Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-16

ராஜாளியின் ராட்சசி-16

  • ஹாய்… கடந்த அத்தியாயத்தில் பிளஸ் டூ ரிசல்ட் என்று எழுதினேன். இந்த எபிக் விநாயகர் சதுர்த்தி வச்சி சில சீன் கொண்டு வர நினைச்சேன். லாஜிக் உதைக்கும். அதனால் முந்தைய அத்தியாயத்தில் பிளஸ் டூ ரிசல்ட் என்பதை எடிட் செய்துவிட்டு, பைலடாக அதற்கான தேடுதலில் பரீட்சை எழுதி கல்லூரியில் விண்ணப்பித்தாக மாற்றி எழுத போறேன். இன்று பிசி என்பதால் முந்தைய அத்தியாயம் தாமதமாக தான் எடிட் பண்ணணும்.
    லாஜிக் உதைக்கும் என்பதால் இப்பவே சொல்லிடறேன். வாசகர்கள் குழம்ப வேண்டாம்.

அத்தியாயம்-16

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  சந்தோஷ் தன்னையே பார்ப்பதை கண்டு, “மச்சி எதுக்குடா என்னையே பார்க்குற. வீட்ல சிஸ்டர் போய் பாரு புரோஜனமிருக்கும்” என்று கேலி செய்ய, “அந்த பொண்ணுக்கிட்ட எப்ப காதலை சொல்ல போற? ஐ நோ அர்னவ். வீட்ல காசிநாத் அங்கிளிடமும் கரோலின் ஆன்ட்டிகிட்டயும் செல்லாதனு போனை தட்டி விட்டுட்ட. ஓகே.. இதுவரை நீ பெர்சனலை பெருசா அவர்களிடம் பகிர்ந்து சந்தோஷப்பட்டதில்லை. ஆனா சம்மந்தப்பட்ட பொண்ணு பாவனாவிடம் காதலை சொல்லி தானே ஆகணும்.” என்று கேட்டான்.‌

  அர்னவ் நிதானமாக நண்பன் அருகே வந்து, “சொல்லணும்… உதவி செய்த கையோட உள்ளத்தையும் தான்னு கேட்க முடியலை. ஆனா அவ மனசுலயும் நான் இருக்கேன்னா இல்லையானு தெரிந்துக்கிட்டு சொல்லணும். ஆக்சுவலி.. அவளுக்கு என் மேல எந்த அபிப்ராயமும் இல்லைன்னா கூட இந்த முறை காதலை சொல்லிடறதா முடிவெடுத்திருக்கேன்.‌
 
  பிகாஸ்… என்னால என்‌ இயல்பை தொலைச்சிட்டு நடமாட முடியலை.
  காதலை சொல்லிட்டு அதுக்கு பிறகு வருவதை பார்த்துக்கறேன்.‌ சொல்லாம ஏன் கடத்தணும்னு தோன்றியது.” என்று மலர்ந்த முகமாய் உரைத்திடவும் சந்தோஷ் கட்டிக் கொண்டான்.‌

“கண்டிப்பா லவ் சொல்லு. அந்தப்பொண்ணு சம்மதிப்பா. ஆமா எப்ப அவளை நேர்ல சந்திக்க போற?” என்று சந்தோஷ் ஆதரவு தெரிவித்து கேட்டான்.
  
   அர்னவ் வெகுவாய் மகிழ்ந்து “அவளா ஒரு போன் போட்டு பேசினாளே. மச்சான் எப்பவோ பிளஸ் டூல மார்க் வாங்கியதுக்கு பிறகு இப்ப பைலட் ஆக எக்ஸாம் எழுதி பாஸ் ஆகியிருக்கான், ஆன்ட்டி உடல்நிலை, பைலட் ஆக டீட்டெயில் கேட்டானே.‌ இது போதாதா காரணம். நான் அவ வீட்டை தேடி பறந்து போக.” என்றான்.‌

இருவரும் நடந்து சென்றவர்கள், “ஆக இத்தனை நாள் அவளை தேடி போக காரணத்தை தேடியிருக்க.” என்று சீண்ட, “இல்லை… அவளிடமிருந்து ஒரு போன் கால். ஒரே ஒரு‌ போன்‌ கால். ஒரு சிக்னல் மாதிரி கிடைக்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
  பேசறப்ப வெட்கப்பட்ட வாய்ஸ், சந்தோஷம், அதோட அவ தம்பிக்கு தான் அண்ணனாம். அவளுக்கு இல்லையாம். இந்த கோட் வோர்ட் போதாதா.” என்று பேசவும், “போதுங்கற?” என்று சந்தோஷ் வினா தொடுத்தான்.

அர்னவோ சந்தோஷை நிறுத்தி, “தீவுல என்னையும் அவளையும் சந்திச்சு அழைச்சிட்டு போறப்ப, அப்பாடி நம்மளை காப்பாத்த வந்துட்டாங்கன்னு சந்தோஷப்பட்டது போல இருந்ததா? இல்லை… அட இவரை விட்டு பிரியணுமா?’ என்ற ரீதியில் அவ முகமிருந்ததா?” என்று கேட்டதும், சந்தோஷ் பாவனா புகத்தை நினைவுக்கூர்ந்து, “டேய்… உன்னை விட்டா பிரிய கஷ்டப்பட்டது போல தான் தெரியுது. ஆனா முன்னவே ஏன் இதை கேட்கலை?” என்று நின்றான்.‌

“பச் அவ அம்மாவுக்கு மருத்துவ உதவிக்கு பாதை காட்டிட்டு, காதலிப்பதா சொல்லவும், அவ அக்சப்ட் பண்ணியிருந்தா, இந்நேரம் அது வேற கட்டாயத்துல வந்ததா தோன்றுமோனு அப்ப மனசுல ஒரு உறுத்தல் இருந்தது சந்தோஷ். அதனால் தான் அவளிடம் சொல்ல தோன்றலை. ஆனா அப்பா மூலமாக வேலைக்கு வர வச்சி அவளோட டச்லயே இருந்து காதலை சொல்ல நினைச்சேன்.‌
  பாவனா வேலை வேண்டாம்னு சொல்லவும் என் ஈகோ அடிவாங்கிடுச்சு. கொஞ்சம் அதிகப்படியான கோபம் கூட வந்தது.
  ஆனா இந்த இரண்டு மாதம் அவ ஏன் வேலை வேண்டாம்னு சொல்லியிருக்க வாய்ப்புண்டுனு யோசித்தேன். 

  ஒரு வேளை அவளுக்கு என்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்து. அவ என்னை விரும்பறதா இருந்து, நான் அவளை விரும்பலைன்னு சொல்லியிருந்தா அவ நிலைமை?
  யோசித்து பாரு…. அவய மிடில் கிளாஸ் பேமிலி. அவ அம்மாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவை. அம்மாவுக்கு உதவி செய்த என்னிடமே காதலிப்பதா சொன்னா. நான் ஏத்துக்காம அவ மனசை காயப்படுத்தினாலோ, அல்லது..  இதுக்கு தான் இந்த மாதிரி பீப்பிளுக்கு உதவ கூடாதுன்னு நான் பேசிடுவேனோனு பயந்திருந்தா?

  இரண்டு காரணமும் வேண்டாம்… என் கூட போன் காண்டெக் அல்லது வேலை விஷயமா அப்பாவோட தொடர்பு இருக்குன்னு வை. அவ என்னை காதலிச்சு என்னை மறக்க முடியாம தவிச்சி கஷ்டப்படணும். அதுக்கு..  சிம்பிள்… வேலை வேண்டாம்னு சொல்லிட்டு என் நினைவை மறக்க போராடியிருக்கணும்னு பல்பு எரிந்தது.

  இங்க நான் அவளை தப்பா நினைச்சிடுவேனோனு பயம் அவளுக்கு நிறைய இருக்கலாம். மத்தபடி ஜீவனையும் என்னையும் அவ ஒரு பேச்சுக்கு தான் சொல்லிருப்பா. என்னை ஜீவனை சரி சமமா பார்க்க மாட்டா. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.” என்று கூற, பணியில் கூட வேலை பார்ப்பவர்கள் அங்கும் இங்கும் உலாவவும் சந்தோஷ், “ம்ம்ம். அப்ப இதெல்லாம் யோசித்து நிதானமா இருந்திருக்க. நான் தான் அவசரப்படுத்தினேனா?” என்று சிரித்தான்.
   அர்னவோ “மச்சான்… என்னை பொறுத்தவரை ஒரு விஷயம் செய்ய ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனா முடிவெடுத்தப்பிறகு மாத்திக்க கூடாது. உடும்பு பிடியில் நிற்கணும்.” என்று கூற, சந்தோஷ் அர்னவின் தோளை தட்டி கொடுத்தான்.

அர்னவ் ஆயிரம் கனவுகளோடு, நான்கு நாட்கள் கழித்து, சந்தோஷோடு தான் பாவனா வீட்டிற்கு புறப்பட்டான்.

“இந்த கோவில்ல தானே அன்னிக்கு டிராப் பண்ணியது” என்று கேட்டு வழியை தேட, “அந்த பொண்ணிடம் சொல்லிட்டு வந்திருக்கலாம். இப்ப பாரு… இன்னிக்கு என்னடா வினாயகர் சதூர்த்தி ரோட்ல இந்த நொந்தி பிள்ளையார் வேற” என்று அர்னவ் அலுத்துக் கொண்டான்.
ஒவ்வொரு தெருவிலும் சந்தோஷ் பயபக்தியோடு கடவுளை வழிப்பட, அர்னவோ அவள் இறங்கிய கோவில் முனையில் இருந்த வினாயகரை கண்டு, ‘எதுனாலும் உன்னை கும்பிடாம ஒரடி எடுத்து வைக்க மாட்டா என் பாவனா. அவளிடம் தனிமையான சந்தர்ப்பம் கேட்டு, என் காதலை சொல்வேன். நீ தான் அவளை சம்மதிக்க வைக்கணும்.’ என்று மானசீகமாய் கடவுளிடம் பேரம் பேசிவிட்டு, அவ்வீட்டின் முன் நிறுத்தினான்.

சந்தோஷ் இறங்கியதும் அங்கே வாசலில் தோரணம் கட்டியது விழுந்திருக்க அதை சரிப்படுத்தி மாட்டிய வினோத் கவனித்து வேகமாய் வந்தான்.

காரிலிருந்து அடுத்து நாயகன் அவதராத்தில் வந்திறங்கிய அர்னவை கண்டு, “அர்னவ் சார்” என்று வந்தான்.
அண்ணா என்றது மாயமாகியது‌ “சார்… அக்கா இங்க வந்து பாரு.. அர்னவ் சார் வந்திருக்கார்.” என்று கத்தினான்.

“ஏன்டா இங்க முதல்ல கால் பதித்தது நான் தானே? உன்‌ மச்சானுக்கு நானெல்லாம் கண்ணுக்கு தெரியலையா.. ஆமா என்னடா அண்ணா போஸ்ட்ல இருந்து சார்?” என்று சந்தோஷ் கிசுகிசுக்க, “சந்தோஷ்.” என்று அதட்ட, “சார்.. நீங்க சந்தோஷ் ரைட்” என்று கேட்டான்.

“ஹாய் வினோத் கங்கிராட்ஸ் பைலட் படிக்க பார்ம் எல்லாம் வாங்கி சேர்ந்ததுக்கு” என்று அர்னவும், “ரைட்.. எப்படி கண்டுபிடிச்ச?” என்று சந்தோஷும் பேசினார்கள்.

“அதான் ரைட் சகோதரர்கள் மாதிரி சேர்ந்து வர்றிங்களே. அக்கா உங்களை பத்தி சொல்லியிருக்கா. உள்ள வாங்க சார்” என்றான்.

சந்தோஷோ “என்னடா இவன்.. உதாரணத்துக்கு கூட பைலட் உருவாக்கி பறக்கவிட்ட ரைட் சகோதரர்களை இழுக்கறான். உனக்கேற்ற மச்சான் தான்‌ ராஜாளி.” என்று கேலி செய்தான்.

“அன்னிக்கு அண்ணானு கூப்பிட்ட.. இன்னிக்கு ஏன் சார்” என்று அர்னவ் அதிமுக்கிய கேள்விக்கு கேட்க, “அக்கா தான் அப்படி கூப்பிடாதடா என்று திட்டினா. மரியாதையா சார்னு கூப்பிடுனு சொன்னா.” என்றான் வினோத்.

வீட்டின் ஹாலில் நுழையவும் காவேரி வரவேற்றார்.

“வாங்க தம்பி எப்படியிருக்கிங்க. இந்த பாவனா நீங்க வருவதை சொல்லவேயில்லையே.” என்று மரசோபாவில் உட்கார கூறினாள்.

பழங்களையும் இனிப்பையும் நீட்டியபடி, “சும்மா தான் அம்மா. லீவ் இருந்தது. அப்படியே பார்த்துடலாம்னு.” என்று பாவனாவை தேடினான்.

வினோத் மற்றும் காவேரிக்கு பதட்டம் கூட நலம் விசாரித்து பேசினார்கள்.

அர்னவ் காவேரி உடல்நலத்தை கேட்டான். காவேரியோ அர்னவ் கைகளை பற்றியபடி, “உலகம் தெரியாத இரண்டு பேரை விட்டுட்டு போக போறேனு பயந்தேன் தம்பி. உங்க புண்ணியத்தில் ஆயுசு தந்திருக்கிங்க. கடவுளுக்கு நிகர்” என்று கூற கண்கலங்கினார்.

“அய்யோ அம்மா.. அதெல்லாம் ஒன்னுமில்லை. பணவசதி இருந்தது இப்ப கேன்ஸருக்கு மருத்துவ வசதியும் இருக்கு.” என்றான்.‌

“வினோத் அக்காவை கூப்பிடு? எங்கப்போனா?” என்று மறுபக்கம் மகனை ஏவ, சந்தோஷோ “அதானே. பொண்ணை தான் தேடுறான்.” என்று கிசுகிசுக்க, ‘சந்தோஷ் உதைப்பட போற’ என்று அர்னவ் பார்வையால் கண்டித்தான்.

”போன் பேசிட்டு இருந்தாம்மா” என்று வினோத் கூப்பிட சென்றான்.

அர்னவ் பெயரை சொன்னதும் மயிலை ஓடி வந்தது போல மாடியில் இருந்து அரக்கபறக்க வந்தாள். அவள் கதவருகே வந்து நிற்க, மயில் தொகை போல அவள் சிகை முன்னால் வந்து விழுந்தது. அழகோவியமாக காட்சியளிக்க அர்னவ் இமைக்க மறந்தான். அங்கே எதிர்ப்புறம் பாவனாவுமே, சிலையை போல மாற, சந்தோஷ் அர்னவ் புறம் திரும்பி ‘மச்சான். அர்னவ்.. டேய்… ராஜாளி’ என்றதும், நிகழ்வுக்கு வந்தான்.
”நீங்க வர்றதா சொல்லலையே. எப்..எப்படி.. வந்திங்க. கை சரியாகிடுச்சா” என்று அவன் கரத்தை கவனித்தாள்.

”முழுசா சரியாகிடுச்சு. ஆறேழு மாசம் ஆகியிருக்காது?” என்று எதிர்கேள்வி கேட்டான்.‌

‘தலையாட்டி வார்த்தை வராமல் திக்கினாள்.

காவேரியோ செய்து வைத்த பால் கொழுக்கட்டையை கொண்டு வந்து நீட்டினார்.

அர்னவ் வாங்கி விழுங்கும் பிறகே, “அம்மா சாமிக்கு படைக்கலை” என்று வினோத் நினைவுப்படுத்த, “சாமிக்கு தான் கொடுத்திருக்கேன்டா” என்று கூறினார்.
அர்னவோ திகைத்து விழித்து நாலைந்து ஸ்பூன் சாப்பிட்டதில் காவேரியை கண்டார்.

“கடவுள் நேர்ல வந்தா நேர்ல கொடுக்கறது தான் சரி தம்பி. என் உயிரை காப்பாற்றியதால நீங்க கடவுள்னு சொல்லலை. என் மகள் மானத்தை காப்பாற்றி, அவளை பாதுகாத்து, அவ உயிருக்கும் சேதாரம் இல்லாம நல்லபடியா இங்க கொண்டு வந்து விட்டுட்டு போனிங்க. அதை சொல்லறேன்.
என் உயிர் தம்பி பாவனா. அந்த நேரத்துல மானத்துக்கு பங்கம் வந்திருந்தா, நினைக்கவே உதறுது.” என்று கூற, சந்தோஷோ வந்ததிலருந்து செண்டிமெண்டா பேசறாங்களே என்று, “ஏம்மா.. என்னை எல்லாம் கண்ணுக்கு தெரியலையா? ஆமா பைலட் படிக்க போறதா விளையாட்டுக்கு சொன்னதா நினைச்சேன். வினோதை பைலட்டாக சேர்க்க அப்ளிக்கேஷன் எல்லாம் போட்டதா அர்னவ் சொன்னான். உண்மையா?” என்று கேட்க, “சார்.. நிஜமா படிக்க போறேன். அக்கா காலேஜில விசாரிக்க எல்லாம் செய்துட்டா. இங்க பாருங்க” என்று அப்ளிகேஷனை காட்டினான்.‌

பிளஸ் டூ படிச்சதும் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்தேன். ஆனா இப்ப பைலட்டாக ட்ரை பண்ணினேன்.‌” என்று கூற அர்னவோ “சூப்பர் டா.” என்று தட்டி கொடுத்தான்.

“அம்மா… பாவனாவை காப்பாத்தியதையோ, உங்களோட மருத்துவ சிகிச்சையை பத்தி பேச வேண்டாம். நான் ஜஸ்ட் உங்க நலனை விரும்ப வந்தேன்.” என்று கூறி நெகிழ்வுக்கு முற்று புள்ளி வைத்தான்.

வினோத் பைலட்டாக விவரத்தை கேட்டு அடுக்க, பாவனாவிடம் பேச முடியாமல் திணறினான். சந்தோஷ் மற்றும் பாவனா தான் பேசினார்கள்.
ஆனாலும் பாவனா விழிகள் அர்னவை காண்பதை தவிர்க்க முடியவில்லை.

இப்படியிருக்க வடை பாயாசத்தோடு மதிய உணவும் சாப்பிட்டான். பாவனா தான் வெட்கத்தோடு பரிமாறினாள்.
அர்னவ் பெரும்பாலும் அவளிடம் கண்களால் தான் பேசினான்.

அம்மா தம்பியை வைத்து கொண்டு காதலை பகிர முடியாது தவிக்க, கிளம்பும் தருணம் சந்தோஷே ‘பாவனா உன்னோட பேசணும். கோவில் வரை வர்றிங்களா?” என்று நாசூக்காய் கூப்பிட, “ஒரு நிமிஷம் அண்ணா” என்று உடைமாற்ற சென்றாள்.

உடைமாற்றி அர்னவ் சந்தோஷ் கூடவே வந்தாள். காவேரி வினோத் இருவரிடமும் விடைப்பெற்று வந்தான்.

பாவனாவிடம் காதலை கூறி சம்மதம் வாங்கியப்பிறகு வேண்டுமாயின் தந்தை காசிநாத்திடம் கூறி முறையாக பெண் கேட்க முடிவெடுத்தான்.‌

அர்னவ் பாவனா சந்தோஷ் மூவரும், கோவில் முன் வந்தனர். குட்டியான வினாயகர் கோவில் என்றாலும் இன்று அவருக்கு பிறந்த நாளென்று பிஸியாக காட்சியளித்தது.

சந்தோஷோ “பேசிட்டு வாடா ஆல் தி பெஸ்ட்” என்று கூற, அரசமரத்தடியில் குளத்திற்கு அருகே படிக்கட்டில் அமர்ந்தனர்.

“நான் ஏன் வந்தேன்னு தெரியுமா?” என்று கேட்க, “ஆஹ்… இல்லை” என்று தலையாட்டினாள்.

“என்னால இதுக்கு மேல மூச்சு விட முடியலை பாவனா. ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல பறந்து போகறப்ப ஆக்ஸிஜன் இல்லாம தவிக்கற மாதிரி இருக்கு‌.” என்றதும் பாவனாவுக்கு சந்தோஷமான மனநிலை வந்து பகீரென்ற உணர்வு தாக்கியது.

“சுத்தி வளைச்சி பேச ஒன்னுமில்லை பாவனா. ஐ லவ் யூ. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டவனிடம், மறுப்பாய் தலையாட்டி திகிலுடன் நெஞ்சில் கை வைத்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

5 thoughts on “ராஜாளியின் ராட்சசி-16”

  1. Kalidevi

    Oru valiya etho oru saku kedachithu rajali ku ratchasi ah paka vanthutan rendu perum nerla pathum pesa mudiyatha situation la irukum pothu santhosh nalla vela panna koil polam nu kutitu vantha illana rendu perum ipovum amaithiya e irunthu irupanga love sollitan aana bhavana yen ivlo shock agura neeum thana love panra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *