கட்டினா வாழணும். இந்த இடைப்பட்ட காலத்தில் அவ படிப்பு முடிய உனக்கு நேரமிருக்கு. நீ உன்னை மாத்திக்க முயற்சி செய்னு தீர்க்கமா சொன்னாங்க.

‘படிப்பு முடியவும் உன்னோட வாழ முயற்சி பண்ணறேன்னு சொல்லிட்டு தான் தாலியே கட்டினேன்.‌

    சொன்ன‌ மாதிரி படிப்பு முடியறவரை உன் கணவனா இருக்க கூடாதுன்னு‌ நினைச்சேன்‌. என்னால வேற கண்ணோட்டத்துல பார்க்க முடியாது‌. அதானால தான் ஒரு புரப்பஸரா எப்பவும் கார்டியனா வார்டனா கூட இருந்தேன்.

இப்ப உன்னை மாணவியா பார்க்கலை, படிப்பை முடிச்சிட்ட. சோ.. மனைவியா பார்ப்பேன். எங்க அக்கா தான் அவசரப்படுத்தி உன்னை வேற தேவயற்று கேள்வி கேட்டுட்டா” என்றவன் கடல் அலையை பார்வையிட்டான்.

   தன்னை இயல்பாக்கி, “இந்த கடல் அலை மேல சத்தியமா உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். உன்னை‌ முதல்ல என்னை பழியிலிருந்து காப்பாற்ற வந்த தேவதையா தான்‌ பார்த்தேன்.‌ இப்ப என்னோட தேவதையா பார்ப்பேன்.‌” என்றவன் மெதுவாக கையை பற்றினான்.
  அவன் கைகளை அவள் பிடித்து முகத்தில் வைத்து அழ ஆரம்பித்தாள்.

  அவளுக்கு அவள் விரும்பிய காதலன் கிடைத்த ஆத்ம திருப்தி.

ஆத்ரேயனின் வெம்மையான கைக்குள் தன் கரத்தை *மௌனமே வேதமா*க மாறி நின்றாள் பிரணவி.

   இனி கரையை தேடி வந்து தொட்டு தொட்டு செல்லும் அலையை போல, ஆத்ரேயன் என்ற அலையும் பிரணவி என்ற‌ கரையை தொட்டு மீட்கும். கரையை தொடாத அலையும் உண்டா?!

-சுபம்
-பிரவீணா தங்கராஜ்

இது பூமகள் மாதயிதழில் வெளியிடப்பட்ட நாவல்‌.

  அதனால் வார்த்தை அளவுக்கு ஏற்ற மாதிரி குறுநாவலாக கொடுத்திருக்கேன். என்னப்பா கொஞ்சுண்டு இருக்கு. ரொமான்ஸ் இல்லையா? என்று கேட்காதிங்க. முன்கூட்டியே சொல்லிடறேன். ஏன்னா ரீசண்டா ஒரு ரீடர் ராணிமுத்து மாதயிதழில் வந்த பிரம்மனின் கிறுக்கல்கள் கதையை நம்ம சைட்ல வாசித்துவிட்டு ரொமான்ஸ் கொஞ்சம் கூட இல்லைன்னு முகநூல் கமென்ட்ஸ்ல சொன்னாங்க.

அவங்க கேட்டது ‘லவ் நாவல்’, ‘ரொமான்ஸ் நாவல்’ ‘இலவசமாக இருக்கும் கதை லிங்க்’. மூன்று கேட்டகிரி.

  நான் இலவசமாக என்ற காரணத்தால் காதல் கதை என்று பிரம்மனின் கிறுக்கல்கள் கொடுத்தேன்.
  அது மறுமணம் சார்ந்த கதை. வாசித்தவங்களுக்கு தெரியும். டீசண்ட் கதை. அந்த மேகஸின்லயும் வார்த்தை அளவு ரொம்ப குறைவானது. அதுக்கு ஏற்ற மாதிரி அழகா கதையை மட்டும் திகட்டாத காதலா டீசண்டா கொடுத்தேன்.

  இங்க ஆன்லைன்ல ரொமான்ஸ்ல ஊறிய அவங்களுக்கு உப்பு சப்பில்லாம இருந்தது போல கேலியாக மற்றொரு கருத்தில் அதை வெளிப்படுத்தி இருந்தாங்க. அது அவங்க உரிமை சொல்லட்டும் தவறில்லை. ஆனா எல்லா கதையிலும் கட்டில் காட்சி அவசியமில்லை என்பது என் தரப்பு பதில். அதுவும் ராணிமுத்து பல காலமாக இருக்கும் மாதயிதழ். அதுல அழகா தான் கதை கொடுக்கணும். ஆன்லைன் கதைகள் போல இஷ்டத்துக்கு எழுத முடியாது. அதுக்கு தனி தளமிருக்கு. ஏன் நானே கூட தேவைக்கு என்று நிறைய கதையில் காதல் காட்சி அளவா தந்திருப்பேன்.

  உங்க ஊறுகாயுக்கு நான் போதை ஏத்தற மாதிரி எழுத முடியாது. தட்ஸ் இட். டாட்.

  என்னை பத்தி வெளியே எப்படி பேசறிங்கன்னு தெரியலை. என் எழுத்துக்கு நான் சரியாக இருப்பேன். உங்க வாசிப்புக்கு ஏற்றது போல என்றும் எழுத மாட்டேன்.

அது தவறும் கூட… காலம் கடந்து
  ‘இப்படி எழுதியிருக்க கூடாது’
‘இந்த படத்துல இப்படி ஆபாசமா நடிச்சேன் இப்ப என் வாழ்க்கை போச்சு.’ என்று அறிவு திறந்து பேசற லிஸ்ட் நான் இல்லை. இது தவறுன்னு தெரிந்தே காதலை காமமாக சொட்டி எழுதறது தப்பு. அந்த தப்பை செய்ய மாட்டேன். எனக்கு காதல் காட்சிக்கு அளவு தெரியும். எந்த கதைக்கு எந்த அளவு வைக்கணும்னு. அந்த அளவு மட்டுமே எழுதுவேன்.

  என்னை தவறாக நினைத்து கொண்டு மதிக்காதவள் என்று புறம் கூறினால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

ஏதோ செல்லணும்னு ஆசைப்பட்டேன் பிரெண்ட்ஸ்…. 🤷‍♀️😊

என்னோட ரீடர்ஸ் இந்த லாஸ்ட் பதிவுல என் பகிர்வை பத்தி யோசிக்காதீங்க. இந்த கதையில் ஆத்ரேயன் மற்றும் பிரணவி பற்றி சொல்லிட்டு போங்க. உங்கள் ரிவ்யு முகநூலில் எதிர்பார்க்கலாமா? எதுனாலும் சொல்லுங்க இது எதையும் தாங்கும் ஸ்டோன் ஹார்ட்.(கல்நெஞ்சகாரிங்க)

22 thoughts on “மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)”

    1. என்னங்க நீங்க கட்டில் பற்றி சொல்வதா ரொயமான்ஸ்..நிபுணன் ஆதிரா காதல எவ்வளவு அழகா சொல்லிருப்பீங்க..அதாங்க ரொமான்ஸ்…
      இந்த கதை இன்னும் அஒரு 10 எபி எழுதிருக்கலாம்…சூப்பரா இருந்தது பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க….

  1. Very decent love story, but very short. சகி உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும், உங்கள் கதை நிலையில் ஒரு யதார்த்தம் நேர்மை இருக்கும் ஹீரோ என்றால் இப்படித்தான் ஒரு கோட்பாடு இருக்கும். கதைகளில் ஹீரோக்களை அவதார புருஷர்கள் போல் காட்டுவது ஒருவகையில் இளைய தலைமுறையை நல்வழிப்படுத்துதல் ஆகும். என்னைக்குமே என் ஃபேவரிட் உங்கள் நாயகரில் தர்ஷன், நிபுணன் மற்றும் விதிரன். அவர்களின் நேர்மை கட்டுப்பாடு கோவம் மிகவும் அருமை. உங்களைப்போல் விரசம் இல்லாமல் எழுதுபவர்களை தான் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் தொடர சூப்பர்

  2. Super sis very nice story 👍👌😍 aathreyan oru nalla professor pa evana mathiri ellarum erundha romba nalla erukum 🥰 pranavi romba nalla character athreyan a prechanai la erundhu kaapathi kadaisila adhuku palan ah kaadhalum Kai koodiduchu🥰😍 seekirama next story podunga sis 🙏 neenga stories la thevaiyana yedathula romance vepeenga sis adhu enaku romba pidikum book ku yezhudhumbodhu sila varai miraigal eruku adhu puriyama silaper pesuranga ignore them pa keep rocking in ur way sis👍❤️

  3. Kalidevi

    Superb very interesting ending last ah vai theranthu pesi pathil sonnalum athula reason vachi tha solli irukan selfish ah illama pranavi kaga Ava padipu pathika kudathunu tha ivlo naal apadi nadanthukama entha impress Panama irukan aatreyana thappa ninachitome ippadi. Sir ah irunthu nallathu Pani irukan ipo athe oru nalla husband ah vum irupan pranavi ku 👏👏😍. Superb sisy epovum pola ithulaum alaga koduthu irukinga unga eluthukala alava irunthalum athu rombave alaga than iruku . Mathavangaluku eppadiyo namaku kamam vachi kathai iruntha thanu illa athaiym thandi iruku athu ungaluku nirayave iruku . Congratulations sissy 👏👏👏👏

  4. Sattunu mudinchithu yae than feelings ah iruku otherwise eppovum pola oru azhagana love story unga style la yae
    Rombhavae etharthama ah na ory story than Athreiyan professor ah irundhutu student ah just pakkurathu kooda thappu nu nenaikira appo sattunu love ellam.avan kita expect panna mudiyathu athae neram avan kanavan manaivi na ra uravum punitham ah na thu than athu ah yum.respect pannuvan nu sollitan enna athuku Pranavi studies mudiyira varaikum time eduthukitan atha thappu solla mudiyathu yae yen na ivangaluku normal ah marriage aagi irundha la yae avan definite ah ava studies ku importance kuduthu irupan apadi irukum pothu ivan ah la than avaluku indha thidir kalyanam num pothu innum konjam strict ah irundhan avolo than athuvum Pranavi love panna na ra thu avanuku konjam.athigam ah shock ah kuduthuchi aanalum aval ah hurt panna ma azhaga handle pannan ava love ah yum avanga rendu per oda carrier ah yum .
    So eppo vum pola indha story um one of my favorite story than ennaku

  5. Romba azhagana kutti story pravee ka romba kaniyama oru professor life epti irrukungara tha ovoru epi lium solittinga Pravee ka 🤗😍 tqs .
    Ipo lam news paper la cinima la student teacher/ professor relationship um mariyathai kuriyatha irrukarathu kamiyagittu varuthu athulaium abuses related lam romba KodumAi 😡😡😡😡😡😡😡
    Antha vagai la ithu yanakku romba santhosama irruku Praveen ka 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  6. Super ka…short story mu theriyum ka naan 20 episodes irukum nu nenaichen ana skrm mudinchidichu…. Padikkumbodhu tan theriyudhu idhuvae podhum short ah irundhalum romba azhga iyalba irundhudhu… Aathreyan pranavi um ini enga sangathula inaichutanga ka👏👏….

  7. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 14 (Final)

    ஹேய்…ஜாலி, ஜாலி…! கடைசியில நான் நினைச்ச மாதிரியே நடந்திடுச்சு.
    பிரணவி வேணா ஆத்ரேயனை ஒருதலையா காதலிச்சிருக்கலாம். பட்.. ப்ரபொஸர் அப்படி கிடையாது. அவரு ஸ்டுண்ட்டை லவ் பண்ணவே கூடாதுங்கற லட்சியத்துல இருக்கிறாரு. ஆனா, இவங்க ரெண்டு பேருக்கும் பெரியவங்க கல்யாணம் பண்ணி வைச்சுட்டதால, கல்யாணம் பண்ணிக்கிட்டு இனி காதலிக்கவும் செய்யலாம், இனி குடும்பமும் நடத்தலாம்ங்கற முடிவுக்கு வந்தாச்சு, அதுக்கேத்த பிரணவியோட படிப்பும் முடிஞ்சாச்சு, அப்படியே ஹேப்பி எண்டிங்கா கதையையும் முடிச்சாச்சு.
    வெரி, வெரி ஹேப்பி..!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *