அத்தியாயம்-4
வெகு நேரம் இருவரும் அவரவர் அறைக்குள் அடைக்காக்க, பிரணவிக்கு பசித்தது.
அவள் வீட்டில் வந்ததும் காபி குக்கீஸ் மிக்சர் என்று வஞ்சனையின்றி சாப்பிட்டு பழகியவள். இங்கு காலையில் இரண்டு சப்பாத்தி, மதியம் தக்காளி சாதம் என்பது போதவில்லை.
புலாவ் ரைஸ் வாங்கியதால் அதனை சுவைத்திடும் எண்ணத்தோடு வந்தாள்.
ஆனால் வாங்கி வந்தவன் சாப்பிடாமல் தான் மட்டும் உணவில் கை வைப்பது சங்கடமாய் இருந்தது.
ஆத்ரேயன் கதவை தட்டவும், “என்ன?” என்றான்.
இன்னமும் கோபம் குறையவில்லையென்று புரிய “சார் டைம் செவன் தேர்டி சாப்பிடலாமா?” என்றாள்.
“எனக்கு பசிக்கலை.” என்றான்.
“எனக்..” என்றவள் அப்படியே நிறுத்திக் கொண்டாள்.
தன்னை பற்றி நினைக்காதவரிடம் பசிக்கின்றதென்று கூறமுடியாது நிற்க, “உனக்கு பசிக்குதுன்னா சாப்பிடு” என்று கதவை திறக்காமல் குரல் வந்தது.
“சார்…” என்று மீண்டும் அழைக்க, அந்த ‘சார்’ அவனை எரிச்சலுக்குள் தள்ளியது.
“என்ன?” என்றான் கோபமாய்.
“ஃபிரிட்ஜிலாயிருந்து எடுத்து சூடுபடுத்தணும். எனக்கு ஓவன்ல சூடுபடுத்த தெரியாது.
எங்க வீட்ல ஓவன் எல்லாம் இல்லை. எப்படி ஹாண்டில் செய்யணும்” என்றாள்.
புதிதான வீட்டில் இன்னமும் கேஸ் அடுப்பு இல்லை. தற்காலிகமாக ஓவனும், இன்டெக்ஸ் ஸ்டவ்வும் சங்கவி வாங்கி வைத்திருந்தாள்.
ஓவன் என்றால் இரண்டு நிமிடத்தில் ஆகுமென்று அழைத்தாள்.
கதவை திறந்த ஆத்ரேயனோ, ஓவனை உபயோகிக்கும் மேனுவல் புத்தகத்தை அவளிடம் நீட்டி, “இந்த முறை நான் சூடுப்படுத்தி தந்துடுவேன். புக் பார்த்து எப்படி ஆப்ரேட் பண்ணனும்னு கத்துக்கோ” என்றவன் திரும்ப அவனை பின் தொடர்ந்து வந்தவள் மோத நேர்ந்தது.
‘எல்லாத்துக்கும் புக் எடுத்து படிக்க கொடுக்கறார். புரப்பஸர் என்பது சரியா இருக்கு’ என்றெண்ண திண்ம நெஞ்சில் மோதவும் பயந்தே விட்டாள்.
”சாரி சார்” என்று அழாத குறையாக கூற, அவனுமே சங்கடமாய் மாறி, “உ… உனக்கு இன்டெக்ஸ் ஸ்டவ்வும் எப்படி உபயோகிக்கணும்னு தெரியாதா?” என்று கேட்டான்.
“தெரியும் சார். ஆனா ஒருமுறை பாத்திரத்துல தண்ணி கொதிக்க வச்சிட்டு மறந்துட்டேன். தண்ணீ வத்தி பாத்திரம் லேசா வெடித்து விரிசலிட்டுடுச்சு. அதான் உங்களை கூப்பிட்டேன்.” என்று கூறி முடித்தாள்.
கைகளை நெஞ்சில் குறுக்காக கட்டி, “சமைக்கவாது தெரியுமா?” என்று கேட்டான் நக்கலாய்.
“சாம்பார், பருப்பு, புளியோதரை, லெமன் ரைஸ், கேரட் ரைஸ், முட்டை சாதம், பிரைடு ரைஸ் இப்படி செய்வேன் சார்.” என்று முகம் பாராது தயங்கி பதில் தந்தாள்.
“உங்கப்பாவுக்கு உனக்கு சமைக்க இவ்வளோ தான் தெரியும்னு அவருக்கு தெரியாதா? எந்த தைரியத்துல கல்யாணம் பண்ணி வைக்க மாப்பிள்ளை தேடினார்.
நானா இருக்குறதால ஓகே. இதெ வேற பையன் இருந்தா என்னவாகியிருக்கும்? மாமியார் மாமனார் இருந்து இந்த பதிலை சொன்னா, சரிம்மா கத்துத்தர்றேன்னு சொல்வாங்களா? திட்டி தீர்த்திருக்க மாட்டாங்க?” என்று பேசினாலும் ஓவனில் புலாவை சூடுபடுத்தும் வேலையும் செய்தான்.
“நான் சமைச்சா சாப்பிடுவிங்களா சார்?” என்று ஆர்வமாய் துவங்கி, “எனக்கு கல்யாணம் படிப்பு முடியும் முன்ன முடிக்கணும்னு அப்பா நினைச்சிருக்க மாட்டார் சார். அவருக்கு மிதுனா வீடு தேடி வந்து மிரட்டவும் பயந்துட்டார்.” என்றுரைத்தாள்.
‘மிதுனா’ அந்த பேரை கேட்டதும் ஆத்ரேயன் உள்ளம் கொதித்தது.
அவளால் தான் இன்று தன் வாழ்வும் பிரணவி வாழ்வும் இணைந்து சங்கடத்தில் ஆழ்த்துகின்றது.
“எனக்கு அவப்பெயரை உண்டாக்கினவளோட பெயரை இனி உச்சரிக்காத” என்று கட்டளையிட்டு தட்டில் புலாவை வைத்து பிரணவி முன் நகர்த்தினாள்.
“சார் நீங்க சாப்பிடலையா?” என்று கேட்டுவிட்டாள்.
‘அதீத உரிமை எடுத்துவிட்டாயோ?’ என்று உள்மனம் நடுங்க, “எனக்கு பசிக்கலை. காலேஜ்ல டீ, சமோசா, குடிச்சேன். புலாவ் ரைஸ் வாங்கிட்டு வர்றப்ப கட்லெட் சாப்பிட்டேன். எனக்கு பசிக்கும் போது சாப்பிட்டுப்பேன்” என்றவன் பேச்சில் ‘ஏது கட்லட்-ஆ… எனக்கு’ என்று சிறுபிள்ளையாக நினைக்க, ஆத்ரேயனோ கடைசியாக, “உன்னால எது சமைக்க முடியுமோ அதை செய். தினமும் வெளியே சாப்பிட்டா நல்லதில்லை. அப்பறம் தயவு செய்து வீட்ல இருக்கறப்ப சார்னு கூப்பிட்டு என்னை கொல்லாத” என்றான்.
எது செய்தாலும் சாப்பிடுவதாக பேசவும் மகிழ்ந்தாள். அதே வேகத்தில் “அப்போ நான் உங்களை எப்படி கூப்பிட சார்” என்று கேட்டுவிட்டாள். அவன் தீர்க்கமாய் பார்த்ததும், மீண்டும் பயம். ஆனால் இனி அழைப்பதாக இருந்தால் என்னவென்று விளிப்பதாம்?
ஆத்ரேயனோ பதில் தரவில்லை… அவளை கண்டு மெது மெதுவாய் பார்வையை தாழ்த்தி, அறைக்குள் சென்றுவிட்டான்.
என்னவென்று அழைக்க கூறுவது? அவனுக்குள் இந்த பந்தமே ஜீரணிக்க முடியவில்லையே.
அவன் செல்லவும் நிறுத்தி கேட்கும் மனநிலையிலும் பிரணவி இல்லை.
தட்டில் சாப்பாட்டை கண்டதும், ‘நமக்கு சோறு தான் முக்கியம்’ என்பது போல வயிற்றை நிறைத்தாள்.
அறைக்குள் மெத்தையில் தலையணையை சரியாக வைத்து முதுகை முட்டு கொடுத்து வீற்றுக்கொண்டு இமை மூடினான்.
கருவிழிகள் உருண்டு அவன் நிம்மதி இல்லாததை உரைத்தது.
இதற்கு முன் வேலை பார்த்த கல்லூரியிலிருந்து வேறு கல்லூரி வந்ததும் நிம்மதி கிடைக்குமென்று அல்லவா நினைத்தான். ஆனால் நடந்து நிகழ்வும், மிதுனாவையும் மறந்திட முடிந்த தன்னால் பிரணவியின் வருகையை ஏற்கமுடியாது தவித்தான்.
நேரம் போவதை உணராமல் இமை திறந்தவன் பெருமூச்சை வெளியிட்டு ஹாலுக்கு வரும் நேரம் அங்கே பிரணவி இல்லை. சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து உறங்க சென்றிருப்பாளென யூகித்தான்.
அடுத்த நிமிடம் என்ன நடக்க போகின்றதென்று தெரிந்துக்கொள்ள விரும்பாமல் தன் வாழ்வை தொடர்ந்தான்.
புலாவ் ரைஸை மெதுவாக விழுங்கிவிட்டு சமையல் அறைக்கு வந்தப்போது அங்கே நாளைக்கு சமைக்க தேவையானதை எடுத்து வைத்து சென்றிருப்பது புரிந்தது.
‘கடவுளே… இவ சமையலை சாப்பிட்டு எப்படி உயிர் வாழ போறேன்னோ’ என்று தோன்றாமல் இல்லை. வெளி கதவை எல்லாம் அடைத்துவிட்டு உறங்கசென்றான்.
அடுத்த நாள் காலையில் எழுந்து வந்தப்போது காபி நீட்டவும் வாங்கிக் கொண்டான்.
உப்புமா செய்திடவும் வேறு வழியின்றி உப்புமா சாப்பிட்டான்.
எதுவும் சொல்லலையே, எப்படியிருக்குன்னு கேட்போமா? என்று நினைத்தாள். ஆனால் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ற பயத்தில் கல்லூரிக்கு கிளம்பினாள்.
பிரணவி புறப்பட்டு வர, தன் டிபன் பாக்ஸை எடுத்து வைத்தவன், அவளிடம் ஒரு சாவியை நீட்டவும், பெற்றுக் கொண்டாள்.
தன் இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு பறந்தான்.
தன்னையும் அழைத்து செல்வாரென்று பிரணவி எதிர்பார்க்கவில்லை. காரணம் அவள் அறியாததா?
ஆத்ரேயனை பொறுத்தவரை பிரணவி மாணவி, மனைவி அல்ல. இவளுமே தன் கணவனாய் பார்த்திட சங்கடப்பட்டு இருப்பவளே.
பேருந்தை பிடித்து கல்லூரிக்கு கிளம்பவும் பாதி தூரத்தில் மோனிகா ஏறினாள்.
லேசான சந்தோஷம். தெரியாத இடத்தில் தன் வகுப்பு மாணவியே தோழியாக அதுவும் கல்லூரி செல்லும் பேருந்தில் வரவும் மகிழ்ச்சியாக பயணம் தொடர்ந்தது.
பாதி வழியில், “ஏ… நம்ம காலேஜிக்கு புதுசா வந்த கெமிஸ்ட்ரி புரப்பஸர் ஆத்ரேயன் சார்” என்று மோனிகா சுட்டிக்காட்ட, “சார் நல்லா ஹண்ட்ஸமா இருக்கார். என்ன நம்மளால் சைட் அடிக்க முடியாது. ஏன்னா… நமக்கு தான் ஆல்ரெடி கல்யாணமகிடுச்சே” என்று நகைச்சுவையை கூறியது போல சிரித்தாள்.
”அவரை சைட் அடிக்க முடியாததுக்கு இன்னொரு காரணம் அவர் நம்ம புரப்பஸர் இல்லையா?” என்று மித வேகத்தில் முன்னே செல்பவனை கண்டு கேட்டாள்.
“அட அதனால என்ன? அழகாயிருந்தா பார்க்கலாம். எனக்கு கல்யாணம் ஆனதால என்னால ஒரு எல்லைக்கு மேல ரசிக்க முடியாது. இதே கல்யாணத்துக்கு முன்ன இவரை பார்த்திருந்தா ம்ம்ம்ம செமையா சைட் அடிச்சிருப்பேன்” என்று கூறி மோனிகா போனில் பாட்டு வைத்தது விட்டு ஹெட்செட் கருவியை பொறுத்தினாள்.
“நீ பாட்டு கேட்கிறியா?” என்று ஹெட்சேட்டை நீட்டி வினவவும் ஏதேதோ எண்ணத்தை தவிர்க்க வாங்கி பொறுத்திக் கொண்டாள்.
மோனிகா என்ன சொல்கின்றாள்? ஒரு பேராசிரியரை மாணவி சைட் அடிக்கலாமா? என்று குழம்பினாள்.
அவள் குழப்பத்திற்கு முக்கிய காரணம் மிதுனா அதை தானே செய்தாள்.
மிதுனா இதற்கு முன் படித்த கல்லூரியில் பிரணவிக்கு சீனியர் மாணவி.
அவள் ஆத்ரேயனை விரும்பி மணிக்கட்டில் கீறிக் கொண்டதாக கேள்வியுற்றதே.
ஆத்ரேயன் அவளை நிறுத்தி புத்தி புகட்டி, பேராசிரியர் மாணவியை காதலிக்க முடியாது, மணக்க முடியாது என்றெல்லாம் திட்டி தீர்த்து அனுப்பியதாக பல கதைகள் கேட்டதுண்டு.
செவிவழி கதைகள் உண்மையா பொய்யா என்று பிரணவி ஆராயவில்லை. ஆனால் அவள் கண்ணால் கண்டது தான் திகைப்பு.
அன்று மட்டும் கல்லூரிக்கு தான் செல்லாமல் தவிர்த்து இருந்தால் இந்த மாங்கல்யம் கழுத்தில் இருந்திருக்காது. ஆத்ரேயன் வெறும் சார் மட்டுமே. இன்று கணவன். இந்த கணவன் என்ற உரிமையான உறவை தான் வெளியே கூறிட இயலாது.
மிதுனாவால் ஏற்பட்ட மனகசப்பு மறையாத வடுவாக அவர் உள்ளத்தில் இருந்தால், நான் மணந்தது? என் வாழ்வு? இந்த இடைப்பட்ட நாட்களில் வராத கவலை இதயத்தை உலுக்கியது.
கல்லூரி பேருந்து நிறுத்தம் வரவும் மோனிகா எழுப்ப, திடுக்கிட்டு எழுந்தாள்.
கல்லூரி வந்ததும் பார்க்கிங் பக்கம் திரும்பி திரும்பி பார்த்தாள்.
அங்கே தன் வாகனத்தை விட்டுவிட்டு ஆத்ரேயன் ராஜநடையில் தோரணையாக நடந்து வந்தான்.
முதுகலை படிக்கும் மாணவன் போல இருந்தவனை பேராசிரியர் என்றால் யார் நம்புவார்?!
பிரணவி ஆத்ரேயன் அழகை கண்டு அலைபாயும் மனதை தட்டி சகஜமாக, அவளை போல பல மாணவிகளின் கண்கள் ஆத்ரேயன் மீதிருந்து அகலவில்லை.
பிரணவிக்கு எல்லாரிடமும் ‘அவரை பார்க்காதீர்கள்’ என்று கண்ணை கூத்த வேண்டும் போல தோன்றியது.
ஆனால் கையறுநிலையாக தன் வகுப்பறை நோக்கி கால்கள் முன்னோக்கி நடந்தது.
அவளை தாண்டி சென்ற ஆத்ரேயன் இவளை மட்டும் ‘என்னை எதற்கு பார்க்கின்றாய்?’ என்பது போல அனலை வீசி சென்றான்.
பிரணவிக்கு இருந்த கடுப்பில் ‘மொட்டைமாடில சாப்பாட்டை வச்சா ஆயிரம் காக்கா வருமாம். அது மாதிரி இங்க அத்தனை பேர் காக்கா மாதிரி வெறிக்க வெறிக்க பார்க்கறாங்க. ஆனா மொட்டை மாடிக்கு சொந்தக்காரி நான். இவருக்கு நான் ஒருத்தி பார்க்கறது தான் குறுகுறுப்பு தருதோ? என்னை மட்டும் கண்டிக்கற மாதிரி பார்க்கறார்.
நான் அவரோட… அவரோட… அவரோட மனைவி.’ என்று நிஜத்தை மனசாட்சி எடுத்து நினைவுப்படுத்தவே நேரம் பறந்தது.
அதே யோசனையில் இருந்தவளுக்கு இப்படி நீ நினைப்பதை அவருக்கு தெரிந்தது அவ்ளோ தான்’ என்று உறவை எடுத்துரைத்த அதே மனம் பயத்தை விதைத்து சென்றது.
-தொடரும்.
Interesting👍👍 super😍😍
Yeppa rasa ne sollurathu ah partha ulagathula endha teacher kum professor kum kalyanam yae nadakathu ya ellam bramachari ah than suthanum
Teaching punitha ah na ma oru profession than illa nu sollala athukaga ivan ennavo oru teacher student ah iruku ah ponnu ah kalyanam pannathu pava seyal mathiri la pesuran .ivan panra thuku than ava sir nu koopidran athukum kadupu aana andha ponnu enna than pannuva ah ivan ah kalyanam nu onnu pannathuku andha ponnu than nondhu poganum aniyathuku vathi ah irukan
Super sis nice epi 👌👍😍 Evan enna evlo strict ah na professor ah erukan eppdiye pona engutu romance varum vazkhai eppdi pogum ennavo poda🙄
😂😂😂 ava mind voice ah konjam sathamavey solli erukalam… Aprm therunju erukkum avanoda Ruthra thadavam..😂😂
😂😂😂 ava mind voice ah konjam sathamavey solli erukalam… Aprm therunju erukkum avanoda Ruthra thandavam..😂😂
Indha maadhri vaaipulan enaku kedaikala veena akka so sad🤧 theriyuma…. Ug women’s clg ah full ah ladies staff edho apo apo inter clg seminar vaipanga apovadhu site adikalam nu paartha adhukum enga h.o.d keduthruvanga 😡ipadiyae tan 3yrs um pochu…. Sari inga tan ipadi nu pg vera clg poi panna anga ellam gents staff ana enna ellam vayasanavanga veena akka🤧…. Kudapadikura pasangala kuda sight adika mudiyadha mananilaya undu pannitanga enga dept…. Peruku tan ka chemistry dept. Ana oru chemistry um work out agala 🤧🤧…. Epadi valarthuvitrukanga paarunga enga dept….
Interesting eagerly waiting for nxt ud 👌
ஐயோ பாவம் அந்த பிரணவி பொண்ணு இந்த ஆத்ரேயன் என்னதான் நெனச்சிட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்க எப்ப பிளாஷ்பேக் ஓபன் ஆகும்னு காத்துக்கிட்டு இருக்கோம்
ena irunthalum wife ache intha possessive kuda illana eppadi
மௌனமே வேதமா…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 4)
என்னாது….? மொட்டை மாடில சாப்பாட்டை வைச்சா ஆயிரம் காக்கா கூடுமாம்…அது மாதிரி
இங்க அத்தனை பேர் வெறிக்க வெறிக்க பார்க்குறாங்க. ஆனா மொட்டை மாடிக்கு சொந்தக்காரி உன்னை மட்டும் ஏன் முறைக்கிறான்ங்கறது தானே கேள்வி…? ஏன்ம்மா, ஏன்..? கடைசி வரைக்கும் மொட்டை மாடிக்கு மட்டும் சொந்தக்காரியா இருந்துட்டா போதுமா…? அந்த சோத்துக்காகத்தானே காக்கா கூட்டமே வெறிக்குது, பறக்குது. வெறும் மொட்டை மாடிக்கு மட்டும் சொந்தக்காரியா இருந்து என்ன பிரயோஜனம்..? இப்ப உனக்கு சோறு முக்கியமா ? மொட்டை மாடிக்கு யாரு சொந்தம்ங்கிறது முக்கியமா…? நீயே முடிவு பண்ணிக்க.
லைசன்ஸ் என்னவோ உனக்குத் தான் கொடுத்திருக்கான், ஆனா, பட்டா இல்லாமலே எல்லாரும் குடி வர பார்க்குறாங்களே…. அதுக்கு என்ன செய்யப்போற…? இந்தாம்மா பிரணவி, காக்கா, நேக்கா, ஷோக்கான்னு பேசுறதெல்லாம் சரி தான்…. ஆனா, இப்படியேப் போனா என் புருசன் அவரு தான், அவரு கட்டிக்கிட்ட பொண்ணு மட்டும் நான் கிடையாதுங்கற கதையாயிடப் போகுது பார்த்துக்க.
பஜாருல உஷாரா இல்லாட்டி நிசாரை கூட உருவிட்டுப் போயிடுவான் பார்த்துக்க… அப்புறம் ரொம்ப பேஜாரப் பூயிடும்… ஆமா சொல்லிட்டேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
அருமையான பதிவு
💜💜💜💜🫰🫰🫰🫰
💛💛💛🫰🏼🫰🏼💛💛
Super sago
இவர்களின் பிளாஷ்பேக்கில ஏதோ நடந்துருக்கு